முன்பு அடுத்து Page:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் தொழிலாளர்கள் டிச.7இல் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் தொழிலாளர்கள் டிச.7இல் ஆர்ப்பாட்டம்

சென்னை, நவ. 13- தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் செயலாளர் சிங்கார ரத்தினசபாபதி கூறியதாவது: தமிழ்நாடு மின்வாரியத்தில், 40 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இதனால் பணிகளை செய்வதில் பிரச்னைகள் ஏற்படுகிறது. மின் உற்பத்தி கரி கிடைப்பதில் தாமதம் ஆகிறது. எழுத்துப்பிரிவில், 10,000 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதேபோல் மத்திய அரசு கொண்டு வரும் மின்சாரச் சட்டத்தால் மேலும் பல பிரச்னைகள் ஏற்படும். இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளை கண்டித்து, 17ஆம் தொழிற்சங்கங்கள்....... மேலும்

13 நவம்பர் 2018 16:39:04

15ஆம்தேதி கடலூர்-பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும்

15ஆம்தேதி கடலூர்-பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும்

ஏழு மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து: வானிலை ஆய்வு மய்யம் தகவல் சென்னை, நவ. 13- சென்னைக்கு வட கிழக்கே 860 கிலோ மீட்டர் தூரத்தில் நேற்று முன்தினம் மய்யம் கொண்ட புயல் சென்னை -நாகை இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக் கப்பட்டது. இப்போது திசை மாறியுள்ள இந்த புயல் நாகப்பட்டினத்திற்கு வட கிழக்கே 800....... மேலும்

13 நவம்பர் 2018 16:39:04

தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில் முறைகேடு சென்னை, நவ. 13- ஆதிதிராவிட மாணவர்களுக்கு வழங்கப் படும் கல்வி உதவித்தொகையில் 17 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றதாக தொட ரப்பட்ட வழக்கில், ஆதிதிரா விட நலத்துறை செயலர் பதில ளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்....... மேலும்

13 நவம்பர் 2018 16:39:04

அழகப்பா பல்கலைக் கழக பாடத் திட்டத்தில்

அழகப்பா பல்கலைக் கழக பாடத் திட்டத்தில்

  அண்ணாவின் நாடகம் தொடர்ந்து நீடிக்கும் : பதிவாளர் அறிவிப்பு காரைக்குடி, நவ.13 காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் பகுதி 1 தமிழ் பாடத் திட்டத்தில் எந்தவித மாறுதலுமின்றி அறிஞர் அண்ணாவின் 'நீதி தேவன் மயக்கம்' நாடகம்  தொடர்ந்து நீடிக்கும் என இப்பல் கலைக் கழக பதிவாளர் பேராசிரியர் ஹா. குருமல்லேஷ் பிரபு  தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று (12.11.2018) வெளியிட்டுள்ள பத்திரிக்கைச் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 2017-2020ஆம் கல்வியாண்டிற்குரிய பகுதி 1....... மேலும்

13 நவம்பர் 2018 15:14:03

எஸ்.அய்., தேர்வு: தமிழில் நடத்த வலியுறுத்தல்

எஸ்.அய்., தேர்வு:  தமிழில் நடத்த வலியுறுத்தல்

  சிவகங்கை, நவ. 13- ‘காவல்துறையினர் விரல்ரேகை, எஸ்.அய்., தேர்வை தமிழில் நடத்த வேண்டும்‘ என, விண்ணப்பதாரர்கள் எதிர்பார்க்கின்றனர். மாநிலம் முழுவதும், விரல்ரேகை பிரிவில், 202 எஸ்.அய்., பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எழுத்துத் தேர்வுக்கு, அக்., 13 வரை, ‘ஆன்லைனில்’ விண்ணப் பங்கள் பெறப்பட்டன. அறிவியல் பட்டம் பெற்றோர் விண்ணப் பித்தனர். இதில், காவல்துறையினர் விண்ணப்பித்தனர். இதுவரை தேர்வு தேதி அறிவிக்கவில்லை.சமீபத்தில், டெக்னிக்கல், எஸ். அய்.,க்கான எழுத்து தேர்வு, ஆங்கிலத்தில் நடத்தப்பட்டது; பலர்....... மேலும்

13 நவம்பர் 2018 15:14:03

10ஆவது மாநில மாநாடு: தமிழ்நாடு

  தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் அறிவிப்பு சென்னை, நவ. 13- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் 10ஆவது மாநில மாநாட்டிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஜாக்டோ ஜியோ கோரிக்கையை ஏற்கும் அரசியல் கட்சி தலை வர்களை அழைக்க இருப்பதாக மாநில செயலாளர் மீனாட்சி சுந்தரம் அறிவித்துள்ளார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மாநில தலைவர் தியோடர் ராபின்சன் தலைமையில், பொதுச் செய லாளர் மீனாட்சி சுந்தரம், பொரு ளாளர்....... மேலும்

13 நவம்பர் 2018 15:14:03

தலைக்கவசம் விவகாரம்: உயர்நீதிமன்றம் அறிவுரை

தலைக்கவசம் விவகாரம்: உயர்நீதிமன்றம் அறிவுரை

சென்னை, நவ.11  இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், தலைக் கவசம் மற்றும், கார்களில் செல்பவர்கள், சீட் பெல்ட் அணியும் விஷயத்தில், சுய ஒழுக்கம், கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. முக்கிய சாலைகளில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா; வாகனங் களில் அதிவேகமாக செல்பவர்கள், கண்காணிக்கப்படுகின்றனரா என்பதற்கு, அரசு தரப்பு பதில் அளிக்கவும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், கண்டிப்பாக, தலைக்கவசம் அணியவும்,....... மேலும்

13 நவம்பர் 2018 11:17:11

கூட்டணி முயற்சியால் பாஜக பதற்றம்: கனிமொழி

கூட்டணி முயற்சியால் பாஜக பதற்றம்: கனிமொழி

சென்னை, நவ. 11- பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எடுத்து வரும் முயற்சி யால் பாஜக பதற்றமடைந் துள்ளது என்று மாநிலங்க ளவை திமுக குழுத் தலைவர் கனிமொழி கூறினார். பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைப்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டா லினை சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை....... மேலும்

13 நவம்பர் 2018 10:38:10

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலால் 17 பேர் சாவு: சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் தகவல்

சென்னை, நவ. 11 தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலால் நிகழாண் டில் இதுவரை 17 பேர் இறந் துள்ளதாக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதா கிருஷ்ணன் கூறினார். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல், டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் வார்டுகளில் தமிழக சுகாதாரத் துறை முதன் மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ் ணன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். நோய் அறி குறிகளுடன் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம்....... மேலும்

13 நவம்பர் 2018 10:10:10

தமிழகத்தில் 14ஆம் தேதி முதல் கனமழை பெய்யும்

சென்னை, நவ. 11- தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு வடகிழக்கு பரு வமழை தமிழகத்தில் இயல்பை விட 12 சதவீதம் அதிகம் பெய் யும் என்று இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்து உள்ளது. ஆனால் இதுவரை எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. தென் மாவட் டங்களில் ஓரளவு மழை பெய்து உள்ளது. ஆனால் வட....... மேலும்

13 நவம்பர் 2018 10:10:10

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.10 நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து தவறான புள்ளி விவரங்களை பாஜக கூறி வருவதாக முன் னாள் மத்திய அமைச்சரும், காங்கிரசு மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக, பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் சனிக் கிழமை பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, "முந்தைய காங்கிரசு அரசுகளைவிட, இப் போதைய பாஜக ஆட்சியில் தான் நாட்டின் பொருளாதாரம் சிறப்பான நிலையை எட்டி யுள்ளது. இதனை மக்களிடம் பாஜகவினர் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், புள்ளி விவரங்களின் அடிப்படையில் சிதம்பரம் உள்ளிட்ட எதிர்க் கட்சியினரை நாம் நேரடி விவா தத்துக்கு அழைக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் பிடிஅய் செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட் டியில் சிதம்பரம் கூறியதாவது:

கடந்த 1991-ஆம் ஆண்டு நமது நாட்டில் தாராளமயமாக் கல் கொள்கை அறிமுகப்படுத் தப்பட்டது. அதன் பிறகு காங் கிரஸ் தலைமையிலான அய்க் கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கடந்த 2006-&2007 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 10.8 சதவீதமாக இருந்தது. அப்போது மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். இதுதான் நமது நாட்டின் மிக உயரிய பொருளாதார வளர்ச்சி குறியீடு.

இதற்கு முன்பு 1988-&1989ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 10.2 சதவீத மாக இருந்தது. இவை இரண்டு மட்டுமே நாட்டின் பொருளா தாரத்தில் குறிப்பிடத்தக்க சாத னைகள் ஆகும். இது மத்திய புள்ளியியல் அமைப்பு அதி காரப்பூர்வமாக அளித்த தகவல்.

ஆனால், நாட்டின் பொரு ளாதார வளர்ச்சி குறித்து பாஜக வினர் அளிக்கும் தகவல்கள் அதிகாரப்பூர்வ தகவலுக்கு முரணாக உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில்தான் நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத் தியுள்ளோம் என்ற தொனியில் பாஜகவினர் பேசி வருகின் றனர். அவர்கள் எந்த அடிப் படையில் வளர்ச்சி என்று கூறுகிறார்கள் என்பது தெரிய வில்லை. உண்மையில் மத்திய புள்ளியியல் நிறுவனத்தின் அறிக்கைகளை பாஜகவினர் ஏற்கிறார்களா? இல்லையா என்பதை அவர்கள் தெளிவு படுத்த வேண்டும். ஏனெனில் மத்திய புள்ளியியல் நிறுவனம் தான் நாட்டின் நம்பகத்தன்மை வாய்ந்த பொருளாதார விவரங் களை தந்து வருகிறது என்றார் பி.சிதம்பரம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner