முன்பு அடுத்து Page:

மாணவர்கள், ஆசிரியர்கள் கல்வி நிறுவனத்திடம் சான்றிதழ் அளிக்க வேண்டியதில்லை: ஏஅய்சிடிஇ தலைவர் பேட்டி

சென்னை, மார்ச் 26- பொறியியல் மாணவர்கள், ஆசிரியர்கள் தனியார் கல்வி நிறுவனங்களி டம் சான்றிதழ்களை ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை ஏஅய்சிடிஇ தலைவர் அனில் டி. சகஸ்கரபுதே கூறினார். ஓய்வு பெற்ற பொறியியல் பேராசிரியர் பி.சி.சந்திரசேக ரனின் மாடர்ன் சயின்டிபிக் தாட் என்னும் நூல் வெளி யீட்டு விழா கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. இந்த....... மேலும்

26 மார்ச் 2019 16:43:04

ராமேஸ்வரம் மீனவர்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

ராமேஸ்வரம் மீனவர்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

இரா.முத்தரசன் வலியுறுத்தல் சென்னை, மார்ச் 26- இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களை உடனே விடு தலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்திலிருந்து சனிக் கிழமை....... மேலும்

26 மார்ச் 2019 16:43:04

மக்களவைத் தேர்தலில் மாற்று அரசு அமையாவிட்டால் அரசியலமைப்பு வழங்கிய உரிமைகள் பறிக்கப்படும்: டி.கே.ரங்…

மக்களவைத் தேர்தலில் மாற்று அரசு அமையாவிட்டால் அரசியலமைப்பு வழங்கிய உரிமைகள் பறிக்கப்படும்: டி.கே.ரங்கராஜன் சாடல்

சென்னை, மார்ச் 26- மக்களவைத் தேர்தலில் மாற்று அரசு அமையாவிட்டால் அரசியலமைப்பு சட்ட அடிப்படைகள் தகர்க்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப் பினர் டி.கே.ரங்கராஜன் கூறினார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென்சென்னை மக்களவைத் தொகுதி ஊழியர் கூட்டம் கந்தன்சாவடியில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் வேட்பாளர் முனைவர் த.சுமதி (எ)தமிழச்சி தங்க பாண்டியனை அறிமுகப்படுத்தி டி.கே.ரங்கராஜன் பேசியதாவது: இந்த மக்களவைத் தேர்தலில்....... மேலும்

26 மார்ச் 2019 16:43:04

பெரியார் அய்.ஏ.எஸ். பயிற்சி மய்யத்தின் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி

பெரியார் அய்.ஏ.எஸ். பயிற்சி மய்யத்தின் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி

மார்ச் 31-இல் தொடக்கம் சென்னை, மார்ச் 26 டிஎன்பிஎஸ்சி, இந்திய குடிமைப் பணி ஆகிய போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்கம், வருகிற 31-ஆம் தேதி முதல் நடைபெற வுள்ளது என பெரியார் அய்.ஏ.எஸ் அகாதமி அறிவித்துள்ளது. இது குறித்து  அந்த அகாதெமி வெளியிட்ட செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:  டிஎன்பிஎஸ்சி,  இந்திய குடிமைப் பணி ஆகியவை நடத்தும் அரசுப் பணித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப் புகள் மற்றும்....... மேலும்

26 மார்ச் 2019 15:08:03

ஜனநாயகப் படுகொலையை நடத்தும் தேர்தல் ஆணையம்

ஜனநாயகப் படுகொலையை நடத்தும் தேர்தல் ஆணையம்

தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் கண்டனம் சென்னை, மார்ச் 26- சின்னம் ஒதுக்குவதில் இருந்து வேட்புமனு பெறுவது வரை இந்திய தேர்தல் ஆணையமும், தமிழக தேர்தல் ஆணையரும், மத்திய பா.ஜ.க. அரசின் கட்டளைக்குப் பணிந்து அ.தி. மு.க. அரசின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பாரபட்சமாக செயல்பட்டு வருகிறது. இது மன்னிக்க முடியாத மாபெரும் ஜனநாயக படுகொலை என்று தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று (25.3.2019)....... மேலும்

26 மார்ச் 2019 15:08:03

தமிழ்நாட்டில் நடப்பது பிஜேபி ஆட்சியா?

திராவிடர் கழக நெல்லை மண்டலத் தலைவர் மா.பால்ராசேந்திரம் மீது காவல்துறையினர் வழக்கு! திராவிடர் கழக திருநெல் வேலி மண்டலத் தலைவரும் சொற்பொழிவாளருமாகிய மா.பால்ராசேந்திரம் அவர்கள் நாகர்கோவிலில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்ட அறிவியல் பரப்புரைப் பிரச் சாரக் கூட்டத்தில் பேசிக் கொண் டிருந்தபோது இந்து முன்னணிக் காவிகள் கலாட்டா செய்ய முயன் றனர். அதனையும் மீறி கூட்டம் நடந்தது. இந்நிலையில் இந்து மதக் கடவுளை விமர்சனம் செய்து பேசியதாக....... மேலும்

25 மார்ச் 2019 16:17:04

அரசுப் பள்ளிக்கு ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கல்

செங்கல்பட்டு, மார்ச் 25- அரசுப் பள்ளிகளை பாதுகாத்திட கிராம மக்கள் தம் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளுக்குத் தேவையான பொருட்களை கல்விச் சீராக வழங்கி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டம் முகையூர் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்குத் தேவையான உபகரணங்களைக் கல்விச் சீராக வழங்கும் விழா பள்ளி தலைமை ஆசிரியர் லதா தலைமையில் நடைபெற்றது. முகையூர் பேருந்து நிலையம் அருகிலிருந்து கல்விச்சீர் ஊர்வலத்தை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாபு....... மேலும்

25 மார்ச் 2019 15:55:03

சிலைக்கு மாலை அணிவித்தால் வழக்கா? சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

சிலைக்கு மாலை அணிவித்தால் வழக்கா?  சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

சென்னை, மார்ச் 25- தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்த மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்சு.வெங்கடேசன் மீது தேர்தல் ஆணை யம் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதற்கு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.விடுதலைப் போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகி யோரது நினைவு தினத்தையொட்டி 23.3.2019 அன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பகத்சிங் சிலைக்கு கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வுக்கு அகில....... மேலும்

25 மார்ச் 2019 15:48:03

மக்களவைத் தேர்தல் 2019: தி.மு.க. தேர்தல் அறிக்கை (5)

மக்களவைத் தேர்தல் 2019: தி.மு.க. தேர்தல் அறிக்கை (5)

சென்னை, மார்ச் 24 - கல்வி வளர்ச்சி, வேலை வாய்ப்பு, மக்கள் வளர்ச்சித் திட்டம், தமிழ்நாடு உரிமைப் பாதுகாப்பு முதலிய செறிவான மக்கள் நலம் பேணும் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்   19.3.2019 அன்று முற்பகல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு: நேற்றைய தொடர்ச்சி *           எனவே, நிலுவைப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி மத்திய அரசுப் பணிகளில் குறைந்த பட்சம் 27....... மேலும்

24 மார்ச் 2019 17:37:05

அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்னரே பிளஸ் 2 பாடத்திட்டம் இ-புக்ஸாக வெளியானது

சென்னை, மார்ச் 24- பிளஸ் 2 வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், புதிய பாட நூல்களை அதிகாரப்பூர்வமாக அரசு வெளியிடும் முன்னரே அவை இ-புக்ஸாக வெளியாகி உள்ளது. இது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிகளுக்கான புதிய பாடத்திட் டமானது, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் அந்தந்த பாடங்கள் சார்ந்த நிபுணர்களைக் கொண்டு....... மேலும்

24 மார்ச் 2019 17:21:05

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புத்தக வெளியீட்டு விழா

சென்னை, ஜன.12 சென்னை புத்தகக்காட்சியில் 17.1.2019 அன்று மாலை வாசகர்களை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சந்திக் கின்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற் கல்வி கல்லூரி வளாகத்தில் புத்தகக்காட்சி 42ஆம் ஆண்டாக 4.1.2019 முதல் 20.1.2019 முடிய நடைபெறுகிறது.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் 197, 198, 245, 246 ஆகிய அரங்குகளில் புத்தகங்கள் இடம் பெறச் செய்யப்பட்டுள்ளன. 197, 198 அரங்கில் தந்தைபெரியார் ஆளுயர சிலை அமைக்கப்பட்டு, வாசக பார்வையாளர் களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்து வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பத்துடன் வருகைதரும் வாசகப் பார்வையாளர்கள் பலரும் பெரிதும் ஆர்வத்துடன் தந்தை பெரியார் முழு உருவச்சிலை அருகில் நின்றும், அமர்ந்தும் சுய படம் (செல்ஃபி) எடுத்து மகிழ்கிறார்கள்.

17.1.2019 அன்று சென்னை புத்தகக் காட்சியில்  பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை புத்தக வெளியீட்டு விழா நடைபெறுகிறது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்? எனும் புத்தகத்தின் வெளியீட்டு விழா  திராவிடர் கழகத்தின் சார்பில் நடை பெறுகிறது. கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில், பொரு ளாளர் வீ.குமரேசன் வரவேற்புரை

யாற்றுகிறார். கவிஞர் ஈரோடு தமிழன்பன் நூலை வெளியிட்டு உரையாற்றுகிறார். எழுத் தாளர் இமையம் நூலைப் பெற்றுக் கொண்டு உரையாற்றுகிறார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் அவ்வை நடராசன் நூல் ஆய்வுரை நிகழ்த்துகிறார். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரையாற்றுகிறார்.  பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன் நன்றி கூறுகிறார். நூல் வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து, சென்னைப் புத்தகக்காட்சியில் 197,198 அரங்கில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாசகப்பார்வையாளர்களை சந்திக்கின்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தந்தைபெரியாரின் கருத்துக் கருவூலங்கள்

சென்னைப் புத்தகக் காட்சியில் அறிவாயுதங்களாக, புரட்சிக்கான பூபாளம் பாடும் புத்தகங்கள் குவிக்கப்பட்டுள்ளன. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறு வனத்தின் அரங்குகளில் தந்தை பெரியார் பேச்சுகள், எழுத்துகள், கொள்கைகளைத் தாங்கிய புத்தகங்கள் கிடைக்கின்றன.

கடவுள், மதம், பெண்ணுரிமை, ஜாதி, பகுத்தறிவு, திருக்குறள் வள்ளுவர், கடவுள் புராணங்கள் ஆகிய தலைப்புகளின்கீழ்  தொகுக்கப்பட்டு 38 தொகுதிகளாக பெரியார் களஞ்சியம் புத்தகங்கள், 1925 முதல் 1949 முடிய உள்ள குடிஅரசு தொகுதிகள் , புரட்சி, பகுத்தறிவு  உள்ளிட்ட குடிஅரசு தொகுப்புகளைக் கொண்ட  42 தொகுதிகள்,  பெரியார் சிந்தனைத் திரட்டு 3 பாகங்கள் உள்ளிட்ட தந்தை பெரியார் கருத்துகளைத் தாங்கிய ஏராளமான புத்தகங்கள், கீதையின் மறுபக்கம் ஆய்வு நூல், இராமாயணம் இராமன் இராமராஜ்யம் ஆய்வு நூல், விடுதலைப்போரும் திராவிட இயக்கமும் - உண்மை வரலாறு, கீதையின் மறுபக்கம் ஆய்வு நூல், மகாபாரத ஆராய்ச்சி, பெரியாரியல் 5 பாகங்கள்,  சுயமரியாதை திருமணம் தத்துவமும் வரலாறும், பெரியார் மணியம்மை திருமணம் ஒரு வரலாற்று உண்மை விளக்கம், பெரியார் வெறும் சிலையல்ல, அசைக்க முடியாத இலட்சியப்போர், உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் இரண்டு தொகுதிகள், உலகத் தலைவர் பெரியார் - 7 பாகங்கள், வாழ்வியல் சிந்தனைகள்- 13 தொகுதிகள், அய்யாவின் அடிச்சுவட்டில் -6 பாகங்கள், வடநாட்டில் பெரியார்-2 பாகங்கள், பெரியாரின்  மனிதநேயம், யுனெஸ்கோ பார்வையில் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் புத்த நெறியைத் தழுவியது ஏன்? அம்பேத்கர் பற்றிய அருண்சோரியின் நூலுக்கு மறுப்பு, அம் பேத்கரின் புத்தக்காதலும், புத்தகக்காதலும் உள்ளிட்ட ஏராளமான புத்தகங்கள் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 200க்கும் மேற்பட்ட படைப்புகள் புத்தகக் காட்சியில் கிடைக்கின்றன.

கந்த புராணமும் இராமாயணமும் ஒன்றே, அம்மா பேசுகிறார், அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரின் சிந்தனை முத்துகள் ஆகிய புத்தகங்கள் அன்னை மணியம்மையார் படைப்புகளாக உள்ளன. ஜாதி ஒழிப்புப் புரட்சி (தொகுப்பு நூல்), ரிச்சர்ட் டாக்கின்ஸ் நூலின் தமிழாக்க புத்தகம் கடவுள் ஒரு பொய், வைக்கம் போராட்ட வரலாறு, காமராசர் கொலை முயற்சி சரித்திரம், தமிழன் தொடுத்த போர் உள்ளிட்ட ஏராளமான புத்தகங்கள் பெரி யார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளி யீடுகளாக, மலிவுப்பதிப்புகளாக வெளியி டப்பட்டுள்ளன.

பகுத்தறிவு, பெண்ணுரிமை, சமூக நீதி, வகுப்புவாரி உரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு, மத மறுப்பு, மனித சமுதாய முன்னேற்றத்துக் கான சிந்தனைகளை விதைக்கின்ற  தந்தை பெரியார் கொள்கைகளை உள்ளடக்கிய கருத்து கருவூலங்களாக வாசகப் பார்வை யாளர்களின் தேடலுக்கு ஏற்ப புத்தகங்கள்  மற்ற பதிப்பகங்களின் புத்தகங்களுக்கு நிகராக  தரமான அழகுற அச்சிடப்பட்டு, அதே நேரத்தில் மலிவுப்பதிப்புகளாக  குவிக்கப்பட்டுள்ளன. டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், அறிஞர் அண்ணா, காமராசர், கலைஞர், நாவலர், இனமானப் பேராசிரியர் க.அன்பழகன், பேராசிரியர் மா.நன்னன், சாமி.சிதம்பரம், பேராசிரியர் ந.இராமநாதன், புலவர் கோ.இமயவரம்பன்,  கோ.சாமிதுரை, அ.இறை யன், கவிஞர் கலி.பூங்குன்றன், மா.சிங்காரவேலு, பண்டிதர் எஸ்.முத்துசாமிபிள்ளை, பண்டிதர் இ.மு.சுப்பிரமணியம், அ.இராகவன், எழுத்தாளர் மஞ்சை வசந்தன் உள்ளிட்ட ஏராளமானவர்களின் புத்தகங்கள் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடுகள்  சென்னை புத்தகக் காட்சியில் இடம்பெற்றுள்ளன.

தமிழர் தம் மீட்சிக்கான முழு வரலாற்றுப்பின்னணியை அறிந்துகொள் ளும் துடிப்புமிக்க இளையதலைமுறையினருக்கு வாய்ப்பாக சென்னை புத்தகக் காட்சியில் 197, 198, 245, 246 ஆகிய அரங்கு களில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடுகளைத் தேர்வு செய்து கொள்ளும்வகையில் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner