முன்பு அடுத்து Page:

பெண் காவல்துறையினருக்கு எதிரான பாலியல் குற்றங்கள்: கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் விசாரணை…

சென்னை, ஆக.20  பெண் காவல் மற்றும் அரசு பெண் ஊழியர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பற்றி விசாரிக்க ஏற்கனவே விசாகா என்ற கமிட்டி செயல்பாட்டில் இருந்தது. அந்த கமிட்டியின் உறுப்பினர்கள் ஓய்வு பெற்றுவிட்டதால், அது செயல்பாடற்ற நிலையில் இருந்தது. தற்போது அந்த கமிட்டிக்கு புத்துயிர் கொடுத்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. கூடுதல் காவல்துறை டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் அந்த கமிட்டி செயல்படும். கூடுதல் டி.ஜி.பி. அருணாசலம், காஞ்சிபுரம் சரக டி.அய்.ஜி........ மேலும்

20 ஆகஸ்ட் 2018 15:39:03

கேரளத்துக்கு ரூ.ஒரு கோடி மருந்துப் பொருள்கள்: தமிழக அரசு தகவல்

கேரளத்துக்கு ரூ.ஒரு கோடி மருந்துப் பொருள்கள்: தமிழக அரசு தகவல்

சென்னை, ஆக.20 வெள் ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு தமிழக சுகாதாரத் துறை சார்பில் ரூ.ஒரு கோடி மதிப்பிலான மருந் துகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு: தமிழக முதல்வரின் உத்தரவு பேரில், கேரளத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள பகுதிகளுக்கு தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் ரூ.ஒரு கோடி மதிப் பிலான மருந்துப் பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளன. வெள்ளத்தால் ஏற்படக் கூடிய தொற்று நோய்களைத் தடுப்பதற்கும்,....... மேலும்

20 ஆகஸ்ட் 2018 15:23:03

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கு கலைஞர் பெயர் சூட்டவேண்டும் : கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்

      திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கு கலைஞர் பெயர் சூட்டவேண்டும் : கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்

சென்னை, ஆக.20 கவிஞர் வைரமுத்து நிறுவன தலைவராக உள்ள வெற்றி தமிழர் பேரவை சார்பில் மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞருக்கு நினைவேந்தல் கூட்டம் சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கவிஞர் வைரமுத்து தலைமை தாங்கினார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன், இந்து குழும தலைவர் என்.ராம்,  ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா, திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன், பத்திரிகையாளர்....... மேலும்

20 ஆகஸ்ட் 2018 15:19:03

இந்திய அரசியலை தீர்மானிக்கும் அரசியல் சக்தியாக கலைஞர் திகழ்ந்தார்: வைகோ

இந்திய அரசியலை தீர்மானிக்கும்  அரசியல் சக்தியாக கலைஞர் திகழ்ந்தார்: வைகோ

சென்னை, ஆக.20 இந்திய அரசியலை தீர்மானிக்கும் முக்கிய அரசியல் சக்தியாக கலைஞர் திகழ்ந்தார் என்று வைகோ புகழாராம் சூட்டியுள்ளார். மதிமுக சார்பில் கலைஞருக்கு நினை வேந்தல் செலுத்தும் வகையில் நேற்று மாலை 4 மணியளவில் அமைதி பேரணி நடந்தது. மதிமுக பொதுச்  செயலாளர் வைகோ தலைமையில் 300க்கும் மேற் பட்ட மதிமுகவினர் சேப்பாக்கம், வாலாஜா சாலையில் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் எதிரில் உள்ள  அரசு விருந்தினர் மாளிகை அருகிலிருந்து அமைதி....... மேலும்

20 ஆகஸ்ட் 2018 14:59:02

கடலில் வீணாய்க் கலக்கும் காவிரி நீர்: நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் மு.க. ஸ்டாலி…

   கடலில் வீணாய்க் கலக்கும் காவிரி நீர்:  நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்  மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, ஆக.20 காவிரி நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று (19.8.2018) வெளியிட்ட அறிக்கை வருமாறு: கர்நாடகத்தில் கனமழை பெய்வதால் கிடைக்கும் பயனை வேளாண்மைப் பணிகளுக்குப் பயன்படுத்தி முறையாக அனுபவிக்க முடியாத நிலையில் தமிழக விவசாயிகள் தவித்து வருகின்றனர். இரு முறை மேட்டூர் அணை, முழுக் கொள்ள ளவை எட்டிய போதும், அங்கிருந்து திறந்து....... மேலும்

20 ஆகஸ்ட் 2018 14:54:02

ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் தீவு போல் காட்சி அளிக்கும் கிராமங்கள்

   ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால்  தீவு போல் காட்சி அளிக்கும் கிராமங்கள்

கொள்ளிடம், ஆக.20 கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங் குள்ள அணைகளில் இருந்து தமிழகத்துக்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று மேட்டூர் அணையில் இருந்து திறக் கப்படும் தண்ணீரின் அளவு 2 லட்சத்து 5 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. தண்ணீர் திறப்பு தொடர்ந்து அதிகரிப்பதால் தஞ்சை, நாகை மாவட்டங்களில் பாயும் கொள் ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றங்கரையோர கிராமங்களை அதிகாரிகள்....... மேலும்

20 ஆகஸ்ட் 2018 14:54:02

பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வு: மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வு:  மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

சென்னை, ஆக.20 பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கக் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு: கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடை பெற்ற பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண் ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சம்பந்தப் பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவ லகத்துக்கு ஆக.16 மற்றும் ஆக.17....... மேலும்

20 ஆகஸ்ட் 2018 14:54:02

தூர்வாரும் பணிகளில் முறைகேட்டைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் : முத்தரசன் பேட்டி

   தூர்வாரும் பணிகளில் முறைகேட்டைக் கண்டித்து  முற்றுகைப் போராட்டம்  : முத்தரசன் பேட்டி

சுந்தரக்கோட்டை, ஆக. 20 திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், செய்தியாளர் களுக்கு பேட்டியளித்தார். குளம், வாய்க்கால், ஏரிகள் தூர் வாரும் பணிக்காக ஒதுக்கும் நிதி ஒழுங் காக பயன்படுத்தவில்லை. டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவா ரூர், நாகை ஆகிய பகுதிகளில் குளம், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வார இந்த ஆண்டு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை....... மேலும்

20 ஆகஸ்ட் 2018 14:53:02

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிபுணர் குழு நியமனம்

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிபுணர் குழு நியமனம்

தூத்துக்குடி, ஆக. 19- இஸ்ரோவின் ராக்கெட்களை ஏவுவதற்கு 3ஆ-வது புதிய ஏவு தளம் அமைப்பது குறித்த சாத்தியங்களை ஆராய வல்லுநர் குழு நியமிக்கப்பட் டுள்ளது. அத்துடன் இஸ்ரோவின் லட்சியமாக கருதப்படும் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தையும் புதிய ஏவுதளத்தில் இருந்து செயல்படுத்துவது குறித்த ஆய்வுகளையும் இந்த வல்லுநர் குழு மேற்கொள்ளும். இதனால், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் நாட்டின் 3-ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட வாய்ப்புகள் அதிகரித் திருப்பதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை....... மேலும்

19 ஆகஸ்ட் 2018 16:46:04

கலைஞர் உடலை அடக்கம் செய்ய 1.75 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு

கலைஞர் உடலை அடக்கம்  செய்ய 1.75 ஏக்கர் நிலம்  ஒதுக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு

சென்னை, ஆக. 19 தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கலைஞர் கடந்த 7-ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடலை அடக்கம் செய்ய மெரினா கடற்கரை அண்ணா நினை விடம் அருகே இடம் ஒதுக்க தி.மு.க. சார்பில் தமிழக அரசி டம் கேட்கப் பட்டது. ஆனால், சட்ட சிக்கல் காரணமாக கலைஞருக்கு கிண்டி காந்தி மண்டபம் அருகில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்குவதாகவும், மெரி னாவில் இடம்....... மேலும்

19 ஆகஸ்ட் 2018 16:46:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை, பிப்.6 புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு பெயர் மாற்றினால், தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற அவர் பேசியது: மதராஸ் ஸ்டேட் என்ற நமது தமிழகத் துக்கு தமிழ்நாடு என அண்ணா பெயர் மாற்றினார். இந்த பெயர் மாற்றத்துக்காக அப்போது சென்னையில் நடைபெற்ற விழாவுக்கு, உடல்நலம் குன்றிய நிலையிலும் அண்ணா பங்கேற்றார்.

தற்போது புது தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு பொதிகை, வைகை என பெயர் மாற்றும் முயற்சி நடைபெறுகிறது. அங்குள்ள கருநாடகம், கேரளம் ஆகிய மாநிலத்துக்கான இல் லங்கள் அந்தந்த பெயரிலேயே அழைக்கப்படுகின்றன.

மத்தியில் ஆட்சியாளர்களுக்கு அடிமையாக உள்ளவர்கள் தமிழ்நாடு என்கிற பெயரை மாற்ற முயற்சிக்கின்றனர். இதனைக் கைவிட வேண்டும். தவறினால், தமிழகத்தில் போட்டங்கள் வெடிக்கும்.

தமிழகத்தில் முன்பெல்லாம் சீர்திருத்த திருமணங்கள் அதிகம் நடைபெறாது. கடந்த 1967-இல் அண்ணா முதல்வரான போது, சீர்திருத்த திருமணங்கள் செல்லும் என சட்டம் இயற்றினார். சட்ட அங்கீகாரம் கிடைத்த பின், அதிக எண்ணிக்கையிலான சீர்திருத்த திருமணங்கள் நடைபெறுகின்றன என்றார் அவர்.

சென்னையில் ஒரு நாள், மாதாந்திர பேருந்து சலுகை கட்டணம் உயர்வு  

சென்னை, பிப்.6 சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் அளிக்கப் பட்டு வரும் ஒரு நாள் பயண அட்டை கட்டணம் 50 ரூபாயில் இருந்து 80 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்த கட்டண உயர்வு வரும் 8ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று தெரி விக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கடந்த 20ஆம் தேதி பேருந்து கட்டணத்தை மாற்றியமைத்த பிறகு, ஒரு நாள் பயணச் சீட்டு பேருந்து கட்டணம் நிர்ணயிக்கப் படாமல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டது.

ஏற்கனவே பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக போராடி வருகின்றன. பொதுமக்களும் பேருந்து கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒரு நாள் பயண அட்டை கட்டணமும் உயர்த்தப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் மாதாந்திர பேருந்து சலுகை ரூ.1,000ல் இருந்து ரூ.1,300 ஆக உயருகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner