அமராவதி (மராட்டிய மாநிலம்), பிப். 22- மராட்டிய மாநிலத்தில் அமராவதி மாநகராட்சிப் பகுதியில் கடந்த 11ஆம் தேதி நடந்த வாகன சோதனையில், காரில் கடத்தி செல்லப்பட்ட ரூ.ஒரு கோடி ரொக்கப் பணம் பிடிபட்டது. விசாரணையில், இந்தப் பணம் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சிக்காக கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், குடியரசுத் தலைவர் மகனும் காங் கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வுமான ஷெகாவத் `அமராவதி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் 87 வேட் பாளர்களுடைய தேர்தல் செலவுக்கு மத்தியப் பிரதேச காங்கிரஸ் குழுவிடம் பணம் அனுப்புமாறு கூறி இருந்தேன். அதன்படி எனக்கு ரூ. ஒரு கோடி அனுப்பி வைக்கப்பட்டது. இதில் இருந்து 87 வேட்பாளர்களுக்கு, தலா ரூ. ஒரு லட்சம் வீதம் வழங்கவும், மீதியுள்ள ரூ.13 லட்சத்தை மாவட்ட காங்கிரஸ் நிதியில் சேர்க்கவும் திட்டமிடப்பட்டு இருந்தோம்' என்று அமராவதி காவல்துறை அதிகாரி களிடம் அப்போது தெரிவித்தார்.
| < முன்பு | அடுத்து > |
|---|