முன்பு அடுத்து Page:

பேருந்துக் கட்டண உயர்வை திரும்ப பெறும்வரை போராட்டம் நடத்துவோம் திருமாவளவன் பேட்டி

 பேருந்துக் கட்டண உயர்வை திரும்ப பெறும்வரை போராட்டம் நடத்துவோம் திருமாவளவன் பேட்டி

விருத்தாசலம், ஜன. 23- விடு தலை சிறுத்தைகள் கட்சி தலை வர் திருமாவளவன் விருத்தா சலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் பேருந்து கட் டணம் உயர்த்தப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். 6 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து கட்டணத்தை உயர்த்தியிருக் கிறோம் என்றும், பிற மாநி லங்களைவிட தமிழகத்தில் மிக குறைவான கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது என்றும் ஆட்சியாளர்கள் கூறுவது ஏற் புடையதல்ல. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்த காலத்தில் கூட....... மேலும்

23 ஜனவரி 2018 14:58:02

தத்து எடுத்த பள்ளிக்கூடத்துக்கு 500 புத்தகங்கள் நன்கொடை: கனிமொழி எம்.பி. வழங்கினார்

தத்து எடுத்த பள்ளிக்கூடத்துக்கு 500 புத்தகங்கள் நன்கொடை: கனிமொழி எம்.பி. வழங்கினார்

சென்னை, ஜன. 23- நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை செலவழித்து பல்வேறு வசதிகளை செய்ய தத்து எடுத்த கிராமத்தில் உள்ள பள்ளிக் கூடத்துக்கு தன்னிடம் உள்ள 500 புத்தகங்களை கனிமொழி எம்.பி. நன்கொடையாக வழங் கினார். கனிமொழி எம்.பி. உடன டியாக தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகாவில் உள்ள சிறீவெங்கடேஷ்வரபுரம் கிராமத்தை தத்து எடுத்தார். கடந்த 3 ஆண்டுகளாக அந்த கிராமத்துக்கு தேவையான பல அடிப்படை வசதிகளை செய் தார். சில....... மேலும்

23 ஜனவரி 2018 14:39:02

சென்னை - கோவை சதாப்தி ரயிலில் அனுபூதி பெட்டிகள் இணைப்பு

  சென்னை - கோவை சதாப்தி ரயிலில் அனுபூதி பெட்டிகள் இணைப்பு

சென்னை, ஜன.22 சென்னை சென்ட்ரல்- -கோவை இடையே இயக்கப்படும் சதாப்தி விரைவு ரயிலில் அனுபூதி சிறப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டு குடியரசு தினத்தன்று இயக் கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து 20.1.2018 அன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ரயில் எண் 12243/12244: சென்னை சென்ட்ரல் - - கோவை - - சென்னை சென்ட்ரல் இடையிலான சதாப்தி விரைவு ரயிலில், ஜனவரி 26 -ஆம் தேதி குடியரசு தினத்தன்று அனுபூதி....... மேலும்

22 ஜனவரி 2018 16:49:04

பையூரில் தந்தை பெரியார் நினைவுநாள்

பையூரில் தந்தை பெரியார் நினைவுநாள்

தந்தை பெரியார் 44ஆவது நினைவு நாளையொட்டி 24.12.2017 அன்று பையூரில் உள்ள அவரது சிலைக்கு தருமபுரி மண்டல திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கோ.திராவிடமணி தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் தா.சுப்பிரமணியம், பையூர் கிளை கழக தலைவர் பெரியசாமி, செயலாளர் இராஜா ஆகியோர் முன்னிலையில் தருமபுரி மண்டலத் தலைவர் பெ.மதிமணியன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும்

22 ஜனவரி 2018 16:30:04

தமிழகத்தில் வகுப்புவாத சக்திகள் காலூன்ற அனுமதியோம்: கல்வியாளர்கள் உறுதி

தமிழகத்தில் வகுப்புவாத சக்திகள் காலூன்ற அனுமதியோம்: கல்வியாளர்கள் உறுதி

சென்னை, ஜன. 22-- மதநல்லிணக்கத்தை பாதுகாக்கும் நோக்கோடு மக்கள் மத்தியிலும் அறிவுசார் கல்வியாளர்கள் மத்தியில் இயங்கிவரும் தமிழகமக்கள் ஒற்றுமை மேடைசார்பில் மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா சனிக்கிழமை (ஜன.20) சென்னை தியாகராயர் நகரில் கலை இலக்கிய நிகழ்ச்சியோடு நடைபெற்றது. வசந்தி தேவி இந்த விழாவில் சிறப்புவிருந்தின ராகக் கலந்துகொண்ட மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் வே.வசந்திதேவி மேளம் அடித்து கலைநிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். அவர் தம் உரையில், மத்திய பாஜக அரசு....... மேலும்

22 ஜனவரி 2018 16:08:04

தமிழக மாணவர்களுக்கு பிற மாநிலங்களில் பாதுகாப்பு இல்லை: கனிமொழி

தமிழக மாணவர்களுக்கு  பிற மாநிலங்களில் பாதுகாப்பு இல்லை: கனிமொழி

  திருப்பூர், ஜன. 21- டில்லியில் மர்மமான முறையில் இறந்த திருப்பூரை சேர்ந்த மருத்துவ மாணவர் சரத் பிரபுவின் குடும் பத்தினரை அவர்களது வீட்டில் கனிமொழி எம்.பி நேரில் நேற்று (20.1.2018) சந்தித்து ஆறுதல் கூறினார். இதுகுறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறியிருப்பதா வது: பாதிக்கப்பட்ட சரத் பிரபு குடும்பத்துக்கு மத்திய, மாநில அரசுகள் நிச்சயம் பதில் கூற வேண்டும். இதற்கு முன்பு திருப்பூரை சேர்ந்த சரவணன் என்ற மருத் துவ மாணவர் இறந்தது....... மேலும்

21 ஜனவரி 2018 16:41:04

காவிரி நீர் வேண்டி ஜன.27இல் ரயில் மறியல் போராட்டம் தமிழர் தலைவரை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய விவச…

காவிரி நீர் வேண்டி ஜன.27இல் ரயில் மறியல் போராட்டம்  தமிழர் தலைவரை நேரில் சந்தித்து  ஆதரவு கோரிய விவசாயிகள்

  சென்னை, ஜன.21  காவிரி டெல்டா பகுதியில் பயிர்கள் நீரின்றி வாடி கருகும் நிலை யைத் தடுத்திட, கருநாடக அரசிடமிருந்து பாசனத்துக்கு தேவையான தண்ணீரை தமி ழக அரசு பெற்றுத்தரவேண்டும் எனக்கோரி 27.1.2018 அன்று ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, தமிழக விவசாயிகள் நலச்சங்க தலை வர் ஜி.சேதுராமன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பொ.அய்யாக் கண்ணு,....... மேலும்

21 ஜனவரி 2018 16:40:04

பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக பொதுமக்கள் சாலை மறியல்

பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக பொதுமக்கள் சாலை மறியல்

  மதுரை,  ஜன. 21-  மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் 6 பேரை காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்த னர். தமிழகம் முழுவதும் பேருந்து கட்ட ணம் உயர்த்தப்பட்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் புதிய கட்டணம் அமலுக்கு வந்தது. இதனால் அனைத்து தரப்பினரும் அதிருப்தி அடைந்தனர். இதனால் வெளியூர்களில் இருந்து இரவு பயணம் மேற்கொண்டவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். இந்நிலையில்....... மேலும்

21 ஜனவரி 2018 16:19:04

பேருந்துக் கட்டண உயர்வு: தலைவர்கள் கண்டனம்

பேருந்துக் கட்டண உயர்வு: தலைவர்கள் கண்டனம்

சென்னை, ஜன. 21- பேருந்து கட்டண உயர்வுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரசு கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மு.க.ஸ்டாலின் (திமுக): மக்களைச் சோதனைக்குள்ளாக்கி வரும் தமிழக அரசு அடுத்த தாக்குதலாக, திடீரென்று ரூ.3,600 கோடிக்கு மேல் பேருந்து கட் டணங்களை உயர்த்தியுள்ளது. திமுக ஆட்சியில் டீசல் விலை உயர்ந்தபோது கூட அய்ந்து ஆண்டுகளுக்கு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட வில்லை. போக்குவரத்து ஊழியர்களிடம்....... மேலும்

21 ஜனவரி 2018 16:17:04

விமானங்களில் செல்போன்களை பயன்படுத்த அனுமதி: டிராய் பரிந்துரை

விமானங்களில் செல்போன்களை  பயன்படுத்த அனுமதி: டிராய் பரிந்துரை

புதுடில்லி, ஜன.21  விமானங் களில் பயணிகள் செல்போன்கள் மற்றும் இணையச் சேவையைப் பயன்படுத்த அனுமதிக்கலாம் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு டிராய்(இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்) பரிந்துரைத் துள்ளது. தற்போது விமானங்களில் செல்போன்கள் பயன்படுத்த பயணிகள் அனுமதிக்கப்படுவ தில்லை. பல்வேறு பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, இந்த விதிமுறை பின் பற்றப்படுகிறது. இந்த நிலையில், விமானப் பயணங்களின்போது செல்போன் சேவைகளை பயன் படுத்த அனுமதிக்கும் திட்டம் தொடர்பான பரிந்துரைகளை வழங்குமாறு,....... மேலும்

21 ஜனவரி 2018 16:15:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, டிச.5 குரூப் 4 தேர்வுக்கு தவறுதலாக தேர்வுக் கட்டணச் சலுகை கோரியவர்கள், தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவி களுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 13. தேர்வுக்கட்டணத்தை டிச.15-க்குள் செலுத்த வேண்டும். 

பழங்குடியினர், பட்டியல் வகுப்பினர், பட்டியல் வகுப் பினர் (அருந்ததியர்), ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தேர்வுக்கட்டணம் செலுத்துவதிலிருந்து முற்றிலு மாக விலக்கு அளிக்கப்பட்டுள் ளனர். முன்னாள் இராணுவத்தினர் இரண்டு முறை தேர்வுக்கட்டண சலுகையினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிற்படுத்தப்பட்டோர், பிற் படுத்தப்பட்டோர் (இசுலா மியர்), மிகவும் பிற்படுத்தப் பட் டோர், சீர்மரபினர் ஆகியோர் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் அரசாணையின்படி, பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) தேர்ச்சி பெற்றிருந் தாலே, மூன்று முறை தேர்வுக் கட்டண சலுகையினை பயன் படுத்திக்கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் குரூப் 4 தேர்வுக்கு தவறுதலாக தேர்வுக் கட்டணச்சலுகை கோரி விண் ணப்பித்து, இப்போது தேர்வுக் கட்டணம் செலுத்த விரும்புப வர்கள் தங்களது விருப்பத்தினை மாற்றி தேர்வுக்கட்டணத்தை இணையவழியில் மட்டுமே செலுத்த வழி வகை செய்யப்பட் டுள்ளது. மற்றவர்களுக்கு இது பொருந்தாது.

ஒரு முறை வாய்ப்பு: இது ஒருமுறை வாய்ப்பாக மட்டுமே அளிக்கப்படும். இவ்வாறு தற்போது தேர்வுக்கட்டணச் சலுகையின் விருப்பத்தை மாற்றி தேர்வுக்கட்டணம் செலுத்து பவர்கள், அடுத்த தேர்வுகளுக்கு விருப்பத்தினை மாற்றி தேர்வுக் கட்டணச் சலுகையை மீண்டும் கோர முடியாது.

மேலும் தங்களது விருப் பத்தினை மாற்றிய பின் தேர்வுக் கட்டணம் செலுத்தாமலோ அல்லது தொழில்நுட்பக் காரணம் உட்பட பல்வேறு காரணங் களினால் தேர்வுக்கட்டணம் செலுத்த முடியாமல் போனாலோ அவர்களது விண்ணப்பம் நிரா கரிக்கப்படும். எனவே விண் ணப்பதாரர்கள் தாங்கள் செலுத்திய கட்டணமும் விண் ணப்பமும் தேர்வாணையத்தால் ஏற்கப்பட்டுள்ளதா, என்பதை தேர்வாணையத்தின் இணைய தளத்தில் தெரிந்து கொள்ளுமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத் தப்படுகிறார்கள்.

இந்தச் சலுகை கடந்த நவ.14-ஆம் தேதி வெளியான தொகுதி 4 அறிவிக்கை மற்றும் இதன் பின்னர் அறிவிக்கப்படும் அறிவிக்கைகளுக்கு மட்டுமே பொருந்தும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணை யம் தெரிவித்துள்ளது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner