முன்பு அடுத்து Page:

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் விருதுகள்: ஏப்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை, பிப்.21 தமிழக அரசின் சுற்றுச்சூழல் விருது களுக்கு தனிநபர், கல்வி நிறுவ னங்கள் வரும் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தமிழ்நாடு சுற் றுச்சூழல் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் சுற்றுச்சூழல் கல்வி, விழிப்புணர்வு, பாது காப்பு,  மேலாண்மை, ஆராய்ச் சிப் பணிகளில் ஈடுபடும் கல்வி நிறுவனங்கள், தனிநபர், தன்னார்வத் தொண்டு நிறு வனங்களுக்கு 2018-ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் விருது கள் வழங்கப்பட உள்ளன. சுற்றுச்சூழல்....... மேலும்

21 பிப்ரவரி 2019 15:03:03

8ஆம் வகுப்புவரை இடைநிற்றல் இல்லை எனும் அரசின் கொள்கையை கைவிட வேண்டாம்

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்தல் சென்னை, பிப்.21 எட்டாம் வகுப்பு வரை இடைநிற்றல் இல்லை (No Detention Policy) என்ற அரசின் கொள்கையை கைவிட வேண்டாம் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. பொதுப்பள்ளிக்கான மாநில மேடை வெளியிட்டுள்ள அறிக்கை: எட்டாம் வகுப்பு வரை இடைநிற்றல் இல்லை (No Detention Policy) என்பது தமிழ் நாடு அரசின் கொள்கை முடிவாக நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது. மத்தியக் கல்வி ஆலோசனைக் குழுமத்தின்....... மேலும்

21 பிப்ரவரி 2019 15:03:03

தமிழ்ப் பல்கலை.யில் ஓலைச்சுவடிகள் மின் பதிவேற்றம்

தமிழ்ப் பல்கலை.யில் ஓலைச்சுவடிகள் மின் பதிவேற்றம்

சென்னை, பிப்.21  தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஓலைச் சுவடிகளை மின் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெறுகிறது என்றார் துணைவேந்தர் கோ. பாலசுப்ரமணியன். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஓலைச்சுவடித் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய சுவடியியல் பயிலரங்கத் தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது: இன்றைக்குத் தமிழகத்தில் இருக்கும் சுவடிச் சேகரிப்பு மய்யங்களில் தமிழ்ப் பல்கலைக்கழகம் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.  இப்பல்கலைக்கழகம் சுமார் 8,000 ஓலைச்சுவடிகளையும், ஆயிரத்துக்கும் அதிகமான ஆவணச் சுருணைகளையும் கொண்டுள்ளது. இங்கு மின்....... மேலும்

21 பிப்ரவரி 2019 15:00:03

மோடியின் நண்பர் அதானியின் மருத்துவமனையில்மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உ…

மோடியின் நண்பர் அதானியின் மருத்துவமனையில்மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு

குஜராத் சட்டமன்றத்தில் துணை முதல்வர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் காந்திநகர், பிப்.21 குஜராத் மாநிலத்தில் தனியார் மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டு களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தார்கள் என்று குஜராத் மாநில சட்டமன்றத்தில் துணை முதல்வர் நிதின் பாடீல் கூறியுள்ளார். காங்கிரசு கட்சி சட்டமன்ற உறுப்பினர்  சங்கோத்பென் அரேதியா கேள்வி நேரத்தின்போது எழுத்துமூலமாக கேட்ட கேள்விக்கு அம்மாநில துணை முதல்வர் பதில் அளித்தார். குஜராத் மாநிலத்தில் பூஜ் பகுதியில் அதானி பவுண்டேஷன் நடத்திவருகின்ற....... மேலும்

21 பிப்ரவரி 2019 15:00:03

ரஷ்ய கப்பல் விபத்தில் காணாமல் போன இந்தியர்கள்: வெளியுறவுத்துறை விளக்கம் அளிக்க வேண்டும்

ரஷ்ய கப்பல் விபத்தில் காணாமல் போன இந்தியர்கள்:  வெளியுறவுத்துறை விளக்கம் அளிக்க வேண்டும்

உயர்நீதிமன்றம் உத்தரவு மதுரை, பிப்.21 ரஷ்ய கப்பல் விபத்தில் காணாமல் போன இந்தியர்களைக் கண்டுபிடிப் பது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்டுள் ளது. இந்தியாவிலிருந்து ரஷ்யா வுக்கு எரிவாயு ஏற்றி சென்ற தனியார் கப்பல் தீ விபத்தில், அதில் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் காணாமல் போனதாகவும், அவர்களை மீட்க உத்தரவிட வும் மனுதாரர் கோரியிருந்தார். விசாரணையின் போது மத்திய அரசின்....... மேலும்

21 பிப்ரவரி 2019 14:58:02

மலேசியாவில் கொத்தடிமையாக தவித்த 49 தொழிலாளர்கள் மீட்பு

கனிமொழி எம்.பி. முயற்சி சென்னை, பிப்.21  மலேசியா வில் கொத்தடிமைகளாக சிக்கித் தவித்த, தமிழகத்தைச் சேர்ந்த, 49 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, நேற்று, சென் னை வந்தடைந்தனர். திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தைச் சேர்ந்த, 49 தொழிலாளர்கள், நான்கு மாதங்களுக்கு முன், தனியார் ஏஜன்சி மூலமாக, மலேசியாவிற்கு வேலைக்கு சென்றனர். அங்கு, கொத் தடி மையாக வைக்கப்பட்டு உள்ளதாக, தமிழக அரசு மற்றும் தி.மு.க., - எம்.பி., கனிமொழியிடம், அவர்களின் குடும்பத்தினர்....... மேலும்

21 பிப்ரவரி 2019 14:57:02

ஒரு வாரத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் போராட்டம்: திமுக சட்டமன்ற உறுப்பினர் அறிவிப…

ஆலந்தூர், பிப்.21 சென்னை மாநகராட்சி 168ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சோழிங்க நல்லூர் திமுக சட்டமன்ற உறுப் பினர் அரவிந்த் ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் உள்ளகரம், ஆயில் மில் பகுதி, ராஜா ரத்தினம் தெரு, பொன்னப்பர் தெரு, உஷார் நகர் போன்ற பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாய், சாலைகள், குப்பை கிடங்குகள் போன்ற வற்றை மாநகராட்சி அதிகாரி களுடன் பார்வையிட்டார். அங்கு சேதமடைந்த கால் வாய்களையும், கழிவுகளையும் உடனே அகற்றுமாறும்,....... மேலும்

21 பிப்ரவரி 2019 14:54:02

மேக்கேதாட்டு அணை: கருநாடக அரசின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு …

சென்னை, பிப்.21  மேக்கேதாட்டு அணை தொடர்பாக கருநாடக அரசு தாக்கல் செய்துள்ள விரிவான திட்ட அறிக் கையை (டிபிஆர்) நிராகரிக்க வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மேக்கேதாட்டு விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்க கரு நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனு மதிக்குத் தடை கோரி தமிழக அரசு கடந்த ஆண்டு இறுதியில் மனுக்களைத் தாக்கல் செய்தது. மேலும், மத்திய அரசுக்கும்,....... மேலும்

21 பிப்ரவரி 2019 14:53:02

மக்களவைத் தேர்தல்: திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள்

மக்களவைத் தேர்தல்: திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள்

சென்னை, பிப்.21 மக்களவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி இறுதி செய் யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளதாக திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் நேற்று (20.2.2019)அதிகாரபூர்வமாக அறிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் தளபதி மு.க.ஸ்டாலின் கூறியதாவது: இன்னும் சில கட்சிகளுடன்  கூட்டணி பேசி முடிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். அப்பணிகள் முடிந்தபிறகு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இதற்காக அமைக்கப்பட்டுள்ள இரு கட்சிக் குழுவினரும் கலந்து....... மேலும்

21 பிப்ரவரி 2019 14:50:02

டி.என்.பி.எஸ்.சி. சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை, பிப்.21  தடயவியல் துறையில் தொழில்நுட்ப உதவி யாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழக தடய அறிவியல் துறையில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 27ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க வேண்டியவர்களின் பெயர்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சான்றிதழ் சரிபார்ப்பில் அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்காவிட்டால் மறுவாய்ப்பு அளிக்கப் படாது........ மேலும்

21 பிப்ரவரி 2019 14:48:02

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.9  நீட் தேர்வில் 309 மதிப்பெண் பெற்றும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலையூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.  தாம்பரம் அடுத்த சேலையூர், மகாலட்சுமி நகர், புறநானூறு தெருவை சேர்ந்தவர் எட்வர்டு. இவர், தாம்பரம் கோர்ட்டில் வழக்குரைஞராக உள்ளார். இவரது மனைவி சுஜாதா. இவர், பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியையாக உள்ளார். இவரது மகள் ஏஞ்சலின் சுருதி (19). செம்மஞ்சேரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், 2 முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். கடந்த முறை எழுதிய நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றிருந்தார்.  இந்த ஆண்டும் நீட் தேர்வில் 309 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இருந்தபோதிலும் அவருக்கு டாக்டர் சீட் கிடைக்கவில்லை.

தனியார் மருத்துவ கல்லூயில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் ரூ.12 லட்சம் பணம் கேட்டுள் ளனர். இந்த பணத்தை கட்ட முடி யாததால் பொறியியல் கல்லூரியில் மாணவி சேர்ந்துள் ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் படுக்கைய றையில் முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடிக்கொண்டு, கழுத்தை செல்போன் சார்ஜர் வயரால் இறுக்கிய நிலையில் ஏஞ்சலின் சுருதி இறந்து கிடந்தார். இதை பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். பின்னர் சம்பவம் குறித்து சேலையூர் காவல் நிலைய காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்த தில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் தனியார் மருத்துவ கல்லூரியில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் ரூ.12 லட்சம் பணம் கட்டச் சொல்லி சீட் கிடைத்ததாகவும் பணம் கட்ட முடியாததால் இன்ஜினியரிங் கல்லூரியில் மாணவி சேர்ந்த தாகவும் மருத்துவராக முடியவில் லையே என்ற மனவேதனையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.  இதனை தொடர்ந்து மாணவி உடலை பிரேத பரி சோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். பின்னர் உடல் பரிசோதனைக்கு பிறகு உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மருத்துவராக வேண்டும் என்பதே கனவு

சுருதி பற்றி அவரது உறவி னர்கள் கூறியதாவது: சிறு வயதில் இருந்தே மருத்து வராக வேண்டும் என்ற எண் ணத்தில் இருந்து வந்தாள் சுருதி. இதற்காக நன்றாக படித்து வந்தாள். சிபிஎஸ்இ பள்ளியில் தான் சுருதி பிளஸ்2 படித்தார். கடந்த முறை நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாக வந்ததால் மனமுடைந்த சுருதி அதனை பொருட்படுத்தாமல் மீண்டும் படித்து நீட்டில் தேர்ச்சி பெற வேண்டும் என தனியார் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து நன்றாக படித்து இந்த முறை நீட் தேர்வெழுதி 309 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால், அரசு ஒதுக் கீட்டில் மருத்துவ சீட் கிடைக் காததால் தனியார் மருத்துவ கல்லூரியில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சீட் வாங்க முயற்சி செய்துள்ளனர் பெற்றோர். ஆனால் அங்கு 12 லட்சம் ரூபாய் பணம் கேட்டதால் பணம் புரட்ட முடியவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளார். அதன் பின் மனஉளைச்சலில் காணப் பட்டு வந்த சுருதி நீட் தேர்வில் மதிப்பெண் பெற்றும் மருத்து வராக முடியவில்லையே என்ற வேதனையில் இந்த முடிவை எடுத்துவிட்டார் என தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner