முன்பு அடுத்து Page:

கலைஞர்தம் இலட்சியங்களை எள்ளளவும் பிறழாமல் நிறைவேற்றி முடிக்க உறுதியினை எடுத்துக் கொள்வோம்!

கலைஞர்தம் இலட்சியங்களை எள்ளளவும் பிறழாமல் நிறைவேற்றி முடிக்க உறுதியினை எடுத்துக் கொள்வோம்!

பிரமிப்பூட்டும் சாதனை சரித்திரம் படைத்த தலைவர் கலைஞர்  -  பெரியார் நினைவு சமத்துவபுரம் கண்டவர்  -  சமூகநீதிகாவலர் திமுக செயற்குழுவில் இரங்கல் தீர்மானத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட்ட உறுதிமொழி சென்னை, ஆக.14,  பிரமிப்பூட்டும் சாதனை நாயகரான கலைஞர்தம் புகழ் அத்தியாயங்களையும் நினைவூட்டி, அவர் விட்டுச் சென்ற இலட்சியங்களை எள்ளளவும்  பிறழாமல் செய்து முடிக்க உறுதி ஏற்போம் என்று இரங்கல் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று (14.8.2018) காலை நடைபெற்ற....... மேலும்

14 ஆகஸ்ட் 2018 15:04:03

தெற்கு ரயில்வே கால அட்டவணை வெளியீடு பொதிகை, உழவன், சோழன், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றம்

  தெற்கு ரயில்வே கால அட்டவணை வெளியீடு பொதிகை, உழவன், சோழன், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றம்

  சென்னை , ஆக.14 தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் மற்றும் வந்தடையும் சில ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. இதில் பொதிகை, உழவன், சோழன், அனந்தபுரி உள்ளிட்ட விரைவு ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. இது தவிர முக்கிய ரயில்களின் நேரத்தில் மாற்றம் இல்லை. இந்த புதிய அட்டவணை நாளை (புதன்கிழமை) முதல் அமலுக்கு....... மேலும்

14 ஆகஸ்ட் 2018 14:28:02

மின்சாரம் தயாரிப்பதற்கு ரூ. பல கோடி சேமிப்பதற்கோ சில நொடி!

டில்லியில் நடைபெறும் தொழிலாளர் - விவசாயிகள் பேரணியில் அங்கன்வாடி ஊழியர்கள் 1000 பேர் பங்கேற்க முடிவு சென்னை, ஆக. 13-  தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற் றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் வடசென்னை சிஅய்டியு அலு வலகத்தில் மாநில துணைத் தலைவர் சித்திரச்செல்வி தலைமையில் ஞாயிறன்று நடைபெற்றது. வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி டில்லியில் நாடா ளுமன்றத்தை நோக்கி நடை பெறும் தொழிலாளி-விவசாயிகள் பேரணியில் தமிழகத்திலிருந்து ஆயிரம் அங்கன்வாடி....... மேலும்

13 ஆகஸ்ட் 2018 15:30:03

குரூப் 4 தேர்வு: சான்றிதழ் பதிவேற்றக் கோரும் தகவல் அனுப்பும் பணி தீவிரம்

  குரூப் 4 தேர்வு: சான்றிதழ் பதிவேற்றக் கோரும் தகவல் அனுப்பும் பணி தீவிரம்

சென்னை, ஆக.13 குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழைப் பதிவேற்றக் கோருவது குறித்த தகவலை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கிராம நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு, குரூப் 4 தேர்வுடன் இணைந்து முதல் முறையாக நடத்தப்பட்டது. இத்தேர்வை 17 லட்சத்து 53 ஆயிரத்து 154 பேர் எழுதினர். தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட நேரத்தில், கிராம நிர்வாக அலுவலர் பிரிவில் 494 இடங்கள் காலியாக இருந்தன. ஆனால், இப்போது,....... மேலும்

13 ஆகஸ்ட் 2018 15:28:03

காவிரியில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

காவிரியில் வெள்ளப்பெருக்கு கரையோர பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

மேட்டூர், ஆக. 13 கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்தும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி....... மேலும்

13 ஆகஸ்ட் 2018 14:43:02

பெரியாரின் பூங்காவில் நூலகம் என்ற நுண்ணிய கொடியாக இருந்துவிட்டு போகிறேன்- கலைஞர்

  பெரியாரின் பூங்காவில் நூலகம் என்ற நுண்ணிய கொடியாக இருந்துவிட்டு போகிறேன்- கலைஞர்

திருச்சி, ஆக.12 பெரியார் மருந்தியல் கல்லூரியில் மறைந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர்  டாக்டர் மு. கருணாநிதி அவர்களை நினைவு கூறும் இரங்கல் கூட்டம் 11.08.2018 அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை அவர்கள் தமது இரங்கலுரையில் மறைந்த முன்னாள் முதல்வரும் முத்தமிழ் அறிஞருமான மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி அவர்கள் தமிழினத்தின் முன்னேற்றத் திற்கும், தமிழர்களின் வளர்ச்சிக்கும் அயராது பாடுபட்டவர்கள் என்றும் அறிவு ஆசான்....... மேலும்

12 ஆகஸ்ட் 2018 14:52:02

குரூப் 2 தேர்வு: விண்ணப்பிக்க செப்.9 கடைசி நாள்

குரூப் 2 தேர்வு: விண்ணப்பிக்க செப்.9 கடைசி நாள்

    சென்னை, ஆக.12 நிதித் துறை உதவிப் பிரிவு அலுவலர் உள்பட குரூப் 2 பிரிவில் காலியாக உள்ள ஆயிரத்து 199 இடங்களுக்கு தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க செப். 9-ஆம் தேதி கடைசி நாளாகும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்ட அறிவிக்கை: இளநிலை வேலைவாய்ப்பு அலு வலர் (16 காலியிடங்கள்), தொழிலாளர் நலத் துறை உதவி ஆய்வாளர் (26), சார்-பதிவாளர்கள் (73), நகராட்சி ஆணை யாளர்....... மேலும்

12 ஆகஸ்ட் 2018 14:51:02

கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஸ்காட்லாந்து இணையர்

   கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஸ்காட்லாந்து இணையர்

    சென்னை, ஆக.12  திமுக தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் பலரும் மரியாதை செலுத்திவரும் வேளையில் வெளிநாட்டு இணையர் மரியாதை செலுத்தியது அனைவரையும் கவர்ந்தது. தமிழகத்தின் மிக மூத்த தலைவர், 74 ஆண்டுகால அரசியலுக்கு சொந்தக்காரர், 50 ஆண்டுகள் ஒரு கட்சியின் தலைவராக நீடித்தவர், 5 முறை முதல்வராகப் பதவி வகித்தவர் கலைஞர். மூத்த பத்திரிகையாளர், நாடக, திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், இலக்கியவாதி என பல துறைகளில் முத்திரை படைத்தவர். திமுக தலைவர் கலைஞர்....... மேலும்

12 ஆகஸ்ட் 2018 14:51:02

கொட்டும் மழையிலும், கலைஞர் நினைவிடத்தில் பொதுமக்கள் மரியாதை

  கொட்டும் மழையிலும், கலைஞர் நினைவிடத்தில் பொதுமக்கள் மரியாதை

சென்னை, ஆக.12  மறைந்த திமுக தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் கொட்டும் மழையிலும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் இடைவிடாது சனிக்கிழமை மரியாதை செலுத் தினர். சென்னை மெரினா கடற் கரையில் அமைந்துள்ள கலை ஞரின் நினைவிடம் சனிக்கிழமை அருகம்புல் மற்றும் மலர்களால் உதயசூரியன் வடிவில் அலங் கரிக்கப்பட்டிருந்தது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை இரவு 7.45 மணிக்கு கலைஞரின் நினைவிடத்துக்கு வந்தார். நினை விடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கலைஞரின் நினைவிடத்தில் மாநிலங்களவை....... மேலும்

12 ஆகஸ்ட் 2018 14:38:02

மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை

  மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை

  மேட்டூர், ஆக.12 கருநாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதி, கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. இதனால் உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. இந்த உபரிநீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருந்த தால் கடந்த ஜூலை 23-ஆம் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. அதற்குப் பிறகு உபரிநீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டது. பின்னர் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்தது. நீர்வரத்துக் குறைந்த நிலை....... மேலும்

12 ஆகஸ்ட் 2018 14:38:02

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கீழடி, பிப்.9 சிவகங்கை மாவட்டம், கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. முதல் முறையாக இந்த ஆய்வுகள் தமிழக தொல்லியல் துறையின ரால் மேற்கொள்ளப்பட உள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில் மத்திய அரசின் தொல்லியல் துறை பெங்களூரு பிரிவு சார்பில் தொல்லியலா ளர்கள், கல்லூரி ஆய்வு மாண வர்கள் ஆகியோர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை சங்க காலத் தமிழர் களின் நாகரிகம், வாழிடம் போன் றவை குறித்து மூன்று கட்டங் களாக அகழாய்வில் ஈடுபட்டனர்.

இதற்காக 150 க்கும் மேற்பட்ட அகழாய்வுக் குழிகள் தோண்டப் பட்டன. இதைத் தொடர்ந்து 4ஆம் கட்ட ஆய்வுகளுக்காக தமிழக அரசு ரூ.55 லட்சத்தை தற்போது ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:- கீழடியில் இதுவரை நடைபெற்ற ஆய்வுகளில் தமிழ் பிராமி எழுத் துகள் பொறிக்கப்பட்ட மண் பாண்ட ஓடுகள், வெளிநாடு களுடன் வாணிபத் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரமாக ரோம் நாட்டின் உயர் ரக ரவுலட், அரிட்டைன் மண்பாண்ட ஓடு கள், யானை தந்தம் மூலம் தயாரிக்கப்பட்ட தாயக்கட்டை கள், சீப்பு, சுடுமண் முத்திரைகள், முத்து பவள மணிகள், சுடுமண் பொம்மைகள், சுடுமண் முத்தி ரைகள் ஆகிய தொல்பொருள்கள் கிடைத்துள்ளன.

மேலும், ஹரப்பாவைவிட சிறப்புடைய சுடுமண் கழிவுநீர் குழாய்களும் கிடைத்துள்ளன. நெசவுத் தொழிலில் பயன்படும் நூல் நூற்கும் கருவிகள், இயற்கைச் சாயமூட்டுவதற்கு உரிய பல கட்டட அமைப்புகளும் கிடைத்துள்ளன. ஒரு தொழிற் கூடம் இருந்ததற்கான தடயங் களும் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் அந்தக் கால மக்கள் பயன்படுத்திய தங்க மணிகளும் கிடைத்துள்ளன.

முதல் முறையாக தமிழக தொல்லியலாளர்கள்...

கீழடியில் இதுவரை நடை பெற்ற மூன்று கட்ட ஆய்வு களையும் மத்திய அரசின் தொல்லியல் துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், விரைவில் தொடங்க வுள்ள நான்காம் கட்ட அகழாய்வு, முதல் முறையாக தமிழக தொல் லிய துறையினரால் மேற்கொள் ளப்படவுள்ளது. இதில் தமிழர் களின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் மேலும் சில ஆதாரங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

தமிழகம் கொண்டு வர நடவடிக்கை  

தமிழக அகழ் வைப்பகங் களில் கிடைத்த பொருள்கள் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள தென்னிந்திய தொல்லியல் துறை அலுவலகத்தில் வைக்கப் பட்டுள்ளன. கீழடியில் இறுதி கட்ட ஆய்வுகள் முடிவடைந்ததும் மத்திய அரசிடம் அனுமதி பெற்று அந்தப் பொருள்களை தமிழகத்துக்கு எடுத்து வந்து அருங்காட்சியத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தின் பண்டைய கலா சாரத்தின் கூறுகளை முழுவதுமாக வெளிக்கொண்டு வருவதே இந்த அகழாய்வின் நோக்கமாகும் என்றனர் அவர்.

“புதிய கோணத்தில்

தமிழர் நாகரிகம்‘

தமிழக அரசின் தொல்லியல் துறை வலைதளத்தை புதுப் பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மேற்கொள்ளப் பட்டுள்ள அகழாய்வுகள், கண்ட றியப்பட்ட பொருள்கள் குறித்த முழு விவரங்கள் அதில் இடம் பெறும். மேலும், திருமலை நாயக்கர் மஹால், செஞ்சிக் கோட்டை உள்ளிட்ட 71 நினைவுச் சின்னங்களின் முழு பரிமாணங் களையும் வெளிப்படுத்தும் வகையில் “360 டிகிரி வியூ’ என்ற முறையில் புகைப்படங்கள் பதி வேற்றம் செய்யப்படும் என்றனர் தொல்லியல் துறை அதிகாரிகள்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner