முன்பு அடுத்து Page:

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் வண்ணம் தீட்டும் போட்டி

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் வண்ணம் தீட்டும் போட்டி

திருச்சி, செப்.20  அறிவு ஆசான் தந்தை பெரியாரின் 140ஆம் ஆண்டு பிறந்தநாள்  விழாவனை முன்னிட்டு திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மழலையர் பிரிவு மாணவர்களுக்கு பள்ளியின் மழலையர் பிரிவு வகுப்பறையில் வண்ணம் தீட்டும் போட்டிகள்  நடைபெற்றது. இதல் பிரி.கே.ஜி முதல் யு.கே.ஜி பயிலும் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுச் சிறப்பாக வர்ணம் தீட்டி அசத்தினர். போட்டியில் பங்கேற்ற மாணவ  மாணவியர்களைப் பள்ளியின் முதல்வர் முனைவர் க.வனிதா அவர்கள் பாராட்டி இனிப்புகளை....... மேலும்

20 செப்டம்பர் 2018 16:27:04

டீசல் விலையை குறைக்கக்கோரி தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் மீண்டும் வேலைநிறுத்தம்

சென்னை, செப்.20  பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரி, மீண்டும் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.சுகுமார் கூறியது: பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கெனவே கடந்த ஜூன் மாதம் தொடர் வேலை நிறுத்தத்தை லாரி உரிமையாளர்கள் மேற்கொண்டனர். அப்போது லாரி உரிமையாளர்கள் சந்தித்து....... மேலும்

20 செப்டம்பர் 2018 15:25:03

விடுதலை சிறுத்தைகள் சார்பில் ‘தேசம் காப்போம்’ மாநாடு - தொல்.திருமாவளவன் அறிவிப்பு

விடுதலை சிறுத்தைகள் சார்பில் ‘தேசம் காப்போம்’ மாநாடு - தொல்.திருமாவளவன் அறிவிப்பு

  சென்னை, செப். 20- விடுதலை சிறுத்தை கள் கட்சியின் தலைவர் தொல்.திரு மாவளவன் பிறந்தநாள் விழா சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று (19.9.2018) கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கட்சியின் பொதுச் செயலா ளர் ரவிக்குமார், பொருளாளர் மு.முக மது யூசுப் ஆகியோர் முன்னிலை வகித் தனர். விழாவில் தொல்.திருமாவளவன் பேசியதாவது:- கடந்த ஆகஸ்டு 17ஆம் தேதி நடைபெற்றிருக்க வேண்டிய இவ்விழா, தி.மு.க. தலைவர் கலைஞர் கால மானதையடுத்து தள்ளிவைக்கப்பட்டு இப்போது....... மேலும்

20 செப்டம்பர் 2018 14:55:02

மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கும் மேலாக தொடர்ந்து நீடிப்பு

சென்னை, செப். 20- மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 62-ஆவது நாளாக நூறு அடிக்கும் மேலாக நீடிக்கிறது. ஜூலை மாதத்தின் தொடக் கத்தில் கருநாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால், கருநாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணை களுக்கு நீர்வரத்து அதிகரித்து, அணைகள் நிரம்பின. இதையடுத்து, கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளி லிருந்து உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதனால்....... மேலும்

20 செப்டம்பர் 2018 14:39:02

சரியான நடவடிக்கை பெரியார் சிலை அவமதிப்பு வழக்கு: பா.ஜ.க. வழக்குரைஞர் குண்டர் சட்டத்தில் சிறையில் …

சென்னை, செப்.20 சென்னையில் பெரியார் சிலை அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பா.ஜ.க. வழக்குரைஞரை, குண் டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் புதன்கிழமை உத்தரவிட்டார். இது குறித்து காவல்துறையி னர் தரப்பில் கூறப்படுவதாவது: தந்தை பெரியாரின் 140-ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா சாலை சிம்சன்சிக்னல் அருகே உள்ள அவரது சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்து வதற்காக அரசியல் கட்சியினர் திங்கள்கிழமை திரண்டிருந்தனர். அப்போது அங்கு....... மேலும்

20 செப்டம்பர் 2018 14:32:02

செப். 21-இல் அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

செப். 21-இல் அரசு மருத்துவர்கள்  வேலைநிறுத்தம்

சென்னை, செப்.18 ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றை உரிய நேரத்தில் வழங்கக் கோரி, மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை (செப். 21) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்தப் போராட்டத்தில் 20,000 அரசு மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்து, அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் கே. செந்தில், சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றை உரிய நேரத்தில் வழங்க....... மேலும்

18 செப்டம்பர் 2018 16:22:04

அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்!

அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்!

பெரியாரை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்க வெறிபிடித்த மிருகம்போல செயல்படுவதா? சென்னை, செப் 18-  “தந்தை பெரியாரை அவமானப்படுத் துவதாக நினைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்க விஷமத்தனமாகத் திட்டமிட்டு வெறிபிடித்த மிருகம் போல செயல்படுவதா?” என்று திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலை வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று(17.9.2018) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மானமுள்ள ஒவ்வொரு தமிழரும் பகுத்தறிவுப்....... மேலும்

18 செப்டம்பர் 2018 16:02:04

சென்னையில் தந்தை பெரியார் சிலை மீது காலணி வீசிய பா.ஜ.க. வக்கீல் கைது

சென்னையில் தந்தை பெரியார் சிலை மீது காலணி வீசிய பா.ஜ.க. வக்கீல் கைது

சென்னை, செப்.18  தந்தை பெரியாரின் 140-வது பிறந்தநாள் விழா நேற்று (17.9.2018) கொண்டாடப்பட்டது. இதை யொட்டி சென்னை அண்ணாசாலை சிம்சன் சந்திப்பில் உள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு அரசியல் தலைவர் கள் நேற்று மரியாதை செலுத்திக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். பெரியார் சிலை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பெரியார் சிலையை ஒரு நிமிடம் வெறித்து பார்த்தார். பின்னர்....... மேலும்

18 செப்டம்பர் 2018 15:55:03

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பேராசிரியர் மாலை அணிவிப்பு

சென்னை, செப். 16- பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 140ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி 17.9.2018 அன்று காலை 8 மணிக்கு அண்ணா சாலை, சிம்சன் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் மற்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் திமுக முன்னணியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். வினைதீர்க்கும் விநாயகன் சக்தியைப் பாரீர்! விநாயகர் சிலை கரைக்கச் சென்ற....... மேலும்

16 செப்டம்பர் 2018 16:38:04

பாசிச ஆட்சி முடியட்டும், மக்களாட்சி விடியட்டும், ஊழல் ஆட்சி முடியட்டும், தி.மு.க. ஆட்சி மலரட்டும்: …

பாசிச ஆட்சி முடியட்டும், மக்களாட்சி விடியட்டும்,  ஊழல் ஆட்சி முடியட்டும், தி.மு.க. ஆட்சி மலரட்டும்: திமுக தலைவர் சூளுரை

விழுப்புரத்தில் நேற்று (15.9.2018) திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மும்பை வி.தேவராசனுக்கு பெரியார் விருதும், பொன்.இராமகிருஷ்ணனுக்கு அண்ணா விருதும், குத்தாலம் பி.கல்யாணத்திற்கு கலைஞர் விருதும், புலவர் இந்திரகுமாரிக்கு பாவேந்தர் விருதும், கவிக்கொண்டல் மா.செங்குட்டுவனுக்கு பேராசிரியர் விருதும் வழங்கி சிறப்பித்தார். விழுப்புரம், செப். 16- விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் உள்ள அண்ணா திடலில் நேற்று (15.9.2018) மாலை....... மேலும்

16 செப்டம்பர் 2018 16:38:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து  அண்ணா சாலையில் மறியல்

முத்தரசன், பாலகிருஷ்ணன் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் கைது

சென்னை, செப்.11 பெட் ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, சென்னை அண்ணா சாலையில் அனைத்து தொழிற் சங்கம் சார்பில் நேற்று நடந்த சாலை மறியல் போராட்டத்தில் முத்தரசன், பாலகிருஷ்ணன் உள்பட 1000க்கும்  மேற்பட் டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சென் னையில் போக்குவரத்துக் கழக தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் அண்ணா சாலை தாராபூர் டவர் அருகே நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி மாநில செயலாளர் முத் தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் திமுக, காங்கிரசு உள்ளிட்ட தோழமை கட்சிகளை சேர்ந்த ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில், பெட் ரோல், டீசல் மீதான 52 சதவீத வரிகளை மத்திய, மாநில அரசு குறைக்க கோரி முழக்கமிட்டனர். இந்த விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் நேரடியாக பாதிக்கப்படுகிறனர். எனவே பெட்ரோல், டீசல் மீதான  வரி விதிப்பை திரும்ப பெற வேண் டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத் தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட முத்தரசன், பாலகிருஷ் ணன் ஆகியோர் அண்ணா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.  மறியலில் ஈடு பட்ட முத்தரசன், பாலகிருஷ் ணன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்ய முயன்றனர். அப்போது போராட்டக்காரர் களுக்கும் காவல்துறையினருக் கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், போராட்டத்தில்  ஈடுபட்ட தலைவர்கள் அண்ணா சாலை யில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

பின்னர் காவல்துறையினர் முத்தரசன், பாலகிருண்ணன் உட்பட ஆயிரத்திற்கும் மேற் பட்டோரை கைது செய்து, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மாநகராட்சி சமூகநலக்கூடத்தில் அடைத்தனர். மாலையில்  அனை வரும் விடுவிக்கப்பட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner