முன்பு அடுத்து Page:

மாணவர்கள், ஆசிரியர்கள் கல்வி நிறுவனத்திடம் சான்றிதழ் அளிக்க வேண்டியதில்லை: ஏஅய்சிடிஇ தலைவர் பேட்டி

சென்னை, மார்ச் 26- பொறியியல் மாணவர்கள், ஆசிரியர்கள் தனியார் கல்வி நிறுவனங்களி டம் சான்றிதழ்களை ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை ஏஅய்சிடிஇ தலைவர் அனில் டி. சகஸ்கரபுதே கூறினார். ஓய்வு பெற்ற பொறியியல் பேராசிரியர் பி.சி.சந்திரசேக ரனின் மாடர்ன் சயின்டிபிக் தாட் என்னும் நூல் வெளி யீட்டு விழா கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. இந்த....... மேலும்

26 மார்ச் 2019 16:43:04

ராமேஸ்வரம் மீனவர்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

ராமேஸ்வரம் மீனவர்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

இரா.முத்தரசன் வலியுறுத்தல் சென்னை, மார்ச் 26- இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களை உடனே விடு தலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்திலிருந்து சனிக் கிழமை....... மேலும்

26 மார்ச் 2019 16:43:04

மக்களவைத் தேர்தலில் மாற்று அரசு அமையாவிட்டால் அரசியலமைப்பு வழங்கிய உரிமைகள் பறிக்கப்படும்: டி.கே.ரங்…

மக்களவைத் தேர்தலில் மாற்று அரசு அமையாவிட்டால் அரசியலமைப்பு வழங்கிய உரிமைகள் பறிக்கப்படும்: டி.கே.ரங்கராஜன் சாடல்

சென்னை, மார்ச் 26- மக்களவைத் தேர்தலில் மாற்று அரசு அமையாவிட்டால் அரசியலமைப்பு சட்ட அடிப்படைகள் தகர்க்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப் பினர் டி.கே.ரங்கராஜன் கூறினார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென்சென்னை மக்களவைத் தொகுதி ஊழியர் கூட்டம் கந்தன்சாவடியில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் வேட்பாளர் முனைவர் த.சுமதி (எ)தமிழச்சி தங்க பாண்டியனை அறிமுகப்படுத்தி டி.கே.ரங்கராஜன் பேசியதாவது: இந்த மக்களவைத் தேர்தலில்....... மேலும்

26 மார்ச் 2019 16:43:04

பெரியார் அய்.ஏ.எஸ். பயிற்சி மய்யத்தின் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி

பெரியார் அய்.ஏ.எஸ். பயிற்சி மய்யத்தின் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி

மார்ச் 31-இல் தொடக்கம் சென்னை, மார்ச் 26 டிஎன்பிஎஸ்சி, இந்திய குடிமைப் பணி ஆகிய போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்கம், வருகிற 31-ஆம் தேதி முதல் நடைபெற வுள்ளது என பெரியார் அய்.ஏ.எஸ் அகாதமி அறிவித்துள்ளது. இது குறித்து  அந்த அகாதெமி வெளியிட்ட செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:  டிஎன்பிஎஸ்சி,  இந்திய குடிமைப் பணி ஆகியவை நடத்தும் அரசுப் பணித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப் புகள் மற்றும்....... மேலும்

26 மார்ச் 2019 15:08:03

ஜனநாயகப் படுகொலையை நடத்தும் தேர்தல் ஆணையம்

ஜனநாயகப் படுகொலையை நடத்தும் தேர்தல் ஆணையம்

தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் கண்டனம் சென்னை, மார்ச் 26- சின்னம் ஒதுக்குவதில் இருந்து வேட்புமனு பெறுவது வரை இந்திய தேர்தல் ஆணையமும், தமிழக தேர்தல் ஆணையரும், மத்திய பா.ஜ.க. அரசின் கட்டளைக்குப் பணிந்து அ.தி. மு.க. அரசின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பாரபட்சமாக செயல்பட்டு வருகிறது. இது மன்னிக்க முடியாத மாபெரும் ஜனநாயக படுகொலை என்று தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று (25.3.2019)....... மேலும்

26 மார்ச் 2019 15:08:03

தமிழ்நாட்டில் நடப்பது பிஜேபி ஆட்சியா?

திராவிடர் கழக நெல்லை மண்டலத் தலைவர் மா.பால்ராசேந்திரம் மீது காவல்துறையினர் வழக்கு! திராவிடர் கழக திருநெல் வேலி மண்டலத் தலைவரும் சொற்பொழிவாளருமாகிய மா.பால்ராசேந்திரம் அவர்கள் நாகர்கோவிலில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்ட அறிவியல் பரப்புரைப் பிரச் சாரக் கூட்டத்தில் பேசிக் கொண் டிருந்தபோது இந்து முன்னணிக் காவிகள் கலாட்டா செய்ய முயன் றனர். அதனையும் மீறி கூட்டம் நடந்தது. இந்நிலையில் இந்து மதக் கடவுளை விமர்சனம் செய்து பேசியதாக....... மேலும்

25 மார்ச் 2019 16:17:04

அரசுப் பள்ளிக்கு ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கல்

செங்கல்பட்டு, மார்ச் 25- அரசுப் பள்ளிகளை பாதுகாத்திட கிராம மக்கள் தம் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளுக்குத் தேவையான பொருட்களை கல்விச் சீராக வழங்கி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டம் முகையூர் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்குத் தேவையான உபகரணங்களைக் கல்விச் சீராக வழங்கும் விழா பள்ளி தலைமை ஆசிரியர் லதா தலைமையில் நடைபெற்றது. முகையூர் பேருந்து நிலையம் அருகிலிருந்து கல்விச்சீர் ஊர்வலத்தை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாபு....... மேலும்

25 மார்ச் 2019 15:55:03

சிலைக்கு மாலை அணிவித்தால் வழக்கா? சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

சிலைக்கு மாலை அணிவித்தால் வழக்கா?  சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

சென்னை, மார்ச் 25- தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்த மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்சு.வெங்கடேசன் மீது தேர்தல் ஆணை யம் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதற்கு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.விடுதலைப் போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகி யோரது நினைவு தினத்தையொட்டி 23.3.2019 அன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பகத்சிங் சிலைக்கு கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வுக்கு அகில....... மேலும்

25 மார்ச் 2019 15:48:03

மக்களவைத் தேர்தல் 2019: தி.மு.க. தேர்தல் அறிக்கை (5)

மக்களவைத் தேர்தல் 2019: தி.மு.க. தேர்தல் அறிக்கை (5)

சென்னை, மார்ச் 24 - கல்வி வளர்ச்சி, வேலை வாய்ப்பு, மக்கள் வளர்ச்சித் திட்டம், தமிழ்நாடு உரிமைப் பாதுகாப்பு முதலிய செறிவான மக்கள் நலம் பேணும் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்   19.3.2019 அன்று முற்பகல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு: நேற்றைய தொடர்ச்சி *           எனவே, நிலுவைப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி மத்திய அரசுப் பணிகளில் குறைந்த பட்சம் 27....... மேலும்

24 மார்ச் 2019 17:37:05

அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்னரே பிளஸ் 2 பாடத்திட்டம் இ-புக்ஸாக வெளியானது

சென்னை, மார்ச் 24- பிளஸ் 2 வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், புதிய பாட நூல்களை அதிகாரப்பூர்வமாக அரசு வெளியிடும் முன்னரே அவை இ-புக்ஸாக வெளியாகி உள்ளது. இது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிகளுக்கான புதிய பாடத்திட் டமானது, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் அந்தந்த பாடங்கள் சார்ந்த நிபுணர்களைக் கொண்டு....... மேலும்

24 மார்ச் 2019 17:21:05

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரவள்ளூர், மார்ச் 6- திமுக செயல் தலைவரும்,தமிழக எதிர்க்கட்சித் தலை வருமான தளபதி மு.க.ஸ்டாலின் 65ஆவது பிறந்த நாள் முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் “தோழமை பாராட்டும் ஆளுமை அரங்கம் - 1065 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்” நிகழ்ச்சி 3.3.2018 அன்று மாலை 7 மணிக்கு சென்னை - பெரம்பூர், பெர வள்ளூர் சதுக்கத்தில் சிறப்பாக நடை பெற்றது.\

இந்நிகழ்ச்சிக்கு சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப் பாளர் சி.மகேஷ்குமார் தலைமை வகித் தார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் ப.ரங்கநாதன், கொளத்தூர் மேற்கு - கிழக்குப் பகுதிகளின் திமுக செய லாளர்களான எ.நாகராசன், அய்.சி.எப்.முரளி மற்றும் திமுக நிர்வாகிகள் முன் னிலை வகித்தனர்.

திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் ப.தாயகம் கவி வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பி னரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான ப.ரங்கநாதன் பட்டாடை அணிவித்தும், துறைமுகம் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான பி.கே.சேகர்பாபு நினைவுப் பரிசு வழங்கியும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களுக்குச் சிறப்பு செய்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் வழங்கப்பட்ட “ஸ்கூட்டி” இருசக்கர வாகனத்திற்குரிய சாவியை துறைமுகம் பகுதி மாற்றுத் திறனாளித் தோழருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்குதலைத் துவக்கி வைத்தார்.

சிறப்பான ஏற்பாடுகளை திட்டமிட்டுச் செய்து நிகழ்ச்சியைபொலிவுள்ளதாக்கிய சி.மகேஷ்குமார், எ.நாகராசன் ஆகியோ ருக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சால்வை அணி வித்துப் பாராட்டுத் தெரிவித்தார்.

எழுச்சியோடு நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில காங்கிரசு கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செய லாளர் ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முசுலிம் லீக் கட்சித் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், சட்டமன்ற உறுப்பினர்கள் ப.ரங்கநாதன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தலைவர் களுக்கும், அனைத்துக்கட்சிகளின் நிர் வாகிகளுக்கும் விழா ஏற்பாட்டாளர்கள் சார்பில் சால்வை அணிவித்தும், நினைவுப் பரிசு வழங்கியும் சிறப்புச் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சங்கரி நாராயணன், மாவட்டத் திமுக பிரதிநிதி புரசை மு.துளசி,  வடசென்னை மாவட்ட கழகச் செயலாளர் தே.ஒளிவண்ணன், துணைச் செயலா ளர்கள் கி.இராமலிங்கம், சி.பாஸ்கர், இளை ஞரணித் தலைவர் தளபதி பாண்டியன், அமைப்பாளர் வ.தமிழ்ச்செல்வன், தென் சென்னை மாவட்ட கழக துணைச் செயலாளர் சா.தாமோதரன், அயன்புரம் பொன்.மாடசாமி, புழல் ஏழுமலை, தி.செ.கணேசன், கொடுங்கையூர் கழக செயலாளர் தே.செ.கோபால், வியாசர்பாடி கழக செயலாளர் கெடார் மும்மூர்த்தி, செம்பியம் கழக செயலாளர் டி.ஜி.அரசு, துணைத் தலைவர் பொறியாளர் ச.முகிலரசு, ஆவடி நகர கழக இளைஞரணிச் செயலாளர் க.கலைமணி, சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி கழக மாணவரணி அமைப்பாளர் செ.பிரவின்குமார், சோ.சுரேசு, ரெ.யுவராஜ், சுதன், வலைக்காட்சி சுரேசு மற்றும் கழகத் தோழர்களும், கழகப் பொறுப்பாளர்களும், அனைத்து கட்சிகளைச் சேர்ந்த நிர் வாகிகளும், தொண்டர்களும், திரளாகப் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு கழகக் கொடிகளும், அனைத்துக் கட்சிகளின் கொடிகளும் சாலையெங்கும் நடப்பட் டிருந்தன. வண்ண விளக்குகள் அமைக்கப் பட்டிருந்தன. ஏராளமான மகளிருக்கும், தோழர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் றிறைவாக 67(அ), 67 வட்டங்களின் திமுக செயலாளர்கள் பி.அதிபதி, எம்.ஜெ.சி.பாபு நன்றி கூறினர்.

இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்புரையாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தனது உரையை நிறைவு செய்த பின்னர் உடல் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு நலமடைந்து பெரவள்ளூரிலுள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்துவரும் வடசென்னை மாவட்டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் அவர் களிடம் நலம் விசாரித்தார். அவரது இணை யர் கு.அகிலா, மகள் சு.தமிழ்த்தென்றல் ஆகியோரிடமும் அளவளாவினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உடன் சென்றிருந்தனர்.

தமது குடும்பத்தினர் சார்பில் வழக் குரைஞர் சு.குமாரதேவன் “விடுதலை” வளர்ச்சி நிதியாக ரூபாய் அய்ந்தாயிரம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner