முன்பு அடுத்து Page:

ஓட்டல் மேலாண்மை படிப்புக்கான நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க மார்ச் 15 கடைசி நாள்

சென்னை, ஜன.19 பி.எஸ்சி. ஓட்டல் மேலாண்மை படிப்புக்கான நுழைவுத் தேர்வில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வரும் மார்ச் மாதம் 15-ஆம் தேதி கடைசி நாளாகும். தேசிய அளவில் நடத்தப்படும் ஜே.இ.இ.,  நெட் போன்ற நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. அதுபோல தேசிய ஹோட்டல் மேலாண்மை மற்றும் உணவுத் தொழில்நுட்ப கவுன்சிலின் கீழ் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் பி.எஸ்சி. விருந்தோம்பல் மற்றும்....... மேலும்

19 ஜனவரி 2019 17:00:05

உயர்ஜாதியினருக்கு பொருளாதார ரீதியிலான

10% இடஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக்கட்சிக் கூட்டம் (19.1.2019) தலைமை: கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம் வரவேற்புரை:  கவிஞர் கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம் கலந்துகொண்டவர்கள் நீதியரசர் து.அரிபரந்தாமன் ஆ.இராசா, கொள்கை பரப்புச் செயலாளர், திமுக எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மல்லை சத்யா, துணைப்பொதுச்செயலாளர், மதிமுக மு.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கே.எம்.நிஜாமுதீன், இந்திய யூனியன் முசுலீம் லீக் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மனித நேய மக்கள் கட்சி அச.உமர்பாரூக், பொருளாளர், எஸ்.டி.பி.அய் கட்சி ஏ.கே.கரீம், ஒருங்கிணைப்பாளர்,எஸ்.டி.பி.அய் கட்சி பேராசிரியர்....... மேலும்

19 ஜனவரி 2019 16:54:04

அணு ஆராய்ச்சி - பொறியியல் உயர்கல்வி கற்க உதவித் தொகை வழங்குகிறது ரஷ்யாவின் ரொசாட்டம் நிறுவனம்!

சென்னை, ஜன.19 தமிழ் நாட்டின் கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்துக்குத் தேவை யான முக்கிய உபகரணங் களையும், தொழில்நுட்ப ஆலோ சனைகளையும் வழங்கி வரும் ரஷ்ய நாட்டின் அணுசக்திக் கழக மான ரொசாட்டம்  தென்னிந்திய மாணவர்களுக்கு அணு பொறியியல் கல்வி கற்க சிறப்பு உதவித் தொகையை அறிவித்துள்ளது.  இந்தக் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான முதல்கட்ட விண்ணப்பங்களை வரும் பிப் ரவரி 15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இந்த உதவித்....... மேலும்

19 ஜனவரி 2019 16:54:04

பொருளாதார அடிப்படையில் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீடா?

சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு சென்னை, ஜன.19 பொரு ளாதாரத்தில் பின்தங்கிய முன் னேறிய வகுப்பினருக்கு பொரு ளாதார அடிப்படையில் 10  சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு கொண்டுவந்த சட்ட மசோதாவை ரத்து செய்யக் கோரி திமுக தொடர்ந்த வழக்கு விரைவில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்சமுதாயத்தின ருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட....... மேலும்

19 ஜனவரி 2019 16:52:04

தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசு!

தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசு!

8 ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காததால் முடக்கம்! சென்னை, ஜன. 19- தமிழகத்தில் சென்னை & கன்னியாகுமரி இடையே இரட்டை ரயில்  பாதை  அமைக்கும்  திட்டம் கடந்த  1998ஆ-ம்  ஆண்டு  தொடங்கியது. இத்திட்டத்தின்படி தற்போது மதுரை  வரையில் இரட்டை ரயில் பாதை  அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த  கட் டமாக மதுரை & கன்னியாகுமரி வரையில்  இரட்டை  ரயில்  பாதை அமைக்கும்  பணிகள்  நடைபெற்று வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளாக இரட்டை மற்றும் அகலப் பாதைகளுக்கும் ....... மேலும்

19 ஜனவரி 2019 16:21:04

ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தாததால் 30 ஆயிரம் ஆசிரியர்கள் பணியை தொடர்வதில் சிக்கல்

சிறப்பு தேர்வை நடத்த கோரிக்கை சென்னை, ஜன. 19- ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படாததால் 30 ஆயிரம் ஆசிரியர்கள் பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சிறப்பு தகுதித் தேர்வு நடத்த அரசு முன்வர வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். மத்திய அரசின் இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டம் 2010 ஆகஸ்ட் 23ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி களில் ஆசிரியராக....... மேலும்

19 ஜனவரி 2019 15:59:03

தேர்தல் கூட்டணி; பாஜகவை தோளில் தூக்கி சுமக்க நாங்கள் பாவமா செய்தோம்?

தேர்தல் கூட்டணி; பாஜகவை தோளில்  தூக்கி சுமக்க நாங்கள் பாவமா செய்தோம்?

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை, ஜன. 19- அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி என்று குருமூர்த்தி தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரையும் பாஜகவை தோளில் சுமக்க நாங்கள் பாவமா செய்தோம் என, எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டு தேர்தலில் தேமுதிக, மதிமுக, பாமக என மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக 2019 நாடாளுமன்றத்தில் தமிழகத்தில் கூட்டணிக்கு கட்சிகளை தேடும் நிலையில் உள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணி....... மேலும்

19 ஜனவரி 2019 15:59:03

சபரிமலைக்குச் சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சபரிமலைக்குச் சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜன. 19- சபரிமலைக் குச் சென்ற 2 பெண்களுக்கும் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேரள காவல்துறையினருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எல்.என்.ராவ், தினேஷ் மகேஸ்வரி ஆகி யோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அந்த அமர்வு, சபரிமலைக்குச் சென்று வழிபட்ட கனகதுர்கா ....... மேலும்

19 ஜனவரி 2019 15:49:03

ஜன.31இல் இறுதி வாக்காளர் பட்டியல்: தேர்தல் துறை அதிகாரிகள் தகவல்

ஜன.31இல் இறுதி வாக்காளர் பட்டியல்: தேர்தல் துறை அதிகாரிகள் தகவல்

சென்னை, ஜன. 18- இரட்டைப் பதிவு களை நீக்கும் நடைமுறை காரணமாக, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் வெளியிடப்பட்டு வந்த நிலை யில், இந்த ஆண்டு வரும் 31-இல் வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு செப் டம்பர் 1-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதாவது, இந்தப் பட்டியலில் வாக்காளர்களின் பெயர்கள் இல்லா விட்டாலோ, தவறாக இருந்தாலோ திருத்தங்கள் செய்ய....... மேலும்

18 ஜனவரி 2019 15:54:03

அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் கைப்பேசிகள் வழங்க முடிவு: தமிழக அரசு நடவடிக்கை

அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் கைப்பேசிகள் வழங்க முடிவு:  தமிழக அரசு நடவடிக்கை

சென்னை, ஜன. 18- பயனாளிகளுக்கு திட்டங்கள் சென்றடைவதை இணையதளத் தில் கண்காணிக்க அங்கன்வாடி பணி யாளர்களுக்கு மார்ச் மாதம் இறுதிக்குள் ஸ்மார்ட் கைப்பேசிகளை வழங்க ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சி திட்டத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் 54,439 அங் கன்வாடி மய்யங்கள் செயல் பட்டு வரு கின்றன. இந்த மய்யங்களை அங்கன் வாடி பணியாளர்கள் மற்றும் உதவியா ளர்கள் நிர்வகித்து வருகின்றனர். அவர் கள் 6 வயது....... மேலும்

18 ஜனவரி 2019 15:51:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ராமேசுவரம், பிப்.7 தமிழக மீனவர்கள் 54 பேரின் சிறைக்காவலை  வரும் 20ஆம் தேதி வரை நீட்டித்து, இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

இதையடுத்து மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  ராமேசுவரம், மண்டபம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இருந்து கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, இலங்கை கடற்படையினரால் 54 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் சிறையில் விசாரணை கைதிகளாக உள்ள இந்த மீனவர்களை, ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் இலங்கை காவல்துறையினர் நேற்று காலை ஆஜர்படுத்தினர். விசாரணை செய்த நீதிபதி ரியாஸ், 54 பேரின் காவலையும் வரும் 20ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து அனைவரும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆர்ப்பாட்டம்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமேசுவரம் நகராட்சி பேருந்து நிலையம் எதிரே, காங்கிரசு கட்சியின் மாவட்ட மீனவர் அமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சகாயராஜ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர், மீனவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை சிறையிலுள்ள மீனவர்கள், 178 படகுகளை விடுவிக்க வேண்டும், சிறையில் சிறுநீரக பிரச்சினை மற்றும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் பூண்டிராஜன், பாலமுருகன் இருவரையும் உடனடியாக தமிழகம் அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தமிழக மீனவர்கள்மீது

இலங்கை கடற்படையினர் கல்வீசி தாக்குதல்

ராமேசுவரம் மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலையினால் மீன் பிடிப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மீன்வளத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிகாலை கடலுக்கு செல்ல தயாராக இருந்த விசைப்படகுகளை சோதனை செய்தனர். இதனால் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் 200க்கும் குறைவான விசைப்படகுகளே கடலுக்கு சென்றன. அன்றிரவு 7 மணியளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இரு கன்போட் கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கினர்.

மேலும் மீனவர்களின் படகுகள் மீது மோதுவது போல் கப்பலை கொண்டு சென்றனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு சென்று, குறைவான மீன்களுடன் நேற்று காலை ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்துக்கு திரும்பினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner