முன்பு அடுத்து Page:

5 மாநிலத் தேர்தல் முடிவுகள்: வரும் மக்களவைத் தேர்தலில் பாசிச பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் - திமுக தலைவ…

5 மாநிலத் தேர்தல் முடிவுகள்: வரும் மக்களவைத் தேர்தலில் பாசிச பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை, டிச.12  நேற்று (11/-12-/2018) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்ணா அறி வாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் முழு விவரம் பின்வருமாறு: செய்தியாளர்: 5 மாநில தேர்தல் முடிவு களில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் வென்றுள் ளதை எல்லாத் தலைவர்களும் வரவேற்றிருக் கிறார்கள். நீங்கள் சோனியா காந்தி அவர் களையும் ராகுல்காந்தி அவர்களையும் சந்தித்து வந்துள்ளீர்கள். அதற்குப் பிறகு இந்த முடிவுகள் வந்திருக்கிறது........ மேலும்

12 டிசம்பர் 2018 15:24:03

இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கான மின்னணு வர்த்தக பயிற்சி தொடக்கம்

சென்னை, டிச.12 படித்த இளைஞர்களுக்கு வர்த்தக துறையில் வேலைவாய்ப்பு வழங்கி வரும் டிஜிட்டல் அகாடமி 360 நிறுவனம், இந்தியாவில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி நிறுவனங்களின் வேகமாக வளர்ந்து வரும் ஒரு நிறுவனம் ஆகும். இது தென் பகுதியில் அதன் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக சென்னையில் நான்கு புதிய மய்யங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில், அண்ணா நகர், தியாகராயர் நகர், அடையாறு, மற்றும் வேளச்சேரி, ஆகிய இடங்களில் இந்த மையங்கள் அமைந்துள்ளளது. இதில் 2018....... மேலும்

12 டிசம்பர் 2018 15:06:03

மோடியின் ஏமாற்று வித்தைகளை மக்கள் அடையாளம் கண்டு வீழ்த்தியுள்ளனர்: மார்க்சிஸ்ட்

சென்னை, டிச.12 பிரதமர் மோடியின் ஏமாற்று வித்தைகளை மக்கள் அடையாளம் கண்டு 5 மாநிலத் தேர்தல்களில் பாஜகவை வீழ்த்தியுள்ளனர் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாலகிருஷ் ணன் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “நடந்து முடிந்த அய்ந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ளது. பல முக்கிய அமைச்சர்கள் மற்றும் பாஜக....... மேலும்

12 டிசம்பர் 2018 15:06:03

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது உயர்நீதிமன்றம் கேள்…

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது உயர்நீதிமன்றம் கேள்வி?

சென்னை, டிச.12  நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் நகரப் பேருந்துகளின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டியைச் சேர்ந்த ஏ.கலியபெருமாள் தாக்கல் செய்த மனுவில், நகரங்களில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை விட தனியார் பேருந்துகளில் குறைவான கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், கடலூர் மற்றும்....... மேலும்

12 டிசம்பர் 2018 15:06:03

உலக அளவில் அதிவேகமாக வளரும் நகரங்களில் திருப்பூருக்கு 6ஆம் இடம்

திருப்பூர், டிச.12 ‘ஆக்ஸ்ஃ போர்டு பொருளாதாரம்’ எனும் சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், 2019 தொடங்கி 2035-ஆம் ஆண்டுக்கு 8.36 சதவீதம் சராசரி வளர்ச்சிக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேகமாக வளரும் முதல் 10 இடங்களில், தமிழகத்தைச் சேர்ந்த திருப்பூர், திருச்சி, சென்னை ஆகிய 3 இடங்கள் இடம் பிடித்திருப்பது எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இதுதொடர்பாக திருப்பூர் தொழில் துறையினர் சிலர் கூறிய தாவது: வளரும் நகரங்களில் ஒன்றாக திருப்பூர் இடம்பிடிக்க....... மேலும்

12 டிசம்பர் 2018 15:06:03

கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே கோட்ட அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

சென்னை, டிச.12  ரயில்களில் தூங்கும் வசதிகொண்ட பெட்டிகளில் கீழ்படுக்கை ஒதுக்கீடுகளை மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சென்னை உள்பட 4 நகரங்களில் செவ்வாய்க்கிழமை போராட் டத்தில் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, அரசு தரும் ஒரே அடையாள சான் றையே நாடு முழுவதும் எல்லாத் துறைகளும் ஏற்க வேண்டும்; ரயில்வே நிர்வாகம் தரும் சான்றை வாங்கக்கூறி அலைக்கழிப் பதை நிறுத்த வேண்டும்; மாற்றுத்திறனாளிகள்....... மேலும்

12 டிசம்பர் 2018 15:06:03

அகில இந்திய அளவில் பா.ஜ.க.வை வீழ்த்த மாபெரும் கூட்டணி

அகில இந்திய அளவில்  பா.ஜ.க.வை வீழ்த்த மாபெரும் கூட்டணி

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் பேட்டி சென்னை, டிச.11 அகில இந்திய அளவில் மாபெரும் கூட்டணி உருவாகிவிட்டது என்றார் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டா லின் அவர்கள் 10.-12-.2018 அன்று டில்லியில் நடை பெற்ற அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர், சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு: மு.க.ஸ்டாலின்: இந்திய நாட்டில்....... மேலும்

11 டிசம்பர் 2018 16:53:04

‘குரூப் - 1’ தேர்வு : 1.37 லட்சம் பேர் காத்திருப்பு

சென்னை, டிச.11  ‘குரூப் -- 1’ தேர்வு முடிவுக்காக, 1.37 லட்சம் பேர், எதிர்பார்த்து காத்திருக்கின் றனர். தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, குரூப் - 1 பதவி களுக்கு, தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையமான, டி.என். பி.எஸ்.சி., வழியாக போட்டி தேர்வு அறிவிக்கப் பட்டது. இதன்படி, துணை ஆட்சியர் - 29; டி.எஸ்.பி., - 34; வணிகவியல் உதவி கமிஷனர், தீயணைப்பு துறை மாவட்ட அதிகாரி பதவி....... மேலும்

11 டிசம்பர் 2018 16:53:04

உதவி மருத்துவர் பணியிடம் 1884 பணியிடங்களுக்கு 9,353 பேர் தேர்வு எழுதினர்

சென்னை, டிச.11 உதவி மருத்துவர் காலி பணியிடங்களுக்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்வினை 9,353 பேர் எழுதினர். இதற்காக 5 தேர்வு மய்யங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு சென்ற சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தேர்வு நடவடிக்கைகளை நேரடியாகப் பார்வையிட்டார். இதுதொடர்பாக சுகாதாரத் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக நாட்டிலேயே முதன்முறையாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தமிழகத்தில்தான் அமைக் கப்பட்டது. அந்த வாரியத்தின் மூலமாக....... மேலும்

11 டிசம்பர் 2018 16:36:04

புகைப்பட வருகைப் பதிவு முறை: சென்னை அரசுப் பள்ளியில் அறிமுகம்

புகைப்பட வருகைப் பதிவு முறை:  சென்னை அரசுப் பள்ளியில் அறிமுகம்

சென்னை, டிச.11 புகைப்பட வருகைப் பதிவு முறை தமிழகத்தில் முதல் முறையாக சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமல் படுத்தப்பட்டது. மாணவர்களை புகைப்படம் எடுத்து வருகைப் பதிவு செய்யும் முறையை அரசுப் பள்ளியில் அறிமுகம் செய்ய தமிழக பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த, அய்.சி.இ.டி. என்ற நிறுவனம் சார்பில், ‘ஆண்ட்ராய்ட்’ வகை செயலி வழியாக, இந்த தொழில்நுட்பம் அமலாகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், நாட்டிலேயே....... மேலும்

11 டிசம்பர் 2018 16:36:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாகர்கோவில், டிச.5 கன்னி யாகுமரியில் கடந்த 30-ஆம் தேதி வீசிய ஒக்கி புயல் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தியது.

2 மணி நேரம் சுழன்று அடித்த சூறாவளி காற்று 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்களையும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களையும் வேரோடு வீழ்த் தியது. காற்றுடன் மழையும் பெய்ததில் மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது.

முன் எச்சரிக்கை நடவடிக்கை யாக மாவட்ட நிர்வாகம் 29ஆம் தேதியே மின் விநியோகத்தை துண்டித்தது. இதனால் பெரிய அளவில் உயிர் இழப்பு தடுக் கப்பட்டது.

புயல் ஓய்ந்து இன்றுடன் 5 நாட்கள் ஆகி விட்டது. ஆனாலும் துண்டிக்கப்பட்ட மின்சாரம் இதுவரை விநியோகிக் கப்பட வில்லை. 6 நாட்களாக குமரி மாவட்ட மக்கள் இருளில் தவிக் கிறார்கள்.

மின் விநியோகத்தை சீர மைக்க மாநில அரசு வெளி மாவட்டங்களில் இருந்து மின் ஊழியர்களை வரவழைத்து சீரமைப்பு பணிகளை மேற் கொண்டுள்ளது.

ஆனாலும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு இன்னும் மின்சாரம் வழங்கப் படவில்லை.

மின்சாரம் இல்லாததால் இதுவரை குடிநீரும் வழங்க வில்லை. நாகர்கோவில் உள்பட பெரும்பாலான ஊர்களில் மக்கள் குடிநீருக்கு தவிக்கும் நிலை இன்னும் தீரவில்லை.

தண்ணீர் கிடைக்காததால் வல்லன்குமாரன்விளை, பீச் ரோடு சந்திப்பு, ராமன்புதூர், செட் டிக்குளம் பகுதிகளில் உள்ள மக்கள் ஆங்காங்கே போராட்டம், மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதே நிலை மாவட்டத்தின் பிற ஊர்களிலும் உருவானது.

குமரி மாவட்டத்தின் உட்புற பகுதிகளில் மின்சாரம், குடி நீரின்றி தவித்து வரும் நிலையில் கடலோர கிராம மக்கள் கடலுக்கு சென்ற மீனவர்கள் கதி என்ன? என்பதை அறிந்து கொள்ள முடியாமல் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

ஒக்கி புயல் எச்சரிக்கை விடும் முன்பே கடலுக்கு சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன வர்கள் இன்னும் கரை திரும்ப வில்லை. அவர்கள் எங்கு இருக் கிறார்கள்? என்ற விவரம் இது வரை தெரியவில்லை. அவர்களை உடனடியாக மீட்டு கரைக்கு கொண்டு வர வேண்டுமென்று  காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத் துள்ளனர்.

கடலில் காணாமல் போன மீனவர்களில் குமரி மாவட் டத்தைச் சேர்ந்த 2 மீனவர்களின் உடல்கள் இதுவரை கரை ஒதுங்கி உள்ளது. இதுபோல கேரள கடல் பகுதியில் 18 பேரின் உடல்கள் கரை ஒதுங்கி உள்ளன. அவை திருவனந்தபுரம், கொல்லம் அரசு மருத்துவமனைகளில் வைக்கப் பட்டுள்ளது. அந்த உடல்களில் சில அழுகிய நிலையில் உள்ளன. இதில் குமரி மீனவர்கள் யாரும் உள்ளனரா? என்பதை அடை யாளம் காண குமரி மாவட்ட மீனவ அமைப்பினர் கேரள சென்றுள்ளனர்.

மீனவர்களின் உடல்கள் ஒவ்வொன்றாக கரை ஒதுங்கி வருவதால் குமரி மாவட்ட மீனவ மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். மாயமான மீனவர் களை உடனடியாக மீட்காவிட் டால் மீனவ குடும்பத்தினர் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள். அதற்கு முன்பு தேடும் பணியை முடுக்கி விட வேண்டுமென்று கூறி அவர்கள் போராட்டத்திலும் குதித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner