முன்பு அடுத்து Page:

திருப்பூரில் பாரதீய ஜனதா கட்சி துண்டறிக்கையில் மாவட்ட ஆட்சியர் பெயரைப் போட்டு பித்தலாட்டம்

திருப்பூரில் பாரதீய ஜனதா கட்சி துண்டறிக்கையில்  மாவட்ட ஆட்சியர் பெயரைப் போட்டு பித்தலாட்டம்

  திருப்பூரில் மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எஸ்.பழனிசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பெயரை தனது சொந்தக் கட்சியின் துண்டறிக்கையில் பிர சுரித்து அற்பத்தனமான பித்தலாட்ட அரசியலில் ஈடுபட்டுள்ளது பாரதீய ஜனதா கட்சி. தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் துணைத் தலைவராக இருக்கும் எல்.முருகன் தாழ்த்தப்பட்ட மக்களைச் சந்தித்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (16.2.2018) நடத்தப்படுகிறது. திருப்பூர் கே.வி.ஆர்.நகர் பள்ளி, நல்லூர் சமுதாய நலக்கூடத்துடன், பாரதீய ஜனதா கட்சியின் மக்கள் சேவை மய்யத்திலும்....... மேலும்

17 பிப்ரவரி 2018 16:30:04

பத்தாம் வகுப்பு: தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு

 பத்தாம் வகுப்பு: தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு

சென்னை, பிப். 17- ‘பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வுள்ள தனித் தேர்வர்களுக்கு, வரும், 20இல், செய்முறை தேர்வு துவங்கும்‘ என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. அரசு தேர்வுத்துறை இயக்குநர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு பின்வருமாறு: பத்தாம் வகுப்புக்கு, மார்ச் சில் பொதுத்தேர்வு நடக்க உள் ளது. இந்த தேர்வுக்கு விண்ணப் பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு, அறிவியல் பாட செய்முறை தேர்வு, வரும், 20 முதல், 28ஆம் தேதி வரை நடக்கும். தனித்....... மேலும்

17 பிப்ரவரி 2018 16:01:04

பொதுத்தேர்வு குறித்த மன அழுத்தம்: சமூக வலைதளங்கள் மூலம் ஆலோசனை

 பொதுத்தேர்வு குறித்த மன அழுத்தம்: சமூக வலைதளங்கள் மூலம் ஆலோசனை

  சென்னை, பிப்.16 பொதுத்தேர்வு குறித்த மன அழுத்தத்தைப் போக்க சமூக வலைதளங்கள் மூலமாக மாணவர்கள், பெற் றோருக்கு ஆலோசனை வழங்கும் திட்ட குறித்து பள்ளிக் கல்வித் துறை புதன்கிழமை வெளியிட் டுள்ள செய்தி: அரசுப் பொதுத்தேர்வு எழுத வுள்ள மாணவர்களின் மன அழுத்தம், கவலை, பயம் ஆகிய வற்றைக் களையும் நோக்கில், கல்வித்துறையும், ‘தி லெட்’ அமைப்பும் ஒருங்கிணைந்து தமிழகம் முழுவதும் விழிப் புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்க வுள்ளது. இந்தத் திட்டத்தை அமைச்சர்....... மேலும்

16 பிப்ரவரி 2018 14:21:02

மார்ச் 1-ஆம் தேதி முதல் ரயில் பெட்டிகளில் முன்பதிவு பட்டியல்

  மார்ச் 1-ஆம் தேதி முதல் ரயில் பெட்டிகளில் முன்பதிவு பட்டியல்

ஒட்டும் முறை கைவிடப்படும் : ரயில்வே துறை அறிவிப்பு சென்னை, பிப்.16  ரயில்வே துறையில் காகிதத்தின் பயன்பாட்டையும், அதனால் ஏற்படும் செலவை வெகுவாக குறைக்கும் நோக்கிலும் ஒரு புதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கான சோதனை முயற்சி சென்னை சென்டிரல், டில்லி, நிஜாமுதீன், மும்பை சென்டிரல், அவுரா, சீல்தா உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் கடந்த 3 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டது. இந்த 3 மாதங்களில் மேற்கண்ட ரயில் நிலையங்களில் இயக்கப்பட்ட பயணிகள் மற்றும் விரைவு....... மேலும்

16 பிப்ரவரி 2018 14:08:02

சங்க கால மக்கள் வாழ்விடம் கண்டுபிடிப்பு

 சங்க கால மக்கள் வாழ்விடம்  கண்டுபிடிப்பு

சென்னை, பிப்.16   விழுப் புரம் மாவட்டம், ரிசிவந்தியம் பகுதியில், சங்க கால மக்கள் வாழ்ந்ததற்கான அடையாள பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. தென்னக தொல்லியல் வர லாற்று ஆய்வு நடுவத் தலை வர், பிரியா கிருஷ்ணன், தொல் லியல் ஆர்வலர்கள், பழனி சாமி, கோவிந்தன், மாணவர் சுபாஷ் ஆகியோர், ரிசிவந்தியம் பகுதியில் கள ஆய்வு நடத் தினர். அப்போது, சங்க காலம், பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய, அடை யாளப் பொருட்களை கண்டு....... மேலும்

16 பிப்ரவரி 2018 14:08:02

ஏப். 10 முதல் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்

 ஏப். 10 முதல் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்

பெரம்பலூர், பிப்.15  தமிழ கத்தில் 15 மாவட்டங்களுக்கான ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் பெரம்பலூர் ஆட்சியரக விளை யாட்டு மைதானத்தில் ஏப். 10 முதல் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. இதுகுறித்து ஆட்சியரகக் கூட்டரங்கில் அவர் மேலும் கூறியது: திருச்சி, பெரம்பலூர், அரிய லூர், தஞ்சாவூர், கரூர், புதுக் கோட்டை, திருவாரூர், நாகப் பட்டினம், கன்னியாகுமரி , ராம நாதபுரம், சிவகங்கை, தூத்துக் குடி, திருநெல்வேலி, விருது....... மேலும்

15 பிப்ரவரி 2018 15:55:03

தமிழகத்தில் எய்ம்ஸ் அமையும் இடம் காலதாமதத்துக் காரணம் என்ன? மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத…

 தமிழகத்தில் எய்ம்ஸ் அமையும் இடம் காலதாமதத்துக் காரணம் என்ன? மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

  மதுரை, பிப்.15 தமிழகத்தில் எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை அறிவிக்க காலதாமதம் ஆவ தற்கான காரணம் குறித்து மத்திய அரசு பதில் மனு தாக் கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது. தமிழகத்தில் மூவாயிரம் நோயாளிகளுக்கு ஒரு மருத் துவர் என்ற நிலை உள்ளது. இதனால் ஏழைகள் தரமான சிகிச்சை பெற முடியாத நிலை நீடிக்கிறது. இதற்குத் தீர்வாக அனைத்து வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில்....... மேலும்

15 பிப்ரவரி 2018 15:41:03

சிவபெருமான் உடுக்கின் ஒரு பக்கத்திலிருந்து தமிழும் - இன்னொரு பக்கத்திலிருந்து சமஸ்கிருதமும் பிறந்த…

  சிவபெருமான் உடுக்கின் ஒரு பக்கத்திலிருந்து தமிழும் - இன்னொரு பக்கத்திலிருந்து சமஸ்கிருதமும் பிறந்தது என்று நம்புவோர்

தமிழை இழிமொழியாகக் கருதுவது ஏன்?கவிப்பேரரசு வைரமுத்து எழுப்பும் இனமானக் கேள்வி சென்னை, பிப்.14 சிவபெருமான் அடித்த உடுக்கின் ஒரு பக்கத்திலிருந்து தமிழும், இன்னொரு பக்கத்திலிருந்து சமஸ்கிருதமும் பிறந்தது என்று நம்புவோர் தமிழை இழிவாகக் கருதுவது ஏன்? என்ற வினாவை எழுப்பினார் கவிப்பேரரசு வைரமுத்து. தமிழாற்றுப்படை வரிசையில் மறைமலையடிகள் குறித்த கட்டுரையை சென்னை காமராசர் அரங்கத்தில் நேற்று (13.2.2018) அரங்கேற்றினார் கவிஞர் வைரமுத்து. உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி நாகமுத்து விழாவுக்குத் தலைமை தாங்கினார். துணைவேந்தர்....... மேலும்

14 பிப்ரவரி 2018 16:20:04

காவல்துறை, தீயணைப்புத்துறை பணி மார்ச் 11இல் எழுத்து தேர்வு

 காவல்துறை, தீயணைப்புத்துறை பணி மார்ச் 11இல் எழுத்து தேர்வு

சிவகங்கை, பிப்.14 தமிழக காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறையில் காலி யாக உள்ள 6,140 பணியிடங் களுக்கு மூன்று லட்சத்து 20 ஆயிரம் பேர் விண்ணப்பித் துள்ளனர். மார்ச் 11இல் எழுத்துத்தேர்வு நடக்க உள்ளது. ஆயுதப் படை யில் 5,538, சிறைத்துறையில் 340 இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் தீய ணைப்பு துறையில் 216 காலி பணியிடங்கள், 46 பின்னடைவு பணியிடங்கள் என மொத்தம் 6,140 பணியிடங்களை நிரப்ப கடந்த டிசம்பரில்,....... மேலும்

14 பிப்ரவரி 2018 16:12:04

10ஆம் வகுப்பு செய்முறை தேர்வு நடத்த உத்தரவு

  10ஆம் வகுப்பு செய்முறை தேர்வு நடத்த உத்தரவு

சென்னை, பிப்.14  பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும், 20 முதல், செய்முறை தேர்வை நடத்த, பள்ளிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 16இல் பொது தேர்வு துவங்கி, ஏப்., 20இல் முடிகிறது. இந்த தேர்வில், 10 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் பாடத்தில், செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது. இதன்படி, வரும், 20 முதல், 28ஆம் தேதிக்குள் செய்முறை தேர்வை நடத்தி முடிக்க, பள்ளி தலைமை....... மேலும்

14 பிப்ரவரி 2018 16:02:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


விழுப்புரம், பிப்.7 விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிக்காக மரங்கள் வெட்டப்படுவதற்கு தடை கோரிய வழக்கில் வெள்ளிக்கிழமைக்குள் (பிப். 9) அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த வன ஒப்பந்ததாரர் டி.ஸ்டாலின் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘விக்கிரவாண்டி முதல் கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் வரை தேசிய நெடுஞ்சாலையை (45சி) அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக வனத் துறையின் ஒப்புதல் பெறாமல் வருவாய்த் துறை அதிகாரிகள் சாலையோரங்களில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்த மரங்களுக்கான மதிப்பீடு தயாரித்து வனத் துறை ஒப்புதல் அளித்தால் மட்டுமே மரங்களை வெட்ட முடியும். மரங்கள் குறித்து புவனகிரி, குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர்கள் தவ றான கணக்கீடும், மதிப்பீடும் செய்துள்ளனர். மேலும், வெட் டப்படும் மரங்களைக் குறைந்த தொகைக்கு வருவாய்த் துறை யினர் ஏலம் விட்டுள்ளனர். இது சட்டவிரோதமானது.

ஏலம் விடுவதற்கு முன்பாக எந்த விதியையும் அதிகாரிகள் கடைப்பிடிக்கவில்லை. எனவே, அந்த வழித்தடத்தில் உள்ள மரங்களை வெட்டத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன் திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மரங்கள் வெட்டுவது தொடர்பாக உயர்நீதிமன்றம் ஏற் கெனவே பிறப்பித்த உத்தரவு களைப் பின்பற்றாமல் அதி காரிகள் செயல்படுவதை மனு தாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இந்த மனு தொடர் பாக வருவாய்த் துறைச் செயலர், சுற்றுச்சூழல் துறைச் செயலர், விழுப்புரம் வன பாதுகாவலர், கடலூர் மாவட்ட ஆட்சியர், கடலூர் மாவட்ட வன அலுவலர், கடலூர் சார் ஆட்சியர், சிதம்பரம், விழுப்புரம் கோட்டாட்சியர்கள், தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநர் ஆகியோர் வெள்ளிக் கிழமைக்குள் (பிப். 9) பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner