முன்பு அடுத்து Page:

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிபுணர் குழு நியமனம்

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிபுணர் குழு நியமனம்

தூத்துக்குடி, ஆக. 19- இஸ்ரோவின் ராக்கெட்களை ஏவுவதற்கு 3ஆ-வது புதிய ஏவு தளம் அமைப்பது குறித்த சாத்தியங்களை ஆராய வல்லுநர் குழு நியமிக்கப்பட் டுள்ளது. அத்துடன் இஸ்ரோவின் லட்சியமாக கருதப்படும் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தையும் புதிய ஏவுதளத்தில் இருந்து செயல்படுத்துவது குறித்த ஆய்வுகளையும் இந்த வல்லுநர் குழு மேற்கொள்ளும். இதனால், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் நாட்டின் 3-ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட வாய்ப்புகள் அதிகரித் திருப்பதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை....... மேலும்

19 ஆகஸ்ட் 2018 16:46:04

கலைஞர் உடலை அடக்கம் செய்ய 1.75 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு

கலைஞர் உடலை அடக்கம் செய்ய 1.75 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு

சென்னை, ஆக. 19 தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கலைஞர் கடந்த 7-ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடலை அடக்கம் செய்ய மெரினா கடற்கரை அண்ணா நினை விடம் அருகே இடம் ஒதுக்க தி.மு.க. சார்பில் தமிழக அரசி டம் கேட்கப் பட்டது. ஆனால், சட்ட சிக்கல் காரணமாக கலைஞருக்கு கிண்டி காந்தி மண்டபம் அருகில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்குவதாகவும், மெரி னாவில் இடம்....... மேலும்

19 ஆகஸ்ட் 2018 16:46:04

மழை வெள்ளத்தால் குவிந்துள்ள பிளாஸ்டிக் குப்பைகள்

மழை வெள்ளத்தால் குவிந்துள்ள பிளாஸ்டிக் குப்பைகள்

கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் மலயத்தூர் கொடநாடு பாலம் பகுதியில் மழை வெள்ளத்தால் குவிந்துள்ள பிளாஸ்டிக் குப்பைகள். மேலும்

19 ஆகஸ்ட் 2018 15:16:03

திருப்பத்தூர் அருகே சித்திரங்கள் நிரம்பிய 2 நடுகற்கள் கண்டெடுப்பு

திருப்பத்தூர் அருகே சித்திரங்கள் நிரம்பிய 2 நடுகற்கள் கண்டெடுப்பு

திருப்பத்தூர், ஆக.18 திருப்பத்தூர் அருகே நத்தம் கிராமத்தில் சித்திரங்கள் நிரம்பிய 2 நடுகற்கள் கண் டெடுக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரி யர்கள் க.மோகன் காந்தி, வீரராகவன், காணிநிலம் மு.முனிசாமி மற்றும் சமூக ஆர்வலர் ஜானகிராமன் ஆகியோர் திருப்பத்தூ ரை அடுத்த நத்தம் கிராமத்தில் மேற்கொண்ட கள ஆய்வின்போது, பழைமையான 2 நடுகற்களைக் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து பேராசிரியர் க.மோகன்காந்தி கூறியதாவது: திருப்பத்தூரிலிருந்து தருமபுரி செல்லும் வழியில் 15-ஆவது கி.மீ. தொலைவில் உள்ள நத்தம்....... மேலும்

18 ஆகஸ்ட் 2018 16:12:04

திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேனிலைப் பள்ளியில் 44ஆம் ஆண்டு விளையாட்டு விழா

   திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேனிலைப் பள்ளியில் 44ஆம் ஆண்டு விளையாட்டு விழா

    திருச்சி, ஆக.18 திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேனிலைப் பள்ளியில் 44ஆம் ஆண்டு விளையாட்டு விழா அன்னை மணியம்மையார் விளையாட்டு அரங்கில் 16.8.2018 அன்று மதியம் 3.30 மணியளவில் நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி தலைமையா சிரியர் பா.சிறீதர்  வரவேற்புரையாற் றினார். தொடர்ந்து, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் ஒலிம்பிக் சுடர் ஏற்றி விளையாட்டு விழா தொடங்கி வைக்கப்பட்டது. பின்னர் மாணவியர்கள் உடற்பயிற்சி, நடனம், கிராமிய நடனம், தொப்பி, விசிறி, தேசியக்....... மேலும்

18 ஆகஸ்ட் 2018 16:12:04

பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை துணை செவிலியர் பயிற்சி நிறைவு

  பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை துணை செவிலியர் பயிற்சி நிறைவு

பெரியார் மருத்துவக் குழுமத்தின் கீழ் இயங்கும் திருச்சி பெரியார் மணியம்மை இலவச மருத்துவ மனையில் துணை செவிலியர் பயிற்சி நிறைவுற்று அம்மாணவர்களுக்கு  16.08.2018 அன்று சான்றிதழ் வழங்கப்பட்டது.  2017 - 2018 கல்வியாண்டில் 9 மாணவர்கள் துணை செவிலியர் பயிற்சியை பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனையில் பெற்றனர். அவர்களின் பயிற்சி நிறைவுற்றதை தொடர்ந்து பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தலைமையில் அம்மாணவர்களுக்கு  துணை செவிலியர் பயிற்சிக்கான சான்றிதழை மருத்துவ....... மேலும்

18 ஆகஸ்ட் 2018 16:12:04

வெள்ளப் பெருக்கெடுத்தும், பாசனத்திற்கு தண்ணீர் பயன்படாமல் கடலுக்கு செல்லும் அவலமான நிலை ஏன்? இந…

  வெள்ளப் பெருக்கெடுத்தும், பாசனத்திற்கு தண்ணீர் பயன்படாமல் கடலுக்கு செல்லும் அவலமான நிலை ஏன்? இந்திய கம்யூ. செயலாளர் இரா.முத்தரசன் கேள்வி

சென்னை, ஆக.18 வெள்ளப் பெருக் கெடுத்தும், தண்ணீர் பாசனத்திற்கு பயன்படாமல் கடலுக்கு செல்லும் அவலமான நிலை ஏற்பட்டுள்ளது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், கடந்த பல ஆண்டுகளாக வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் காவிரி பாசன மாவட்டங்கள், இவ்வாண்டும் அதே(£)கதிக்கு ஆளாகியிருப்பது அவமானகரமானதாகும். மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஒருமாத காலமாகிவிட்டது. கருநாடகத் தில் பெய்து வரும் பெருமழையில் மேட்டூர் அணை....... மேலும்

18 ஆகஸ்ட் 2018 15:43:03

பி.இ. துணைக் கலந்தாய்வு: விண்ணப்பிக்க ஆக.20 கடைசிநாள்

   பி.இ. துணைக் கலந்தாய்வு: விண்ணப்பிக்க ஆக.20 கடைசிநாள்

சென்னை, ஆக.17 பி.இ. துணைக் கலந்தாய்வுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கு ஆன்-லைனில் இன்று (ஆக.16) முதல் விண் ணப்பிக்க லாம் எனவும் தெரிவிக்கப்பட் டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்து, சிறப்புத் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 மாணவர்கள், பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வு முடிவில் காலியாக இருக்கும் பொறியியல் இடங்களில் சேர்த் துக்....... மேலும்

17 ஆகஸ்ட் 2018 16:55:04

பெரியார் பிஞ்சுகள் சிறப்பு - வினாடி வினா போட்டி

  பெரியார் பிஞ்சுகள் சிறப்பு - வினாடி வினா போட்டி

தருமபுரி, ஆக. 17- திண்டுக்கல் லில் நடைபெற உள்ள பெரி யார் பிஞ்சுகள் மாநாட்டை ஒட்டிய சிறப்பு வினாடி & வினா போட்டிகளின், வடக்கு மய்யத்துக்கான முதல் கட்ட போட்டி, தருமபுரி பெரியார் மன்றத்தில் 12.8.2018 அன்று மதியம் 12 மணியளவில் நடை பெற்றது. சேலம், மேட்டூர், ஆத்தூர், தருமபுரி, கிருட்டினகிரி, திருப் பத்தூர் கழக மாவட்டங்கள் உள்ளடக்கிய தேர்வு மய்யத்தில் 27 பெரியார் பிஞ்சுகள் போட் டியில் கலந்து கொண்டனர். முதல்....... மேலும்

17 ஆகஸ்ட் 2018 15:42:03

தந்தை பெரியார் ஒளியில் - பேரறிஞர் அண்ணா நெறியில் - கலைஞர் வழியில் தொடர்ந்து நடைபோடுவோம்!

தந்தை பெரியார் ஒளியில் - பேரறிஞர் அண்ணா நெறியில் - கலைஞர் வழியில் தொடர்ந்து நடைபோடுவோம்!

திமுக செயல்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கடிதம் சென்னை, ஆக.16 தந்தை பெரி யார் ஒளியில் பேரறிஞர் அண்ணா நெறியில் கலைஞர் நடந்து காட் டிய வழியில் திமுக தொடர்ந்து நடைபோடும் என்று திமுக செயல்தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட் டுள்ளார். கடிதம் வருமாறு: தலைவருக்கு இரங்கல் என் பதும் நினைவேந்தல் என்பதும் வெறும் சடங்கல்ல, சம்பிரதாய மல்ல. இலட்சியம் காப்பதற் கான சூளுரை. அவர் முன்னெ டுத்த போராட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு,....... மேலும்

16 ஆகஸ்ட் 2018 16:24:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


அரக்கோணம், பிப்.8 அரக் கோணம்- - சென்னை இடையே 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் வியாழக்கிழமை முதல் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர்.

அரக்கோணம் -- சென்னை இடையே மின்சார ரயில்களில் தற்போது 9 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரயில்கள் கூட்டம் அதிகம் காரண மாக மாணவர்கள் தொங்கியவாறே பயணம் செய்கின்றனர். இதைத் தவிர்க்க அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத் தலைவர் நைனா மாசிலாமணி மற்றும் செயலர் ரகுநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் மின்சார ரயில்களை 12 பெட்டிகள் கொண்ட தொடராக மாற்ற வேண்டும் என்று கோ ரிக்கை விடுத்து வந்தனர்.

இதை ஏற்ற ரயில்வே உயர் அதிகாரிகள் கடந்த சில மாதங் களாக அரக்கோணம் - -சென்னை இடையே உள்ள ரயில் நிலையங் களில் 12 பெட்டிகள் நிற்க ஏது வாக நடைமேடைகளை மாற்றி அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில் தற்போது கூடுதல் பெட்டிகளை வர வழைக்கும் பணியிலும் சென் னைக் கோட்ட அலுவலர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில், புதன்கிழமை சோதனை ஓட்டமாக ஆவடி - -அரக்கோணம், அரக்கோணம்- -சென்னை, சென்னை- - அரக் கோணம், அரக்கோணம் -- ஆவடி இடையே 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயிலை அலுவலர்கள் இயக்கினர். இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடை பெற்றதைத் தொடர்ந்து வியாழக் கிழமை முதல் ஒரு ரயிலை 12 பெட்டிகளுடன் இயக்க உள்ள தாக ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர்.  மேலும், ரயில் புறப் படும் நேரம் வியாழக்கிழமை காலை தெரியவரும் எனவும், முதலில் சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து அரக் கோணம் நோக்கி புறப்படும் எனவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதுதவிர, அரக்கோணம்- -கடப்பா, அரக்கோணம் - -வேலூர்  கண்டோண்மென்ட் இடையே இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் களை மின்சார ரயில் பெட்டி தொடராக விரைவில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner