முன்பு அடுத்து Page:

தமிழக மாணவர்களுக்கு பிற மாநிலங்களில் பாதுகாப்பு இல்லை: கனிமொழி

தமிழக மாணவர்களுக்கு  பிற மாநிலங்களில் பாதுகாப்பு இல்லை: கனிமொழி

  திருப்பூர், ஜன. 21- டில்லியில் மர்மமான முறையில் இறந்த திருப்பூரை சேர்ந்த மருத்துவ மாணவர் சரத் பிரபுவின் குடும் பத்தினரை அவர்களது வீட்டில் கனிமொழி எம்.பி நேரில் நேற்று (20.1.2018) சந்தித்து ஆறுதல் கூறினார். இதுகுறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறியிருப்பதா வது: பாதிக்கப்பட்ட சரத் பிரபு குடும்பத்துக்கு மத்திய, மாநில அரசுகள் நிச்சயம் பதில் கூற வேண்டும். இதற்கு முன்பு திருப்பூரை சேர்ந்த சரவணன் என்ற மருத் துவ மாணவர் இறந்தது....... மேலும்

21 ஜனவரி 2018 16:41:04

காவிரி நீர் வேண்டி ஜன.27இல் ரயில் மறியல் போராட்டம் தமிழர் தலைவரை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய விவச…

காவிரி நீர் வேண்டி ஜன.27இல் ரயில் மறியல் போராட்டம்  தமிழர் தலைவரை நேரில் சந்தித்து  ஆதரவு கோரிய விவசாயிகள்

  சென்னை, ஜன.21  காவிரி டெல்டா பகுதியில் பயிர்கள் நீரின்றி வாடி கருகும் நிலை யைத் தடுத்திட, கருநாடக அரசிடமிருந்து பாசனத்துக்கு தேவையான தண்ணீரை தமி ழக அரசு பெற்றுத்தரவேண்டும் எனக்கோரி 27.1.2018 அன்று ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, தமிழக விவசாயிகள் நலச்சங்க தலை வர் ஜி.சேதுராமன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பொ.அய்யாக் கண்ணு,....... மேலும்

21 ஜனவரி 2018 16:40:04

பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக பொதுமக்கள் சாலை மறியல்

பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக பொதுமக்கள் சாலை மறியல்

  மதுரை,  ஜன. 21-  மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் 6 பேரை காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்த னர். தமிழகம் முழுவதும் பேருந்து கட்ட ணம் உயர்த்தப்பட்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் புதிய கட்டணம் அமலுக்கு வந்தது. இதனால் அனைத்து தரப்பினரும் அதிருப்தி அடைந்தனர். இதனால் வெளியூர்களில் இருந்து இரவு பயணம் மேற்கொண்டவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். இந்நிலையில்....... மேலும்

21 ஜனவரி 2018 16:19:04

பேருந்துக் கட்டண உயர்வு: தலைவர்கள் கண்டனம்

பேருந்துக் கட்டண உயர்வு: தலைவர்கள் கண்டனம்

சென்னை, ஜன. 21- பேருந்து கட்டண உயர்வுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரசு கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மு.க.ஸ்டாலின் (திமுக): மக்களைச் சோதனைக்குள்ளாக்கி வரும் தமிழக அரசு அடுத்த தாக்குதலாக, திடீரென்று ரூ.3,600 கோடிக்கு மேல் பேருந்து கட் டணங்களை உயர்த்தியுள்ளது. திமுக ஆட்சியில் டீசல் விலை உயர்ந்தபோது கூட அய்ந்து ஆண்டுகளுக்கு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட வில்லை. போக்குவரத்து ஊழியர்களிடம்....... மேலும்

21 ஜனவரி 2018 16:17:04

விமானங்களில் செல்போன்களை பயன்படுத்த அனுமதி: டிராய் பரிந்துரை

விமானங்களில் செல்போன்களை  பயன்படுத்த அனுமதி: டிராய் பரிந்துரை

புதுடில்லி, ஜன.21  விமானங் களில் பயணிகள் செல்போன்கள் மற்றும் இணையச் சேவையைப் பயன்படுத்த அனுமதிக்கலாம் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு டிராய்(இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்) பரிந்துரைத் துள்ளது. தற்போது விமானங்களில் செல்போன்கள் பயன்படுத்த பயணிகள் அனுமதிக்கப்படுவ தில்லை. பல்வேறு பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, இந்த விதிமுறை பின் பற்றப்படுகிறது. இந்த நிலையில், விமானப் பயணங்களின்போது செல்போன் சேவைகளை பயன் படுத்த அனுமதிக்கும் திட்டம் தொடர்பான பரிந்துரைகளை வழங்குமாறு,....... மேலும்

21 ஜனவரி 2018 16:15:04

திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில்  தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி, ஜன.21 திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில், தேசிய தீயணைப்பு வாரத்தை முன்னிட்டு திருச்சி மத்திய மண்டல தீயணைப்பு துறையும் பெரியார் நூற்றாண்டு கல்வி குழுமமும் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான தீ தடுப்பும் மற்றும் பாதுகாப்பும் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி பெரியார் நூற்றாண்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் 19-01-2018 அன்று மதியம் 2  மணி முதல் 4  மணி வரை....... மேலும்

21 ஜனவரி 2018 16:13:04

பக்தியின் யோக்கியதை இதுதானா? கோவில் விழாவில் தகராறு; முற்றுகை!

  பக்தியின் யோக்கியதை இதுதானா? கோவில் விழாவில் தகராறு; முற்றுகை!

புதுக்கோட்டை, ஜன 20 புதுக் கோட்டைமாவட்டம்,சத்திய மங்கலத்தில் ஒரு சிவன் கோவில் உள்ளது. இக்கோவி லில் பொங்கலை முன்னிட்டு தை முதல் நாள் அந்த ஊரில் உள்ள ஒரு பிரிவினரும், தை இரண்டாம்நாளில் மற்றொரு பிரிவினர் மக்களும்பொங்கல் வைத்துசாமிகும்பிடுவது வழக்கமாம். ஆண்டாண்டுகால மாக இப்படித்தான் நடந்து வந்திருக்கிறதாம். இந்நிலையில்இந்தஆண் டும் தைமுதல்நாள் நிகழ்ச்சியை 14ஆம் தேதி ஒரு பிரிவினர் நடத்தியிருக்கிறார்கள். வழக்கம்போல்அடுத்தநாள் நிகழ்ச்சியாக15ஆம்தேதி மற்றொரு பிரிவினர் பொங்கல் வைத்து சாமி கும்பிட்டதோடு,....... மேலும்

20 ஜனவரி 2018 15:47:03

வெளிக் கல்லூரி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி சென்னை அய்.அய்.டி அறிவிப்பு

  வெளிக் கல்லூரி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி   சென்னை அய்.அய்.டி அறிவிப்பு

சென்னை, ஜன.20 வெளிக் கல்லூரி மாணவர்களுக்கு உதவித் தொகையுடன் கூடிய கோடைகால பயிற்சியை சென்னை அய்.அய்.டி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை அய்.அய்.டி வெளியிட்ட அறி விப்பு வருமாறு: பொறியியல், மேலாண்மை மற்றும் அறிவியல் துறைகளில் சேர்ந்து படித்து வரும் இளம் மாணவர்களிடையே ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வையும், ஆர் வத்தையும் தூண்டும் வகையில் இரண்டு மாத கால கோடைகால பயிற்சி வகுப்புகளை சென்னை அய்.அய்.டி அறிமுகம் செய்துள் ளது. விண்வெளி தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், வேதி....... மேலும்

20 ஜனவரி 2018 15:43:03

தமிழகத்தில் பேருந்து கட்டணம் திடீர் உயர்வு

தமிழகத்தில் பேருந்து கட்டணம் திடீர் உயர்வு

சென்னை, ஜன. 20- தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் கடந்த 2001ஆ-ம் ஆண்டு முதல் இதுவரை இரண்டு முறை உயர்த்தப்பட்டு உள்ளது. கடைசியாக 2011-ஆம் ஆண்டு நவம் பர் 18ஆம் தேதி பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியது. இந்த நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று திடீரென்று அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. உயர்த்தப்பட்ட பேருந்து கட்டண விவரம் வருமாறு:- இதுவரை சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் இயக்கப்பட்ட நகர, மாநகர பேருந்துகளில் (1 முதல்....... மேலும்

20 ஜனவரி 2018 15:25:03

பொங்கல் விழாவில் பங்கேற்க வந்த தலித் மக்கள் மீது அராஜகத் தாக்குதல்

  பொங்கல் விழாவில் பங்கேற்க வந்த தலித் மக்கள் மீது அராஜகத் தாக்குதல்

திருவண்ணாமலை, ஜன. 20- திருவண்ணா மலை மாவட்டம் காஞ்சி அருகே, பொங்கல் விழாவில் பங்கேற்க வந்த தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டதுடன், அவர்களின் காலனியில் புகுந்த ஆதிக்க சாதியினர் அவர்களை விரட்டியடித்துள்ளனர். அதில் படுகாய மடைந்து மக்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதன் விவரம் வருமாறு: திருவண் ணாமலை மாவட்டம், காஞ்சி அருகே உள்ளது ஆலத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் 60க்கும்....... மேலும்

20 ஜனவரி 2018 15:25:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவனந்தபுரம், டிச.4- கேரளாவில் கடும் சேதத்தை ஏற்படுத்திய ஒக்கி புயல் பாதிப்புகளை தேசிய பேரிட ராக அறிவிக்க முடியாது என மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கே.ஜே. அல் போன்ஸ் ஞாயிறன்று தெரிவித்தார்.

ஒக்கி புயல் கேரளாவில் திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற் படுத்தியுள்ளது. இந்த நிலை யில் கேரளாவில் ஏற்பட்டுள்ள புயல் சேதம் குறித்து மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் கூறுகை யில், சனிக்கிழமை கேரள அரசு ஒக்கி புயலை தேசியப் பேரழிவாக அறிவிப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை மய்யத்தை அணுக முடிவு செய்தது. அதன்படி மய்யத்தை அணுகினோம்.

ஒக்கி புயலை ஒரு தேசியப் பேரழிவு என்று அறிவிக்க எந்தவிதமான விதிமுறைகளும் இல்லை என்று அது தெளிவு படுத்தியுள்ளது. எனவே இதனை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. ஆனால், புயல் சேத பாதிப்புகளுக்கு இம் மய்யம் நிவாரண நிதி வழங்கும். தேவைப்பட்டால், அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யும் என்றார்.மீட்பு மற்றும் புனர் வாழ்வளிப்பு நடவடிக்கை களை விவாதிப்பதற்காக

ஞாயிற்றுக்கிழமை கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் பிற அமைச்சர்களுடன் அமைச்சர் அல்போன்ஸ் கூட் டத்திற்கு ஏற்பாடு செய்திருந் தார்.

அந்தக் கூட்டத்தில் ஒக்கி புயல் காரணமாக, இதுவரை பத்து பேர் உயிரிழந்துள்ளதாக வும் 115 பேரை இன்னும் கண்டு பிடிக்கமுடியாமல் இருப் பது குறித்தும் விவாதிக்கப்பட் டது.இந்தக் கூட்டத்தில் பேசிய கேரளமுதல்வர் பினராயி விஜயன், 395 மீனவர்கள் மிகப் பெரிய கூட்டு மீட்பு நடவடிக் கைகளால் காப்பாற்றப்பட்ட னர். இதுவரை 475 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். பல்வேறு மீட்பு நிறுவனங்களும் இணைந்து செயல்பட்ட ஒரு சரியான ஒருங்கிணைப்பு என் பது இதுதான் என்றார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner