முன்பு அடுத்து Page:

பேருந்துக் கட்டண உயர்வை திரும்ப பெறும்வரை போராட்டம் நடத்துவோம் திருமாவளவன் பேட்டி

 பேருந்துக் கட்டண உயர்வை திரும்ப பெறும்வரை போராட்டம் நடத்துவோம் திருமாவளவன் பேட்டி

விருத்தாசலம், ஜன. 23- விடு தலை சிறுத்தைகள் கட்சி தலை வர் திருமாவளவன் விருத்தா சலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் பேருந்து கட் டணம் உயர்த்தப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். 6 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து கட்டணத்தை உயர்த்தியிருக் கிறோம் என்றும், பிற மாநி லங்களைவிட தமிழகத்தில் மிக குறைவான கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது என்றும் ஆட்சியாளர்கள் கூறுவது ஏற் புடையதல்ல. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்த காலத்தில் கூட....... மேலும்

23 ஜனவரி 2018 14:58:02

தத்து எடுத்த பள்ளிக்கூடத்துக்கு 500 புத்தகங்கள் நன்கொடை: கனிமொழி எம்.பி. வழங்கினார்

தத்து எடுத்த பள்ளிக்கூடத்துக்கு 500 புத்தகங்கள் நன்கொடை: கனிமொழி எம்.பி. வழங்கினார்

சென்னை, ஜன. 23- நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை செலவழித்து பல்வேறு வசதிகளை செய்ய தத்து எடுத்த கிராமத்தில் உள்ள பள்ளிக் கூடத்துக்கு தன்னிடம் உள்ள 500 புத்தகங்களை கனிமொழி எம்.பி. நன்கொடையாக வழங் கினார். கனிமொழி எம்.பி. உடன டியாக தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகாவில் உள்ள சிறீவெங்கடேஷ்வரபுரம் கிராமத்தை தத்து எடுத்தார். கடந்த 3 ஆண்டுகளாக அந்த கிராமத்துக்கு தேவையான பல அடிப்படை வசதிகளை செய் தார். சில....... மேலும்

23 ஜனவரி 2018 14:39:02

சென்னை - கோவை சதாப்தி ரயிலில் அனுபூதி பெட்டிகள் இணைப்பு

  சென்னை - கோவை சதாப்தி ரயிலில் அனுபூதி பெட்டிகள் இணைப்பு

சென்னை, ஜன.22 சென்னை சென்ட்ரல்- -கோவை இடையே இயக்கப்படும் சதாப்தி விரைவு ரயிலில் அனுபூதி சிறப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டு குடியரசு தினத்தன்று இயக் கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து 20.1.2018 அன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ரயில் எண் 12243/12244: சென்னை சென்ட்ரல் - - கோவை - - சென்னை சென்ட்ரல் இடையிலான சதாப்தி விரைவு ரயிலில், ஜனவரி 26 -ஆம் தேதி குடியரசு தினத்தன்று அனுபூதி....... மேலும்

22 ஜனவரி 2018 16:49:04

பையூரில் தந்தை பெரியார் நினைவுநாள்

பையூரில் தந்தை பெரியார் நினைவுநாள்

தந்தை பெரியார் 44ஆவது நினைவு நாளையொட்டி 24.12.2017 அன்று பையூரில் உள்ள அவரது சிலைக்கு தருமபுரி மண்டல திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கோ.திராவிடமணி தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் தா.சுப்பிரமணியம், பையூர் கிளை கழக தலைவர் பெரியசாமி, செயலாளர் இராஜா ஆகியோர் முன்னிலையில் தருமபுரி மண்டலத் தலைவர் பெ.மதிமணியன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும்

22 ஜனவரி 2018 16:30:04

தமிழகத்தில் வகுப்புவாத சக்திகள் காலூன்ற அனுமதியோம்: கல்வியாளர்கள் உறுதி

தமிழகத்தில் வகுப்புவாத சக்திகள் காலூன்ற அனுமதியோம்: கல்வியாளர்கள் உறுதி

சென்னை, ஜன. 22-- மதநல்லிணக்கத்தை பாதுகாக்கும் நோக்கோடு மக்கள் மத்தியிலும் அறிவுசார் கல்வியாளர்கள் மத்தியில் இயங்கிவரும் தமிழகமக்கள் ஒற்றுமை மேடைசார்பில் மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா சனிக்கிழமை (ஜன.20) சென்னை தியாகராயர் நகரில் கலை இலக்கிய நிகழ்ச்சியோடு நடைபெற்றது. வசந்தி தேவி இந்த விழாவில் சிறப்புவிருந்தின ராகக் கலந்துகொண்ட மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் வே.வசந்திதேவி மேளம் அடித்து கலைநிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். அவர் தம் உரையில், மத்திய பாஜக அரசு....... மேலும்

22 ஜனவரி 2018 16:08:04

தமிழக மாணவர்களுக்கு பிற மாநிலங்களில் பாதுகாப்பு இல்லை: கனிமொழி

தமிழக மாணவர்களுக்கு  பிற மாநிலங்களில் பாதுகாப்பு இல்லை: கனிமொழி

  திருப்பூர், ஜன. 21- டில்லியில் மர்மமான முறையில் இறந்த திருப்பூரை சேர்ந்த மருத்துவ மாணவர் சரத் பிரபுவின் குடும் பத்தினரை அவர்களது வீட்டில் கனிமொழி எம்.பி நேரில் நேற்று (20.1.2018) சந்தித்து ஆறுதல் கூறினார். இதுகுறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறியிருப்பதா வது: பாதிக்கப்பட்ட சரத் பிரபு குடும்பத்துக்கு மத்திய, மாநில அரசுகள் நிச்சயம் பதில் கூற வேண்டும். இதற்கு முன்பு திருப்பூரை சேர்ந்த சரவணன் என்ற மருத் துவ மாணவர் இறந்தது....... மேலும்

21 ஜனவரி 2018 16:41:04

காவிரி நீர் வேண்டி ஜன.27இல் ரயில் மறியல் போராட்டம் தமிழர் தலைவரை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய விவச…

காவிரி நீர் வேண்டி ஜன.27இல் ரயில் மறியல் போராட்டம்  தமிழர் தலைவரை நேரில் சந்தித்து  ஆதரவு கோரிய விவசாயிகள்

  சென்னை, ஜன.21  காவிரி டெல்டா பகுதியில் பயிர்கள் நீரின்றி வாடி கருகும் நிலை யைத் தடுத்திட, கருநாடக அரசிடமிருந்து பாசனத்துக்கு தேவையான தண்ணீரை தமி ழக அரசு பெற்றுத்தரவேண்டும் எனக்கோரி 27.1.2018 அன்று ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, தமிழக விவசாயிகள் நலச்சங்க தலை வர் ஜி.சேதுராமன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பொ.அய்யாக் கண்ணு,....... மேலும்

21 ஜனவரி 2018 16:40:04

பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக பொதுமக்கள் சாலை மறியல்

பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக பொதுமக்கள் சாலை மறியல்

  மதுரை,  ஜன. 21-  மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் 6 பேரை காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்த னர். தமிழகம் முழுவதும் பேருந்து கட்ட ணம் உயர்த்தப்பட்டு வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் புதிய கட்டணம் அமலுக்கு வந்தது. இதனால் அனைத்து தரப்பினரும் அதிருப்தி அடைந்தனர். இதனால் வெளியூர்களில் இருந்து இரவு பயணம் மேற்கொண்டவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். இந்நிலையில்....... மேலும்

21 ஜனவரி 2018 16:19:04

பேருந்துக் கட்டண உயர்வு: தலைவர்கள் கண்டனம்

பேருந்துக் கட்டண உயர்வு: தலைவர்கள் கண்டனம்

சென்னை, ஜன. 21- பேருந்து கட்டண உயர்வுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரசு கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மு.க.ஸ்டாலின் (திமுக): மக்களைச் சோதனைக்குள்ளாக்கி வரும் தமிழக அரசு அடுத்த தாக்குதலாக, திடீரென்று ரூ.3,600 கோடிக்கு மேல் பேருந்து கட் டணங்களை உயர்த்தியுள்ளது. திமுக ஆட்சியில் டீசல் விலை உயர்ந்தபோது கூட அய்ந்து ஆண்டுகளுக்கு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட வில்லை. போக்குவரத்து ஊழியர்களிடம்....... மேலும்

21 ஜனவரி 2018 16:17:04

விமானங்களில் செல்போன்களை பயன்படுத்த அனுமதி: டிராய் பரிந்துரை

விமானங்களில் செல்போன்களை  பயன்படுத்த அனுமதி: டிராய் பரிந்துரை

புதுடில்லி, ஜன.21  விமானங் களில் பயணிகள் செல்போன்கள் மற்றும் இணையச் சேவையைப் பயன்படுத்த அனுமதிக்கலாம் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு டிராய்(இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்) பரிந்துரைத் துள்ளது. தற்போது விமானங்களில் செல்போன்கள் பயன்படுத்த பயணிகள் அனுமதிக்கப்படுவ தில்லை. பல்வேறு பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, இந்த விதிமுறை பின் பற்றப்படுகிறது. இந்த நிலையில், விமானப் பயணங்களின்போது செல்போன் சேவைகளை பயன் படுத்த அனுமதிக்கும் திட்டம் தொடர்பான பரிந்துரைகளை வழங்குமாறு,....... மேலும்

21 ஜனவரி 2018 16:15:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை, டிச.6 ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் பயன் பெறும் வகையில் பள்ளி களை இணைத்து சிறப்பு வழித் தடத்தில் பேருந்துகளை இயக்க சென்னை உயர்நீதிமன்றம் உத் தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்குரைஞர் ஜார்ஜ் வில்லி யம்ஸ், அரசுப் பேருந்துகளில் படிக்கட்டுகள், ஜன்னல் ஓரங்கள் மற்றும் மேற்கூரைகளில் தொங் கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள் குறித்து நாளிதழ்களில் வெளியான செய்திகள் தொடர்பாக முறையிட்டார். இதனை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் இது தொடர்பாக பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி ஹேமலதா அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக பிரத்யேகமாக 250 பேருந்துகள் குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்படுவதாக மாநகர அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக் கப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் பள்ளிகளை இணைத்து சிறப்பு வழித்தடங்களை உருவாக்கி பேருந்துகளை இயக்க வேண்டும். மேலும் ஏற்கெனவே பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக இயக்கப் படும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கூட்டம் அதிகமாக உள்ள பேருந்துகளில் மாணவர்கள் தொங்கிய படி ஆபத்தான பயணம் மேற்கொள்வதைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

அறிவியலாளர் விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு  

சென்னை, டிச.6 அறிவியலாளர் விருதுகளுக்கான விண்ணப் பங்கள் வரவேற் கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விருது, தமிழ்நாடு முதுநிலை அறிவியலாளர் விருது, தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருது ஆகிய 2016 -ஆம் ஆண்டுக்கான அறி வியல் நகர விருதுகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான முன்மொழிதல் படிவம், விண்ணப்பப் படிவம், விண்ணப்பிக்க அடிப்படை தகுதிகள், விதிகள் ஆகியவை அறிவியல் நகர இணையதளத்தில்   வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் அனைத்துப் படிவங்களையும்   ஜனவரி 12-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண் டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner