முன்பு அடுத்து Page:

அதிமுகவினர் கோடி கோடியாக எவ்வளவுதான் பணத்தைக் கொட்டிக் கொடுத்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்ற உறுதி …

அதிமுகவினர் கோடி கோடியாக எவ்வளவுதான் பணத்தைக் கொட்டிக் கொடுத்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்ற உறுதி எடுத்து விட்டார்கள்!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்  பேட்டி சென்னை, ஏப்.18 அதிமுகவினர் கோடி கோடியாக எவ்வளவுதான் கொட்டிக் கொடுத்தாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள்; இந்த ஆட்சியை அகற்ற உறுதி எடுத்து விட்டார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் சென்னை கோபாலபுரத்தில் நேற்று அளித்த பேட்டி:  மோடி பிரதமராக இருக்கின்ற வரைக்கும் எது வேண்டுமானாலும் நடக்கும். ஏற்கனவே, அமலாக்கத் துறையை, சிபிஅய்யை, வருமான வரித்துறையை வைத்து எப்படி....... மேலும்

18 ஏப்ரல் 2019 16:01:04

ஆண்டிபட்டி துப்பாக்கிச்சூடு - அரசியல் கட்சிகளுக்கான அச்சுறுத்தல்

இரா. முத்தரசன் பேட்டி திருவாரூர், ஏப்.18  ஆண்டிபட்டி துப்பாக்கிச்சூடு சம்பவம் அரசியல் கட்சிகளுக்கான அச்சுறுத்தும் நடவடிக் கையாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன் குற்றம்சாட்டினார். திருவாரூரில் செவ்வாய்க்கிழமை இரவு செய்தியாளர் களுக்கு அவர் அளித்த பேட்டி: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்ட காரணத்தால், தேர்தலை சீர்குலைக்க எங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு பல்வேறு இடையூறுகளை....... மேலும்

18 ஏப்ரல் 2019 16:01:04

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிந்த 73 லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பு

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிந்த 73 லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பு

மத்திய அரசு பணிகளில் தமிழர்கள் புறக்கணிப்பு சென்னை, ஏப்.18  மாநிலம் முழுவதும் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 73 லட்சத்து 12 ஆயிரத்து 390 பேர் பதிவு செய்து  வேலைக்காக காத்திருக்கின்றனர். தமிழகத் தில் ஒவ்வொரு மாவட்டத் திலும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் செயல் பட்டு வருகிறது. சென்னை, மதுரையில் மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு....... மேலும்

18 ஏப்ரல் 2019 16:01:04

இலவச விளையாட்டுப் பயிற்சி

வேலூர், ஏப்.18  வேலூர் விஅய்டியின் உடற்கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச கோடைக்கால விளையாட்டுப் பயிற்சி முகாம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 16-ஆம் ஆண்டு விளையாட்டுப் பயிற்சி முகாம் வரும் 22-ஆம் தேதி தொடங்கி மே 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  இந்தப் பயிற்சி முகாமில் கூடைப்பந்து, கைப்பந்து, தடகளம், கராத்தே, கால்பந்து, வளை கோல்பந்து, எறிபந்து, ....... மேலும்

18 ஏப்ரல் 2019 15:15:03

வன்கொடுமை வழக்குகள்: சிறப்பு நீதிமன்றங்களை உடனடியாக அமைக்கக்கோரி வழக்கு

சென்னை, ஏப்.18 எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு , தமிழக அரசு, உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஆகியோர் வரும் 26-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநர் பாடம் ஏ.நாராயணன் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு....... மேலும்

18 ஏப்ரல் 2019 15:15:03

தமிழகம், புதுவையில் 39 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தல்: காலை 7 மணிமுதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

சென்னை, ஏப். 18 தமிழ்நாடு, புதுச்சேரி உள் ளிட்ட 39 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று (18.4.2019) காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்துக்கு 2 ஆவது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு இன்று (18.4.2019) தேர்தல் நடைபெறுகிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு சட்டசபை....... மேலும்

18 ஏப்ரல் 2019 14:42:02

10 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய கல்வி நிறுவனங்களில் கூடுதலாக 2 லட்சம் இடங்கள்; அமைச்சரவை…

சென்னை, ஏப்.17 பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில், நாடு முழுவதுமுள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் கூடுதலாக 2 லட்சம் இடங்களை உருவாக்க மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கியது. இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: மத்திய கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையின் போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்து வதற்கு, பிரதமர் மோடி தலை....... மேலும்

17 ஏப்ரல் 2019 17:08:05

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சொத்துகள் விவரங்கள் கல்வித்துறை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும் உயர்நீதி…

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சொத்துகள் விவரங்கள்  கல்வித்துறை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும்  உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஏப்.17  அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பணி பதிவேட்டில் உள்ள சொத்துகளின் விவரங்களுக் கும், அவர்களது பெயர்களில் உள்ள சொத்துகளின் விவரங்களுக்கும் வித்தியாசம் காணப்பட்டால் ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியா ளர்களின் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு முறை கட்டாயமாக்கப்படும் என தமிழக அரசு....... மேலும்

17 ஏப்ரல் 2019 17:03:05

கடன்கார ஆட்சி கம்பியை நீட்டட்டும்!

தமிழ்நாடு அரசின் இன்றைய கடன் நிலை என்ன தெரியுமா? கொஞ்சம்(?)தான், வெறும் 4 லட்சம் கோடி ரூபாய்தான். இதில் எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைந்த காலகட்டத்தில் மட்டும் 1.45 லட்சம் கோடி 20.11.2017 இல் வணிகவரி, வாகன வரி, பத்திரப் பதிவு வரியை ஒழுங்காக வசூல் செய்யாததால் ஏற்பட்ட இழப்பு ரூ.6471 கோடி. பெட்ரோலிய பொருள்களில் முறையான வசூல் இல்லாமையால் இழப்பு ரூ.1893 கோடி. வரி விதிக்கப்பட வேண்டிய பொருள்கள்மீது....... மேலும்

17 ஏப்ரல் 2019 17:03:05

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, பிப்.11 அய்ந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது குறித்து மாநில அரசு பரிசீலனை செய்யும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

கோபிசெட்டிபாளையம் நகராட்சி நுழைவு அலங்கார வளைவில் காமராஜர் பெயர் பொறித்த கல்வெட்டு கண்டிப்பாக இடம் பெறும். காமராஜருக்குப் புகழ் சேர்க்கும் விதமாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. காமராஜரின் பிறந்த நாளில் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மார்ச் மாத இறுதிக்குள் மாநிலத்தில் உள்ள 1500 பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பில்  அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும். மாணவர்களின் வருகைப் பதிவேடு பயோமெட்ரிக் முறையில் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அரசின் நிதி நிலையைப் பொறுத்து படிப்படியாக அனைத்துப் பள்ளிகளிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். பள்ளிகளுக்குத் தனியாக துப்புரவுத் தொழிலாளர்களை அமர்த்த முடியாத சூழ்நிலை உள்ளது. அய்ந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து மாநில அரசு பரிசீலித்து முடிவு எடுக்கும் என்றார்.

ஆசிரியர்கள் வருகை: இணையத்தில் மட்டுமே பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

சென்னை, பிப்.11 ஆசிரியர்களின் வருகையை  இணையத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஒருங்கிணைந்த கல்வி கூடுதல் மாநில திட்ட இயக்குநர் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்கள் வருகைப் பதிவு, செயலியில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஆசிரியர்களின் வருகையும் அதே செயலியில் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களின் வருகைப் பதிவை தினமும் பதிவு செய்ய வேண்டும். இதில் ஆசிரியர்களின் வருகைப் பதிவை தலைமையாசிரியர் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

வருகைப்பதிவில் ஏதேனும் தவறு இருப்பின் தலைமை யாசிரியர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும். இந்த செயலியின் பதிவுகளை முதன்மைக் கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் கல்வியியல் மேலாண்மை தகவல் மய்யத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கண் காணிக்க வேண்டும். எனவே, ஆசிரியர்களின் வருகைப் பதிவை ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். வேறு எந்த வகையிலும் பதிவு செய்ய இயலாது என அதில் கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner