Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, பிப்.4-கன்னியாகுமரி, பாளையங்கோட்டையில் உள்ள அரசு ஆயுர்வேத, சித்த மருத்துவக் கல்லூரி களின் அங்கீகாரம் ரத்து செய்து விட்ட தாக, மத்திய அரசு தரப்பில் உயர் நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் பாளையங் கோட்டை அரசு சித்த மருத்துவக் கல் லூரியில் படித்துவரும் வெங்கட கிருஷ்ணன், பிரியா உட்பட 7 மாண வர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப் பதாவது:

நாங்கள் இந்த கல்லூரியில் பட்ட மேற்படிப்பு இந்த ஆண்டு சேர்ந்துள் ளோம். கல்லூரிக்கு அங்கீகாரம் இல்லா மலேயே அரசு, மாணவ  மாணவிகளை சேர்த்துக் கொண்டது. மாணவர் சேர்க்கைக்கு கடந்த டிசம்பர் மாதம் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதுவரை வகுப்பு தொடங்கவில்லை. இதனால், மாணவர்கள் பாதிக்கப்பட்டு ள்ளனர். வகுப்பு தொடங்க நீதிமன்றம் கல்லூரிக்கு உத்தரவிட வேண்டும்.

- இவ்வாறு வழக்கில் கூறப்பட் டுள்ளது.

இந்த வழக்கை நீதிபதி ராஜேஸ்வரன் விசாரித்தார். அப்போது, மத்திய அரசு சார்பாக மூத்த வழக்குரைஞர் ஷாஜா முகைதீன் ஹிஸ்தி ஆஜராகி, பாளையங் கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரிக்கும், கன்னியாகுமரி அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிக்கும் அடிப்படை வசதிகள் இல்லாததால் அங்கீகாரம் வழங்க மத்திய அரசு மறுத்து விட்டது என்று கூறினார்.

அப்போது, தமிழக அரசு சார்பாக வழக்குரைஞர் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி, சித்த மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் தரமறுத்த மத்திய அரசு உத்தரவை எதிர்த்து புதிய வழக்கு தாக்கல் செய்யப் போகிறோம் என்றார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்ய அனுமதி வழங்கி, வரும் 10ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.



.
 

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்