முன்பு அடுத்து Page:

பி.எஸ்.என்.எல். சார்பில் தமிழகத்தில் விரைவில் 4 ஜி சேவை: தமிழக வட்ட தலைமை பொதுமேலாளர் தகவல்

பி.எஸ்.என்.எல். சார்பில் தமிழகத்தில் விரைவில் 4 ஜி சேவை: தமிழக வட்ட தலைமை பொதுமேலாளர் தகவல்

சேலம், பிப்.17  பி.எஸ்.என்.எல். நிறுவனம் சார்பில் விரை வில் கோவை மற்றும் சேலத்தில் 4 ஜி சேவை தொடங்கப்படும் என்று பி.எஸ்.என்.எல். தமிழக வட்ட தலைமை பொதுமேலாளர் வி.ராஜூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட  செய்தி:- பி.எஸ்.என்.எல். நிறுவனம் விரைவில் தமிழகத்தின்  கோவை, சேலம் நகரங்களில் முதல் கட்டமாகவும் திருச்சி, மதுரை, வேலூர், நாகர்கோவில் ஆகிய நகரங்களில் அடுத்த கட்டமாகவும் 4ஜி சேவையைத் தொடங்க உள்ளது. கோவை, சேலம் நகரங்களில் உள்ள பி.எஸ்.என்.எல். மொபைல் வாடிக்கையாளர்....... மேலும்

17 பிப்ரவரி 2019 14:50:02

தென்னை மரத்தூள் மூலம் தட்டு தயாரிப்பு

தென்னை மரத்தூள் மூலம் தட்டு தயாரிப்பு

தஞ்சாவூர், பிப்.17  பிளாஸ்டிக்குக்கு மாற் றாக தென்னை மரத் தூள் மூலம் தட்டு தயா ரிப்பை தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம் கண்டுபிடித் துள்ளது. இக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடை பெற்ற தென்னை மதிப்புக் கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த கருத் தரங்கத்தில் இத்தட்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுகுறித்து கழக இயக்குநர் சி.அனந்தராமகிருஷ்ணன்  தெரிவித்தது: பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியில் அதிகம் விளையக் கூடிய தென்னையைக் கொண்டு பல்வேறு மதிப்புக் கூட்டும்....... மேலும்

17 பிப்ரவரி 2019 14:47:02

சிறுமி பாலியல் வன்கொடுமை: பாதிரியாருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை: பாதிரியாருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருவனந்தபுரம், பிப்.17 கேரளத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வழக்கில், பாதிரி யாருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தலசேரி போக்ஸோ சட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளியான ராபின் வடக்கன் செரிலுக்கு (51) பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களைப் பாதுகாக்கும் சட்டம் (போக்ஸோ), இந்திய தண்டனையியல் சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளின் கீழ் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.வினோத் சனிக்கிழமை....... மேலும்

17 பிப்ரவரி 2019 14:34:02

பெங்களூரு-புதுச்சேரி இடையே புதிய பேருந்து சேவை

பெங்களூரு, பிப்.17  பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்கு புதிய பேருந்து சேவை மார்ச் 1ஆம் தேதி முதல் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்கு மிதமான சொகுசு வசதி கொண்ட (ராஜஅம்சா) புதிய பேருந்து சேவை மார்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. பெங்களூரு-புதுச்சேரி இடையிலான பேருந்து பெங்களூரு-சாந்தி நகர் பேருந்து நிலையத்தில் இருந்து தினமும்....... மேலும்

17 பிப்ரவரி 2019 14:34:02

குழந்தைகள் நலக் குழுக்கள்: தலைவர், உறுப்பினர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை, பிப்.17  குழந்தைகள் நலக் குழுக்களின் தலைவர்,  உறுப்பினர்கள் பணியிடங்களுக்குத் தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்  வெளியிட்ட செய்தி:  கடந்த  2015- ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக் குழுக்களுக்கு தலைவர் (ம) உறுப்பினர்களாக நியமிக்கப்படுவ தற்காக  தொடர்புடைய  மாவட்டங்களில் வசிக்கும் தகுதி வாய்ந்த சமூக பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள்....... மேலும்

17 பிப்ரவரி 2019 13:59:01

ஆளுநராக கிரண்பேடி ஒரு நிமிடம்கூட நீடிக்கக் கூடாது

ஆளுநராக கிரண்பேடி ஒரு நிமிடம்கூட நீடிக்கக் கூடாது

புதுவை முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி, பிப்.17  மக்களுக்கு எதிராகச் செயல்படும் கிரண் பேடி, புதுவை துணைநிலை ஆளுநராக ஒரு நிமிடம் கூட நீடிக்கக் கூடாது என முதல்வர் நாராயண சாமி கூறினார். புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி ஆளுநர் மாளிகை எதிரே நடத்தி வரும் தர்ணா 4-ஆவது நாளாக நேற்றும் (16.2.2019) நீடித்தது. அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: புதுவையில் மக்கள் நலத் திட்டங்களை....... மேலும்

17 பிப்ரவரி 2019 13:59:01

சிங்கப்பூருக்கு கல்விச் சுற்றுலா: மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் 32 பேர் தேர்வு

சிங்கப்பூருக்கு கல்விச் சுற்றுலா:  மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் 32 பேர் தேர்வு

சென்னை, பிப்.17  பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் 32 மாணவ, மாணவிகள் சிங்கப்பூருக்கு கல்விச் சுற்றுலா செல்லத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி கல்வித் துறை, சென்னை கிழக்கு ரோட்டரி கிளப், சிறப்பு தொழிற்பயிற்சிக்கான அறக்கட் டளை அமைப்பு ஆகியவை இணைந்து    மாணவர்களின் அறிவியல் திறனை வளர்க்கும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பல்வேறு அறிவியல் போட்டிகள் நடத்தி, அதில் வெற்றிபெறும் மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர். இத்....... மேலும்

17 பிப்ரவரி 2019 13:29:01

மத்தியிலும் - மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தில் மக்களுக்கு அதிக நம்பிக்கை - தளபதி மு.க.ஸ்டாலின்

மத்தியிலும் - மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தில் மக்களுக்கு  அதிக நம்பிக்கை  - தளபதி மு.க.ஸ்டாலின்

சென்னை, பிப்.17  மக்களவைத் தேர்தலுக்குப் பின் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதில், எங்களை விட மக்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது என்று திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தேனி அருகே வடபுதுப்பட்டி, அன்னை இந்திரா நகர் ஆகிய இடங் களில் திமுக சார்பில் 16.2.2019 அன்று  நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத் தில் அவர் பேசியது: மக்களவைத் தேர்தலுக்குப் பின் மத்தியிலும், தமிழ கத்திலும் ஆட்சி மாற்றம்....... மேலும்

17 பிப்ரவரி 2019 13:20:01

மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் மத்திய - மாநில அரசுகளை அகற்ற பாடுபடுவோம்

மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் மத்திய - மாநில அரசுகளை அகற்ற பாடுபடுவோம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மதுரை மாநாட்டில் தீர்மானம் மதுரை, பிப்.17 மதுரை ஒத்தக்கடையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர்முகைதீன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோதர் மைதீன், அதிரை....... மேலும்

17 பிப்ரவரி 2019 13:08:01

காவல்துறையினரின் தற்கொலையை தடுக்க மன நல ஆலோசனை: நாட்டில் முதல் முறையாக தமிழகத்தில் அறிமுகம்

சென்னை, பிப்.16 பணி நெருக்கடியால் காவலர்களின் தற்கொலையை தடுக்க தமிழக காவல்துறையில் நிறைவு வாழ்வு என்ற மனநல ஆலோசனைத் திட்டம் இந்தியாவிலே முதல் முறையாக தமிழகத்தில் தொடங்கப் பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் பணிச் சுமையால் மன அழுத்தம் அதிகமாகி காவல்துறையினர் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 441 காவல்துறையினர் தற்கொலை செய்துள்ளனர். சில நாட்களுக்கு முன் மயிலாடுதுறை தலைமைக்காவலர் மாமணி (45), மதுரை பட்டாலியன் தலைமைக்காவலர் ராமர்....... மேலும்

16 பிப்ரவரி 2019 16:25:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, பிப்.11 உரிமை களுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு விரோ தமாக பழிவாங்கும் நடவடிக் கைகள் மேற்கொள்வது சட்ட விரோதம் என்று பால கிருஷ் ணன் கண்டனம் தெரிவித்துள் ளார்.  இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் சார்பில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங் களது நியாயமான  கோரிக்கைகளை வலியுறுத்தி 22.1.2019 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பொதுமக்கள், மாணவர்கள் நலன் கருதி போராட்டத்தை திரும்பப் பெற்று அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். ஆனால் பணியில் சேர மறுக்கும் நிலை, தற்காலிகப் பணி நீக்கம் என்று சொல்லி  பணியில் அனுமதிக்காத போக்கு, ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளதாகக் கூறி பணி மறுக்கும் நிலை போன்ற பழிவாங்கல் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இந்த ஊழியர் விரோதப் போக்கை கைவிட  வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது. போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்வது சட்ட விரோதம் என ஏற்கனவே உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி யுள்ளது.  அத்தீர்ப்பையும் மீறி தமிழக அரசு செயல்பட்டு வருவது சட்டவிரோதமாகும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

தேர்தலில் அதிக இடங்களை கேட்டு அதிமுகவை மிரட்டும்  பாஜக

முத்தரசன் குற்றச்சாட்டு

புதுக்கோட்டை, பிப்.11 தமிழகத்தில் கட்சியை வளர்க்க அதிமுகவை மிரட்டி கூடுதல் இடங்களை பாஜக கேட்டு வருவ தாக முத்தரசன் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில்  பாஜக கட்சியை வளர்க்க, அதிமுகவை மிரட்டி குரல் வளையை நெரித்து தேர்தலில்  அதிக இடங்களை கேட்டு வருகிறது. இருப் பினும் பாஜக தமிழகத்தில் ஒரு போதும் வளராது. திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 9  கட்சிகள் உள்ளது. தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப் பூர்வமாக இதுவரை பேசவில்லை. தேர்தல் அறிவித்த பின்னர் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத் தப்படும்.

கூட்டணி குறித்து இறுதி  முடிவு எடுக்க வேண்டியது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான். தமிழகத்தில்  ஏற்பட்ட இயற்கை சீற்றங்கள்போது நேரில் வராத பிரதமர் மோடி தற்போது தேர்தல்  பிரசாரத்துக்கு தமிழகம் வருகிறார். அவருக்கு மக்கள் தகுந்த பதிலை  சொல்வார்கள். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், பல  கட்சிகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் கூட்டணிகள் தொடர்பான கருத்துக்கள்  வெளி வந்தாலும் அவை அனைத்தும் மர்மங்களாகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner