எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாமக்கல்,  செப்.10 மின்சார வாரியத்தில் ஒயர்மேன், உதவி யாளர் காலி பணியிடங்கள் நிகழாண்டில் நிரப்பப்படும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் சனிக் கிழமை பல்வேறு அரசு திட்டப் பணிகளைத் தொடக்கி வைக் கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் பி. தங்கமணி செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதியின் கீழ் தடையில்லாத, பழுது இல்லாத, சீரான மின் விநியோகம் அளிக் கும் வகையில் ரூ. 1,659 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்டப் பணிகள் நடைபெற்று வரு கின்றன.

மின் இழப்பைக் குறைக்கும் வகையில், பேரூராட்சிகளில் புதிய மின்மாற்றிகள் அமைத் தல், புதிய துணை மின் நிலையம் அமைத்தல் ஆகிய பணிகள் இன்னும் 6 மாத காலத்துக்குள் முழுமையாக முடிவடையும்.

அதேபோல், தீனதயாள் உபாத்தியாய் கிராம மின்சாரத் திட்டத்தில் கிராம ஊராட்சிகளில் புதிய துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களால் சிறிது தாமதம் ஆனாலும், இன்னும் 6 மாதங் களுக்குள் அந்தப் பணிகளும் முடிக்கப்படும்.

தமிழ்நாடு மின்சார வாரி யத்தில் உதவி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு விரை வில் எழுத்துத் தேர்வு நடத்தப் பட உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் தற்போதுதான் பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுப் பணி களை முடித்துள்ளது. அந்தப் பல்கலைக்கழகம் மூலம் விரை வில் எழுத்துத் தேர்வு நடத்தப் படும். இதேபோல ஒயர்மேன், உதவியாளர் பணியிடங்களும் நிகழ் ஆண்டுக்குள் நிரப்பப் படும்.