முன்பு அடுத்து Page:

ஓட்டல் மேலாண்மை படிப்புக்கான நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க மார்ச் 15 கடைசி நாள்

சென்னை, ஜன.19 பி.எஸ்சி. ஓட்டல் மேலாண்மை படிப்புக்கான நுழைவுத் தேர்வில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வரும் மார்ச் மாதம் 15-ஆம் தேதி கடைசி நாளாகும். தேசிய அளவில் நடத்தப்படும் ஜே.இ.இ.,  நெட் போன்ற நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. அதுபோல தேசிய ஹோட்டல் மேலாண்மை மற்றும் உணவுத் தொழில்நுட்ப கவுன்சிலின் கீழ் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் பி.எஸ்சி. விருந்தோம்பல் மற்றும்....... மேலும்

19 ஜனவரி 2019 17:00:05

உயர்ஜாதியினருக்கு பொருளாதார ரீதியிலான

10% இடஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக்கட்சிக் கூட்டம் (19.1.2019) தலைமை: கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம் வரவேற்புரை:  கவிஞர் கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம் கலந்துகொண்டவர்கள் நீதியரசர் து.அரிபரந்தாமன் ஆ.இராசா, கொள்கை பரப்புச் செயலாளர், திமுக எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மல்லை சத்யா, துணைப்பொதுச்செயலாளர், மதிமுக மு.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கே.எம்.நிஜாமுதீன், இந்திய யூனியன் முசுலீம் லீக் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மனித நேய மக்கள் கட்சி அச.உமர்பாரூக், பொருளாளர், எஸ்.டி.பி.அய் கட்சி ஏ.கே.கரீம், ஒருங்கிணைப்பாளர்,எஸ்.டி.பி.அய் கட்சி பேராசிரியர்....... மேலும்

19 ஜனவரி 2019 16:54:04

அணு ஆராய்ச்சி - பொறியியல் உயர்கல்வி கற்க உதவித் தொகை வழங்குகிறது ரஷ்யாவின் ரொசாட்டம் நிறுவனம்!

சென்னை, ஜன.19 தமிழ் நாட்டின் கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்துக்குத் தேவை யான முக்கிய உபகரணங் களையும், தொழில்நுட்ப ஆலோ சனைகளையும் வழங்கி வரும் ரஷ்ய நாட்டின் அணுசக்திக் கழக மான ரொசாட்டம்  தென்னிந்திய மாணவர்களுக்கு அணு பொறியியல் கல்வி கற்க சிறப்பு உதவித் தொகையை அறிவித்துள்ளது.  இந்தக் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான முதல்கட்ட விண்ணப்பங்களை வரும் பிப் ரவரி 15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இந்த உதவித்....... மேலும்

19 ஜனவரி 2019 16:54:04

பொருளாதார அடிப்படையில் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீடா?

சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு சென்னை, ஜன.19 பொரு ளாதாரத்தில் பின்தங்கிய முன் னேறிய வகுப்பினருக்கு பொரு ளாதார அடிப்படையில் 10  சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு கொண்டுவந்த சட்ட மசோதாவை ரத்து செய்யக் கோரி திமுக தொடர்ந்த வழக்கு விரைவில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்சமுதாயத்தின ருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட....... மேலும்

19 ஜனவரி 2019 16:52:04

தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசு!

தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசு!

8 ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காததால் முடக்கம்! சென்னை, ஜன. 19- தமிழகத்தில் சென்னை & கன்னியாகுமரி இடையே இரட்டை ரயில்  பாதை  அமைக்கும்  திட்டம் கடந்த  1998ஆ-ம்  ஆண்டு  தொடங்கியது. இத்திட்டத்தின்படி தற்போது மதுரை  வரையில் இரட்டை ரயில் பாதை  அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த  கட் டமாக மதுரை & கன்னியாகுமரி வரையில்  இரட்டை  ரயில்  பாதை அமைக்கும்  பணிகள்  நடைபெற்று வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளாக இரட்டை மற்றும் அகலப் பாதைகளுக்கும் ....... மேலும்

19 ஜனவரி 2019 16:21:04

ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தாததால் 30 ஆயிரம் ஆசிரியர்கள் பணியை தொடர்வதில் சிக்கல்

சிறப்பு தேர்வை நடத்த கோரிக்கை சென்னை, ஜன. 19- ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படாததால் 30 ஆயிரம் ஆசிரியர்கள் பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சிறப்பு தகுதித் தேர்வு நடத்த அரசு முன்வர வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். மத்திய அரசின் இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டம் 2010 ஆகஸ்ட் 23ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி களில் ஆசிரியராக....... மேலும்

19 ஜனவரி 2019 15:59:03

தேர்தல் கூட்டணி; பாஜகவை தோளில் தூக்கி சுமக்க நாங்கள் பாவமா செய்தோம்?

தேர்தல் கூட்டணி; பாஜகவை தோளில்  தூக்கி சுமக்க நாங்கள் பாவமா செய்தோம்?

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை, ஜன. 19- அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி என்று குருமூர்த்தி தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரையும் பாஜகவை தோளில் சுமக்க நாங்கள் பாவமா செய்தோம் என, எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டு தேர்தலில் தேமுதிக, மதிமுக, பாமக என மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக 2019 நாடாளுமன்றத்தில் தமிழகத்தில் கூட்டணிக்கு கட்சிகளை தேடும் நிலையில் உள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணி....... மேலும்

19 ஜனவரி 2019 15:59:03

சபரிமலைக்குச் சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சபரிமலைக்குச் சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜன. 19- சபரிமலைக் குச் சென்ற 2 பெண்களுக்கும் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேரள காவல்துறையினருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எல்.என்.ராவ், தினேஷ் மகேஸ்வரி ஆகி யோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அந்த அமர்வு, சபரிமலைக்குச் சென்று வழிபட்ட கனகதுர்கா ....... மேலும்

19 ஜனவரி 2019 15:49:03

ஜன.31இல் இறுதி வாக்காளர் பட்டியல்: தேர்தல் துறை அதிகாரிகள் தகவல்

ஜன.31இல் இறுதி வாக்காளர் பட்டியல்: தேர்தல் துறை அதிகாரிகள் தகவல்

சென்னை, ஜன. 18- இரட்டைப் பதிவு களை நீக்கும் நடைமுறை காரணமாக, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் வெளியிடப்பட்டு வந்த நிலை யில், இந்த ஆண்டு வரும் 31-இல் வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு செப் டம்பர் 1-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதாவது, இந்தப் பட்டியலில் வாக்காளர்களின் பெயர்கள் இல்லா விட்டாலோ, தவறாக இருந்தாலோ திருத்தங்கள் செய்ய....... மேலும்

18 ஜனவரி 2019 15:54:03

அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் கைப்பேசிகள் வழங்க முடிவு: தமிழக அரசு நடவடிக்கை

அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் கைப்பேசிகள் வழங்க முடிவு:  தமிழக அரசு நடவடிக்கை

சென்னை, ஜன. 18- பயனாளிகளுக்கு திட்டங்கள் சென்றடைவதை இணையதளத் தில் கண்காணிக்க அங்கன்வாடி பணி யாளர்களுக்கு மார்ச் மாதம் இறுதிக்குள் ஸ்மார்ட் கைப்பேசிகளை வழங்க ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சி திட்டத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் 54,439 அங் கன்வாடி மய்யங்கள் செயல் பட்டு வரு கின்றன. இந்த மய்யங்களை அங்கன் வாடி பணியாளர்கள் மற்றும் உதவியா ளர்கள் நிர்வகித்து வருகின்றனர். அவர் கள் 6 வயது....... மேலும்

18 ஜனவரி 2019 15:51:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை, பிப்.7  ஹார்வர்டு பல் கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு திமுக சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அந்தக் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்
அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தின் எல்லாப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றிவிட்டு, தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து, இந்தி மொழியை அறவே நீக்குகிறோம் என்று 1968 பிப்ரவரி 23 -இல், அண்ணா சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டதன் பொன் விழா ஆண்டில், உலகப் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழுக்குக் கிடைக்கப் போகும் இருக்கை என்பது ஒவ்வொரு தமிழருக்கும் பெருமையைத் தருவதாகும்.

அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சோனியா காந்தியை வலியுறுத்தி, முதல்வராக இருந்த கலைஞர் தமிழைச் செம்மொழியாக அறிவிக்கச் செய்தார். ஒன்று முதல் 10 -ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் தமிழ்க் கட்டாயப் பாடம் என தமிழ்நாடு தமிழ்க் கற்றல் சட்டத்தை அவர் நிறைவேற்றிக் காட்டினார்.

இந்தப் பின்னணியில், தமிழ் மொழி வளர்ச்சி - ஆராய்ச்சிப் பணியில் திமுகவின் அடுத்த பங்களிப்பாக, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு ரூ.1 கோடியை வழங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கலைஞரின் சார்பில் இந்த நிதி வழங்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழை வழக்காடு மொழியாக ஏற்க அனுமதி அளிக்காதது

அதிகார ஆணவம் : வைகோ

சென்னை, பிப்.7  நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட் டுள்ளதாவது:

உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. மாநிலங்களவையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள மத்திய சட்டத்துறை இணை அமைச்சர். பி.பி.சவுத்ரி, உச்ச நீதிமன்றத்தைக் காரணம் காட்டி, உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என்று அறிவித்துள்ளார். மத்திய அரசு ஏற்பு அளிக்காதது டில்லி ஆதிக்கத்தின் அதிகார ஆணவத்தை வெளிப்படுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அண்ணா பல்கலையில்
தொழில் முனைவோருக்கு 4 நாள் சிறப்பு நிகழ்ச்சி

சென்னை, பிப்.7 அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மய்யத்தின் கீழ் செயல்படும் கேபிட்டலைஸ் என்னும் கழகம் ஆண்டுதோறும் ‘எனந்த்ரா’ எனப்படும் தொழில் முனைவோர் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது.

இந்த ஆண்டு வரும் 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை 4 நாட்கள் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 8ஆம் தேதி முதல்நாள் தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் கா.பாண்டியராஜன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

நிகழ்ச்சி குறித்து அண்ணாபல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மய்ய இயக்குநர் ரவிகுமார் கூறிய தாவது: பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு பிற நிறுவனங்களில் வேலை செய்ய வேண்டும் என்ற மாணவர்களின் எண்ணங்களை மாற்றி தாங்களும் தொழில் முனைவோராக மாறி தொழில் தொடங்கலாம் என்பதை ஊக்குவிக்கும் விதமாகவே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதற்காக மாணவர்களுக்கு ஸ்டார்ட் அப் ஸ்ட்ரீட், ஸ்டார்ட் அப் பிட்ச் பெஸ்ட், 6 டிகிரி டாக் என்ற 7 தொழில் முனைவு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

மேலும், ஜி.எஸ்.டி, டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் ஸ்டாக் மார்கெட்டிங்  ஆகியவற்றை பற்றிய பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகிறது.

இதில் ‘பீட்ச் பெஸ்ட்’ என்ற நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்படும் மாணவருக்கு 6.5 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது. மொத்தமாக 10 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் தாங்கள் சொந்த நிறுவனத்தை தொடங்க முடியும். இது படித்த மாணவர்களின் வேலை இல்லாத் திண்டாட்டத்தை போக்கும் நடவடிக்கையே ஆகும். இவ்வாறு கூறினார்.

மகனால் துரத்தப்பட்ட
101 வயது மற்றும் 70 வயது மூதாட்டிகள் கருணை கொலைக்கு அனுமதி கோரி மனு

கோவை, பிப்.7 மில் தொழிலாளியின் மனைவிகளான 101 வயது, 70 வயது மூதாட்டிகள், கணவர் இறந்ததும் சொத்தை அபகரித்துக்கொண்டு மகன் விரட்டிவிட்டதாக கூறி கருணை கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், கோவை விளாங்குறிச்சி சேரன்மாநகர் பகுதியை சேர்ந்த பழனியம்மள் (101), மற்றொரு பழனியம்மாள் (70) ஆகியோர் தங்களை கருணை கொலை செய்ய அனுமதி கேட்டு மகளுடன் வந்து மனு அளித்தனர். மனு விவரம்:

கோவை சேரன்மாநகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். ஓய்வுபெற்ற மில் தொழிலாளி. இறந்துவிட்டார். நாங்கள் இருவரும் அவரது மனைவிகள். எங்களுக்கு நடராஜன் என்ற மகன், சித்ரா என்ற மகள் உள்ளனர். பீளமேடுபுதூரில் 6 சென்ட் பரப்பளவில் பூர்வீக வீடு உள்ளது. இதை எங்களது மகன் அபகரித்துக்கொண்டார். எங்களுக்கு சாப்பாடு வழங்காமல் துரத்திவிட்டார். நாங்கள், மகள் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளோம். எங்கள் இருவரையும் பராமரிக்க முடியாமல் எங்களது மகள் கஷ்டப்படுகிறாள். எங்களது மகன் சொத்துக்களை தராமல் ஏமாற்றி வருகிறார்.

இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, எங்களை ஏமாற்றி அபகரித்துக் கொண்ட சொத்துகளை மீட்டுத்தர வேண்டும். இல்லையேல், எங்களை கருணை கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.தேசிய நெடுஞ்சாலையில் மரங்கள்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner