Banner
முன்பு அடுத்து Page:

மரண தண்டனைச் சட்டத்தை நீக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு கலைஞர் வேண்டுகோள்

மரண தண்டனைச் சட்டத்தை நீக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு கலைஞர் வேண்டுகோள்

சென்னை, நவ.27_ மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தை நீக்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் வலியுறுத்தினார். இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:- 18 வயதுக்கு உள்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், மனநலன் அல்லது அறிவுத் திறன் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை உறுப்பு நாடுகள் தாற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என அய்.நா. பொது மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத்....... மேலும்

27 நவம்பர் 2014 16:46:04

சிறீரங்கம் இடைத்தேர்தல்: ஜனவரியில் அறிவிப்பு

சிறீரங்கம் இடைத்தேர்தல்: ஜனவரியில் அறிவிப்பு

சென்னை, நவ.27_ காலி யாக உள்ள சிறீரங்கம் தொகுதிக்கான இடைத் தேர்தல் மற்றும் பீகார், மகாராஷ்டிரா, மத்திய பிர தேசம் உள்ளிட்ட மாநி லங்களுக்கான தேர்தல் குறித்து ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணை யர் வி.எஸ்.சம்பத் கூறி னார். சென்னை விமான நிலையத்தில், தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத், செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டி வருமாறு: தமிழகத்தில் சிறீரங்கம் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் நடத்த வரும் மார்ச்....... மேலும்

27 நவம்பர் 2014 16:34:04

பெண் குழந்தை பிறந்தால் உதவித்தொகை உச்சநீதிமன்றம் உத்தரவு

பெண் குழந்தை பிறந்தால் உதவித்தொகை உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, நவ.27_  குறைந்து வரும் ஆண், பெண் விகிதத்தை சரிப் படுத்த வேண்டுமானால், பெண் குழந்தை பிறக்கும் குடும்பத்திற்கு, மாநில அரசு ஊக்கத் தொகை வழங்க வேண்டும், என்று உச்சநீதிமன்றம் உத்தர விட்டு உள்ளது. தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த பொது நல மனுவில், ஆண்களின் எண்ணிக்கையைவிட பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக, அனைத்து மாநிலங்களும் அறிக்கை தாக்கல் செய் துள்ளதாகக் கூறியது.இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் தீபக்....... மேலும்

27 நவம்பர் 2014 16:33:04

பாராட்டத்தக்க தீர்ப்பு - ஆணை உயர்நீதிமன்ற வாயிலில் உள்ள எம்ஜிஆர் கோயிலை இடிக்கவேண்டும் மாநகராட்சிக்க…

பாராட்டத்தக்க தீர்ப்பு - ஆணை உயர்நீதிமன்ற வாயிலில் உள்ள எம்ஜிஆர் கோயிலை இடிக்கவேண்டும் மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில், மசூதி, தேவாலயம் ஆகியவற்றை கட்ட விரும்புபவர்கள், தனியார் நிலத்தில் அவற்றை கட்டிக் கொள்ளலாம். மத ரீதியான கட்டடங்களை பொது இடத்தில் கட்டுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை.- உயர்நீதிமன்ற நீதிபதிகள் சென்னை, நவ. 27_ எம்ஜிஆர் கோயிலை இடித்துவிட்டு, அது தொடர்பான அறிக் கையை டிசம்பர் 8 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள் ளது. சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலையில், உயர் நீதிமன்ற....... மேலும்

27 நவம்பர் 2014 16:32:04

தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு: கடலுக்கு வீணாக செல்லும் 20 ஆயிரம் கனஅடி தண்ணீர்

தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு: கடலுக்கு வீணாக செல்லும் 20 ஆயிரம் கனஅடி தண்ணீர்

சிறீவைகுண்டம், நவ.27 நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையினால் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு உள்பட மாவட்டத்தின் பல்வேறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள் ளது. இந்த தண்ணீரானது தாமிர பரணி ஆற்றின் கடைசி அணையான சிறீவைகுண்டத்தில் போய் சேர்கிறது. இந்நிலையில் அணையில் தண் ணீரை தேக்கி வைக்க வழியில்லாததால் சுமார் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக....... மேலும்

27 நவம்பர் 2014 16:31:04

மெட்ரோ ரயிலை 80 கி.மீ, வேகத்தில் ஓட்டிப் பார்த்து சோதித்த பெண் ஓட்டுநர்

மெட்ரோ ரயிலை 80 கி.மீ, வேகத்தில் ஓட்டிப் பார்த்து சோதித்த பெண் ஓட்டுநர்

சென்னை, நவ.27_- கோயம்பேடு - _ ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயிலை 80 கிலோ மீட்டர் வேகத்தில் பெண் ஓட்டுநர் ஓட்டிப் பார்த்து சோதனை செய்தார். வெற்றிகரமாக இருந்ததாக அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:- சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரயில் சேவைக்கான பணி யில் முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான 10 கிலோ மீட்டர் தூரத்துக்கான சேவை 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்....... மேலும்

27 நவம்பர் 2014 16:27:04

தீயணைப்புத் துறையில் 1000 பணியிடங்களை நிரப்ப விரைவில் தேர்வு

தீயணைப்புத் துறையில் 1000 பணியிடங்களை  நிரப்ப விரைவில் தேர்வு

மதுரை, நவ.26_தமிழக தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள சுமார் 1,000 பணியிடங்களை நிரப்ப விரைவில் தேர்வு நடைபெற உள்ளது என அத்துறை இயக்குநர் ரமேஷ் குடவாலா தெரி வித்தார். மதுரை திடீர்நகரில் உள்ள தீயணைப்பு அலு வலகத்தில் செவ்வாய்க் கிழமை ஆய்வை மேற் கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக தீயணைப்புத் துறைக்கு நுரைகள் மூலம் தீயை அணைக்கும் சாத னம் உள்ளிட்ட நவீன சாத னங்களை வாங்க அரசு ரூ.18....... மேலும்

26 நவம்பர் 2014 16:22:04

மதுரை மாவட்ட கிரானைட் குவாரிகளை ஆய்வு செய்தால் போதும் சகாயம் அய்.ஏ.எஸ்.சுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை மாவட்ட கிரானைட் குவாரிகளை ஆய்வு செய்தால் போதும் சகாயம் அய்.ஏ.எஸ்.சுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, நவ.26_ மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரி களை மட்டும் ஆய்வு செய்யுமாறு அய்ஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கில், சட்டவிரோத மாக வெட்டி எடுக்கப்படும் கனிம வளங்கள் குறித்து விசாரணை நடத்த அய்ஏஎஸ் அதிகாரி சகா யம் தலைமையில் குழு அமைக்கவேண்டும். மேலும், அதன் உரிமை யாளர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட் டது. இந்த வழக்கை....... மேலும்

26 நவம்பர் 2014 16:21:04

அசோக்சிங்கால், மோகன்பகவத் பேச்சுக்கு கலைஞர் கண்டனம்

அசோக்சிங்கால், மோகன்பகவத் பேச்சுக்கு கலைஞர் கண்டனம்

கட்டாய சமஸ்கிருதம் - இந்துக்கள் நாடு என்ற பேச்சுகள் மதச் சார்பின்மையில் நம்பிக்கை கொண்டுள்ளோரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறதுஅசோக்சிங்கால், மோகன்பகவத் பேச்சுக்கு கலைஞர் கண்டனம் சென்னை, நவ.26_ கட்டாய சமஸ்கிருதம், இந்துக்கள் நாடு என்று உலக இந்து மாநாட்டில் பங்கேற்க டில்லி வந்திருந்த விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக்சிங்கால் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகியோ ரின் பேச்சு, மதச்சார்பின் மையின் நம்பிக்கை கொண் டுள்ளோரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது என....... மேலும்

26 நவம்பர் 2014 15:25:03

ஓராண்டில் 24 லட்சம் சத்து மாத்திரைகள்! கோவை பள்ளிகளுக்கு விநியோகம்!

ஓராண்டில் 24 லட்சம் சத்து மாத்திரைகள்! கோவை பள்ளிகளுக்கு விநியோகம்!

கோவை, நவ.25  அரசு உத்தரவின் படி, கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டு லட்சம் ஊட்டச் சத்து மாத்தி ரைகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ, மாண விகள் மத்தியில் ஊட்டச் சத்து குறைபாட்டின் காரணமாக, பல்வேறு உடல் நலம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுவதாக, ஆய்வுகளில் தெரியவந்தது. தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறையும் இணைந்து பள்ளி மாண வர்களுக்கு அரசு உத்தர வின் படி, ஊட்டச்சத்து மாத்திரை....... மேலும்

25 நவம்பர் 2014 16:27:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுக்கோட்டையில் உள்ள மெய்வழி அனந்தர்களுக்குள் ஏற்பட்ட குடுமிப்பிடி சண்டை இப் போது வீதிக்கு வந்துவிட்டது.

அனந்தர்கள் யார்?

அனந்தர்கள் என்பவர்கள்  புதுக்கோட்டையில் தொடங்கிய ஒரு மதத்தைப் பின்பற்றுவதாகச் சொல் லிக் கொள்பவர்கள் ஆவர். இவர்கள் தமிழகம் முழுவதும் பரவிக் கிடக் கிறார்கள். அதையும் தாண்டி தொழில் நிமித்தமாக மற்ற மாநி லங்களிலும் வசித்து வருகிறார்கள் என்ற போதிலும் அவர்களின் கொள் கைகளைப்பற்றிக் கேட்டால் சிறுவர் களுக்குக்கூட சிரிப்பு வந்து விடும். மறலி கைதீண்டா சாலை ஆண்ட வர்கள் மெய்மதம் என்பதுதான் அவர்களது மதத்திற்குப் பெயர்.

இதுவரை நாம் கேள்விப்பட்டது இந்து, இஸ்லாம், கிறித்தவம், சீக்கியம், பாரசி போன்றவைதான். ஆனால் இவர்கள் மட்டும் இத்தனை நீளமான ஒரு மதத்தை உருவாக்கி இருக்கிறார்கள். மறலி என்றால் சாவு என்று பொருளாம். கைதீண்டா என்ற பொருளில் சாவு இவர்களை நெருங்காதாம். சாலை ஆண்டவர்கள் என்றால் இந்த மதத்தை உருவாக் கியவராம். மெய் மதம் என்றால் உண் மையான மதமாம். அந்த மதத்தில் உள்ளவர்கள் அனந்தர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களது உண்மை என்ன என்பதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளி வந்து கொண்டிருக்கிறதே. விரைவில் மற்ற அனைத்தும் ஊடகங்களில் வரப்போகிறது என்பதுதான் உண்மை.

மெய் மதம் என்ன சொல்கிறது?

மற்ற மதங்களெல்லாம் ஊரை ஏமாற்றுகிறது என்று சொல்லித்தான் இந்த மதத்தை உருவாக்கிய காதர்பாட்சாவும் சொல்லிக் கொண்டு ஆள் பிடித்து இந்த மதத்தைத் தொடங்கினார். மதத்தைக் கைக்கொண்டிருப்பவர்கள் பலரும் மதத்தால் பாதிக்கப்பட்டு வேறு மதங்களில் சேர்வதைத்தான் அன்றா டம் நிகழ்வுகளில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமே.

அதைப் போலத்தான் இவரும் உங்கள் மதம் உங்களுக்கு எதையும் தருவதில்லை எதையும் செய்வதில்லை. நானும் எனது மதமான இஸ்லாமிய மதத்தைப் பிடிக்காமல்தான் புதிதாக மதம் தொடங்கியிருக்கிறேன்.

என்னிடம் வாருங்கள் நான் நிம் மதியை தருகிறேன். என்று பரப்புரை செய்தார். அதில் மயங்கியவர்கள் வந்து அவருடன் சேர்ந்து கொண் டார்கள். அதில் பல மதங்களையும் சேர்ந்த 69- ஜாதிகளையும் சேர்ந்த வர்கள் அவருடன் சேர்ந்திருந்தார்கள். அதுவே ஒரு பலமாக மாறியது.

மேலும் அவர் இந்த மதத்திற்கு ஆள் பிடித்ததும் ஒரு விதமாகத்தான். கிறிஸ்தவர்கள் ஆள் பிடிக்கும் வேலையை எங்கே தொடங்குவார்கள் என்று பார்த்தால் மருத்துவமனை, சிறைச்சாலை, மிகவும் சிரமப் படுகிறவர்கள் கூடும் இடங்களில்தான் கிறிஸ்தவ மதம் பரப்பப்படும். குறிப்பாக ஏசுநாதரின் கொள்கைகள் பரப்பப்படும்போது சிலர் மயங்கி விடக்கூடும். பலர் அவர்கள் தரும் உதவியில் மயங்கி விடுவதுண்டு.

தொடக்கக் காலத்தில் கல்வியும் கல்வி கற்கும் உரிமையும், சுகா தாரமும், ஏழை மக்களுக்கு ஒடுக்கப் பட்ட மக்களுக்கு மறுக்கப்படும் போது அந்த இடத்தில் இறங்கி கல்வி கற்றுக் கொடுத்தார்கள். சுகாதாரத் திற்காக மருத்துவ வசதி செய்து கொடுத்தார்கள். அப்படியே கிறிஸ் தவமும் போதித்தார்கள். அடிமைப் பட்டுக் கிடந்தவர்கள் கிறிஸ்தவர்கள் ஆனார்கள். அப்படியே தேவால யங்களும் கட்டப்பட்டன.

அதையேதான் மறலி கைதீண்டா சாலை ஆண்டவர்கள் மெய்மதம் உருவாக்கிய காதர்பாட்சாவும் செய்தார். எந்த இடத்தில் மக்களிடம் பொருளிருந்து நிம்மதியிழந்து தவித்தார்களோ எந்தக் குடும்பத்தில் சண்டை சச்சரவு செய்து தாய் தந் தையர் கவனிப்பாரற்றுக் கிடந் தார்களோ அந்த இடத்தில் எல்லாம் காதர்பாட்சா ஆஜராகி இருந்தார். நிம்மதியிழந்த மக்கள் தம் சொத்து சுகங்களை விற்று விட்டு பொருளை எடுத்துக் கொண்டு மெய்வழிச்சாலை வந்து விட்டனர்.

மெய்வழிச்சாலை

காதர்பாட்சா என்பவர் இன்றி ருக்கும் புதுக்கோட்டை மாவட் டத்தின் ஒரு பகுதியான சித்தன்ன வாசலில் இருந்து சுமார் 5- கி.மீ. தூரத் தில் உள்ள ஊறல்மலைக்காட்டில் மெய்வழிச்சாலை என்னும் கிரா மத்தை அமைத்தார். இது நடந்தது 1942-ஆம் ஆண்டில். அதற்கு முன்ன தாக அவரது சொந்தஊர்  திருப்புர்  பகுதியாகும்.

அங்கிருந்து அவர் புறப்பட்டுச் சென்ற இடம் மதுரை ஆகும். அங்கேயே அவர் இந்த மதத்தை தொடங்கி விட்டார் என்றபோதிலும் அவர் அங்கு கட்டி யிருந்த கட்டடங்கள் இன்றளவும் இருக்கிறது. அந்த இடத்தை வெள் ளைக்காரன் சொந்தப் பயன்பாட் டுக்காக எடுத்துக் கொண்டு உரிய பணத்தைக் கொடுத்து விட்டான். பணத்தைப் பெற்றுக் கொண்ட காதர்பாட்சா தங்கமாக மாற்றிக் கொண்டு மெய்வழிச்சாலை வந்து செட்டிலாகி விட்டார்.

தம் செல்வாக்கையும், திறமை யையும் பயன்படுத்தி அன்றைய புதுக்கோட்டை மன்னர் சமஸ்தானத் திலிருந்து 99-ஏக்கர் நிலத்தைப் பெற்றுத்தான் இந்தக் கிராமத்தை உருவாக்க முடிந்தது. புதுக்கோட்டை யில் உள்ள நகர அமைப்பைப்போல நேர் நேரான தெருக்கள் எந்தத் திசையில் இருந்து எந்தத் தெருவுக்கும் வீட்டுக்கும் போகவேண்டும் என்றா லும் வளைவுகளற்ற ஒழுங்கு முறையான குடிசைகளான வீடு களாகக் கட்டி அதில் குடும்பங் களைக் குடிவைத்தார். ஊருக்கு நடுவில் தேவாலயம் கட்டப்பட்டது. எங்கும் மணல். தெவாலயத்தின் தரைப்பகுதி மட்டுமல்ல வீடுகளுக் குள்ளும் தரைப்பகுதி மணல்தான்.

அய்ந்தடி உயரத்துக்கும் மிகாமல் மண்சுவர். கூரைவீடுகள். எந்த வீட் டுக்கும் கதவுகள் இருக்காது. காரணம் எளிமை என்பதால் திருட்டுப்போகும் அளவிற்கு எந்தப் பொருளும் இருக்காது என்கிற நம்பிக்கை. அவர்களைத் திருத்துவதாகக் கூறி பொன் வேண்டாம் பொருள் வேண் டாம் என்று கூறி அவர்களிடமிருந்த சொத்து சுகங்களை அவர் அபகரித் துக் கொண்டதாக அவர்மீது குற்றச் சாட்டு ஒன்று உண்டு என்றாலும் அவரிடம் தீட்சை பெற்றதாகக் கூறிக்கொண்ட 5ஆயிரத்து 45-பெரும் எளிமையை அடுத்தவர்களுக்காகப் போதிப்பவர்களாகவே இன்றும் இருக்கிறார்கள்.

ஆனால் அப்படி வாழ்கிறார்களா என்பது கேள்விக்குறி. மெய்வழிச்சாலையில் அவர்கள் சொன்னதும் நடந்ததும் யாருக்கும் வெளியாட்கள் தெரி யாமல் இருந்ததுபோய் இந்தியாவில் நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப் பட்டபோது அரசின் கவனத் துக்குப்போய் அந்த தேவாலயம் இருந்த இடமும் மற்ற இடங்களும் தோண்டியபோது ஏராளமான தங்கக் கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

இப்போது கேரளாவில் உள்ள பத்மநாப கோயிலில் பல்லாயிரக் கணக்கான ரூபாய் கோடிகளில் தங்கம், வைரம் பாத்திரங்கள் கிடைத் தது போல் ஏராளமான தங்கக் கட்டிகள் எடுக்கப்பட்டது. அது அரசு கைப்பற்றியதோடல்லாமல் சாலை ஆண்டவரான காதர்பாட்சா கைது செய்து திருச்சி சிறையி லடைக்கப்பட்டார். வெளியில் வந்து சில காலத்தில் இறந்து விட்டார். அதாவது 11.2.1976-ஆம் தேதி இறந்து விட்டார். அதன் பிறகு வழக்கு நடந்து வந்தது.

தங்கத்தைக் கைப்பற்ற தந்திரம்

அரசு கைப்பற்றியதில் குறிப்பிட்ட சதவிகிதம் அனந்தர்களுக்கு கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அனந்தர்களுக்கு கிடைத்த சொத்தில் மெய்வழிச் சாலையில் உள்ள அனைவருக்கும் பங்கு வேண்டும் என்று பலரும் போர்க்கொடி தூக்க மெய் வழிச்சாலை இரண்டு குழுவானது. மேல்சபைக்காரர்கள் என்றும் கீழ்சபைக்காரர்கள் என்றும் இருபிரிவானார்கள். காதர்பாட் சாவின் இருமகன்களான யுகவான் மற்றும் வர்க்கவான் ஆகிய இருவரும் நீதிமன்ற உத்தரவின்படி தந்திரமாக மற்ற அனந்தர்களுக்குக் கிடைக்கா மல் தங்கள் குடும்பத்திற்கு மட்டும் கிடைக்குமாறு செய்து கொண்டனர்.

போர்க்கொடி

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அவர்களில் மூத்தவரான யுகவான் மர்மமான முறையில் இறந்துவிட இரு குடும்பங்களும் பிரிந்து போயின. அதற்குக் காரணம் மேல்சபைக்காரர்கள் கிளப்பிய அதே நீதிமன்ற பொருளாதாரப் பிரச்சினை தான் என்று சொல்லப்பட்டது. ஆனாலும் காதர்பாட்சா சொல்லி வைத்த மெய்வழியை யார் கடைப் பிடிக்கிறார்கள் என்றால் யாரும் கடைப்பிடிப்பதுமில்லை அந்த வழியை யாரும் நம்புவதுமில்லை என்பதுதான் விடையாக இருக்கும். வர்க்கவனை எதிர்த்து அவரது அண்ணன் மகன் வான்மணி போர்க்கொடி தூக்கிவிட்டார்.

அந்த மெய்வழிச்சாலைக்குள் எல்லாம் நீதி என்று எதையெல்லாம் சொல்லப் பட்டதோ எவையெல் லாம் பேசித் தீர்த்துக் கொள்ளப் பட்டதோ அவையெல்லாம் இப் போது தகாதவழி என்று அவர் களுக்குள் அடித்துக் கொண்டு காவல் நிலைய படியேறிக் கொண் டிருக்கிறார்கள். நூறு சதவிகிதமும் படித்த மெய்வழி அனந்தர்கள் இப்போது சொத்து சுகங்களுக்காக குடுமிப்பிடி சண்டைகள் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக் குள் ஏராளமான வழக்குகள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

சாலை சாமியார்களுக்கு சிறைத் தண்டனை சாலைவர்க்கவானுக்காக ஒரு தரப்பினரும் சாலைவான்மணிக் காக ஒரு தரப்பினரும் ஆதரவாகத் திரண்டு இப்போது மோதிக் கொண்டதில் எட்டுப்பேர் இப்போது சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார் கள்.

கடந்த சில தினங்களுக்கு முன் அந்த தேவாலயத்தில் வணக்க முறையில் ஏற்பட்ட மோதலால் சாலை தங்கராசு, சாலை தினகரன், சாலை இந்திரகுமார், சாலைபாண்டி, சாலைமதியரசன், சாலைதவநீதன், சாலைவெற்றிவேல், சாலைஜெயவேல், சாலைஜெயசீலன், சாலைமுத்துக் குமரன் ஆகிய பத்துப்பேர் மீது வழக்கு பதிவு செய்த அன்னவாசல் காவல் நிலைய அதிகாரிகள் எட்டுப்பேரை திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பியதில் இப்போது மெய்வழிச்சாலையில் மீண்டும் அமைதி திரும்பியிருக்கிறது.

என்றபோதிலும் மெய்வழிச் சாலையை கைக்கொள்வதிலும் அதற்கு ஆதீனமாக வருவதிலும் கடும்போட்டி நிலவுவதாலும் மெய்வழிச்சாலையைப் பொறுத்த மட்டிலும் மர்மமாகவே இருப்ப தாலும் இருதரப்பினரும் மெய் வழிச்சாலையின் மத்தியில் இருக்கும் தேவாலயத்தையே குறிவைப்பதால் கேரளா பத்மநாப கோயிலுக்குள் இருப்பதைப் போல் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருக்குமோ என்கிற சந்தேகம் அனைத்துத் தரப்பின ருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

- ம.மு. கண்ணன்.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Banner

அண்மைச் செயல்பாடுகள்