முன்பு அடுத்து Page:

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

சென்னை, நவ. 17- தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (நவ.18) குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். இது, வரும் 19, 20 தேதிகளில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் வெள்ளிக் கிழமை தெரிவித்தார். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (நவ.18) தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிக்கும், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை (நவ.19, 20)....... மேலும்

17 நவம்பர் 2018 15:25:03

பாலியல் வன்முறைகளைத் தடுக்கக் கோரி நவ.22 -இல் மாநில அளவில் ஆர்ப்பாட்டம்

ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை சங்கம் அறிவிப்பு சென்னை, நவ.17 பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுக்க உரிய நடவடிக்கை களை எடுக்க வலியுறுத்தி, வரும் 22-ஆம் தேதி மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வு ரிமை இயக்கம் அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக அந்த இயக்கத்தின் மாநிலச் செயலர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கை வருமாறு: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள்....... மேலும்

17 நவம்பர் 2018 15:25:03

புயலால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை, நவ. 17- கஜா புயலால் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல் வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது: கஜா புயலால் உயிரிழந்த குடும்பங்களுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும் வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர்களை கணக் கிடும் பணி மேற்கொள்ளப் பட்டு வருகிறது........ மேலும்

17 நவம்பர் 2018 15:09:03

கஜா புயல் - 6 மாவட்டங்களில் கடும் பாதிப்பு: 49 பேர் உயிரிழப்பு

கஜா புயல் - 6 மாவட்டங்களில்  கடும் பாதிப்பு: 49 பேர் உயிரிழப்பு

சென்னை, நவ. 17- தமிழகத்தில் வெள்ளிக் கிழமை கரையைக் கடந்த கஜா புயல் 6 மாவட்டங்களில் பெருத்த சேதத்தை விளைவித்துள்ளது. புயலால் 49 பேர் உயிரிழந்துள்ளனர். புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட் டுள்ள கடலூர், நாகப்பட்டினம், ராம நாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் வருவாய், வேளாண்மை, கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறையினர் களம் இறங்கி சேதமதிப்பைக் கணக் கிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கஜா புயல் வெள்ளிக்கிழமை அதி காலை 12.20....... மேலும்

17 நவம்பர் 2018 15:09:03

மதப் புரிதலும் இல்லை - மனிதப் புரிதலும் இல்லை

பிரம்மன் திலோத்தமை மீதும், சிவன் தாருகாவனத்து ரிஷிபத்தினிகள்மீதும், இந்திரன் அகலிகைமீதும், சந்திரன் குரு பத்தினி தாரைமீதும், விஷ்ணு சலந்திரன் மனைவிமீதும் கொண்ட காட்டுமிராண்டித்தனமான கள்ளக் காமக் களியாட்டங்களைக் கொண்டாடும் எச்.ராஜாவுக்கு மதப் புரிதலும் இல்லை, மனிதப் புரிதலும் இல்லை. - ஆ.இராசா, தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் முன்னாள் மத்திய அமைச்சர் குறிப்பு: பெரியார், மணியம்மையார்பற்றிய பாடங்களை சொல்லிக் கொடுத்தால் மாணவர்களிடம் ஒழுக்கம் வளருமா என்று பிதற்றிய எச்ச.ராஜாவுக்குப் பதிலடி இது. மேலும்

17 நவம்பர் 2018 14:26:02

கடவுள் சக்தியைப் பாரீர்!

கோவிலின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் கொள்ளை ஆம்பூர், நவ.17 ஆம்பூர் அருகே பெரியகொம்மேஸ்வரத்தில் வீரஆஞ்சநேயர் கோவில் உள் ளது. இந்தக் கோவிலுக்கு நிலம், தென்னந்தோப்பு ஆகியவையும் உள்ளன. நேற்று காலை கோவில் வளாகத்தை சுத்தம் செய்ய பெண் ஒருவர் வந்தார். அப்போது கோவிலின் வாசல் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ஊர்ப் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார். பொதுமக்கள் வந்து பார்த்த போது கோவில் உண்டியல்....... மேலும்

17 நவம்பர் 2018 14:26:02

கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தைத் தமிழர் தலைவர் பார்வையிட்டார்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தைத் தமிழர் தலைவர் பார்வையிட்டார்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் வேரோடு சாய்ந்த மரங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் பார்வையிட்டு, மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார் (17.11.2018). மேலும்

17 நவம்பர் 2018 14:26:02

சிறந்து விளங்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வெளிநாடுகளில் கல்விச் சுற்றுலா

  சென்னை, நவ. 16- வெளிநாடுகளின் கலாச்சாரம், கல்வி, தொழில் நுட்பத்தை அறிவதற்காக அரசுப் பள்ளிகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் பின்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா அழைத் துச் செல்லப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். இதுகுறித்து அமைச்சர் பேசிய தாவது: அரசுப் பள்ளிகளில் டிசம்பர் மாத இறுதிக்குள் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில்....... மேலும்

16 நவம்பர் 2018 15:00:03

அரசாணை நகலை எரித்து அரசு ஊழியர்கள் போராட்டம்

அரசாணை நகலை எரித்து  அரசு ஊழியர்கள் போராட்டம்

தேனி, நவ. 16- தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்கள் உள்ளன. நீண்ட காலமாக காலிப் பணியிடங் கள் நிரப்பப்படாமல் உள்ளது. காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அரசு பணியிடங் களை குறைக்கும் வகையிலும், புதிய பணியிடங்களை உருவாக் காத வகையிலும் அரசாணை (எண் 56) வெளியிடப்பட்டுள்ள தாக அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த அரசாணை....... மேலும்

16 நவம்பர் 2018 14:33:02

கலைஞர் சிலை: டிச.16-இல் அண்ணா அறிவாலயத்தில் திறப்பு

கலைஞர் சிலை: டிச.16-இல் அண்ணா அறிவாலயத்தில் திறப்பு

சென்னை, நவ. 16-  முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞரின் முழு உருவச் வெண்கலச் சிலை அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16-ஆம் தேதி திறக்கப்படும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. புனரமைக்கப்பட்ட அண்ணாவின் சிலையும் அதே நாளில் நிறுவப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கலை ஞர் சிலையை டிசம்பர் 16-ஆம் தேதி இந்தியத் தலைவர்கள் பங்கேற்று திறந்து வைக்க உள்ளனர். 5....... மேலும்

16 நவம்பர் 2018 14:33:02

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, பிப்.9  தங்கள் நாட்டு மக்களின் வேலை வாய்ப்பை பாதுகாக்கும் வகையில் 12 வகையான வேலைகளில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை பணிக்கு அமர்த்தக் கூடாது என்று சவூதி அரேபிய அரசு தடை விதித் துள்ளது. வரும் செப்டம்பர் மாதம் முதல் படிப்படியாக அமலுக்கு வரும் இந்தத் தடையால் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும்.

இது தொடர்பாக சவூதி அரேபிய சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘கைக் கடிகாரம், கண் கண்ணாடிகள், மருத்துவ உபகரணங்கள் விற்பனையகங்கள், மின்சார உபகரணங்கள், மின்னணு சாதனங்கள், கார்களில் உதிரி பாகங்கள், கட்டுமானப் பொருள்கள், தரை விரிப்புகள் விற்பனை செய்யப்படும் கடைகள், கார்- மோட்டார் சைக்கிள் விற்பனையகங்கள், மரச்சாமான்கள், அலுவலக உபயோகப் பொருள்கள், ஆயத்த ஆடைகள், சிறார்கள், ஆண்களுக்கான உடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனையகங்கள் உள்ளிட்ட வற்றில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை பணியில் அமர்த்தக் கூடாது.

தனியார் துறையில் சவூதி அரேபிய மக்கள் அதிகம் பணியாற்றுவதை உறுதி செய் யும் வகையில் இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம், அடுத்த ஆண்டு ஜனவரி என 3 கட்டங்களாக வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான தடை அமலுக்கு வர இருக்கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை கடந்த ஆண்டு வெகுவாகக் குறைந் தது. இதனால் சவூதி அரேபி யாவில் வேலையின்மை 12 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சவூதி அரேபியாவில் 32 லட்சம் இந்தியர்கள் பணி யாற்றி வருகின்றனர். இவர் களில் பெரும்பாலானவர்கள் தொழிலாளர்கள் நிலையிலான பணிகளில்தான் உள்ளனர். எனவே, அவர்களது வேலை வாய்ப்பு வெகுவாக பாதிக்கப் படும்.

சவூதி அரேபியாவின் பொருளாதாரம், கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அதிக அளவில் சார்ந்து இருப்பதை மாற்ற வேண்டும் என்று அந்நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் முடிவு செய்துள்ளார். அந்த முடிவின் ஒரு பகுதியாகவே இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாகத் தெரிகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner