முன்பு அடுத்து Page:

பெண் காவல்துறையினருக்கு எதிரான பாலியல் குற்றங்கள்: கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் விசாரணை…

சென்னை, ஆக.20  பெண் காவல் மற்றும் அரசு பெண் ஊழியர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பற்றி விசாரிக்க ஏற்கனவே விசாகா என்ற கமிட்டி செயல்பாட்டில் இருந்தது. அந்த கமிட்டியின் உறுப்பினர்கள் ஓய்வு பெற்றுவிட்டதால், அது செயல்பாடற்ற நிலையில் இருந்தது. தற்போது அந்த கமிட்டிக்கு புத்துயிர் கொடுத்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. கூடுதல் காவல்துறை டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் அந்த கமிட்டி செயல்படும். கூடுதல் டி.ஜி.பி. அருணாசலம், காஞ்சிபுரம் சரக டி.அய்.ஜி........ மேலும்

20 ஆகஸ்ட் 2018 15:39:03

கேரளத்துக்கு ரூ.ஒரு கோடி மருந்துப் பொருள்கள்: தமிழக அரசு தகவல்

கேரளத்துக்கு ரூ.ஒரு கோடி மருந்துப் பொருள்கள்: தமிழக அரசு தகவல்

சென்னை, ஆக.20 வெள் ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு தமிழக சுகாதாரத் துறை சார்பில் ரூ.ஒரு கோடி மதிப்பிலான மருந் துகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு: தமிழக முதல்வரின் உத்தரவு பேரில், கேரளத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள பகுதிகளுக்கு தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் ரூ.ஒரு கோடி மதிப் பிலான மருந்துப் பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளன. வெள்ளத்தால் ஏற்படக் கூடிய தொற்று நோய்களைத் தடுப்பதற்கும்,....... மேலும்

20 ஆகஸ்ட் 2018 15:23:03

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கு கலைஞர் பெயர் சூட்டவேண்டும் : கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்

   திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கு கலைஞர் பெயர் சூட்டவேண்டும் : கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்

சென்னை, ஆக.20 கவிஞர் வைரமுத்து நிறுவன தலைவராக உள்ள வெற்றி தமிழர் பேரவை சார்பில் மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞருக்கு நினைவேந்தல் கூட்டம் சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கவிஞர் வைரமுத்து தலைமை தாங்கினார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன், இந்து குழும தலைவர் என்.ராம்,  ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா, திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன், பத்திரிகையாளர்....... மேலும்

20 ஆகஸ்ட் 2018 15:19:03

இந்திய அரசியலை தீர்மானிக்கும் அரசியல் சக்தியாக கலைஞர் திகழ்ந்தார்: வைகோ

இந்திய அரசியலை தீர்மானிக்கும் அரசியல் சக்தியாக கலைஞர் திகழ்ந்தார்: வைகோ

சென்னை, ஆக.20 இந்திய அரசியலை தீர்மானிக்கும் முக்கிய அரசியல் சக்தியாக கலைஞர் திகழ்ந்தார் என்று வைகோ புகழாராம் சூட்டியுள்ளார். மதிமுக சார்பில் கலைஞருக்கு நினை வேந்தல் செலுத்தும் வகையில் நேற்று மாலை 4 மணியளவில் அமைதி பேரணி நடந்தது. மதிமுக பொதுச்  செயலாளர் வைகோ தலைமையில் 300க்கும் மேற் பட்ட மதிமுகவினர் சேப்பாக்கம், வாலாஜா சாலையில் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் எதிரில் உள்ள  அரசு விருந்தினர் மாளிகை அருகிலிருந்து அமைதி....... மேலும்

20 ஆகஸ்ட் 2018 14:59:02

கடலில் வீணாய்க் கலக்கும் காவிரி நீர்: நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் மு.க. ஸ்டாலி…

  கடலில் வீணாய்க் கலக்கும் காவிரி நீர்: நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, ஆக.20 காவிரி நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று (19.8.2018) வெளியிட்ட அறிக்கை வருமாறு: கர்நாடகத்தில் கனமழை பெய்வதால் கிடைக்கும் பயனை வேளாண்மைப் பணிகளுக்குப் பயன்படுத்தி முறையாக அனுபவிக்க முடியாத நிலையில் தமிழக விவசாயிகள் தவித்து வருகின்றனர். இரு முறை மேட்டூர் அணை, முழுக் கொள்ள ளவை எட்டிய போதும், அங்கிருந்து திறந்து....... மேலும்

20 ஆகஸ்ட் 2018 14:54:02

ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் தீவு போல் காட்சி அளிக்கும் கிராமங்கள்

  ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் தீவு போல் காட்சி அளிக்கும் கிராமங்கள்

கொள்ளிடம், ஆக.20 கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங் குள்ள அணைகளில் இருந்து தமிழகத்துக்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று மேட்டூர் அணையில் இருந்து திறக் கப்படும் தண்ணீரின் அளவு 2 லட்சத்து 5 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. தண்ணீர் திறப்பு தொடர்ந்து அதிகரிப்பதால் தஞ்சை, நாகை மாவட்டங்களில் பாயும் கொள் ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றங்கரையோர கிராமங்களை அதிகாரிகள்....... மேலும்

20 ஆகஸ்ட் 2018 14:54:02

பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வு: மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வு: மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

சென்னை, ஆக.20 பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கக் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு: கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடை பெற்ற பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண் ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சம்பந்தப் பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவ லகத்துக்கு ஆக.16 மற்றும் ஆக.17....... மேலும்

20 ஆகஸ்ட் 2018 14:54:02

தூர்வாரும் பணிகளில் முறைகேட்டைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் : முத்தரசன் பேட்டி

  தூர்வாரும் பணிகளில் முறைகேட்டைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் : முத்தரசன் பேட்டி

சுந்தரக்கோட்டை, ஆக. 20 திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், செய்தியாளர் களுக்கு பேட்டியளித்தார். குளம், வாய்க்கால், ஏரிகள் தூர் வாரும் பணிக்காக ஒதுக்கும் நிதி ஒழுங் காக பயன்படுத்தவில்லை. டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவா ரூர், நாகை ஆகிய பகுதிகளில் குளம், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வார இந்த ஆண்டு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை....... மேலும்

20 ஆகஸ்ட் 2018 14:53:02

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிபுணர் குழு நியமனம்

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிபுணர் குழு நியமனம்

தூத்துக்குடி, ஆக. 19- இஸ்ரோவின் ராக்கெட்களை ஏவுவதற்கு 3ஆ-வது புதிய ஏவு தளம் அமைப்பது குறித்த சாத்தியங்களை ஆராய வல்லுநர் குழு நியமிக்கப்பட் டுள்ளது. அத்துடன் இஸ்ரோவின் லட்சியமாக கருதப்படும் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தையும் புதிய ஏவுதளத்தில் இருந்து செயல்படுத்துவது குறித்த ஆய்வுகளையும் இந்த வல்லுநர் குழு மேற்கொள்ளும். இதனால், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் நாட்டின் 3-ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட வாய்ப்புகள் அதிகரித் திருப்பதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை....... மேலும்

19 ஆகஸ்ட் 2018 16:46:04

கலைஞர் உடலை அடக்கம் செய்ய 1.75 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு

கலைஞர் உடலை அடக்கம் செய்ய 1.75 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு

சென்னை, ஆக. 19 தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கலைஞர் கடந்த 7-ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடலை அடக்கம் செய்ய மெரினா கடற்கரை அண்ணா நினை விடம் அருகே இடம் ஒதுக்க தி.மு.க. சார்பில் தமிழக அரசி டம் கேட்கப் பட்டது. ஆனால், சட்ட சிக்கல் காரணமாக கலைஞருக்கு கிண்டி காந்தி மண்டபம் அருகில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்குவதாகவும், மெரி னாவில் இடம்....... மேலும்

19 ஆகஸ்ட் 2018 16:46:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஈரோடு, பிப்.7 தாளவாடி மலையிலுள்ள மலைக்கிராமத்தில் மூன்றாம் நூற் றாண்டு காலத்தில் தமிழர்கள் வாழ்ந்ததை வெளிப்படுத்தும், கல்வெட்டு எழுத்துகளுடன் கூடிய கல் செக்கு கண்டறியப் பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டம், மரூர் கிராமம் அருகே தொல்லியல் மேடு ஒன்றைக் கண்ட வரலாற்று ஆர்வலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த ஆய்வில் மரூர் கிராமத்தில், சுமார் 4 அடி உயரமுள்ள கல் செக்கு ஒன்றின் கீழ்ப்பகுதியில் தமிழ் பிராமி போன்ற குறியீடுகள் காணப்பட்டன. அதைப் படியெடுத்து தொல்லியல் அறிஞர்களான சென்னை ராஜகோபால், ஈரோடு புலவர் செ.ராசு ஆகியோரிடம் காட்டியபொழுது, கண்ணாடிபிம்பத் தோற்றத்தில் ‘கோனு’ என்று படித்தறிந்தனர்.

மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துகள் இவை என்றும், ஈரோடு மாவட்டம், அறச்சலூரில் கிடைத்த நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த இசைக் கல்வெட்டே பழைமையானதாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால் இக் கல்வெட்டு அதற்கும் முந்தையது, கிட்டத்தட்ட 1,700ஆண்டுகள் பழைமையானது என்ற சிறப்பைப் பெறுகிறது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் 79.78 லட்சம் பேர்  

சென்னை, பிப்.7 வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 79.78 லட்சமாக உள்ளது. கடந்த ஜனவரி 31-ஆம் தேதி நிலவரப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை குறித்த விவரங்களை வயது வாரியாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 18 வயதுக்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 20 லட்சத்து 69 ஆயிரத்து 337 பேரும், 18 முதல் 23 வயது வரையுள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 17 லட்சத்து 9 ஆயிரத்து 845 பேரும், 24 முதல் 35 வயது வரையுள்ளவர்கள் 30 லட்சத்து 46 ஆயிரத்து 619 பேரும், 36 வயது முதல் 56 வயது வரையுள்ள முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் என்ற வகையில் 11 லட்சத்து 46 ஆயிரத்து 898 பேரும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். மேலும், 57 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5 ஆயிரத்து 730 பேர் பதிவு செய்து காத்திருப்பதாக தமிழக அரசு தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. மொத்தமாக, 79 லட்சத்து 78 ஆயிரத்து 429 பேர் அரசு வேலைக்காக காத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

கீழடியில் அகழாய்வு மேற்கொள்ள
ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு

சென்னை, பிப்.7 கீழடியில் விரிவான அகழாய்வு பணியை மேற்கொள்ள தமிழக அரசு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுற்றுலா, பண்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டம் கீழடி யில் மத்திய தொல்லியல் துறையானது 3 முறை விரிவான அகழாய்வு மேற்கொண்டுள்ளது. அப்போது, செங்கல் கட்டுமானங்கள், உறைகிணறுகள், சுடுமண் பொம்மைகள், யானை தந்தத்தால் ஆன பொருட்கள் உள்ளிட்ட அரிய தொல்பொருட்கள் கிடைத்தன. இந்த தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, தமிழகத்தின் பண்டைய கலாச்சாரத்தின் கூறுகளை முழுவதுமாக வெளிக்கொண்டு வரும் நோக்கில் விரிவான ஒரு அகழாய்வு மேற்கொள்ள ரூ.55 லட்சத்தை ஒதுக்கீடு செய்து, அத்தொகையை முன்பணமாக பெற அனுமதி வழங்குமாறு தொல்லியல் துறை ஆணையர் கேட்டுக் கொண்டார். அவரின் கருத்துருவை ஏற்று, கீழடியில் விரிவான அகழாய்வு மேற்கொள்ள ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில், அகழாய்வு பணி மேற்கொள்ள ஆள் கூலி, போக்குவரத்து செலவு, தொழில்நுட்ப கருவிகள் உள்ளிட்ட செலவுகள் அடங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

போக்குவரத்து கழகத்துக்கு 20 ஆயிரத்து 488 கோடி இழப்பு: விசாரணை குழு அமைக்க வழக்கு

மதுரை, பிப்.7 தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதியான ரூ.2,600 கோடியை டெபாசிட் செய்யாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சமீபத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் பெரிதும் பாதிப்படைந்தனர்.  உயர்நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் வேலைநிறுத்தப்போராட்டம் தற்காலிகமாக திரும்ப பெறப்பட்டது. இழப்பை சரிசெய்வதாகக் கூறி 100சதவிகிதம் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. மோசமான நிர்வாகம் மற்றும் உதிரிபாகங்கள் வாங்குவதில் முறைகேடுகள் நடக்கிறது. பேருந்து களை முறையாக பராமரிப்பதில்லை.

அதேநேரம் தனியார் பேருந்துகள் லாபத்துடன் இயக்கப் படுகிறது. எனவே, அரசு போக்குவரத்து கழக நட்டம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கவும், போக்குவரத்து கழகங்களை நிர்வகிக்கும் அய்ஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கவும், அதுவரை உயர்த்தப்பட்ட கட்ட ணத்தை வசூலிக்க கூடாது எனவும் உத்தரவிட வேண்டும். இவ் வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner