முன்பு அடுத்து Page:

தந்தை பெரியார் அவர்களின் 140 ஆவது பிறந்த நாளில் குருதிக் கொடை முகாம்

தந்தை பெரியார் அவர்களின்  140 ஆவது பிறந்த நாளில் குருதிக் கொடை முகாம்

வல்லம். செப்.21 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக் கழத்தில் தந்தை பெரியார் அவர்களின் 140ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மருத்துவ கல்லூரியும் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கமும் இணைந்து  குருதிக் கொடை முகாம் பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல் கலைக்கழகத்தின்) வளாகத்திலுள்ள பெரியார் மருத்துவமனையில் நடைபெற்றது. குருதிக் கொடை முகாமிற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.செ.வேலுசாமி அவர்களின் தலைமையில் 120....... மேலும்

21 செப்டம்பர் 2018 16:41:04

தந்தை பெரியார் சிலை அவமதிப்பைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! அனைத்துக்கட்சி கூட்டத்தில் த…

தந்தை பெரியார் சிலை அவமதிப்பைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!  அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

தாராபுரம்,செப். 21- தந்தை பெரியார் சிலை அவமதிப்பைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென அனைத்துக்கட்சி கூட் டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தாராபுரம் தீவுத்திடலிலுள்ள தந்தை பெரியார் சிலை அவமதிப்பட்டதைக் கண்டித்து தாராபுரம் தீவுத்திடலில் 20.09.2018 வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் கணியூர் நா.சாமிநாதன் தலைமை தாங்கினார்.தாராபுரம் கழக மாவட்டச் செயலாளர் க.சண்முகம் அனைவரையும் வரவேற் றார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருப்பூர்....... மேலும்

21 செப்டம்பர் 2018 15:32:03

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் வண்ணம் தீட்டும் போட்டி

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் வண்ணம் தீட்டும் போட்டி

திருச்சி, செப்.20  அறிவு ஆசான் தந்தை பெரியாரின் 140ஆம் ஆண்டு பிறந்தநாள்  விழாவனை முன்னிட்டு திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மழலையர் பிரிவு மாணவர்களுக்கு பள்ளியின் மழலையர் பிரிவு வகுப்பறையில் வண்ணம் தீட்டும் போட்டிகள்  நடைபெற்றது. இதல் பிரி.கே.ஜி முதல் யு.கே.ஜி பயிலும் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுச் சிறப்பாக வர்ணம் தீட்டி அசத்தினர். போட்டியில் பங்கேற்ற மாணவ  மாணவியர்களைப் பள்ளியின் முதல்வர் முனைவர் க.வனிதா அவர்கள் பாராட்டி இனிப்புகளை....... மேலும்

20 செப்டம்பர் 2018 16:27:04

டீசல் விலையை குறைக்கக்கோரி தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் மீண்டும் வேலைநிறுத்தம்

சென்னை, செப்.20  பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரி, மீண்டும் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.சுகுமார் கூறியது: பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கெனவே கடந்த ஜூன் மாதம் தொடர் வேலை நிறுத்தத்தை லாரி உரிமையாளர்கள் மேற்கொண்டனர். அப்போது லாரி உரிமையாளர்கள் சந்தித்து....... மேலும்

20 செப்டம்பர் 2018 15:25:03

விடுதலை சிறுத்தைகள் சார்பில் ‘தேசம் காப்போம்’ மாநாடு - தொல்.திருமாவளவன் அறிவிப்பு

விடுதலை சிறுத்தைகள் சார்பில் ‘தேசம் காப்போம்’ மாநாடு - தொல்.திருமாவளவன் அறிவிப்பு

  சென்னை, செப். 20- விடுதலை சிறுத்தை கள் கட்சியின் தலைவர் தொல்.திரு மாவளவன் பிறந்தநாள் விழா சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று (19.9.2018) கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கட்சியின் பொதுச் செயலா ளர் ரவிக்குமார், பொருளாளர் மு.முக மது யூசுப் ஆகியோர் முன்னிலை வகித் தனர். விழாவில் தொல்.திருமாவளவன் பேசியதாவது:- கடந்த ஆகஸ்டு 17ஆம் தேதி நடைபெற்றிருக்க வேண்டிய இவ்விழா, தி.மு.க. தலைவர் கலைஞர் கால மானதையடுத்து தள்ளிவைக்கப்பட்டு இப்போது....... மேலும்

20 செப்டம்பர் 2018 14:55:02

மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கும் மேலாக தொடர்ந்து நீடிப்பு

சென்னை, செப். 20- மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 62-ஆவது நாளாக நூறு அடிக்கும் மேலாக நீடிக்கிறது. ஜூலை மாதத்தின் தொடக் கத்தில் கருநாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால், கருநாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணை களுக்கு நீர்வரத்து அதிகரித்து, அணைகள் நிரம்பின. இதையடுத்து, கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளி லிருந்து உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதனால்....... மேலும்

20 செப்டம்பர் 2018 14:39:02

சரியான நடவடிக்கை பெரியார் சிலை அவமதிப்பு வழக்கு: பா.ஜ.க. வழக்குரைஞர் குண்டர் சட்டத்தில் சிறையில் …

சென்னை, செப்.20 சென்னையில் பெரியார் சிலை அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பா.ஜ.க. வழக்குரைஞரை, குண் டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் புதன்கிழமை உத்தரவிட்டார். இது குறித்து காவல்துறையி னர் தரப்பில் கூறப்படுவதாவது: தந்தை பெரியாரின் 140-ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா சாலை சிம்சன்சிக்னல் அருகே உள்ள அவரது சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்து வதற்காக அரசியல் கட்சியினர் திங்கள்கிழமை திரண்டிருந்தனர். அப்போது அங்கு....... மேலும்

20 செப்டம்பர் 2018 14:32:02

செப். 21-இல் அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

செப். 21-இல் அரசு மருத்துவர்கள்  வேலைநிறுத்தம்

சென்னை, செப்.18 ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றை உரிய நேரத்தில் வழங்கக் கோரி, மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை (செப். 21) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்தப் போராட்டத்தில் 20,000 அரசு மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்து, அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் கே. செந்தில், சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றை உரிய நேரத்தில் வழங்க....... மேலும்

18 செப்டம்பர் 2018 16:22:04

அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்!

அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்!

பெரியாரை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்க வெறிபிடித்த மிருகம்போல செயல்படுவதா? சென்னை, செப் 18-  “தந்தை பெரியாரை அவமானப்படுத் துவதாக நினைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்க விஷமத்தனமாகத் திட்டமிட்டு வெறிபிடித்த மிருகம் போல செயல்படுவதா?” என்று திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலை வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று(17.9.2018) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மானமுள்ள ஒவ்வொரு தமிழரும் பகுத்தறிவுப்....... மேலும்

18 செப்டம்பர் 2018 16:02:04

சென்னையில் தந்தை பெரியார் சிலை மீது காலணி வீசிய பா.ஜ.க. வக்கீல் கைது

சென்னையில் தந்தை பெரியார் சிலை மீது காலணி வீசிய பா.ஜ.க. வக்கீல் கைது

சென்னை, செப்.18  தந்தை பெரியாரின் 140-வது பிறந்தநாள் விழா நேற்று (17.9.2018) கொண்டாடப்பட்டது. இதை யொட்டி சென்னை அண்ணாசாலை சிம்சன் சந்திப்பில் உள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு அரசியல் தலைவர் கள் நேற்று மரியாதை செலுத்திக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். பெரியார் சிலை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பெரியார் சிலையை ஒரு நிமிடம் வெறித்து பார்த்தார். பின்னர்....... மேலும்

18 செப்டம்பர் 2018 15:55:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மார்ச் 5 சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் உரிமம் பெறாத ஓ.என்.ஜி.சி கிணறுகளை உடனடியாக மூடவேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டின் காவிரிப் படுகை மாவட்டங்களில் ஓ.என். ஜி.சியின் சட்டவிரோத மற்றும் பாது காப்பற்ற செயல்பாடுகள் தொடர்பாக 'காவிரி டெல்டா வாட்ச்' என்ற தன்னார்வ அமைப்பு ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. தகவல் உரிமைச் சட்ட பதில்கள் மற்றும் இணைய ஆவணங்கள் மூலம் காவிரி படுகை பகுதியில் உரிய உரிமம் இல்லாமல் ஓ.என்.ஜி.சி. செயல் படுவதை இந்த ஆய்வறிக்கை அம்பலப் படுத்தியுள்ளது.

அந்த ஆய்வறிக்கையில் டெல்டா மாவட்டங்களில் இயங்கும் ஓ.என். ஜி.சி.யின் ஹைட்ரோகார்பன் கிணறுகளில் ஒன்றுக்குக் கூட முறையான சுற்றுச்சூழல் உரிமத்தை தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியத்திலிருந்து ஓஎன்ஜிசி பெறவில்லை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

ஓ.என்.ஜி.சி. அறிவித்த 700 கிணறு களில் 219 கிணறுகள் தொடர் பான தகவல்கள் மட்டுமே தமிழ்நாடு மாசுக் கட்டுப் பாட்டு வாரியத்திடம் உள்ளது. டெல்டா மாவட்ட எண்ணெய்க் கிணறுகள் அனைத்தும் உரிய உரிமம் இல்லாமல் சட்ட விரோத மாகச் செயல்பட்டு வருகிறது என்பது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சித் தகவலாக உள்ளது.

உரிய உரிமம் இல்லாமல் செயல்பட்டு வரும் ஓ.என். ஜி.சியின் சட்ட விரோத செயல்பாடுகளை தட்டிக்கேட்ட பல கிராம மக்கள் மீது வழக்குப் போட்டும், உரிமம் இல்லாமல் இயங்கிய கதிராமங்கலம் கிணற்றின் எண்ணெய்க் கசிவை எதிர்த்துப் போராடிய அக்கிராம மக்களைக் காவல்துறை துன் புறுத்தி சிறையில் அடைத்ததும் நியாய மற்ற செயல் என்பதை இந்த ஆய்வறிக்கை உறுதி செய்கிறது.

சுற்றுச்சூழலும் பொருளாதாரமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். பொருளா தாரத்திற்காக சுற்றுச் சூழலை நம்மால் பாதுகாக்க முடியவில்லை என்றால் மனித இனத்தை நம்மால் பாதுகாக்க இயலாது என்பதை மத்திய மாநில அரசுகள் உணர வேண்டும்.

எனவே, சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் உரிமம் பெறாத ஓ.என்.ஜி.சி கிணறு களை உடனடியாக மூட வேண்டும்; உரிமம் இல்லாத எண்ணெய்க் கிணறுகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எப்படி அனுமதித்தார்கள் என்பதைப் புலனாய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த எண்ணெய்க் கிணறுகளுக்கு எதிராகப் போராடிய அப்பாவி டெல்டா விவசாயிகளின் மீது போடப்பட்ட பொய் வழக் குகளைத் தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

நன்னிலம், கடமங்குடி, அம்மா பேட்டை போன்ற பகுதிகளில் அமைக்கவி ருக்கும் எண்ணெய்க் கிணறுகள் தொடர் பான நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும். காவிரிப் படுகை (டெல்டா) மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்'' என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner