முன்பு அடுத்து Page:

தமிழக மீனவர்கள் 200 பேர் ஆந்திராவில் சிறை பிடிப்பு

சென்னை, பிப்.20 சென்னை ஆந்திர கடலோர பகுதிகளில் மீன்பிடிக்க சென்ற, தமிழக மீனவர்கள், 200 பேர், ஆந்திர மீனவர்களால் சிறை பிடிக்கப் பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க நடந்த பேச்சு, தோல்வியில் முடிந்துள்ளது. சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, பிப்., 16ல், 27 விசைப்படகுகளில், 200 மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றனர். ஆந்திர கடலோர பகுதியில் மீன்பிடித் ததாக, 200 பேரை, ஆந்திர மீனவர்கள் சிறை பிடித்துள்ளனர்.சிறை பிடிக்கப்பட்டுள்ளவர்கள், ஆந்திர....... மேலும்

20 பிப்ரவரி 2019 17:15:05

பொதுத் தேர்வுகள்: முன்னேற்பாடுகள் தீவிரம்

சென்னை, பிப்.20 தமிழகத்தில் வரும் மார்ச் முதல் பிளஸ் 2 உள்ளிட்ட வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறவுள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் போதிய கட்டமைப்பு வசதிகள் உள்ள 3,400 பள்ளிகளில் பொதுத் தேர்வு மய்யங்கள் அமைக்கப்படுகின்றன. தேர்வு மய்ய கண் காணிப்பாளர்கள், பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் நியமிக்கும் பணிகள் முடிந்துவிட்டன. தொடர்ந்து தேர்வு மய்யங்களுக்கு விடைத்தாள்கள் அனுப்பும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும்....... மேலும்

20 பிப்ரவரி 2019 17:03:05

விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு: அமைச்சர் தகவல்

சென்னை, பிப்.20 தமிழகத்தில் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட உள் ளதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார் பில் முதலமைச்சர் கோப்பைக் கான மாநில அளவிலான கூடைப்பந்து மற்றும் மேசைப் பந்து விளையாட்டுப் போட்டி தொடக்க விழா டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை,....... மேலும்

20 பிப்ரவரி 2019 17:00:05

அவசர உதவிகளுக்கு 112 எண் சேவை தொடக்கம்

சென்னை, பிப்.20 தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பொதுமக்களின் அவசர உதவிகளுக்கு 112 என்ற புதிய தொலைபேசி சேவை தொடங்கப் பட்டுள்ளது. இந்த புதிய தொலைபேசி சேவை, முதல்கட்டமாக ஹிமாசலப் பிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தொடங்கப்பட்டது. இதையடுத்து தமிழகம், ஆந்திரம், உத்தரகண்ட், பஞ்சாப், கேரளம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, குஜராத், புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான், தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி, டாமன் அன்ட்....... மேலும்

20 பிப்ரவரி 2019 16:53:04

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திறந்தவெளியில் வைத்திருந்த 10,000 நெல் மூட்டை சேதம்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்  திறந்தவெளியில் வைத்திருந்த 10,000 நெல் மூட்டை சேதம்

விருத்தாசலம், பிப்.20  விருத்தாசலத்தில் நேற்று காலை திடீரென கன மழை பெய்ததால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது. கடலூர் மாவட்டத்திலேயே மிகப் பெரிய ஒழுங்குமுறை விற்பனை கூடம் விருத்தாசலத்தில் அமைந்துள்ளது. இங்கு விருத்தாசலம், மங்கலம்பேட்டை, கம்மாபுரம்,  சிறீமுஷ்ணம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும், விழுப்புரம், சேலம், அரியலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் நெல், கம்பு, மணிலா,....... மேலும்

20 பிப்ரவரி 2019 16:23:04

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க சிக்கராயபுரம் கல்குவாரிகளில் குடிநீர் எடுக்கும் பணி தொடக்…

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க  சிக்கராயபுரம் கல்குவாரிகளில் குடிநீர் எடுக்கும் பணி தொடக்கம்

சென்னை, பிப்.20 கோடையைச் சமாளிக்க சென்னைக்கு அருகில் சிக்கராயபுரம் கல்குவாரிகளில் குடிநீர் எடுக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்தக் குடிநீர் ஓரிரு நாள்களில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது. சென்னை மக்களுக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை தினமும் 83 கோடி லிட்டர் குடிநீரை சென்னை குடிநீர் வாரியம் விநியோகித்து வந்தது. இதற்காக புழல் உள்ளிட்ட நான்கு ஏரிகள்,  நெம்மேலி-மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள்,  வீராணம் போன்ற  குடிநீர் ஆகிய....... மேலும்

20 பிப்ரவரி 2019 16:20:04

மக்களை பற்றி கவலையில்லாமல் கூட்டணி! அதிமுக ஊழல்களை புத்தகம் போட்டவர் ராமதாஸ்

மக்களை பற்றி கவலையில்லாமல் கூட்டணி!  அதிமுக ஊழல்களை புத்தகம் போட்டவர் ராமதாஸ்

ஆம்பூரில் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு ஆம்பூர், பிப்.20 அதிமுகவின் ஊழல்களை பட்டியல் போட்டு புத்தகமாக வெளியிட்டவர் ராமதாஸ். இன்று பாமக -- அதிமுகவுடன் கூட்டு சேர்ந்துள்ளது என ஆம்பூரில் நடந்த கூட்டத்தில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் பேசினார். வேலூர் மாவட்டத்தில் நேற்று (19.2.2019) ஆம்பூர் சட்டமன்ற தொகுதி அகரம்சேரி, சோளிங்கர் சட்டமன்ற தொகுதி கரடிக்குப்பம் என 2 இடங்களில் திமுக சார்பில் நடந்த ஊராட்சி சபை கூட்டங்கள் மற்றும் வாக்குச்சாவடி....... மேலும்

20 பிப்ரவரி 2019 16:17:04

பால் உற்பத்தியாளர்களை காப்பாற்ற அரசு பேச்சு நடத்த வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்

சென்னை, பிப்.20  பால் உற்பத்தி தொழிலை காப்பாற்ற தமிழக அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் விவசாய தொழிலுக்கு துணை தொழிலாக பால் உற்பத்தியாளர்கள் கிராமப்புறங்களில் செயல்பட்டு வருகிறார்கள். ஏறத்தாழ 25 லட்சம் குடும்பங்கள் கூட்டுறவு துறைக்கு நாள்தோறும் 2 கோடி லிட்டர் பால் விநியோகம் செய்து வருகிறார்கள். நாள் தோறும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக 35....... மேலும்

20 பிப்ரவரி 2019 16:12:04

விசாரணை நீதிமன்றங்கள் குறித்த காலத்தில் வழக்கை முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, பிப்.20 குறிப்பிட்ட காலத்திற்குள் வழக்குகளை முடிக்க விசாரணை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த சசிக்குமார் என்பவர் பணி நேரத்தில் ஏற்பட்ட விபத்தில் மருத்துவமனையில் இறந்தார். இது குறித்து சசிக்குமாரின் சகோதரர் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதற்கிடையில், இழப்பீடு கோரி சசிக்குமாரின் குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தொழிலாளர் நலத்துறை ஆணையர், சம்பந்தப்பட்ட நிறுவனம் சசிக்குமாரின் குடும்பத்திற்கு....... மேலும்

20 பிப்ரவரி 2019 15:39:03

கடவுள் சக்தி இவ்வளவுதான்! கோவில்களில் கொள்ளை

கடவுள் சக்தி இவ்வளவுதான்!  கோவில்களில் கொள்ளை

குஜிலியம்பாறை, பிப்.19 குஜிலியம்பாறை அருகே கரிக்காலியில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இந்த காலனி அருகே மேட்டுபெருமாள் கோவில் உள்ளது. நேற்று முன் தினம் இரவு பூஜை முடிந்து பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார். நள்ளிரவு வேளை யில் கோவில் பூட்டை உடைத்து அடையாளத் தெரியாத சில நபர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் கோவிலில் வைத் திருந்த 6 குத்து விளக்குகள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் உண்டியலை உடைத்து பணம் ஆகியவற்றை திருடிச்....... மேலும்

19 பிப்ரவரி 2019 16:13:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.10 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் ஆயுள் தண்டனை கைதி களாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள்.

27 ஆண்டுகளாக சிறையில் வாடும் அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்த தமிழக அரசு, அதற்காக மத்திய அரசின் அனுமதியை கோரியது. ஆனால் அதற்கு அனுமதி வழங்க மறுத்த மத்திய அரசு, 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசியல் சாசன பிரிவு 161-இன் கீழ் தமிழக அரசு, 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ஒரு முடிவை எடுத்து ஆளுநரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம் என்று கடந்த வியாழக்கிழமை அறிவுறுத்தியதோடு, மத்திய அரசின் மனுவை ஏற்றுக்கொள்ள முகாந்திரம் இல்லை என்று கூறி அந்த மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவுறுத் தலை தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடு தலை செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசியல் கட்சிகள் வற்புறுத்தின.

உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலை தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக் கைகள் குறித்து சட்ட நிபுணர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தியது.

இந்த நிலையில், தமிழக அமைச் சரவை கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று (19.9.2018) மாலை நடைபெற்றது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன் னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அமைச்சர் பாண்டி யராஜன் அரசு முறை பயணமாக வெளிநாடு சென்று இருப்பதால், அவர் மட்டும் கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லை.

மாலை 4 மணி அளவில் தொடங்கிய கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடை பெற்றது.

அமைச்சரவை கூட்டத்தில், சிறை யில் இருக்கும் ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தகவலை, கூட்டம் முடிந்ததும் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறீதரன் என்கிற முருகன், சுதந்திரராஜா என்கிற சாந்தன், ஏ.ஜி.பேரறிவாளன் என்கிற அறிவு, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச் சந்திரன் மற்றும் நளினி ஆகியோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வரு கிறார்கள்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் பேரறி வாளனின் மனுவை இந்திய அரசியல மைப்பு சட்டப்பிரிவு 161இ-ன் கீழ் பரிசீ லிக்கலாம் என்று உத்தர விட்டிருந்த போதிலும், இவரை தவிர மேலும் 6 பேரும் முன் விடுதலை மனுக்களை ஆளுநர் மற்றும் அரசுக்கு முகவரியிட்டு அளித்திருந்ததை கருத் தில் கொண்டு, அவர்களையும் சேர்த்து 7 பேரையும் முன் விடுதலை செய்வ தற்கு தமிழக அரசு மேற்படி சட்டப்பிரிவின் படி ஆளுநருக்கு பரிந்துரை செய்ய அமைச் சரவையில் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள் விகளும், அவற்றுக்கு அமைச்சர் ஜெயக் குமார் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- 7 பேரை விடுவிக்கும் முழு உரிமை மாநில அரசுக்கு உள்ளதா?

பதில்:- அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161 என்பது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அந்த அடிப்படையில்தான் இன்றைய தினம் அமைச்சரவை கூட்டப்பட்டு, கூட்டத் தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஆளுந ருக்கு பரிந்துரை செய்ய இருக்கிறோம்.

கேள்வி:- சி.பி.அய். மூலம் கைது செய்யப்பட்டவர்களை மாநில அரசு விடுவிக்க 161-ஆவது சட்டப்பிரிவு உதவும் என்று நினைக்கிறீர்களா?

பதில்:- சி.பி.அய். விசாரணை, கைது என்பதெல்லாம் முடிந்த கதை. நமக்கு தற்போதைய சூழ்நிலையில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பே முக்கியம். நீதியின் உயரிய கோட்பாடு உச்சநீதிமன்றம்தான். அந்த அடிப்படை யில் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு முழு அதிகாரமும் கொடுத்து இருக்கிறது. தீர்ப்பும் இதை தெளிவாக கூறுகிறது. உச்சபட்ச தீர்ப்பே கிடைத்திருக்கும்போது வேறு என்ன வேண்டும்?

கேள்வி:- இந்த பரிந்துரை எப்போது ஆளுநருக்கு வழங்கப்பட இருக்கிறது?

பதில்:- அமைச்சரவை கூட்டம் விடுமுறை தினத்தில் கூட்டப்பட்டு உள்ளது என்றால் அது முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் என்பது அனைவருக் கும் தெரியும். எனவே இந்த பரிந்துரை உடனடியாக ஆளுநரிடம் வழங்கப் படும்.

கேள்வி:- மத்திய அரசின் ஆலோ சனையை கேட்காமல் ஆளுநர் தன்னிச் சையாக முடிவு எடுக்க முடியுமா?

பதில்:- இதில் மத்திய அரசின் ஆலோசனையை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இதில் மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றமே கூறி உள்ளது. அமைச் சரவையின் முடிவை ஆளுநர் ஒத்துக் கொண்டு தான் ஆகவேண்டும். எனவே இந்த முடிவை அவர் ஒத்துக்கொள்வார்.

மாநில அரசின் அதிகாரம் தெளிவாக உள்ள நிலையில் ஆளுநர் இந்த பரிந்துரையை நிச்சயம் ஏற்பார். இதை அவர் மறுக்க முடியாது. மாநில அரசி யலமைப்புச் சட்டத்தின் மிக முக்கிய பொறுப்பாளர் ஆளுநர்தான். எனவே அமைச்சரவையின் பரிந்துரைகளை ஏற்பது அவரது முக்கிய கடமை ஆகும்.

கேள்வி:- தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி காலதாமதம் செய்வாரா?

பதில்:- அப்படி வாய்ப்பு இல்லை. அவர் நிர்வாக தலைவர். மாநில அரசை மதிப்பதும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நடப்பதும் அவரது கடமை. எனவே காலதாமதம் ஆகாது என்று நம்புகிறோம்.

கடந்த 2014ஆ-ம் ஆண்டு 110-வது விதியின் கீழ் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். 2016ஆ-ம் ஆண்டு இதே போல் மீண்டும் ஒரு முயற்சி மேற் கொண்டார். எனவே மக்கள் கோரிக் கையான இந்த பரிந்துரையை அன் றைக்கே மத்திய அரசு ஏற்று இருக்க வேண்டும். எனவே மக்கள் விரும்பும் படியும், ஜெயலலிதாவின் முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையிலும் இப்போது உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக் கிறது. எனவே ஆளுநர் உரிய நட வடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். மேற்கண்டவாறு அமைச்சர் ஜெயக் குமார் கூறினார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner