முன்பு அடுத்து Page:

புழல் ஏரியில் மருத்துவக் கழிவுகளை கொட்டத் தடை!

புழல் ஏரியில் மருத்துவக் கழிவுகளை கொட்டத் தடை!

தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு சென்னை, அக்.19   நாளிதழில் வெளியான செய்தியை தானாக முன்வந்து வழக்காக விசாரித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், புழல்  ஏரியில் மருத்துவக் கழிவுகளை கொட்டுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுகுறித்து உரிய அறிக்கையை தாக்கல் செய்யுமாறு  தமிழக அரசுக்கும், மாசுகட்டுப்பாடு வாரியத்திற்கும் உத்தர விட்டுள்ளது.  சென்னை மக்களின் குடிநீருக்காக புழல் ஏரியில் சேமிக்கப்படும் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் சில மர்ம நபர்கள், அந்த ஏரியில் ....... மேலும்

19 அக்டோபர் 2017 16:01:04

சென்னையில்: பட்டாசு புகையால் காற்று மாசு பெருமளவு அதிகரிப்பு

 சென்னையில்: பட்டாசு புகையால் காற்று மாசு பெருமளவு அதிகரிப்பு

சென்னை, அக்.19 பட்டாசு புகையால் சென்னையில் காற்றுமாசு பெருமளவு அதி கரித்துள்ளதுஎனமாசுக்கட் டுப்பாட்டு வாரியம் தெரிவித் துள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு கன மீட்டருக்கு 100 மைக்ரான் என்பதே அனுமதிக்கப்பட்ட காற்று மாசு அளவாகும். ஆனால், நேற்று பட்டாசு வெடித்ததன் காரணமாக 2.5 மைக்ரானில் 263 நுண்துகள்கள் உள்ளன. மேலும் சென்னையில் மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் 3 இடங்களில் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் மாலை 4....... மேலும்

19 அக்டோபர் 2017 14:56:02

கரும்பு விவசாயிகள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

கரும்பு விவசாயிகள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

விருத்தாசலம், அக்.19 கடலூர் மாவட் டத்தில் உள்ள தனியார் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கடந்த 4 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.130 கோடி நிலுவை தொகையை இதுவரை வழங்கவில்லை. இந்த நிலுவை தொகையை உடனடியாக வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வில்லை.இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில கரும்பு விவசாய....... மேலும்

19 அக்டோபர் 2017 14:52:02

பாசன கிளை வாய்க்காலை சொந்த செலவில் தூர்வாரும் விவசாயிகள்

பாசன கிளை வாய்க்காலை சொந்த செலவில் தூர்வாரும் விவசாயிகள்

கிருஷ்ணராயபுரம், அக்.19 மாயனூர் காவிரியிலிருந்து தென் கரை வாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்கால், கிருஷ்ண ராயபுரம் வாய்க்கால் என 3 முக்கிய பாசன வாய்க்கால்கள் பிரிந்து செல்கின்றன. இந்த வாய்க்கால்கள் மூலம் பல கிளை வாய்க்கால்கள் பிரிந்து சென்று ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆனால் கிளை வாய்க்கால்கள் எல்லாம் தூர் வாரப்படாததால் தண்ணீர் திறக்கப்பட்டும் கடை மடை வரை தண்ணீர் செல்வதில் பிரச்சினை நிலவுகிறது. வாய்க்....... மேலும்

19 அக்டோபர் 2017 14:49:02

டெங்கு பாதிப்பு உண்மையை வெளியிடக் கூடாதென தனியார் மருத்துவமனைகளுக்கு அச்சுறுத்தல் மு.க.ஸ்டாலின் கு…

டெங்கு பாதிப்பு உண்மையை வெளியிடக் கூடாதென தனியார் மருத்துவமனைகளுக்கு அச்சுறுத்தல்   மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை, அக்.19 டெங்கு பாதிப்பு குறித்த உண்மைகளை வெளியிடக்கூடாது என தனியார் மருத்துவமனைகள் அச்சுறுத்தப் படுகின்றன என்று மு.க.ஸ்டா லின் கூறினார்.திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை, எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்து வமனையில்  ஆய்வு செய்தார். டெங்கு மற்றும் காய்ச்சல் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் டெங்கு உள்ளிட்ட பலவித காய்ச்சல் களால் பாதிக்கப்பட்டு....... மேலும்

19 அக்டோபர் 2017 14:40:02

கடலூர் பொதுக்கூட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்போம்! ஆடூர் அகரத்தில் கழக மகளிரணி கலந்துரையாடலில் முட…

  கடலூர் பொதுக்கூட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்போம்! ஆடூர் அகரத்தில் கழக மகளிரணி கலந்துரையாடலில் முடிவு

குறிஞ்சிப்பாடி, அக். 18- குறிஞ்சிப்பாடி ஒன்றியம் ஆடூர் அக ரம் கிராமத்தில் திராவிடர் கழக மகளிரணி கலந்துரையாடல் கூட்டம் 6.10.2017 அன்று மாலை 6 மணியளவில் தோழர் தமிழேந்தி இல்லத்தில் மண் டல மகளிரணி செயலாளர் இரமாபிரபா ஜோசப் தலை மையில், மாவட்ட கழக மகளி ரணி தலைவர் செ.முனியம் மாள் முன்னிலையில் நடை பெற்றது. தோழர் தமிழேந்தி வரவேற் றுப் பேசியபின் தோழர் கலைச் செல்வி, இரா.பத்மாவதி (மாவட்ட மகளிரணி....... மேலும்

18 அக்டோபர் 2017 16:05:04

வடமணப்பாக்கம் நல்லாசிரியர் பி.கே.விஜயராகவன் அவர்களின் படத்திறப்பு

வடமணப்பாக்கம் நல்லாசிரியர் பி.கே.விஜயராகவன் அவர்களின் படத்திறப்பு

வடமணபாக்கம், அக். 17- திரு வண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வட மணப்பாக்கம், பெரியார் பற் றாளர் பி.கே.விஜயராகவன் அவர் களின் படத்திறப்பு நிகழ்ச்சி அவரது இல்லத்தில் 15.10.2017 அன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.செய்யாறு தொகுதி முன் னாள் திமுக சட்டமன்ற உறுப் பினர் வ.அன்பழகன் தலைமை தாங்க, நாளந்தா பள்ளியின் நிறுவனர் ஆர்.வேல்முருகன் முன்னிலை வகித்தார். படத்தை மதிமுக அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியதேவன் திறந்து வைத்து வைத்து....... மேலும்

17 அக்டோபர் 2017 15:18:03

கொள்ளுப்பேரனுடன் கலைஞர்

 கொள்ளுப்பேரனுடன் கலைஞர்

சென்னை, அக்.16  தி.மு.க., தலைவர் கலைஞர், தன் கொள்ளுப் பேரனிடம், குழந்தையாக மாறி, சிரித்து விளையாடினார்; இந்த வீடியோ, தி.மு.க.,வினரை நெகிழ வைத்துள்ளது. தி.மு.க., தலைவர் கலைஞர், 2016, டிசம்பரில், உடல் நலக் குறைவால், சென்னை, ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, செயற்கை மூச்சு அளிக்க, தொண்டையில் துளையிட்டு, ‘டிராக்கியோஸ்டமி’ சிகிச்சை அளிக்கப்பட்டது. வீட்டிலிருந்தபடியே, அவருக்கு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர் கள்,....... மேலும்

16 அக்டோபர் 2017 15:11:03

தடை செய்யப்படுமா? பக்தி மூடத்தனத்துக்குப் பலி

தடை செய்யப்படுமா? பக்தி மூடத்தனத்துக்குப் பலி

தா.பேட்டை, அக். 16- திருச்சி மாவட்டம் தா.பேட்டையை அடுத்த நீலியாம்பட்டி கிராமத் தில் தலைமலை அமைந்துள் ளது. இந்த மலையின் உச்சி யில், தரையில் இருந்து ஆயிரக் கணக்கான அடி உயரத்தில் நல் லேந்திரபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமிருக்கும். இந்நிலையில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி நேற்றுமுன்தினம் காலை முதலே பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அப்போது மலை உச்சிக்கு சென்று பெருமாளை வழிபட்ட பக்தர் ஒருவர், இரண்டு முறை....... மேலும்

16 அக்டோபர் 2017 14:58:02

தமிழர் உரிமை பாதுகாப்புத் தமிழ் ஊர்தி பயணக் குழுவினருக்கு வரவேற்பு

தமிழர் உரிமை பாதுகாப்புத் தமிழ் ஊர்தி பயணக் குழுவினருக்கு வரவேற்பு

அனைத்து தமிழியக்கங்களின் கூட்டமைப்பு, பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் இணைந்து கன்னியாகுமரி - டில்லி வரை தமிழர் உரிமைப் பாதுகாப்புத் தமிழ் ஊர்தி பயணக்குழு பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் தலைமையில் 13.10.2017 அன்று மாலை 4.30 மணிக்கு ஓசூருக்கு வருகை தந்தது. அக்குழுவினரை திராவிடர் கழகம் சார்பில் கிருட்டிணகிரி மாவட்ட இணை செயலாளர் சு.வனவேந்தன், மாவட்ட துணை செயலாளர் அ.செ.செல்வம், கவிஞர் எல்லோரா மணி ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்று வழியனுப்பி வைத்தனர்........ மேலும்

16 அக்டோபர் 2017 14:58:02

Banner
Banner