Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நெல்லை, பிப்.22- சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அலுவலர் பிரவீன்குமார் நெல்லையில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பிரவீன் குமார் கூறியதாவது: சங்கரன் கோவில் தொகுதி தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படை யாகவும் நடத்த தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கு பயன்படுத் தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாளை முதல் பெல் நிறுவனப் பொறியாளர் களால் சோதனை நடத்தப்படும். தேர்தல் பணியில் 1,256 அலுவலர்கள் ஈடுபடுத்தப் படுகின்றனர். 25 மண்டல அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சங்கரன்கோவிலில் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், சாலை போடும் பணிகள் நடப்பதாகவும் அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்தனர். ஆதாரத்துடன் புகார் தந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதிக்குள் நுழையும் பகுதிகளில் சோ தனைச் சாவடி ( செக் போஸ்ட்)  அமைத்தும், வீடியோ மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் பார்வையாளர்கள், செலவுக் கணக்கு பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். வேட்பாளர்கள் அதிக பட்சமாக ரூ.16 லட்சம் வரை செலவு செய்யலாம். தேர் தலை சீர்குலைக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது 107 பிரிவின் கீழ் வழக்கு தொடர உத்தர விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தகுந்த ஆவணங்களுடன் ரூ.2.5 லட்சம் வரை பணம் எடுத்துச் செல்லலாம். இதற்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்து வருமான வரித்துறை மூலம் விசாரணை நடத்தப்படும். ஆதாரமின்றி பணம் எடுத்துச் சென்றால் ரூ.20 ஆயிரம் என்றாலும் பறிமுதல் செய்யப்படும். - இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்