முன்பு அடுத்து Page:

விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் வாசகர்களின் சங்கமமாக மாறிய சென்னை புத்தக சங்கமம்!

விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் வாசகர்களின் சங்கமமாக மாறிய சென்னை புத்தக சங்கமம்!

சென்னை, ஏப். 22- உலகப்புத்தக நாளை முன்னிட்டு ஏப்ரல் 20 முதல் 25 வரையிலான 6 நாள்கள் புத்தகத் திருவிழா சென்னை பெரியார் திடலில் நடை பெற்று வருகிறது. எளிய மக்களுக்கான புத்தக திரு விழாவாக மாறியிருக்கும் சென்னை புத் தக சங்கமம், கரும்பு தின்ன கூலி தரு வது போல, கோடையில் நடைபெறும் குளிர்பதன வசதி கொண்ட புத்தகக் காட்சி, 50% தள்ளுபடியில் கிடைக்கும் அறிவுப்புதையல். நுழைவுக் கட்டணம் இல்லாத....... மேலும்

22 ஏப்ரல் 2018 15:38:03

ஒன்று முதல் அய்ந்தாம் வகுப்பு வரை எந்தெந்த பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன?

ஒன்று முதல் அய்ந்தாம் வகுப்பு வரை எந்தெந்த பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன?

சென்னை, ஏப்.22 ஒன்றாம் வகுப்பு முதல் அய்ந்தாம் வகுப்பு வரை எந்தெந்த பாடங்கள் கற்பிக் கப்படுகின்றன என்பது குறித்து சிபிஎஸ்இ தனியார் பள்ளிகள் சங்கம் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. இதுதொடர்பாக, வழக் குரைஞர் புருஷோத்தமன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன் சில் (என்சிஇஆர்டி) பாடத் திட்டத்தின்படி முதல் வகுப்பில் மூன்று பாடங்கள்....... மேலும்

22 ஏப்ரல் 2018 15:31:03

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அஞ்சலட்டை அனுப்பும் பணி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அஞ்சலட்டை அனுப்பும் பணி

  குடியாத்தம், ஏப். 22 13.4.2018 அன்று குடியேற்றம் லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளியில் தமிழக விவசாயிகளின் நலன் கருதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மேதகு குடியரசு தலைவர் அவர்களுக்கு அஞ்சலட்டை அனுப்பும் பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் வி.சடகோபன்  தலை மையேற்று தமிழக விவசாயி களின் நிலை குறித்தும், மேலாண்மை வாரியம் அமைப் பதினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், தமிழ்நாட்டின்....... மேலும்

22 ஏப்ரல் 2018 15:29:03

குடிசைவாழ் சிறுவனின் குருதியின் கொப்பளித்த வீரம்!

குடிசைவாழ் சிறுவனின் குருதியின் கொப்பளித்த வீரம்!

சென்னை, ஏப். 22- சிறுவயதில் நண்பர்க ளுடன் சேர்ந்து திருடன் - போலீஸ் விளையாட்டில் ஈடுபட்ட அனுபவத்தில், மருத்துவரிடம் தங்கச் சங்கிலியைப் பறித் துச் சென்ற திருடனை துரத்திப் பிடித்த தாக சிறுவன் சூர்யா கூறியுள்ளார். சென்னை அண்ணாநகர் டி பிளாக் 3ஆ-வது தெருவில் மகப்பேறு மருத்துவ ரான அமுதா (வயது 50) கிளினிக் வைத் திருந்தார். இவரிடம் கத்தி முனையில் செயின் பறித்து தப்பித்த திருடனை திரு மங்கலத்தைச் சேர்ந்த....... மேலும்

22 ஏப்ரல் 2018 15:24:03

சென்னை அய்.அய்.டி. யில் இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் பணி நியமனம் செய்வதா? ரத்து செய்யக் கோரி உயர்நீதி…

 சென்னை அய்.அய்.டி. யில் இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் பணி நியமனம் செய்வதா? ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை, ஏப்.21 சென்னை அய்.அய்.டி. கல்வி நிறுவனம் மத்திய அரசின் மனித வளமேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கிவரும் கல்வி நிறுவனமாகும். கடந்த 2014ஆம் ஆண்டில் மத்திய பாஜக அரசு அமைந்ததுமுதலே கல்வி நிறுவனங்களில் குறிப்பாக உயர் கல்வி மற்றும் ஆய்வுகல்வி பயிலும் மாணவர்கள் கல்வியைத் தொடர்வதில் பெரும் அறைகூவல் ஏற்பட்டு வருகிறது. அய்தராபாத் மத்திய பல்கலைக்கழகத் தின் ஆய்வு மாணவரான ரோகித் வெமுலா எனும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவனுக்கு கல்வி உதவித் தொகை....... மேலும்

21 ஏப்ரல் 2018 16:56:04

காவல்துறை பாதுகாப்பு இல்லாமல் எச்.ராஜா வெளியே வர முடியுமா? ஆ.இராசா அறைகூவல்

  காவல்துறை பாதுகாப்பு இல்லாமல் எச்.ராஜா வெளியே வர முடியுமா? ஆ.இராசா அறைகூவல்

கோவை, ஏப்.21, கோவை சுந்தராபுரத்தில் தி.மு.க. பொதுக் கூட்டம் நடந்தது. இதில் முன் னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கலந்து கொண்டு பேசினார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் படிப்படியாக கட்சி மற்றும் நிர்வாகங்களில் உயர்ந்தவர். மு.க. ஸ்டாலினின் வளர்ச்சி என்பது சுக பிரசவம். காவிரி பிரச்சினைக்காக முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் ஒரு துரும்பை கூட தூக்கி போட வில்லை. தன்மானத்தை விட இனமானம் முக்கியம் என்பதால், எடப்பாடி பழனிசாமி....... மேலும்

21 ஏப்ரல் 2018 16:24:04

ஆளுநர் பன்வாரிலால், பதவியில் நீடிப்பது அவமானம்; உடனே விலக வேண்டும் வைகோ வலியுறுத்தல்

 ஆளுநர் பன்வாரிலால், பதவியில் நீடிப்பது அவமானம்; உடனே விலக வேண்டும் வைகோ வலியுறுத்தல்

சென்னை, ஏப்.21 ஆளுநர் பன்வாரி லால்  பதவியில் நீடிப் பது அவமானம்; உடனே விலக வேண்டும் என மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர்  20.4.2018 வெளியிட்டுள்ள அறிக் கையில் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்துஅவர் தெரிவித்தி ருப்பதாவது: தமிழக ஆளுநராக பன்வாரி லால் புரோகித் பதவி ஏற்ற ஆறு மாதங்களில் பல்வேறு சர்ச்சை களின் நாயகராகக் காட்சி தரு கின்றார். ஆளுநருக்கு அரசியல் சட்டம் வழங்கி உள்ள அதி காரத்தை, வானளாவ அதிகாரமாக எடுத்துக்கொண்டு ஆதிக்கம்....... மேலும்

21 ஏப்ரல் 2018 16:24:04

சென்னை புத்தகச் சங்கமத்தின் (ஏப். 20-25) ஆறாவது சிறப்பு புத்தகக் காட்சி புரட்சி இயக்குநர் பாரதிராஜா…

சென்னை புத்தகச் சங்கமத்தின் (ஏப். 20-25) ஆறாவது சிறப்பு புத்தகக் காட்சி  புரட்சி இயக்குநர் பாரதிராஜா தொடங்கி வைத்தார்

மாணவர், இளைஞர்களின் குதூகலப் பெருவிழா! அறிவுத் தேடலின் புகலிடம்!! சென்னை புத்தகச் சங்கமத்தின் (ஏப். 20-25) ஆறாவது சிறப்பு புத்தகக் காட்சி புரட்சி இயக்குநர் பாரதிராஜா தொடங்கி வைத்தார் சென்னை, ஏப். 21- தமிழகத்தில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்து, மாணவ--மணிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கி விட்டது. மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், பெற் றோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் குடும்பத்துடன் கோடை விடுமுறையை எப்படி கழிப்பது....... மேலும்

21 ஏப்ரல் 2018 16:18:04

கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடக்கம்

 கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடக்கம்

கீழடி, ஏப்.20 சிவகங்கை மாவட்டம், கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள்  புதன்கிழமை தொடங்கின. கீழடிப் பள்ளிச் சந்தை புதூரில் கடந்த 2014 -ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறையின ரால் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த மூன்று ஆண்டுகளில் (2014- -2017) நடைபெற்ற அகழாய் வில், தமிழக வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டடங்கள், பல்வேறு வகையான மணிகள், தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப் பட்ட மண்பாண்ட ஓடுகள், தந்....... மேலும்

20 ஏப்ரல் 2018 15:19:03

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தர…

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஏப்.20 பெண் களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் பெருகிவிட்டது என்று கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம் எத்தனை வழக் குகளில்  எப்அய்ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு தெரிவிக்க வேண் டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசு நிர்பயா நிதியை ஒதுக்கியுள் ளது. இந்த நிதியைப் பெற்று தமிழகத்தில் பெண்கள் பாது காப்புக்காக  திட்டங்களை செயல்படுத்த உத்தரவிட வேண் டும் எனக்கோரி வழக்குரைஞர் சூரியபிரகாசம்....... மேலும்

20 ஏப்ரல் 2018 15:13:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாகப்பட்டினம், டிச. 5 -நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர் மழையால் 1 லட் சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் சம்பா பயிர்கள் மூழ்கியுள்ளன. நாகப்பட் டினத்தில் இரண்டு ஆறுகள், பல வாய்க் கால்கள் உடைப் பெடுத்து 10 க்கு மேற் பட்ட கிராமங்களில் வெள்ளம் புகுந்துள் ளது.

வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் வசித்த மக்கள் பள்ளிகளிலும், மண்டபங் களிலும் தங்கி அவதிப்படுகின்றனர்.திருக் குவளைக்கு அருகே, வெள்ளை யாற்றில் நான்கைந்து இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, 5 கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால், இந்த கிராம மக்கள்பாதுகாப்பான இடங்களில் தங்கி யுள்ளனர். உடைப்பெடுத்த பகுதிகளில் பொதுப்பணித் துறையினர், மணல் மூட்டைகளைப் போட்டு உடைப்புகளை அடைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளம் புகுந்த கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர்நிலங்களில் சம்பாப் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. நாகை மாவட்டம் முழுவதும் 1 லட்சத் துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் சம்பா பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலையோடு கூறுகின்றனர்.சீர்காழி அருகேயுள்ள பொறை வாய்க் காலில் உடைப்பெடுத்து, கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. இந்த வாய்க்காலை பல ஆண்டுகளாகத் தூர் வாராததால், தற்போதைய தொடர் கனமழையால், சேந்தங்குடி, விநாயக்குடி, வடகால், கடவாசல் உள்ளிட்ட பல பகுதிகளிலும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கிராமங்களில் புகுந்த வெள்ளம், வயல்களில் உள்ள நெற்பயிர்களை மூழ்கடித்துள்ளது. குடியி ருப்புப் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்த தால், மக்கள் மண்டபங்களிலும் பள்ளி களிலும் தங்கியுள்ளனர். வேதார ணியம் வட்டம், தலைஞாயிறு அருகேயுள்ள கிராமங்களில் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால், மக்கள், பாதுகாப் பான இடங்களில் தங்கியுள்ளனர்.

இவர்களுக்கு உணவு மட்டும் அளிக்கப் படுகிறது. மற்ற அடிப்படை வசதிகள் தரப்பட வில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் சில ஆறுகள், வாய்க்கால்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால், எங்கெங்கு உடைப் புகள் ஏற்படுமோ என்று கிராம மக்களும் விவசாயிகளும் அச்சத்தில் உள்ளனர்.நாகையில் தாழ்வான பகுதிகளில் கட்டப் பட்ட சுனாமி குடியிருப்புகளைச் சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது. புதிய நம்பியார் நகர் சுனாமி குடியிருப்புகள், பொதுத்துறை அலுவலர் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் செல்லூர், அந்தணப்பேட்டை உள்ளிட்ட சுனாமி குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மழை நீரை அகற்றிடநாகை நகராட்சியோ, உள்ளாட்சிகளோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை என்று பொதுமக்கள் புகார் தெரி விக்கின் றனர்.

நீரில் மூழ்கிய பயிர்கள்: விவசாயி அதிர்ச்சி மரணம்


நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியத்தில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானதால், விவசாயி ஒருவர் மாரடைப் பால் உயிரிழந்தார். நாகை மாவட்டம், வேளாங்கண்ணிக்கு அருகே யுள்ளது செருதூர் மீனவ கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் மீனவர் ச.கபிலன்(23). அதே ஊரைச் சேர்ந்த மீனவர்கள் 3 பேருடன் கன்னியாகுமரிக்குச் சென்று, தேங்காய்ப் பட்டினம் பகுதியில் சில மீனவர்களோடு இணை ந்து கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.வெள்ளிக்கிழமை அன்று, கடலில் மீன்பிடித்துக் கொண்டி ருந்த போது, ஒக்கி புயலின் தாக்கத்தால் படகு கவிழ்ந்து கபிலன் உயிரிழந்துள்ளார். அவரது உடல் லட்சத்தீவுக்கு அருகில் கரை ஒதுங்கியது.

செருதூர் மீனவப் பஞ்சாயத்தார், கபிலனின் உடலைக் கொண்டு வந்து ஒப்படைக்கும்படி மீன்வளத் துறை மற்றும் அரசிடம் கோரியதற்குப் பிறகு, இந்தியக் கடலோரக் காவல்படையினர், திங்கட்கிழமை அன்று கபிலனின் உடலை செருதூருக்குக் கொண்டுவந்து உறவின ரிடம் ஒப்படை த்தனர்.விவசாயி பலிதிரு மருகல் ஒன்றியம், திருச்செங் காட்டாங்குடி கிராமத்தில், ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி (65). இவர், தனது 2 ஏக்கர் நிலத்தில் இந்த ஆண்டு விதைத் தெளிப்பு முறையில் சாகுபடி செய்தார்.

தொடர்ந்து பெய்த மழையால் விதை நெல்கள் வெள்ளத்தில் வீணாகின. தற் போது இவர், விதைப்பு மூலம் சாகுபடி செய்து, இளம்பயிர்கள் முளைத்து வந்த போது, மீண்டும் கனமழை பெய்து பயிர்கள் நாசமாகின.சென்ற ஆண்டு, வறட்சியால், இவரது பயிர்கள் அழிந்தன. கடந்த ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகையும் இதுவரை இவருக்குக் கிடைக்க வில்லை. இந்நிலையில், தற் போதும் சாகுபடி செய்த பயிர்கள் சேதமாகி விட்டதால், இந்த இழப்பைத் தாங்க முடியாத விவசாயி பக்கிரிசாமி, ஞாயிறன்று, மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணமடைந்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner