முன்பு அடுத்து Page:

பாமகவினரை கைது செய்யக்கோரி மறியல்

அரியலூர், ஏப்.21 அரியலூரில் தாக்குதலில் ஈடுபட்ட பாமகவினர் அனைவரையும் கைது செய்யக்கோரி  ஜெயங்கொண்டம் - அரியலூர் சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச்  சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் 12 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி ஜெயங்கொண்டம் அண்ணா சிலை முன் 75க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும்

21 ஏப்ரல் 2019 17:35:05

முதுநிலை மருத்துவ மேற்படிப்பு: அடுத்த வாரத்தில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

முதுநிலை மருத்துவ மேற்படிப்பு: அடுத்த வாரத்தில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

சென்னை, ஏப்.21  முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு அடுத்த வாரம் தொடங்க வாய்ப்புள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்டி, எம்எஸ் பட்டமேற் படிப்புகளுக்கு 1,761 இடங்கள் உள்ளன. அதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 849 இடங்கள் போக, மீதமுள்ள 912 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்கள்.  அவை தவிர, தனியார் மருத் துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்காக 181 இடங்கள்....... மேலும்

21 ஏப்ரல் 2019 17:35:05

பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்றவர்களை விளம்பரப்படுத்தத் தடை

சென்னை, ஏப்.21 பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றுள்ள மாண வர்களின் புகைப்படத்தை வெளியிட்டு விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது நட வடிக்கை எடுக்கப்படும் என  பள்ளிக் கல்வித் துறை எச்சரித் துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி. ராமேசு வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி களுக்கு வெள்ளிக்கிழமை அனுப் பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வித் துறையின் உயர்நிலைக் குழு....... மேலும்

21 ஏப்ரல் 2019 17:21:05

பத்திரிகையாளர் கைதுக்கு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

திருச்சி, ஏப். 21 ஆள் கிடைக்க வில்லை என்பதற்காக பத்திரிக் கையாளரை கைது செய்வதா..? திருச்சி மாநகர காவல்துறையை திருச்சி மாவட்ட பத்திரிக்கை யாளர் சங்கம் கண்டித்து விடுத் துள்ள அறிக்கை வருமாறு: கடந்த 04.04.2019 தேதியன்று திருச்சி கீரைக்கொல்லை தெரு வில் திமுக கூட்டணியின் சார் பில் திராவிடர் கழகத்தின் கூட் டம் நடந்தபோது இரு தரப்பி னருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அந்த பிரச்சினை முடிந்து நமது சங்கத்தின்....... மேலும்

21 ஏப்ரல் 2019 16:58:04

மக்களவை தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை

இடைத்தேர்தலில் 11.56 லட்சம் பேர் ஓட்டு போடவில்லை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் சென்னை,ஏப்.21, தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 1 கோடியே 64 லட்சத்து 17 ஆயிரத்து 983 பேர் வாக்களிக்கவில்லை. அது மட்டுமல்லாமல் 18 சட்ட மன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் 11 லட்சத்து 56 ஆயிரத்து 730 பேர் வாக்களிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளி யாகியுள்ளது. தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18....... மேலும்

21 ஏப்ரல் 2019 16:58:04

தருமபுரி, கன்னியாகுமரி விவகாரம்

தனி அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும்  தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவு தருமபுரி, ஏப்.21 தருமபுரி நத்தமேடு வாக்குச் சாவடி சம்பவம், கன்னியா குமரியில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து தனி அறிக்கைகளைத் தாக்கல் செய்ய வேண்டு மென மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார். மக்களவைத் தேர்தல், 18 சட்டப் பேரவை இடைத் தேர்தல்கள் வாக்குப் பதிவு குறித்து தலைமைச் செயலகத்தில்....... மேலும்

21 ஏப்ரல் 2019 16:42:04

Civil Court at Chennai

Civil Court at Chennai

மேலும்

21 ஏப்ரல் 2019 16:09:04

எல்கேஜி முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களை நிபந்தனையின்றி சேர்க்க வேண்டும்

எல்கேஜி முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களை நிபந்தனையின்றி சேர்க்க வேண்டும்

பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு நாகர்கோவில், ஏப்.21 எல்கேஜி முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளி லும் நிபந்தனையின்றி மாண வர் சேர்க்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து எல்கேஜி முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளில் நடைபெற்று வரு கிறது. மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தவும், இது தொடர்பாக உரிய விதிமுறை களை கடைபிடிக்கவும் பள்ளி....... மேலும்

21 ஏப்ரல் 2019 15:39:03

தேர்தல் தோல்வி பீதியால் பாதிக்கப்பட்டுள்ளார் மோடி: மம்தா

தேர்தல் தோல்வி பீதியால் பாதிக்கப்பட்டுள்ளார் மோடி: மம்தா

கிருஷ்ணாநகர், ஏப்.21 தேர்தல் தோல்வி பீதியால் பிரதமர் நரேந்திர மோடி பாதிக் கப்பட்டுள்ளார் என்று மேற்கு வங்கத்தின் முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா  தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம், கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரை ஆத ரித்து பனிஹடாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார க் கூட்டத்தில் அவர் பேசியதாவது: தேர்தல்களில் தனக்கு தோல்வி உறுதி என்பது மோடிக்கு தெரியும். அதனால்தான் அவரது முகம், வெளிறி போயுள்ளது. அதேபோல்,....... மேலும்

21 ஏப்ரல் 2019 15:39:03

இடைத் தேர்தல்: மே 1 முதல் தளபதி மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

இடைத் தேர்தல்: மே 1 முதல்  தளபதி மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

சென்னை, ஏப்.21 திருப் பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டப் பேரவைத் தொகுதி களுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரத்தை மே 1-ஆம் தேதி முதல் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள உள்ளார். 38 மக்களவைத் தொகுதி களுக்கான தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து திருப்பரங் குன்றம், ஒட்டப்பிடாரம் (தனி), அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய  4 தொகுதிகளுக்கு மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல்....... மேலும்

21 ஏப்ரல் 2019 15:31:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாமக்கல்,  செப்.10 மின்சார வாரியத்தில் ஒயர்மேன், உதவி யாளர் காலி பணியிடங்கள் நிகழாண்டில் நிரப்பப்படும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் சனிக் கிழமை பல்வேறு அரசு திட்டப் பணிகளைத் தொடக்கி வைக் கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் பி. தங்கமணி செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதியின் கீழ் தடையில்லாத, பழுது இல்லாத, சீரான மின் விநியோகம் அளிக் கும் வகையில் ரூ. 1,659 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்டப் பணிகள் நடைபெற்று வரு கின்றன.

மின் இழப்பைக் குறைக்கும் வகையில், பேரூராட்சிகளில் புதிய மின்மாற்றிகள் அமைத் தல், புதிய துணை மின் நிலையம் அமைத்தல் ஆகிய பணிகள் இன்னும் 6 மாத காலத்துக்குள் முழுமையாக முடிவடையும்.

அதேபோல், தீனதயாள் உபாத்தியாய் கிராம மின்சாரத் திட்டத்தில் கிராம ஊராட்சிகளில் புதிய துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களால் சிறிது தாமதம் ஆனாலும், இன்னும் 6 மாதங் களுக்குள் அந்தப் பணிகளும் முடிக்கப்படும்.

தமிழ்நாடு மின்சார வாரி யத்தில் உதவி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு விரை வில் எழுத்துத் தேர்வு நடத்தப் பட உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் தற்போதுதான் பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுப் பணி களை முடித்துள்ளது. அந்தப் பல்கலைக்கழகம் மூலம் விரை வில் எழுத்துத் தேர்வு நடத்தப் படும். இதேபோல ஒயர்மேன், உதவியாளர் பணியிடங்களும் நிகழ் ஆண்டுக்குள் நிரப்பப் படும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner