Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோவை, பிப்.21- அறிவார்ந்த சமு தாயத்தை உருவாக்க இன்றைய கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கூறினார்.

கோவை பீளமேடு கொடிசியா கண்காட்சி அரங்கில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் 16ஆவது மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;-

ஆசிரியர் பணி அறப்பணியாகும். இன்று தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் ஆசிரியர்-மாணவர், பெற்றோர்-குழந் தைகள் ஆகியோருக்கு இடையிலான இடைவெளி அதிகமாகி விட்டது. முன்பெல்லாம் குழந்தைகள் மகிழ்ச்சியில் திளைப்பார்கள். ஆனால், இப்போது அவர்களுக்கு விடுமுறை கிடைப்பது இல்லை. விடுமுறை நாட்களில் கூட ஏதாவது சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்பப் படுகிறார்கள். தகவல் தொழில் நுட்பத்தால் நன்மைகள் கிடைத்தாலும் வன்முறையும் அதிகமாகி விட்டது. பெற்றோர்கள் தங் களது குழந்தைகளுடன் அதிகமான நேரத் தை செலவு செய்ய வேண்டும்.

வகுப்புகளில் விவாத மேடைகள், நாடகம், நடனம், கவிதை, கலாச்சார கருத்தரங்குகள் நடைபெற வேண்டும். அப்போதுதான் அறிவார்ந்த சமுதாயம் உருவாகும். வெற்றி தோல்வியை மாண வர்கள் ரசிக்க வேண்டும். இன்றைய கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும். பாடச்சுமையைக் குறைக்க வேண்டும். 6ஆம் வகுப்புவரை பெற்றோர்கள் அரவ ணைப்பில் மாணவர்கள் படிக்கும்படி பாடங்கள் இருக்க வேண்டும். 7ஆம் வகுப்பிற்கு மேல் சிந்திக்கும் திறனையும், கனவு காணும் திறனையும் வளர்க்க வேண்டும். மாணவர்களைக் கேள்வி கேட்க விடவேண்டும். மாணவர்கள் கேட்கும் கேள்விக்கு ஆசிரியர்கள் சரியான பதிலைக் கூறவேண்டும்.

மாணவர்களின் திறமைகளைக் கண்ட றிந்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டி யது ஆசிரியரின் கடமை. அப்போதுதான் அறிவார்ந்த சமுதாயம் உருவாகும். பள்ளியில் கட்டமைப்பு வசதி இருந்தால் மட்டும் போதாது. திறமையான ஆசிரியர் கள் இருந்தால் மட்டுமே தரமான கல்வியை கொடுக்க முடியும். நான் படித்த ராமேஸ் வரம் பள்ளி ஓலைக்கூரைதான். இருந் தாலும், அங்கு கற்றுக்கொடுத்த ஆசிரி யர்கள் அனைவரும் மகான்கள்.

எனது வகுப்பில் படித்த 55 மாணவ-மாணவிகளும் மேல்படிப்புக்குச் சென்றார் கள். பள்ளியின் கட்டடத்தாலோ, விளம் பரத்தாலோ தரமான கல்வியைத் தரமுடி யாது.

கடந்த 2 மாதத்திற்கு முன் கேரள மாநிலத்தில் உள்ள பரவூருக்கு சென்றேன். அங்கு 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் முன்னிலையில் உரையாற்றினேன். அப்போது அதில் 10 மாணவ-மாணவிகளைத் தேர்வு செய்து கேள்வி கேட்குமாறு கூறினேன். அதில் ஒரு மாணவி தனக்கு மனோதத்துவம் (சைக்காலஜி) பாடம் படிக்க விருப்பம் இருப்பதாகவும், ஆனால் அவருடைய தாய்-தந்தை என்ஜினீயரிங் படிக்க வேண்டும் என்று வற்புறுத்துவ தாகவும், எனவே நீங்கள்தான் எனக்கு விளக்கம் தர வேண்டும் என்று அந்த மாணவி கேட்டாள். நான் அதற்கு பதில் அளிக்கும்போது என்ஜினீயரிங் படித்தால் உடனே வேலை கிடைக்கும் என்று உங்களது பெற்றோர் நினைப்பது சரிதான். ஆனால் சாதிக்க முடியாது. ஆனால் மாணவ-மாணவிகள் விரும்பும் பாடத்தை படித்தால் சாதனை புரியலாம்'' என்றேன். அப்போது அந்த கூட்டத்தில் இருந்த அந்த மாணவியின் பெற்றோரும் மாணவியின் விருப்பப்படியே படிக்க விட்டு விடுவதாக'' கூறினார்கள்.
- இவ்வாறு அப்துல்கலாம் பேசினார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Comments 

 
#1 Ajaathasathru 2012-02-21 21:24
அய்யா ! அப்துல் கலாம் அவர்களே ! பெற்றோர்களாகிய நாங்கள் கஷ்டபட்டாலும் எங்கள் மக்கள் நன்கு படித்து , நல்ல வேலைக்கு போயி வளமான வாழ்வு வாழத்தான், உடனே வேலை கிடைக்கும் படிப்பை தேர்ந்து எடுக்க சொல்கிறோம்! தங்கள் யோசனைப்படி ஆறு வயது வரை பெற்றோருடன் இருந்தால், எங்கள் பிள்ளைகளும் எங்களைப்போல தற்குரியாகதான் வளரும். எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் சமுதாய கல்விக்கு பிள்ளைகளை அனுப்பவேண்டும். இல்லையேல் பழைய குலக்கல்வி தான் கொல்லைப்புறமாக வரும்! எச்சரிக்கை!
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்