முன்பு அடுத்து Page:

சிறந்து விளங்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வெளிநாடுகளில் கல்விச் சுற்றுலா

  சென்னை, நவ. 16- வெளிநாடுகளின் கலாச்சாரம், கல்வி, தொழில் நுட்பத்தை அறிவதற்காக அரசுப் பள்ளிகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் பின்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா அழைத் துச் செல்லப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். இதுகுறித்து அமைச்சர் பேசிய தாவது: அரசுப் பள்ளிகளில் டிசம்பர் மாத இறுதிக்குள் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில்....... மேலும்

16 நவம்பர் 2018 15:00:03

அரசாணை நகலை எரித்து அரசு ஊழியர்கள் போராட்டம்

அரசாணை நகலை எரித்து  அரசு ஊழியர்கள் போராட்டம்

தேனி, நவ. 16- தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்கள் உள்ளன. நீண்ட காலமாக காலிப் பணியிடங் கள் நிரப்பப்படாமல் உள்ளது. காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அரசு பணியிடங் களை குறைக்கும் வகையிலும், புதிய பணியிடங்களை உருவாக் காத வகையிலும் அரசாணை (எண் 56) வெளியிடப்பட்டுள்ள தாக அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த அரசாணை....... மேலும்

16 நவம்பர் 2018 14:33:02

கலைஞர் சிலை: டிச.16-இல் அண்ணா அறிவாலயத்தில் திறப்பு

கலைஞர் சிலை: டிச.16-இல் அண்ணா அறிவாலயத்தில் திறப்பு

சென்னை, நவ. 16-  முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞரின் முழு உருவச் வெண்கலச் சிலை அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16-ஆம் தேதி திறக்கப்படும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. புனரமைக்கப்பட்ட அண்ணாவின் சிலையும் அதே நாளில் நிறுவப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கலை ஞர் சிலையை டிசம்பர் 16-ஆம் தேதி இந்தியத் தலைவர்கள் பங்கேற்று திறந்து வைக்க உள்ளனர். 5....... மேலும்

16 நவம்பர் 2018 14:33:02

போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி

போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி

நவ.23-க்குள் விண்ணப்பிக்கலாம் சென்னை, நவ.16  சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகம் சார்பில் நடைபெறும் போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புக்கு நவம்பர் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண் முகசுந்தரம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வப் பயிலும் வட்டத் தின் மூலம் அனைத்துப் போட் டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படு கிறது. தற்போது....... மேலும்

16 நவம்பர் 2018 14:33:02

இலங்கை சிறையிலிருந்து தமிழக மீனவர்கள் 22 பேர் விடுதலை

  மதுரை, நவ. 16- இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 22 மீனவர்கள் விமானம் மூலம் வியாழக்கிழமை மது ரைக்கு வந்து சேர்ந்தனர். இலங்கை அரசால் விடு விக்கப்பட்ட 22 மீனவர்களை மீன்வளத்துறை (மண்டபம்) உதவி இயக்குநர் கோபிநாத் தலைமையிலான குழுவினர் இலங்கையிலிருந்து விமானம் மூலம் மதுரை அழைத்து வந்தனர். இதில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் பகுதியைச் சேர்ந்த ராஜா, ராஜாராமன், பாலையா, லட்சு மணன், மாரிமுத்து,....... மேலும்

16 நவம்பர் 2018 14:33:02

மு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு:

மு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு:

மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரண்டு பாஜகவை வீழ்த்துவோம் எனப் பேட்டி சென்னை, நவ. 14- சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து, ஸ்டாலினை மார்க்சிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று (13.11.2018) சந்தித்துப் பேசினார். பின்னர், அவர் கருத்து வேறு பாடுகளை மறந்து மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில்  திரண்டு பாஜகவை வீழ்த்து வோம் என்றார்.  நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொள்ள தேசிய அளவில் அரசியல் கட் சிகள் தயாராகி வருகிறது. அதே....... மேலும்

14 நவம்பர் 2018 17:28:05

தீவிரமடைகிறது 'கஜா' புயல்

தீவிரமடைகிறது 'கஜா' புயல்

சென்னை, நவ.14 வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள கஜா புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் செவ்வாய்க் கிழமை தெரிவித்தது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது: மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய மத் திய கிழக்கு மற்றும் தெற்கு வங்கக்கடலில் நிலைகொண்டி....... மேலும்

14 நவம்பர் 2018 17:28:05

கீழடியில் கிடைத்த பொருட்கள் காட்சிப்படுத்தும் பணி தொடக்கம்: அமைச்சர் தகவல்

கீழடியில் கிடைத்த பொருட்கள் காட்சிப்படுத்தும் பணி தொடக்கம்: அமைச்சர் தகவல்

சென்னை, நவ. 14- கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக் கப்பட்ட 14,500 பொருட்களை காட்சிப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளதாக அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார். தொல்லியல் துறை சார்பில் புராதன நினைவுச் சின்னங்கள் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு சான்றிதழ் பயிற்சியின் தொடக்க விழா சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக கலையரங்கில் புதன்கிழமை நடந்தது. விழாவுக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர் க.பாண்டியராஜன் கூறியதாவது: கீழடி அகழ்வாராய்ச்சியில் 14,500 பொருட்கள்....... மேலும்

14 நவம்பர் 2018 17:28:05

அரசுப்பள்ளி போட்டித் தேர்வுகளில் வெற்றிறெ ஏன் ஆங்கில பேச்சுப்பயிற்சி அளிக்கக்கூடாது?

அரசுப்பள்ளி போட்டித் தேர்வுகளில் வெற்றிறெ ஏன் ஆங்கில பேச்சுப்பயிற்சி அளிக்கக்கூடாது?

உயர் நீதிமன்றம் கேள்வி சென்னை, நவ. 14- போட்டித் தேர்வுகளில் அரசுப்பள்ளி மாணவர்கள் வெற்றிப்பெற ஏன் அவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப்பயிற்சி அளிக்கக் கூடாது, என்று கேள்வி எழுப் பியுள்ள உயர் நீதிமன்றம் அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் தமிழ் வழி பள்ளிகளில் ஆங்கில பயிற்சி வகுப்புகளை அறிமுகம் செய்ய கோரியும், மழலையர் வகுப்புகளை துவங்க கோரியும் திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்....... மேலும்

14 நவம்பர் 2018 17:28:05

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் கல்வி, மருத்துவத்துக்காக 8 பேருக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி: மு.க…

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் கல்வி, மருத்துவத்துக்காக 8 பேருக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, நவ. 14- கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் கல்வி, மருத்துவத் திற்காக 8 பேருக்கு தலா 25 ஆயிரம் வீதம்  ரூ.2 லட்சம் நிதி உதவியை மு.க.ஸ்டாலின் வழங்கினார். கலைஞர் கருணாநிதி அறக் கட்டளைக்காக கலைஞர் தந்த ரூ.5 கோடியை வங்கியில் வைப்பு நிதியாக போட்டு வட் டித் தொகையில் மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு ....... மேலும்

14 நவம்பர் 2018 17:28:05

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.10- ஸ்டெர்லைட் ஆலையை திறக்கஅதிமுக அரசும் மத்திய பாஜகஅரசும் கைகோர்த்து செயல்படுகின்றன என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-“தூத்துக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும்சுற்றுச்சூழல் மாசுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமில்லை” என்று மத்திய நீர்வளத்துறை, தன்னிச்சையாகத் தனது கட்டுப் பாட்டில் உள்ள நிலத்தடி நீர் வாரியத்தின் மூலம் ஒரு நிலத்தடி நீர் ஆய்வினை நடத்தி தூத்துக்குடி பொதுமக்களின் மன நிலையை அறிந்து கொள்ளாமலும், தமிழக மக்களைக் கோபப்படுத்தும் வகையிலும், வெளியிட்டிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு,அது தொடர்பான வழக்குகள் உச்சநீதி மன்றத்திலும், உயர்நீதி மன்றத்திலும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திலும் நிலுவையில் இருக்கும் போது தனியார் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக அந்த ஆலையை திறப்பதற்கு துணை போகும் வகையில், இப்படியொரு ஆய்வை மேற்கொண்டிருப்பது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும். ஒரு தனியார் கார்ப் பரேட் ஆலைக்காக,ஏழரைக்கோடி மக்களின் நலனை, மத்திய பா.ஜ.க. அரசு தூக்கியெறிந்து செயல்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது.

கபட நாடகத்தை அரங்கேற்றி....

மத்திய நிலத்தடி நீர் வாரியம் தூத்துக்குடி பகுதிகளில் நீரினைஆய்வு செய்யும் போது, உளவுத்துறை மூலமாக அறிந்திருந்தும், அதை வேடிக்கை பார்த்து விட்டு, இப் போது மத்திய அரசின் அறிக்கைவெளி வந்த பிறகு ஏதோ தங்களுக்குத்தெரியாமல் ஆய்வு நடந்து விட்டதுபோல் ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றி, மாநில தலைமைச் செயலாளர் பெயரில் அந்த அறிக்கையை எதிர்க்க வைத் திருப்பது அதிமுக அரசும்,- மத்திய பாஜக அரசும் தனியார் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதில், உள் நோக்கத்துடன் திரை மறைவுக் கூட்டணி வைத்துள்ளன என்பது தெரிகிறது.

ஜனநாயக முறையில் போராட்டம்

ஏற்கெனவே, அந்த தனியார் ஆலையை மூடக்கோரி ஜனநாயக முறையில் போராட்டம் நடத்திய அப்பாவி மக்களில் 13 பேரை கொடூரமான முறையில் சுட்டுக் கொன்றதுஅ.தி.மு.க அரசு. “அமைச்சரவையைக் கூட்டி, கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுங்கள்” என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியும் கூட, இந்த அரசு உயர்நீதிமன்றத்தின் அந்த அறிவுரையை மதிக்கவில்லை.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் முறையாக இந்த வழக்கில் வாதங்களைஎடுத்து வைக்காமல், “ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாக அலுவலகத்தைத் திறப்பதற்கு’’ துணை போனது அதிமுக அரசு.தமிழகத்தில் எத்தனையோ மூத்த உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருந்தும், வெளி மாநிலத்திலிருந்து ஓய்வு பெற்ற ஒரு நீதிபதியை “ஆய்வு குழுவின் தலைவராக” நியமிப்பதற்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இடமளித்து மவுனம் காத்தது தமிழ்நாடு அரசு.ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மாநில அரசின் பிரதிநிதிகளே இல்லாமல், ஒரு கமிட்டியை, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைப்பதையும் கைகட்டி நின்றுவேடிக்கை பார்த்தது அ.தி.மு.க அரசு. இப்போது மத்திய அரசு நடத்திய“நீர் ஆய்வுக்கும்” உறுதுணையாக இருந்து விட்டு, திடீரென்று தலைமைச் செயலாளர் மூல மாக “எதிர்ப்புக்கடிதம்” எழுத வைத்திருப்பது, தூத்துக்குடி மக்களை மட்டுமல்ல, தமிழக மக்களையும் ஏமாற்றித் திசை திருப்பும் வேலை.மத்தியில் உள்ள பாஜக அரசும், மாநில அதிமுக அரசும் ஸ்டெர்லைட்ஆலையைத் திறப்ப தற்கு கை கோர்த்து “கடமை உணர்வுடன்” செயல்படுகின்றன என்பது உறுதியாகிறது.

ஆகவே, சுற்றுப்புறச் சூழலுக்கும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளுக்கும் காரணமாக இருக்கும் ஸ்டெர்லைட் ஆலை குறித்த “அதிகாரத்துடன் ஆணவத்தையும் துணைக்கு அழைத்துக் கொண்டு” தயாரித்துள்ள ஒரு “நீர் ஆய்வு” அறிக்கையை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner