முன்பு அடுத்து Page:

புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்காத மோடி பிரதமர் பதவியில் இருக்க தகுதியற்றவர்: வைகோ தாக்கு

புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்காத மோடி பிரதமர் பதவியில் இருக்க தகுதியற்றவர்: வைகோ தாக்கு

சாத்தூர், டிச.9 சாத்தூரில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் தலைமையில் வாக்குச் சாவடி முகவர்களின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். பின்னர் அவர் கூட்டத்தில் பேசும்போது கூறியதாவது: தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக 280 வாக்குச் சாவடி முகவர்களை நியமனம் செய்தது சாத்தூரில் தான். இது ஒரு முன்னுதாரணமான கூட்டம். இனிவரும் தேர்தல்களில் அனைத்து தொகுதிகளிலும் வாக்குச் சாவடி முகவர்களின்....... மேலும்

09 டிசம்பர் 2018 17:49:05

அரசு மருத்துவமனை செவிலியர்களின் சீருடையில் மாற்றம்: அரசாணை வெளியீடு

சென்னை, டிச.9 தமிழக அரசு மருத்துவமனை செவிலியர்களின் சீருடையில் மாற்றம் குறித்த அரசாணையை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள் ளதாவது: தமிழ்நாடு செவிலியர்கள் சங்கத்தினருடான கூட்டம் கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி நடைபெற்றது. அக்கூட்டத்தில் செவிலியர்களின் சீருடையில் மாற்றம் செய்ய வேண்டும் என செவிலியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக....... மேலும்

09 டிசம்பர் 2018 17:20:05

அருள்வாக்கு கூறுவதாக பெண்ணிடம் நகை-பணம் பறித்த சாமியார்

நாகர்கோவில், டிச.9 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் திருமால் (வயது 49). ஓட்டல் தொழிலாளி. இவரு டைய மனைவி அமலு (45). இவர்கள் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் காவல்துறை கண்காணிப்பாளர் சிறீநாத்தை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:- எங்கள் ஊருக்கு கோபால் என்ற பெயரில் சாமியார் ஒருவர் மனைவி பிள்ளைகளுடன் வந்தார். அவர் அங்கு....... மேலும்

09 டிசம்பர் 2018 17:20:05

60 ஆண்டாக கிருதுமால் நதி புறக்கணிப்பால் விவசாயிகள் கொதிப்பு

60 ஆண்டாக கிருதுமால் நதி புறக்கணிப்பால் விவசாயிகள் கொதிப்பு

வைகையில் நீர் திறக்கக்கோரி போராட்டம் மதுரை, டிச.9   வைகை அணையிலிருந்து கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கக்கோரி, மதுரை விரகனூர் அருகே நான்கு வழிச்சாலையில் ஆயிரக்கணக் கான விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வைகை அணையில் இருந்து கிருதுமால் நதிக்கு 60 ஆண்டு களுக்கு முன்பு தண்ணீர் திறக்கப் பட்டது. இதன்மூலம் மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங் களில் 200க்கும் அதிகமான கிராமங்களில், 2....... மேலும்

09 டிசம்பர் 2018 17:20:05

புயல் பாதித்த பகுதிகளில் கல்விக் கட்டணங்களை அரசே ஏற்க வேண்டும்

புயல் பாதித்த பகுதிகளில் கல்விக் கட்டணங்களை அரசே ஏற்க வேண்டும்

- கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்- சென்னை, டிச.9 புயல் பாதித்த மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்விக் கட்டணங்களை அரசே ஏற்று, செலுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: கஜா புயல் வீசி நாள்கள் பல கடந்து விட்டன. இன்னமும் சுமுகமான நிலையை உரு வாக்க இந்த அரசால் முடியவில்லை. புயலுக்கு முன்னரே, முன்னெச்சரிக்கை....... மேலும்

09 டிசம்பர் 2018 17:02:05

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முடி மாற்று அறுவை சிகிச்சை தொடக்கம்

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முடி மாற்று அறுவை சிகிச்சை தொடக்கம்

சென்னை, டிச. 9 தீக்காயம், விபத்து மற்றும் அமிலங்களால் ஏற்படும் காயங்களால் முடியை இழந்தவர்களுக்கு முடிமாற்று அறுவைச் சிகிச்சை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை முதல் முறை யாக நடைபெற்றது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கை ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறை செயல்பட்டு வருகிறது. இத்துறையின் கீழ் பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விபத்து, தீக்காயம் மற்றும் பல்வேறு காரணங்களால் தங்களின் முடி களை இழந்து....... மேலும்

09 டிசம்பர் 2018 15:55:03

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தரத் தலைவரை நியமிக்க உத்தரவிடுக!

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தரத் தலைவரை நியமிக்க உத்தரவிடுக!

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு சென்னை, டிச.9- காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு சுதந்திரமாக செயல்படும் நிரந் தரத் தலைவரை நியமிக்க உத் தரவிடுமாறு, உச்சநீதிமன் றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.காவிரி நதி நீரை பங்கீடு செய்து கொள் வதற்காக புதிய செயல் திட்டம் ஒன்றை உருவாக்க உச்சநீதி மன்றம் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதை ஏற்று மத்தியஅரசு, கடந்த ஜூலை மாதம் 6 ஆம் தேதி....... மேலும்

09 டிசம்பர் 2018 15:55:03

எஸ்சி, எஸ்டி கல்வி உதவித்தொகை: மாணவர்களுக்கு ரூ.822.91 கோடியை 2 மாதத்தில் வழங்க வேண்டும்

எஸ்சி, எஸ்டி கல்வி உதவித்தொகை: மாணவர்களுக்கு ரூ.822.91 கோடியை 2 மாதத்தில் வழங்க வேண்டும்

மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை, டிச.9  தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான நிதி 822.91 கோடியை 2 மாதங்களுக்குள் தமிழக அரசுக்கு தரவேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வரு கிறது. இந்த கல்வி உதவித்தொகை கடந்த இரண்டு ஆண்டுகளாக....... மேலும்

09 டிசம்பர் 2018 15:54:03

தஞ்சை பெரிய கோயிலில் தனியார் தியானப் பயிற்சிக்கு உயர்நீதிமன்றம் தடை

தஞ்சை பெரிய கோயிலில் தனியார் தியானப் பயிற்சிக்கு உயர்நீதிமன்றம் தடை

மதுரை, டிச.8  தஞ்சை பெரிய கோயிலில் வாழும் கலை அமைப்பு சார்பில் நடைபெற இருந்த தியானப் பயிற்சிக்கு தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. வாழும்கலை அமைப்பு சார்பில், அதன் நிறுவனர் ரவிசங்கர், தஞ்சை பெரிய கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை மாலை வரை தியான நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தார். இதையடுத்து, கோயில் வளாகத்தில் பெரிய பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இது மிகப் பெரிய விதிமீறல், ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த,....... மேலும்

08 டிசம்பர் 2018 15:41:03

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியான விவகாரம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில்  13 பேர் பலியான விவகாரம்

சிபிஅய் விசாரணை நடத்த தடை இல்லை: உச்சநீதிமன்றம் புதுடில்லி, டிச.8- தூத் துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிபிஅய் விசா ரணை நடத்துவதற்குத் தடை விதிக்க உச்சநீதி மன்றம் மறுத்துவிட்டது.ஸ்டெர் லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலி யுறுத்தி தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் போது கடந்தமே 22, 23 தேதிகளில் காவல் துறை யினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயத்துடன்....... மேலும்

08 டிசம்பர் 2018 15:33:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை, மார்ச் 8 சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவ ரம் வருமாறு:-

கேள்வி:- தமிழ் மொழியை அழிப்பதற்கா கவே திராவிடம் என்ற சொல்லை பெரியார் கொண்டு வந்தார். தமிழ் என்ற சனியனே இருக்க கூடாது என்று பெரியார் பேசியதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக எச்.ராஜா கூறி இருக்கிறாரே?

பதில்:- அந்த மாதிரி எந்த ஆதா ரமும் இல்லை. ஒருவர் மலிவான விளம் பரத்துக்காக இந்த மாதிரி கூற்றுகளை தயவு செய்து சொல்லக் கூடாது. இதை தமிழ் மக்கள் நம்பக் கூடாது.

எனவே தமிழை அவமதித்து, தமிழை கேவலப்படுத்துகிற எந்த செயலையும் எந்த நிலையிலும் அரசு ஏற்றுக் கொள்ளாது. அது யாராக இருந்தாலும், எவராக இருந்தாலும் சரி, உள்ள பிடிச்சி போட வேண்டிய ஆள்தான் அவர்.

இந்த மாதிரி ஒரு தவறான தகவல் கொடுத்து மக்களை திசை திருப்பு கின்ற வேலையில், மக் களை திசை மாற்றி அதன் மூலம் தமிழ் நாட்டில் ஒரு வன்முறை கலாச்சா ரத்தை உருவாக்க வேண் டும் என்று நினைப்பவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். அவர் சிறைக்குப் போவது நிச்சயம். கண்டிப் பாக உள்ளே பிடிச்சு போடுவோம்.

நேற்றைய சம்பவங்களுக்கு எச்.ராஜா வருத்தம் தெரிவித்தார். டுவிட்டரில் வருத்தம் தெரிவித்தார். இப்போது அவர் மீண்டும் தேவை யில்லாமல் பேசுகிறார். எனவே ராஜா வீட்டு பிள்ளையாக இருந்தாலும் சரி, அது எந்த ராஜாவாக இருந்தாலும் சரி சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். எனவே சட்டம் தன் கடமையை செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெரியார் சிலை உடைப்பு : தமிழகத்தை அவமதிப்பது மட்டும் கிடையாது, தேசத்தையே அவமதிப்பது : மல்லிகார்ஜுன கார்கே

புதுடில்லி, மார்ச் 8 வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நேற்று முன்தினம் பெரியார் சிலை உடைக் கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ் விவகாரத்திற்கு காங் கிரஸ் கடும் கண்ட னத்தை தெரிவித்து உள் ளது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டில்லி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தி யாளர்களிடம் பேசினார்.

கார்கே பேசுகையில், பாரதீய ஜனதா தொண்டர்கள் நாடு முழு வதும் குண்டர் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளார்கள். சமூக நீதிக்காக பணியாற்றிய பெரியாரின் சிலை உடைப்பு என்பது தமிழகத்தை அவமதிப்பது கிடையாது, மொத்த தேசத்தையே அவமதிப்பது. இதற்கு நாங்கள் கடும் கண்டனத்தை தெரி விக்கிறோம். பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளின் சின்னங்கள் மீதான இதுபோன்ற தாக்கு தல்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட் டோம், என கூறிஉள்ளார். இந்த சம்பவங்கள் அனைத்தும் பிற கொள் கைகள் மீதான பா.ஜன தாவின் சகிப்புத்தன்மை இல்லாமையை காட்டு கிறது எனவும் காங்கிரசு விமர்சனம் செய்து உள்ளது.

'ஜனநாயகம் என்பது பல சிந் தனையாளர்களும் ஒன்றுபடுவதற் கான இடமாகும். இருப்பினும்,

பா.ஜனதா பிறரது கொள்கைகளுக்கு எதிராக சகிப்புத்தன்மை இல்லா மையை காட்டிவருகிறது, என்ற மல்லி கார்ஜுன கார்கே, பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் இந்தியாவில் அவர்களுடைய கொள் கையைத் திணிக்க முயற்சி செய்து வருகின்றன, அதற்கான செயல்களின் ஒருபகுதிதான் இந்த சிலை உடைப்பு தாக்குதல்களாகும் என கூறி உள்ளார்.

முதல்வர்கள் கண்டனம்

பெரியாரை பார்த்து பாஜகவினர்
ஏன் பயப்படுகின்றனர்?
கருநாடக முதல்வர் கேள்வி


பெரியார் சிலை சேதப்படுத் தப்பட்டது குறித்து கருநாடக மாநில முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பெரியாரின் சிலையை உடைத்த பா.ஜ.க.வினரின் காட்டு மிராண்டித்தனத்தைக் கண்டு நான் அதிர்ச்சியடைந் தேன். ஏன் பா.ஜ.க.வினர் புரட்சிகர சமூக சீர்த்திருத்தவாதி பெரி யாரைக் கண்டு அஞ்சுகிறார்கள்? சாதி முறைகளால் அல்லலுற்ற பொதுமக்களுக்கு சுயமரியாதை வழங் கியவர் பெரியார். பா.ஜ.க.வின் வகுப்பு வாத பிரிவினை களை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழராக இருக்கும் யாரும்

பெரியார் சிலையை உடைக்கமாட்டார்கள்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

தமிழராக இருக்கும் யாரும் பெரியார் சிலையை உடைக்க மாட்டார்கள் என, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர் பாக ட்விட்டரில் கருத்து தெரி வித்துள்ள அவர், இந்து சமூ கத்தை பிரதிநிதித்துவம் செய்வ தற்காக பாஜக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவ தாகவும், வாக்குகளை பெறுவதற்காகவும், அதிகா ரத்தைக் கைப்பற்றுவதற்கும் அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

முதல்வர் நாராயணசாமி

பெரியார் குறித்த எச்.ராஜா வின் பேச்சு, காவிரி விவக £ரத்தை திசை திருப்புவதற் காகத்தான் என, புதுச்சேரி முதல்வர் நாரா யணசாமி தெரிவித்துள்ளார்.
டில்லியில் புதுச்சேரி இல் லத்தில் செய்தியாளர்களை சந் தித்த அவர், பெரியார் சிலையை சேதப் படுத்திய வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நாட்டில் இனக்கலவரத்தை தூண்டி பாஜக ஆதாயம் தேட முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலதாமதம் செய்வதால், விவசாயி களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நீரவ் மோடி விவகாரத்தை திசை திருப்பவே கார்த்தி சிதம் பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் நாராயணசாமி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner