முன்பு அடுத்து Page:

கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடக்கம்

 கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடக்கம்

கீழடி, ஏப்.20 சிவகங்கை மாவட்டம், கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள்  புதன்கிழமை தொடங்கின. கீழடிப் பள்ளிச் சந்தை புதூரில் கடந்த 2014 -ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறையின ரால் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த மூன்று ஆண்டுகளில் (2014- -2017) நடைபெற்ற அகழாய் வில், தமிழக வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டடங்கள், பல்வேறு வகையான மணிகள், தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப் பட்ட மண்பாண்ட ஓடுகள், தந்....... மேலும்

20 ஏப்ரல் 2018 15:19:03

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தர…

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஏப்.20 பெண் களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் பெருகிவிட்டது என்று கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம் எத்தனை வழக் குகளில்  எப்அய்ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு தெரிவிக்க வேண் டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசு நிர்பயா நிதியை ஒதுக்கியுள் ளது. இந்த நிதியைப் பெற்று தமிழகத்தில் பெண்கள் பாது காப்புக்காக  திட்டங்களை செயல்படுத்த உத்தரவிட வேண் டும் எனக்கோரி வழக்குரைஞர் சூரியபிரகாசம்....... மேலும்

20 ஏப்ரல் 2018 15:13:03

ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25சதவிகித ஒதுக்கீடு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

 ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25சதவிகித ஒதுக்கீடு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஏப்.20 பொருளாதார அளவில் நலிவடைந்தோர் தங் களது குழந்தைகளை எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் தனி யார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு அல்லது எல்.கே.ஜி வகுப்பில் சேர்க்க  (ஏப்.20) முதல் விண்ணப் பிக்கலாம். தமிழகத்தில் 2013- - 2014ஆம் கல்வி ஆண்டில் இருந்து, ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளி களில் 25 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2018 - 2019- ஆம் கல்வியாண்டில் சிறுபான் மையற்ற தனியார் பள்ளிகளில்....... மேலும்

20 ஏப்ரல் 2018 15:10:03

பேரா.நிர்மலாதேவி விவகாரம் ஆளுநர் அமைத்த ஆணையத்தால் நிச்சயம் நியாயம் கிடைக்காது மு.க.ஸ்டாலின் பேட்டி

 பேரா.நிர்மலாதேவி விவகாரம் ஆளுநர் அமைத்த ஆணையத்தால் நிச்சயம் நியாயம் கிடைக்காது மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை, ஏப்.20 மாநில சுயாட்சிக்கு எதிராக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செயல்படும் நிலையில், அவருக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.கொளத்தூர் ஜெய்பீம் நகரில் சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.29.36 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலைக் கடையின் புதிய கட்டடத்தை பொது மக்கள் பயன் பாட்டுக்காக மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காவிரி மேலாண்மை....... மேலும்

20 ஏப்ரல் 2018 14:49:02

பள்ளிகளுக்கு ஏப்.21 முதல் மே 31 வரை கோடை விடுமுறை

பள்ளிகளுக்கு ஏப்.21 முதல் மே 31 வரை கோடை விடுமுறை

சென்னை, ஏப்.20 கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு சனிக்கிழமை (ஏப்.21) முதல் மே 31-ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ஒரு வாரத்திற்கு முன் நிறைவுபெற்றன. 10-ஆம் வகுப் புக்கு சமூக அறிவியல் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற வுள்ளது. தனியார், நர்சரி, பிரை மரி, மெட்ரிகுலேஷன் பள்ளி களில் 5-ஆம் வகுப்பு வரையில் தேர்வுகள் ஏற்கெனவே முடி....... மேலும்

20 ஏப்ரல் 2018 14:49:02

செயங்கொண்டம் பெரியார் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

செயங்கொண்டம் பெரியார் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

செயங்கொண்டம், ஏப்.19 செயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் (யு.கே.ஜி) வகுப்பு மாணவர்களுக்கு 9ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா 6.4.2018 அன்று இனிதே நடைபெற்றது.  விழாவின் தொடக்கமாக இசை வாத்தியங்களின் முழக்கத் துடன் மழலையர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் சுவாமி நாதன், ராதாகிருஷ்ணன், பவுல், காமராஜ், கோவிந்தராஜ் ஆகியோர் பட்டமளிப்பு விழா ஆடை அணிந்து விழா மேடைக்குச் அழைத்து வரப்பட்டனர். மொழிவாழ்த்துடன் பிற்பகல் 3 மணியளவில் நிகழச்சி நடை பெற்றது. ....... மேலும்

19 ஏப்ரல் 2018 16:57:04

ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணி தி.மு.க.வினரை தடுத்து நிறுத்தி கைது செய்தது காவல்துறை

ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணி  தி.மு.க.வினரை தடுத்து நிறுத்தி கைது செய்தது காவல்துறை

  சென்னை, ஏப். 18- தமிழக ஆளு நராக பொறுப்பேற்ற பன்வாரி லால் புரோகித் மாவட்டந் தோறும் சென்று வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்வது டன், பொதுமக்களிடமும் குறை களை கேட்டறிகிறார். அதிகாரி களுடனும் ஆலோசனை நடத்துகிறார். அவரது இந்த செயல்பாடுகளுக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிக ளும் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றன. ஆளுநரின் நடவ டிக்கை மாநில உரிமைகளை பறிப்பதாக  உள்ளது என்றும் குற்றம்சாட்டுகின்றன. இந்நிலையில், தமிழக ஆட்சி அதிகாரத்தில்....... மேலும்

18 ஏப்ரல் 2018 16:43:04

தமிழ்நாடு எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. ஊடுருவல்

தமிழ்நாடு எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. ஊடுருவல்

தமிழ்நாடு எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. ஊடுருவல் மருத்துவக் கருத்தரங்கம் எனும் பெயரால் மதவாதத்தைத் திணிக்கச் செய்த முயற்சி முறியடிப்பு - நிகழ்ச்சி ரத்து! சென்னை, ஏப்.18 மருத்துவக் கருத்தரங்கம் என்ற பெயரால் ஆர்.எஸ்.எஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அமைப்பு தந்திரமாக எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தை  இணைத்து நடத்த இருந்த கருத்தரங்கம், எதிர்ப்பின் காரணமாகக் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. மதவாத அமைப்பின் சார்பில் நடைபெறும் கருத்தரங்....... மேலும்

18 ஏப்ரல் 2018 16:27:04

கழகப் பொதுக்கூட்டத்தில் இந்துத்துவா வாதிகள் காலித்தனம் - காவல்துறை என்ன செய்கிறது?

 கழகப் பொதுக்கூட்டத்தில் இந்துத்துவா வாதிகள் காலித்தனம் - காவல்துறை என்ன செய்கிறது?

புதுக்கோட்டை, ஏப்.18 தஞ்சை மாவட்ட எல்லை முடிவும், புதுக் கோட்டை மாவட்ட எல்லை ஆரம்பப் பகுதியான கட்டுமாவடி யில் (கடற்கரை பகுதி) பட்டுக் கோட்டை கழக மாவட்டமான பேராவூரணி - -சேதுபாவாசத்திரம் ஒன்றிய கழகத்தின் சார்பிலும், அறந்தாங்கி கழக மாவட்டம் சார்பாகவும் (கட்டுமாவடி கடைவீதியில்) 15.4.2018 அன்று தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா, தெருமுனை கூட்டம் நடத்த 10.4.2018 அன்று மணமேல்குடி காவல்....... மேலும்

18 ஏப்ரல் 2018 16:12:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மதுரை, டிச.7 தமிழகத்தில் நீதிமன்றம் உத்தரவிற்கு பின்பு, 1000 அரசு உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையா சிரியர் பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் சங்கம் வலியு றுத்தியுள்ளது.

பட்டதாரி ஆசிரியரில் இருந்து முதுநிலை ஆசிரியர் அல்லது உயர்நிலை பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெறுவதில் இருந்த சில நடைமுறைகளுக்கு எதிராக, சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளைகளில் வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து உயர்நிலை பள்ளி தலைமை யாசிரியர் பதவி உயர்வுக்கு இடைக்கால தடை விதிக்கப் பட்டது. இதனால் ஓராண்டுக்கும் மேலாக, 950க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை பள்ளிகளில் பதவி உயர்வு மூலம், தலைமை யாசிரியர் பணியிடங்களை நிரப்ப முடியாத சூழ்நிலை ஏற் பட்டது.

இந்நிலையில்  சென்னை உயர்நீதி மன்றம் பதவி உயர் வுக்கான இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டது. அதை யடுத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும் இடைக்கால தடையை நீக்கியது. ஆனாலும் தலைமை யாசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப கல்வி அதிகாரிகள் நட வடிக்கை எடுக்காமல்,  இழுத்த டிக்கின்றனர் என புகார் எழுந் துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில தலைவர் சாமிசத்திய மூர்த்தி கூறுகையில், “நீதிமன்ற இடைக் கால தடையால், ஓராண்டுக்கும் மேலாக 1000க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங் களை நிரப்ப முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது தடை நீங்கி யுள்ளது. இனியும் தாமதிக்காமல் மாணவர் நலன், கற்பித்தல் பணி, தேர்ச்சி சதவிகிதத்தை கவனத்தில் கொண்டு, இம்மாதத் திற்குள் பதவி உயர்வுக்கான பணி மூப்பு பட்டியல் தயாரித்து அனைத்து பணியிடங்களையும் ‘கலந்தாய்வு’ மூலம் நிரப்ப நடவ டிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner