முன்பு அடுத்து Page:

நிழலில்லாத நாள் மாணவர்களுக்கு விஞ்ஞானிகள் விளக்கம்

நிழலில்லாத நாள்  மாணவர்களுக்கு விஞ்ஞானிகள் விளக்கம்

சென்னை, ஏப்.25  நிழலில்லாத நாள் என்று அழைக்கப் படும் "ஜீரோ ஷாடோ டே' குறித்து சென்னை கோட்டூர்புரம்  பெரியார் அறிவியல் தொழில் நுட்ப மய்யத்திலுள்ள பிர்லா கோளரங்கத்தில் பள்ளி, கல்லூரி, ஆராய்ச்சி மாண வர்கள் ஆர்வத்துடன் ஆய்வில் ஈடுபட்டனர். சூரியனை பூமி நாள்தோறும் சுற்றி வந்தாலும் அனைத்து நாள்களும் சூரியன் நமது தலைக்கு மேல் செங்குத்தாக வருவதில்லை. அவ்வாறு தலைக்கு மேல் சூரியன் செங்குத்தாக வரும் நிகழ்வுதான் நிழலில்லாத நாள் "ஜீரோ....... மேலும்

25 ஏப்ரல் 2019 16:16:04

நிழலில்லாத நாள் மாணவர்களுக்கு விஞ்ஞானிகள் விளக்கம்

நிழலில்லாத நாள்  மாணவர்களுக்கு விஞ்ஞானிகள் விளக்கம்

சென்னை, ஏப்.25  நிழலில்லாத நாள் என்று அழைக்கப் படும் "ஜீரோ ஷாடோ டே' குறித்து சென்னை கோட்டூர்புரம்  பெரியார் அறிவியல் தொழில் நுட்ப மய்யத்திலுள்ள பிர்லா கோளரங்கத்தில் பள்ளி, கல்லூரி, ஆராய்ச்சி மாண வர்கள் ஆர்வத்துடன் ஆய்வில் ஈடுபட்டனர். சூரியனை பூமி நாள்தோறும் சுற்றி வந்தாலும் அனைத்து நாள்களும் சூரியன் நமது தலைக்கு மேல் செங்குத்தாக வருவதில்லை. அவ்வாறு தலைக்கு மேல் சூரியன் செங்குத்தாக வரும் நிகழ்வுதான் நிழலில்லாத நாள் "ஜீரோ....... மேலும்

25 ஏப்ரல் 2019 16:16:04

குமரி மாவட்டத்தில் 10,000 வாக்காளர் நீக்கத்தை ஒப்புக்கொண்ட அதிகாரிகள்

நாகர்கோவில், ஏப்.25, குமரி மாவட்ட வாக்காளர் பட்டியலில் கடந்த 8 மாதத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் நீக்கப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் கடந்த 3 ஆண்டு களில் 45,412 வாக்காளர் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக விளக்கம் ஏதும் வழங்கப்பட வில்லை. தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குபதிவு கடந்த 18ஆம் தேதி நடை பெற்றது. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் உள்ள வாக்காளர்களில் பலரும் வாக்கு சாவடிகளுக்கு....... மேலும்

25 ஏப்ரல் 2019 16:11:04

மே 23ஆம் தேதி காலை 6 மணி வரை அஞ்சல் ஓட்டுப் போட அனுமதிக்க வேண்டும் தேர்தல் ஆணையத்துக்கு ஆர்எஸ் பார…

சென்னை, ஏப்.25, மே 23ஆம் தேதி காலை 6 மணி வரை தேர்தல் பணியில் இருந்த அரசு ஊழியர்கள் அஞ்சல் ஓட்டுப் போட அனுமதிக்க வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையத் துக்கு கடிதம் எழுதியுள்ளார். தலைமை தேர்தல் ஆணை யர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அவர் அனுப்பி யுள்ள கடிதத்ததில் கூறியுள்ள தாவது: அஞ்சல் ஓட்டுகளை பதிவு செய்வதில் தேர்தல் ஆணையத் தின் விதிகள் முறையாக....... மேலும்

25 ஏப்ரல் 2019 16:01:04

பகுதிநேரமாக எம்.பில் படித்த ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை திருப்பித்தர உத்தரவு 800…

சேலம்,ஏப்.25, தமிழக பள்ளிக் கல்வித்துறையின்கீழ் 6 ஆயிரம் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல் பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் 30 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள், முதுகலைப் பட்டம் படித்தால் ஒரு ஊக்க ஊதியமும், எம்பில் அல்லது எம்எட் படித்தால் மற்றொரு ஊக்க ஊதியமும் வழங்கப்படுகிறது. இதனிடையே கோவை மண் டலத்திற்குட்பட்ட ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட் டங்களில்....... மேலும்

25 ஏப்ரல் 2019 15:48:03

வாக்கு எண்ணும் மய்யங்களுக்குள் யாரையும் அனுமதிக்கக் கூடாது தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவு

வாக்கு எண்ணும் மய்யங்களுக்குள் யாரையும் அனுமதிக்கக் கூடாது  தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவு

சென்னை, ஏப்.25  வாக்கு எண்ணும் மய்யங்களுக்குள் அடையாள அட்டை இல்லாத சம்பந்தமில்லாத நபர்கள்  யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் மக்களவை, சட்டப் பேரவை இடைத்தேர்தலில் பயன் படுத்தப்பட்ட வாக்கு இயந்திரங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை வாக்கு எண்ணும் மய்யங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதற்காக 43 வாக்கு எண்ணும் மய்யங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. இதனிடையே, மதுரையில் வாக்கு எண்ணும் மய்யத்துக்குள்....... மேலும்

25 ஏப்ரல் 2019 15:02:03

தேர்தல் பணியின் போது உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிதி ரூ.15 லட்சமாக உயர்வு

சென்னை, ஏப்.25 தேர்தல் பணியின் போது உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் நிவாரண நிதியை ரூ.15 லட்சமாக உயர்த்தி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலை மைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு புதன்கிழமை அளித்த பேட்டி:- தேர்தல் பணியின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங் களுக்கு அளிக்கப்பட்டு வரும் நிதி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக அதிகரிக்கப் பட்டுள்ளது. இதுபோல் தேர்தல் பணியில் இருக்கும் ஒருவர், பயங்கரவாதத் தாக்குதலில் இறந்தால் அவரது குடும்பத்துக்கு....... மேலும்

25 ஏப்ரல் 2019 15:01:03

மதுரை மத்திய சிறையில் கைதிகள் போராட்டம்: 25 கைதிகள் மீது வழக்குப்பதிவு

மதுரை மத்திய சிறையில் கைதிகள்  போராட்டம்: 25 கைதிகள் மீது வழக்குப்பதிவு

மதுரை, ஏப்.25, மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதிகள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப் பட்டுள்ளனர். இந்த நிலையில் சிறைக் கண்காணிப்பாளர் ஊர் மிளா தலைமையில் காவல்துறையினர் கைதிகள் அடைக்கப்பட்டு இருந்த அறைகளில் நேற்று முன்தினம் மாலை 3.30 மணிக்கு திடீர் சோதனை மேற்கொண்டனர். 2 கைதிகள் இருந்த அறையில் சோதனை செய்தபோது, அங்கு கஞ்சா மற்றும் ஆயுதங்களை கைப்பற்றியதாக தெரியவருகிறது. இதன் காரணமாக காவல்துறையினர், சில கைதிகளை....... மேலும்

25 ஏப்ரல் 2019 14:59:02

குமரியில் திடீர் கடல் சீற்றம்- அலையில் சிக்கி 2 பேர் பலி நூற்றுக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்தத…

குமரியில் திடீர் கடல் சீற்றம்- அலையில் சிக்கி 2 பேர் பலி  நூற்றுக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்தது

குளச்சல், ஏப்.25, கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி, வள்ளவிளை உட்பட கடலோர கிராமங்களில் திடீரென கடற்சீற்றம் அதிகரித்துள்ளது. 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் புகுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். காற்றழுத்த தாழ்வு ஏப்ரல் 27,28 தேதிகளில் புயலாக வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், குமரி கடலோர பகுதிகளில் நேற்று மதியம் கடல் சீற்றம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.  ராட்சத அலையில்....... மேலும்

25 ஏப்ரல் 2019 14:50:02

தமிழ்ப் பல்கலை.யில் 193 நூல்களை மறுபதிப்பு செய்ய நடவடிக்கை

தஞ்சாவூர், ஏப்.25  தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் 193 நூல்களை மறுபதிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் துணைவேந்தர் கோ. பாலசுப்ரமணியன். தஞ்சாவூர் கீழ ராஜ வீதி அரண்மனை வளாகத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதிப்புத் துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற 50 சதவீதச் சிறப்புக் கழிவு விற்பனை தொடக்க விழாவில்  பங்கேற்று மேலும் அவர் பேசியதாவது: இந்தச் சிறப்புக் கழிவு விற்பனை மே 8ஆ-ம் தேதி வரை நடைபெறும். இப்பல்கலைக் கழகத்தின் பதிப்புத் துறை....... மேலும்

25 ஏப்ரல் 2019 14:50:02

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, பிப்.11  மக்களவை தேர்த லுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

நாடு முழுவதும், வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதம் மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் சில வாரங்களில் இந்திய தேர்தல் ஆணையம்  அறிவிக்க உள்ளது. இந்த தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக, அதிமுக, காங் கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட்,  இந்திய கம்யூனிஸ்ட், அமமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

சென்னை மாவட்டத்தில், புதிய வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த பயிற்சி முகாமை, அண்ணாநகர் செனாய்நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு  நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி வைத்தார். அப்போது, சென்னை மாநகராட்சி ஆணையரும் தேர்தல் அதிகாரியுமான கார்த்தி கேயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர் களிடம் கூறியதாவது: வருகின்றமக்களவை தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வி.வி. பேட் (யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்துகொள்ளும்) என்ற நவீன மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்தான்  பயன்படுத்தப்படும். இந்த இயந்திரத்தில் வாக்காளர்கள், நாம் யாருக்கு வாக் களித்தோம் என்பது வெளிப்படையாக தெரிந்து கொள்ள முடியும். வாக்களித்ததும், இயந்திரத்தில் பிரிண்ட் ஆகி, அதில்  இணைக்கப்பட்டுள்ள பாக்சில் ஒரு துண்டு சீட்டு விழும். அந்த துண்டு சீட்டை வாக் களித்தவர்கள் பார்த்து, நாம் யாருக்கு வாக்களித்தோம், எந்த சின்னத்துக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி  செய்து கொள்ளலாம். சிலர் அந்த துண்டு சீட்டை, ஒப்புதல் சீட்டாக கையில் எடுத்துக்கொள் ளலாம் என்று கருதுகிறார்கள். அது தவறானது. அந்த ஒப்புதல் சீட்டு, பொதுமக்கள் எடுத்து செல்ல முடியாது. 7 வினாடிகள் அதை பார்க்க முடியும். சென்னையில் உள்ள 913 வாக்குச்சாவடிகளிலும், பொது மக்கள் பார்வைக்காக 9.2.2019 முதல் 10 நாட்கள் வைக்கப்படும். அவர்கள் மாதிரி  ஓட்டு போட்டு பார்த்து தெரிந்து கொள் ளலாம். அதேபோன்று, தமிழகம் முழு வதும் பொதுமக்கள் பார்வைக்காக வரும் 5 அல்லது 6 நாட்கள் வைக்கப்படும். இவ்வாறு கூறினார். அதன் பின்  கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் விவரம் வருமாறு: தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதி களிலும் மக்களவை தேர்தலுடன் இடைத் தேர்தல் நடத்த வேண்டும் என்று டில்லியில் தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் மனு  அளிக்கப்பட்டுள்ளது.  அது பற்றி உங்கள் கருத்து?

தேர்தல் ஆணையத்திடம்தான் மனு கொடுத்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் அதுபற்றி முடிவு எடுக்கும். தமிழக அளவில் பார்த்தால், வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம்  என அனைத்தும் 100 சதவிகிதம் தயார் நிலையில் இருக்கிறது. அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தலுக்கு தயாராக இருக்கும்படி கடிதம் எழுதி இருக்கிறோம். சட்டம் -ஒழுங்கு பிரச்சினை குறித்தும்  ஆலோசனை நடத் தப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் எப் போது உத்தரவு கொடுத்தாலும் தேர்தலை  நடத்த தமிழக தேர்தல் அலுவலகம் தயாராகவே இருக்கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner