முன்பு அடுத்து Page:

தமிழர் தலைவர் கண்டனம்

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் துப்பாக்கிச் சூட்டுக்கு அய்வர் பலி! தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை  எதிர்த்து நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர் களில் அய்வர் துப்பாக்கிச் சூட்டில் பலியானதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தொடர் போராட்டங்கள் நடந்துகொண்டே இருக் கின்றன - கட்சிகளையெல்லாம் கடந்து மக்களின் தன் னெழுச்சிப் போராட்டமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்த உணர்வை மத்திய -....... மேலும்

22 மே 2018 16:28:04

காவிரி மேலாண்மை வாரியத்துக்கான முழு அதிகாரங்களையும் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு வழங்கிட வேண்டும்

காவிரி மேலாண்மை வாரியத்துக்கான  முழு அதிகாரங்களையும் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு வழங்கிட வேண்டும்

தளபதி மு.க.ஸ்டாலின்  பேட்டி   சென்னை, மே 22- திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரு மான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (22-.5.-2018) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத் துக் கட்சி கூட்டத்தினைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு: மு.க.ஸ்டாலின்: இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அய்ந்து தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. காவிரிப் பிரச்சினையில் தன்னெழுச்சியாக போரா டிக் கொண்டி....... மேலும்

22 மே 2018 15:58:03

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்: துப்பாக்கி சூட்டில் 2 பேர் சாவு

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்: துப்பாக்கி சூட்டில் 2 பேர் சாவு

தூத்துக்குடி, மே 22- தூத்துக்குடி ஸ்டெர் லைட் ஆலையினால் சுற்றுச்சூழல் மாசு படுகிறது எனவும், ஆலையை சுற்றி யுள்ள கிராம மக்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் கூறினர். இதை யடுத்து இந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி சுற்று வட்டார கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அ.குமரெட்டியபுரம் கிரா மத்தில் பொதுமக்கள் கடந்த பிப்ரவரி மாதம் போராட்டத்தை தொடங்கினர். அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு....... மேலும்

22 மே 2018 15:58:03

தமிழக மாணவர்களுக்கு பறி போகும் வேலை வாய்ப்புகள்

மத்திய அரசு வங்கிகளில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசுடைமையாக் கப்பட்ட வங்கிப் பணிகளில் கிளார்க் பணிகளுக்கு, அந்தந்த மாநிலத்தவர்க்கே இதுவரை வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வந்தது. அந்தந்த மாநில மொழிகளை படிக்க, எழுத, பேச வேண்டும் என்பது கட்டாயமாகவும் இருந்தது. இதன் காரணமாக, தமிழ் நாட்டில், அரசு வங்கிகளில் கிளார்க் பணிகளில் தமிழ் நாட்டவர்க்கே இதுவரை வாய்ப்புகள் இருந்தன. இந்நிலையில், வங்கி தேர்வு நடத்தும் இந்திய வங்கி தேர்வு நிறுவனம் சென்ற....... மேலும்

22 மே 2018 15:50:03

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வில் சமூகநீதிக்கு எதிரான புதிய விதிம…

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வில் சமூகநீதிக்கு எதிரான புதிய விதிமுறைகளை உடனடியாக கைவிட வேண்டும்

தளபதி மு.க.ஸ்டாலின்  அறிக்கை சென்னை, மே 21 அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வில் சமூகநீதிக்கு எதிரான புதிய விதிமுறைகளை மத்திய பிஜேபி அரசு உடனடியாக கைவிட வில்லை என்றால் இளைஞர்களை பெரு மளவில் திரட்டி மாபெரும் போராட்டத்தை தி.மு.கழகம் நடத்திடும் என அதன் செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின்  கூறி யுள்ளார். அதுபற்றி விடுத்துள்ள அறிக்கை வருமாறு: "மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்த தில் இருந்து பிற்படுத்தப்பட்டோர்,....... மேலும்

21 மே 2018 15:27:03

அரபிக்கடலில் புதிய புயல் தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை

அரபிக்கடலில் புதிய புயல்  தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை

நாகர்கோவில் மே 21 அரபிக்கடலில் ஏடன் வளை குடா பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு சாகர் என்று பெயரி டப்பட்டது. இந்த புயல் காரணமாக தமிழ்நாடு, கேரளா, கருநாடகா, கோவா, மராட்டியம் மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு இந் திய ஆய்வு மய்யம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த சாகர் புயல் இந்தி யாவுக்குள் நுழையாமல் எதிர் திசையில் சென்று ஏமன்....... மேலும்

21 மே 2018 15:27:03

கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வில் பழங்காலப் பொருள்கள் கண்டெடுப்பு

கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வில்  பழங்காலப் பொருள்கள் கண்டெடுப்பு

    சிவகங்கை, மே 20 சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடை பெற்ற நான்காம் கட்ட அகழாய் வில் மீண்டும் பழங்காலப் பொருள்கள் கிடைத்துள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு பெங்களூரில் அமைந்துள்ள இந்திய தொல் பொருள் அகழாய்வு மையம் நடத்திய ஆய்வில் சிவகங்கை மாவட்டம் கீழடி பள்ளிச்சந்தை புதூர் திடலில் சுமார் 80 ஏக்கர் பரப்ப ளவில் பழங்கால பொருள்கள் இருப்பதற்கான சான்றாதாரங்கள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம்....... மேலும்

20 மே 2018 16:49:04

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் கருத்தரங்கம்

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் கருத்தரங்கம்

தூத்துக்குடி, மே 20- தூத்துக் குடி, உண்மை வாசகர் வட்டம் 6ஆவது கூட்டம் பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கம், தூத்துக்குடியில் 28.4.2018 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. மாநகரப் ப.க. தலைவர் ப.பழனிச்சாமி அனைவரை யும் வரவேற்றார். மாவட்டக் கழகத் தலைவர் பேராசிரியர் தி.ப.பெரியாரடியான், மாவட் டப் ப.க. தலைவர் ச.வெங் கட்ராமன் ஆகியோர் முன் னிலை வகித்து உரையாற்றி னார்கள். வாசகர் வட்டத் தலைவர் மா.பால்ராசேந்திரம் தலைமையுரையாற்றினார். அடுத்து....... மேலும்

20 மே 2018 16:32:04

பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. பச்சைக்கொடி!

பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. பச்சைக்கொடி!

கருநாடகத்தில் பி.ஜே.பி. வெற்றி பெற்று இருப்பது தென்னகத்தில் பி.ஜே.பி.யின் மிகப்பெரிய நுழைவு என்று பி.ஜே.பி. தேசியத் தலைவர் அமித்ஷாவுக்கு தமிழக துணை முதல மைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துத் தந்தி அனுப்பியுள்ளார். அண்ணா பெயரைக் கட்சியில் சூட்டிக் கொண்டுள்ள ஒரு கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் மதவாத இந்துத்துவா ஆட்சியைத் தென்னாட்டில் வரவேற்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார் என்றால், இந்தக் கேடுகெட்ட நிலையை என்னவென்று சொல்வது! தமிழ்நாடு சட்டப்பேரவையில் பி.ஜே.பி.,க்கு சிவப்புக்....... மேலும்

19 மே 2018 17:16:05

மணிப்பூர் தலைமை நீதிபதியாக தமிழர் பதவியேற்பு

இம்பால், மே 19 -மணிப்பூர் மாநிலம் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக ராம லிங்கம் சுதாகர் வெள்ளியன்று பொறுப்பேற்றார். மணிப்பூர் ஆளுநர் ஜெக்தீஷ் முகி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் மணிப்பூர் முதலமைச்சர் என்.பிரேன் சிங், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எதிர்க்கட்சி தலை வர்கள், நீதிமன்ற மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நீதிபதி ராமலிங்கம் தமிழ் நாட்டின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர்....... மேலும்

19 மே 2018 15:50:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மருத்துவர்கள் சங்கம் கண்டனம்!

சென்னை, பிப்.9 மூன்று நாடாளு மன்றத் தொகுதிக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற மத்திய அரசின்  திட் டத்தில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப் பதற்கு சமூக சமத்துவத்திற்கான மருத் துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் இன்று விடுத்துள்ள அறிக்கை:

''நாடு முழுவதும் மூன்று நாடாளு மன்றத் தொகுதிகளுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுவதற்கான இடங்கள் குறித்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு மருத் துவக் கல்லூரி கூட தமிழகத்தில் இல்லை. தமிழகம் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது வன் மையாக கண்டிக்கத் தக்கது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பே, மாநில உரிமைகளைப் பறிக்கும் செய லாகும். கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரானதாகும். மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள, அவற்றின் நிதி ஒதுக்கீட்டோடு நடைபெறும் மாவட்ட மருத்துவமனைகளை, மருத்துவக் கல் லூரிகளாக மாற்றும் அறிவிப்பை மத்திய அரசு தனது பட்ஜெட்டில் அறிவிப்பது, மாநிலங்களின் உரிமைகளை முற்றிலும் பறிக்கும் செயலாகும்.

தமிழகம் ஏற்கெனவே, மாவட்டந் தோறும் மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வருகிறது. அது போன்று ஒவ்வொரு மாநில அரசும் தொடங்க வேண்டும். அதற்குத் தேவையான நிதியை அனைத்து மாநிலங்களுக்கும் சம அளவில் பிரித்து வழங்க வேண்டும்.

அதை விடுத்து, மாவட்ட மருத்துவ மனைகளில் மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதாக மத்திய அரசே அறிவிப்பதும், ஏற்கெனவே நிறைய மருத் துவக் கல்லூரிகள் இருக்கிறது என தமி ழகத்தை வஞ்சிப்பதும் கண்டனத்திற் குரியது. நீண்டகாலமாக சொந்த நிதியில், படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரி களை தொடங்கிய தமிழகத்தை தண்டிக் கும் வகையிலும், மருத்துவக் கல்லூரி களையே தொடங்காமல் பொறுப்பற்று இருந்த மாநிலங்களுக்குப் பரிசுகளை வழங்குவது போலவும் மத்திய அரசு செயல்படுகிறது.

மருத்துவக் கல்லூரிகள் தொடங்கு வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில்  தமிழகத்திற்கான உரிய பங்கை மத்திய அரசு, மாநில அரசிடம் வழங்கிட வேண்டும். மாநில அரசு இந்நிதியைக் கொண்டு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கிட வேண்டும்.

மருத்துவக் கல்வியையும், மருத் துவச் சேவையையும் முற்றிலும் மாநில அரசின் அதிகார வரம்பில் இருந்து பறித்து, நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு போக வேண்டும் என்ற நோக்கத்தோடு மத்திய அரசு செயல்படுவது நாட்டின் ஒற்றுமை ஒருமைபாட்டையும், கூட்டாட்சிக் கோட்பாட்டையும் பாதிக்கும்.

மருத்துவக் கல்வியையும், மருத் துவச் சேவையையும் முற்றிலும் மாநில அரசின் அதிகார வரம்பில் இருந்து பறிக்கும் நோக்கோடுதான், நீட் நுழைவுத் தேர்வை புகுத்தியுள்ளது. இந்திய மருத்துவக் கழகத்தை ஒழித்து விட்டு தேசிய மருத்துவ ஆணையத்தை கொண்டுவர முயல்கிறது.

'எய்ம்ஸ்' போன்ற மருத்துவ நிறு வனங்களை, மாநிலந்தோறும் இன்னும் மத்திய அரசு தொடங்கவில்லை. அக்கல் லூரிகளில் அவை இடம் பெற்றுள்ள மாநில மாணவர்களுக்கென தனி ஒதுக் கீட்டை வழங்கவில்லை.

இந்நிலையில், மாவட்ட மருத்துவ மனைகளை மருத்துவக் கல்லூரிகளாக மாற்றி, அவற்றை தனியாரிடம் தாரை வார்க்க வேண்டும் என்ற உள்நோக் கத்தோடு, மறைமுகத் திட்டத்தோடு மத்திய அரசு செயல்படுவது சரியல்ல. இது மாவட்ட மருத்துவமனைகளை மத்திய அரசு, மாநிலங்களிடமிருந்து அபகரிக்கும் செயலாகும்.

தமிழகத்தில் ஒரு எய்ம்ஸ் தொடங் கப்படும் என மூன்றாண்டுகளுக்கு முன்பு அறிவித்ததையும் இன்னும் மத் திய அரசு நடைமுறைப் படுத்தவில்லை. இந்நிலையில், தமிழகத்தை முற்றிலும் புறக்கணிக்கும் வகையில், மத்திய அரசு செயல்படுவது சரியல்ல.

தமிழகத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கிட மத்திய அரசு நிதி உதவியை மாநில அரசிடம் வழங்கிட வேண்டும் என சமூக சமத் துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.''

இவ்வாறு ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner