முன்பு அடுத்து Page:

நிழலில்லாத நாள் மாணவர்களுக்கு விஞ்ஞானிகள் விளக்கம்

நிழலில்லாத நாள்  மாணவர்களுக்கு விஞ்ஞானிகள் விளக்கம்

சென்னை, ஏப்.25  நிழலில்லாத நாள் என்று அழைக்கப் படும் "ஜீரோ ஷாடோ டே' குறித்து சென்னை கோட்டூர்புரம்  பெரியார் அறிவியல் தொழில் நுட்ப மய்யத்திலுள்ள பிர்லா கோளரங்கத்தில் பள்ளி, கல்லூரி, ஆராய்ச்சி மாண வர்கள் ஆர்வத்துடன் ஆய்வில் ஈடுபட்டனர். சூரியனை பூமி நாள்தோறும் சுற்றி வந்தாலும் அனைத்து நாள்களும் சூரியன் நமது தலைக்கு மேல் செங்குத்தாக வருவதில்லை. அவ்வாறு தலைக்கு மேல் சூரியன் செங்குத்தாக வரும் நிகழ்வுதான் நிழலில்லாத நாள் "ஜீரோ....... மேலும்

25 ஏப்ரல் 2019 16:16:04

நிழலில்லாத நாள் மாணவர்களுக்கு விஞ்ஞானிகள் விளக்கம்

நிழலில்லாத நாள்  மாணவர்களுக்கு விஞ்ஞானிகள் விளக்கம்

சென்னை, ஏப்.25  நிழலில்லாத நாள் என்று அழைக்கப் படும் "ஜீரோ ஷாடோ டே' குறித்து சென்னை கோட்டூர்புரம்  பெரியார் அறிவியல் தொழில் நுட்ப மய்யத்திலுள்ள பிர்லா கோளரங்கத்தில் பள்ளி, கல்லூரி, ஆராய்ச்சி மாண வர்கள் ஆர்வத்துடன் ஆய்வில் ஈடுபட்டனர். சூரியனை பூமி நாள்தோறும் சுற்றி வந்தாலும் அனைத்து நாள்களும் சூரியன் நமது தலைக்கு மேல் செங்குத்தாக வருவதில்லை. அவ்வாறு தலைக்கு மேல் சூரியன் செங்குத்தாக வரும் நிகழ்வுதான் நிழலில்லாத நாள் "ஜீரோ....... மேலும்

25 ஏப்ரல் 2019 16:16:04

குமரி மாவட்டத்தில் 10,000 வாக்காளர் நீக்கத்தை ஒப்புக்கொண்ட அதிகாரிகள்

நாகர்கோவில், ஏப்.25, குமரி மாவட்ட வாக்காளர் பட்டியலில் கடந்த 8 மாதத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் நீக்கப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் கடந்த 3 ஆண்டு களில் 45,412 வாக்காளர் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக விளக்கம் ஏதும் வழங்கப்பட வில்லை. தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குபதிவு கடந்த 18ஆம் தேதி நடை பெற்றது. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் உள்ள வாக்காளர்களில் பலரும் வாக்கு சாவடிகளுக்கு....... மேலும்

25 ஏப்ரல் 2019 16:11:04

மே 23ஆம் தேதி காலை 6 மணி வரை அஞ்சல் ஓட்டுப் போட அனுமதிக்க வேண்டும் தேர்தல் ஆணையத்துக்கு ஆர்எஸ் பார…

சென்னை, ஏப்.25, மே 23ஆம் தேதி காலை 6 மணி வரை தேர்தல் பணியில் இருந்த அரசு ஊழியர்கள் அஞ்சல் ஓட்டுப் போட அனுமதிக்க வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையத் துக்கு கடிதம் எழுதியுள்ளார். தலைமை தேர்தல் ஆணை யர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அவர் அனுப்பி யுள்ள கடிதத்ததில் கூறியுள்ள தாவது: அஞ்சல் ஓட்டுகளை பதிவு செய்வதில் தேர்தல் ஆணையத் தின் விதிகள் முறையாக....... மேலும்

25 ஏப்ரல் 2019 16:01:04

பகுதிநேரமாக எம்.பில் படித்த ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை திருப்பித்தர உத்தரவு 800…

சேலம்,ஏப்.25, தமிழக பள்ளிக் கல்வித்துறையின்கீழ் 6 ஆயிரம் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல் பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் 30 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள், முதுகலைப் பட்டம் படித்தால் ஒரு ஊக்க ஊதியமும், எம்பில் அல்லது எம்எட் படித்தால் மற்றொரு ஊக்க ஊதியமும் வழங்கப்படுகிறது. இதனிடையே கோவை மண் டலத்திற்குட்பட்ட ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட் டங்களில்....... மேலும்

25 ஏப்ரல் 2019 15:48:03

வாக்கு எண்ணும் மய்யங்களுக்குள் யாரையும் அனுமதிக்கக் கூடாது தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவு

வாக்கு எண்ணும் மய்யங்களுக்குள் யாரையும் அனுமதிக்கக் கூடாது  தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவு

சென்னை, ஏப்.25  வாக்கு எண்ணும் மய்யங்களுக்குள் அடையாள அட்டை இல்லாத சம்பந்தமில்லாத நபர்கள்  யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் மக்களவை, சட்டப் பேரவை இடைத்தேர்தலில் பயன் படுத்தப்பட்ட வாக்கு இயந்திரங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை வாக்கு எண்ணும் மய்யங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதற்காக 43 வாக்கு எண்ணும் மய்யங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. இதனிடையே, மதுரையில் வாக்கு எண்ணும் மய்யத்துக்குள்....... மேலும்

25 ஏப்ரல் 2019 15:02:03

தேர்தல் பணியின் போது உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிதி ரூ.15 லட்சமாக உயர்வு

சென்னை, ஏப்.25 தேர்தல் பணியின் போது உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் நிவாரண நிதியை ரூ.15 லட்சமாக உயர்த்தி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலை மைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு புதன்கிழமை அளித்த பேட்டி:- தேர்தல் பணியின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங் களுக்கு அளிக்கப்பட்டு வரும் நிதி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக அதிகரிக்கப் பட்டுள்ளது. இதுபோல் தேர்தல் பணியில் இருக்கும் ஒருவர், பயங்கரவாதத் தாக்குதலில் இறந்தால் அவரது குடும்பத்துக்கு....... மேலும்

25 ஏப்ரல் 2019 15:01:03

மதுரை மத்திய சிறையில் கைதிகள் போராட்டம்: 25 கைதிகள் மீது வழக்குப்பதிவு

மதுரை மத்திய சிறையில் கைதிகள்  போராட்டம்: 25 கைதிகள் மீது வழக்குப்பதிவு

மதுரை, ஏப்.25, மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதிகள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப் பட்டுள்ளனர். இந்த நிலையில் சிறைக் கண்காணிப்பாளர் ஊர் மிளா தலைமையில் காவல்துறையினர் கைதிகள் அடைக்கப்பட்டு இருந்த அறைகளில் நேற்று முன்தினம் மாலை 3.30 மணிக்கு திடீர் சோதனை மேற்கொண்டனர். 2 கைதிகள் இருந்த அறையில் சோதனை செய்தபோது, அங்கு கஞ்சா மற்றும் ஆயுதங்களை கைப்பற்றியதாக தெரியவருகிறது. இதன் காரணமாக காவல்துறையினர், சில கைதிகளை....... மேலும்

25 ஏப்ரல் 2019 14:59:02

குமரியில் திடீர் கடல் சீற்றம்- அலையில் சிக்கி 2 பேர் பலி நூற்றுக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்தத…

குமரியில் திடீர் கடல் சீற்றம்- அலையில் சிக்கி 2 பேர் பலி  நூற்றுக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்தது

குளச்சல், ஏப்.25, கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி, வள்ளவிளை உட்பட கடலோர கிராமங்களில் திடீரென கடற்சீற்றம் அதிகரித்துள்ளது. 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் புகுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். காற்றழுத்த தாழ்வு ஏப்ரல் 27,28 தேதிகளில் புயலாக வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், குமரி கடலோர பகுதிகளில் நேற்று மதியம் கடல் சீற்றம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.  ராட்சத அலையில்....... மேலும்

25 ஏப்ரல் 2019 14:50:02

தமிழ்ப் பல்கலை.யில் 193 நூல்களை மறுபதிப்பு செய்ய நடவடிக்கை

தஞ்சாவூர், ஏப்.25  தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் 193 நூல்களை மறுபதிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் துணைவேந்தர் கோ. பாலசுப்ரமணியன். தஞ்சாவூர் கீழ ராஜ வீதி அரண்மனை வளாகத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதிப்புத் துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற 50 சதவீதச் சிறப்புக் கழிவு விற்பனை தொடக்க விழாவில்  பங்கேற்று மேலும் அவர் பேசியதாவது: இந்தச் சிறப்புக் கழிவு விற்பனை மே 8ஆ-ம் தேதி வரை நடைபெறும். இப்பல்கலைக் கழகத்தின் பதிப்புத் துறை....... மேலும்

25 ஏப்ரல் 2019 14:50:02

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜாக்டோ-ஜியோ போராட்டம்: வழக்குகளை திரும்ப பெற அரசு பரிசீலனை

சென்னை, பிப். 12- ஜாக்டோ-ஜியோ நடத்திய போராட் டத்தில் பங்கெடுத்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்கப் பட்டு வருவதாக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக் குமார் கூறினார்.

சட்டப்பேரவையில் 11.2.2019 அன்று பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, “நியாயமான கோரிக்கை களை வலியுறுத்தியும், தேர்தல் அறிக்கையில் அதிமுக குறிப்பிட்டுள்ளதை நிறைவேற்ற வலியுறுத்தியும்தான் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். முதலமைச்சரோடு பேச வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது தற்காலிக நீக்கம், இடமாறுதல் போன்ற துறை ரீதியான பழி வாங்கல் நடவடிக்கைகளும், காவல்துறை நடவடிக்கைகளும் மேற்கொள் ளப்படுகிறது. எனவே, அந்த வழக்குகளை திரும்பப்பெறவேண்டும் என்றார்.

ஜாக்டோ-ஜியோ அமைப்புகளோடு பேச்சுவார்த்தை நடத்த இந்த அரசுக்கு ஒரு பைசாகூட செலவு ஏற்படப் போவதில்லை. அப்படியிருக்கும் போது அவர்களை அழைத்துப் பேசி சுமூகமான சூழலை உருவாக்க வேண்டும். மீண்டும் போராடும் சூழலை உருவாக்கக்கூடாது. சிறீதர், சித்திக் தலைமையிலான குழுக்கள் அளித்த அறிக்கைகள் மீது என்ன நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது? என்று கேட்டார்.

காங்கிரஸ் உறுப்பினர் பிரின்சும் இதே கேள்வியை எழுப்பினர்.இவற்றிற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் டி.ஜெயக் குமார், “ஜன.22 முதல் 29 வரை வேலை நிறுத் தத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோவினர் மீது காவல்துறையினர் 86 வழக்குகள் பதிவு செய்தனர். 6 ஆயிரத்து 527 பேர் கைது செய்யப் பட்டனர். இவர்களில் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தியபோது, 4 ஆயிரத்து 871 பேரை நீதிமன்றம் பிணையில் விடுவித்தது. ஆயிரத்து 656 பேர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர் என்றார்.

வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று 29.1.2019 அன்று வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர். இதனையடுத்து நீதிமன்றக் காவலில் இருந்தவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப் பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவது குறித்து அரசு ஆராய்ந்து முடிவு செய்யும் என்று குறிப்பிட்ட அவர், போக்குவரத்துக்கு இடையூறாக, சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் உட்படுத்தப் பட்டவர்கள் மீது வழக்குப் பதிவுப் செய்யப்பட்டு, நிலுவையில் உள்ள வழக்குகளின் தன்மையை பொறுத்து அதனை திரும்பப்பெறுவது குறித்து அரசு பரிசீலிக்கும் என்றார்.

தமிழகத்துக்கு நிதி வழங்காத

மத்திய அரசு

தமிழக சட்டப்பேரவையில் நேற்று (11.2.2019) நிதிநிலை அறிக்கை மீது விவாதம் நடைபெற்றது அதில் கலந்து கொண்டு பேசிய அதிமுக உறுப்பினர் செம்மலை,“உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு 3,822 கோடி ரூபாய் நிலுவை வைத்துள் ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசு கேட்ட தொகையில் வெறும் 900 கோடி ரூபாய் மட்டுமே கொடுத் துள்ளது. இதுபோன்று பல்வேறு இனங்களில் மத்திய அரசாங்கத்திடமிருந்து கிடைக்க வேண்டிய நிதி வராமல் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.ஜிஎஸ்டி மூலம் மாநில அரசுக்கு மத்திய அரசிடமிருந்து பங்குத் தொகையாக 5,454 கோடி ரூபாய் வர வேண்டும். ஆனால் இதுவரைக்கும் அந்த தொகையை மத்திய அரசு விடுவிக்க வில்லை. இதனால் மாநில அரசுக்கு கிடைக்கவேண்டிய 155 கோடி ரூபாய் கிடைக்காமல் போனது என்றும் கூறினார்.

இரங்கல்

தமிழக சட்டப்பேரவை நேற்று காலை 10 மணிக்கு கூடியதும், முன் னாள் உறுப்பினர்கள் ஆர்.ராசமாணிக்கம், கி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பிறகு, உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் இரங்கல் செலுத்தினர்.

ஒரு நபர் குடும்ப அட்டைக்கும்

பொருட்கள் உண்டு

ஒரு நபர் குடும்ப அட்டைகளுக்கு உணவுப் பொருட்கள் நிறுத்தப்பட மாட்டாது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் விஜய தாரணி, குமரி மாவட்டத்தில் ஒரு நபர் குடும்ப அட்டை களுக்கு ரேசன் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், “தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஒரு நபர் குடும்ப அட்டைகளுக்கு அனைத்து பொருட்களும் வழங்கப்படுகின்றன. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் அரசின் சலுகைகளைப் பெறுவதற்காக ஒரே குடும் பத்தில் தனித்தனியாக பலர் குடும்ப அட்டைகள் பெற்றுள்ளதாக புகார் வந்தது. அதனடிப்படையில் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி 33 ஆயிரம் போலி அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன” என்றார்.

மத்திய அரசுக்கு அதிமுக வக்காலத்து! காங். கடும் கண்டனம்

தமிழக சட்டப்பேரவையில் நேற்று (11.2.2019) நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி கலந்து கொண்டு பேசுகையில்,“

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் அநீதி இழைக்கப் பட்டிருப்பதை இந்த நிதிநிலை அறிக்கை ஒப்புக் கொண்டுள் ளது என்றும் மத்திய அரசாங் கத்திடம் நிதி பெற முடிய வில்லை என்பதை பக்கத்துக்கு பக்கம் தெரிவித்திருப் பதையும்” சுட்டிக்காட்டினார்.கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி குறைந்து கொண்டே வருகிறது. இதே நிலை நீடித்தால் மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடுவிழா காண வேண்டி வரும். எனவே, நிதியை ஜாக்கிரதையாக கையாள வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஓ பன்னீர்செல்வம்,“ பொருளாதார வீழ்ச்சிக்கு மாநில அரசு மட்டும் பொறுப் பல்ல. மத்திய அரசுதான் காரணமாகும். நிதிக்குழு மாநிலங்களுக்கு நிதியை பகிர்ந்தளிப்பதில் நியாயமான நடைமுறைகளை பின்பற்றவில்லை.

ஒன்பதாவது நிதிக் குழுவிலிருந்து படிப்படியாக நமது மாநிலத்துக்கு வழங்க வேண்டிய நிதி மட்டுமல்ல மானி யத்தையும் குறைத்து விட்டது. மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்களின் பங்கை முழுமையாகவும் கொடுப்பதில்லை. மாநில அரசு அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் பொருளாதாரத்தில் நிலையான வளர்ச் சியை எட்ட முடிந்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய விஜயதாரணி, “புதிய வேலை வாய்ப்புகள் இல்லாத நிலையில், தனிநபர் வருமானமும் குறைந்துவிட்டது என்றும் கடுமையாக சாடினார்.மீண்டும் குறுக்கிட்ட நிதி அமைச்சர், “தனிநபர் வருமானம் குறைய விலை உயர்ந்துள்ளது” என்றார்.

மீண்டும் விஜயதாரணி பேசியபோது மத்திய அரசு குறித்து அவர் கூறிய கருத்தை பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் அவை குறிப்பிலிருந்து நீக்கம் செய்ததற்கு விஜயதாரணி கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றகுழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி,‘ மத்திய பாஜக அரசு தமிழகத் திற்கு நிதி வழங்காமல் தொடர்ந்து வஞ்சிக் கிறது என்றுதான் எங்கள் உறுப்பினர் சொன்னார். அதில் தவறு என்ன இருக்கிறது. அவர் உண்மையைதானே சொன்னார். தமிழக அரசு வஞ்சம் செய்கிறது என்றா? சொன்னார். இல்லை. இதை நீக்க வேண்டிய அவசியம் இல்லை? என்றார்.

பேரவை துணைத் தலைவர், முதலமைச்சர், துணை முதலமைச்சரோ பதில் சொல்லாமல் அமைதி காத்த நிலையில் மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார்,

“நாங்கள் மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்கவில்லை. ஆதரிக்க வேண்டிய நேரத்தில் ஆதரிப்போம், எதிர்க்க வேண்டிய நேரத்தில் எதிர்ப்போம் என்று கூறிய அவர், இலங்கை முள்ளி வாய்க்கால் பிரச்சினையோடு இந்த வாதத்தை ஒப்பிட்டு திசை திருப்ப முயன்றதால் திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது.

ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.2000 உதவி

சட்டசபையில் முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110ஆவது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பல மாவட்டங்களில் ‘கஜா’ புயலின் தாக்கத்தினாலும், பருவமழை பொய்த்ததன் காரணமாக தற்போது ஏற் பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங் களுக்கும், குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழி லாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், கைத்தறி தொழி லாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதனால், கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங்களும், நகர்ப்புறத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்களும், ஆக மொத்தம் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி உதவியைப் பெறுவர்.

இதற்கென 1,200 கோடி ரூபாய் 2018-2019 துணை மானியக் கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner