தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர் துரைமுருகன் பேட்டி

சென்னை, பிப். 4- இன்று சட்டமன்ற பேரவை நிகழ்ச்சியிலி ருந்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பேர வைத் தலைவர் அவர்கள் உத்தரவால் வெளியேற் றப்பட்டனர். அதன்பின் சட்டமன்ற பேரவை வளாகத்திற்கு வெளியே தி.மு.க. சட்டமன்ற கட் சித் துணைத் தலைவர் துரைமுருகன் செய்தியா ளர்களிடம் அளித்த பேட்டி வருமாறு:
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை சபை யிலிருந்து வெளியேற்று கிற ஜனநாயகத்திற்கு புறம்பான காரியத்தை பேரவைத் தலைவர் இன் றைக்கு செய்திருக்கிறார். முதலமைச்சர் ஆளுநர் உரைக்கு பதில் அளிக் கிறார். ஆரம்பமே தி.மு. கழகத்தை மறைமுகமாக தாக்குவதிலே முதல்வர் அவர்கள் பெரு முயற்சி எடுத்துக்கொண்டார். அதைக்கூட நாங்கள் தாங்கிக்கொண்டுதான் உட்கார்ந்திருந்தோம். ஆனால் ஏதோ உப தேசம் செய்வதைப் போல் முதலமைச்சர் ஒரு கருத்தை சொன்னார்.
சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அவர்கள் சட்டமன்றத் திற்கு வந்து மக்கள் குறைகளைப் பேச வேண்டும். விவாதத்தில் பங்கேற்க வேண்டும். கேள்விகளைத் தொடுக்க வேண்டும். அதுதான் ஜனநாயக மரபு. அப்படி யில்லாமல் சில தலைவர் கள் வெளியிலேயே உட் கார்ந்துகொண்டு மூத்த உறுப்பினர் ஒருவர் ஒரு கட்சியினுடைய தலை வர் வெளியிலேயே உட் கார்ந்து கொண்டு சட்ட மன்ற நிகழ்ச்சிகளை பத்திரிகைகளிலே எழுது வதும் அறிக்கை விடுவது மாய் இருக்கிறார் என்று அவர் பேச ஆரம்பித்தார்.
ஜனநாயக மரபு
நான் ஒரு கேள்வியைக் கேட்பதற்காக ஒரு பாயிண்ட் ஆஃப் ஆர்ட ரையை கிளப்பினேன். தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அவைக்கு வந்து தவ றாமல் பணியாற்றுவது தான் ஜனநாயக மரபு என்று ஒரு பெரிய தத் துவத்தை சொல்கிறார் முதலமைச்சர் ஜெய லலிதா அவர்கள். ஆனால் இவர் சென்றமுறை தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவைக்கு வந்து எத் தனை நாள் கலந்து கொண்டார்? எத்தனை விவாதங்களில் பங்கேற் றார்? எத்தனை கேள்வி களை தொடுத்தார்? அதை நீங்கள் சொல்ல முடியுமா? என்று அவ ரைக் கேள்வி கேட் பதற்கு எழுந்தேன். ஆனால் நான் இந்தக் கேள்வியைத்தான் கேட் பேன் என்று ஊகித்த முதலமைச்சர் பேசிக் கொண்டே இருந்தார்.
பேரவைத் தலைவர் அவர்கள் முதலமைச் சரை மடக்குவதற்குத் தான் நான் கேள்வி கேட்க எழுந்திருக் கிறேன் என்று கருதி எனக்கு வாய்ப்பு அளிக்க மறுத்துவிட்டார். பொதுவாக சட்டமன் றத்தில் பாயிண்ட் ஆஃப் ஆர்டர் என்பது ஒரு முக்கியமானது. அதைக் கேட்பதற்கு முன் வரி சையில் இருப்பவர்களா னாலும் பின் வரிசையில் இருப்பவர்களானாலும் அதைக் கேட்டால் பேர வைத் தலைவர் அனுமதி அளிக்க வேண்டும். ஆனால் அந்தப் பாயிண்ட் ஆஃப் ஆர்டரையும் அவர் மறுத்துவிட்டார். நான் எந்தக் கருத்தை சொல்கிறேன் என்பதை கேட்பதற்கே பேரவைத் தலைவர் விரும்ப வில்லை. அவர் என்ன சொன்னாலும் நாங்கள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கள் கருதுகிறார்கள். இது பேரவைத் தலைவர் பொறுப்புக்கு அழகல்ல. ஆனாலும் எங்களு டைய தோழர்கள் எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று எழுந்து நின்று குரல் கொடுத்தார்கள். ஆனால் அந்தக் குரல் கொடுப்பதைக் கூட சகிக்காமல் ஆளும் கட் சித் தரப்பிலே வெற்றி வேல் என்ற உறுப்பினர் புத்தகக் கட்டுகளை தூக்கி தூக்கி எங்களு டைய தோழர்கள் உறுப் பினர்கள் மீது அடித் தார்கள். நாலா திக்கு களிலிருந்தும் வேறு சிலரும் புத்தகங்களை வாரி அடித்தார்கள். பேரவைத் தலைவரு டைய கண்ணுக்கு முன் னால் முதலமைச்சரு டைய கண்ணுக்கு முன் னால் அவை முன்னவரு டைய கண்ணுக்கு முன் னால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது ஆளும் கட்சி உறுப் பினர்கள் புத்தகங்களை வீசி தாக்க முற்படு கிறார்கள் என்றால் ஜனநாயக முறைப்படி இந்தச் சபை நடக்கிறதா? ஒரே ஒரு ஆளும் கட் சியைப் பார்த்து ஓங்கி குரல் கொடுத்தார் என்ப தற்காக விஜயகாந்த்தை சீறிப் பாய்ந்து அவரை அவை நடவடிக்கைக ளிலிருந்து விலக்கி வைத் தார்களே. புத்தகக் கட்டுகளை வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுப் பதற்கு பேரவைத் தலை வருடைய ஜனநாயக உணர்வு இருக்குமா? ஆக, போகிற போக் கைப் பார்த்தால் சபை யிலே எதிர்க்கட்சி உறுப் பினர்களுக்கு பாது காப்பு கிடையாது.
எதிர்க்கட்சிகள் முக்கியம் அல்லவா!
எதிர்க்கட்சி இல்லா மல் சபையை நடத்த வேண்டும் என்கிறார்கள். ஜனநாயகத்தில் எதிர்க் கட்சி முக்கியம். எதிர்க் கட்சி இருந்தால்தான் ஜனநாயகம். எதிர்கட்சி இல்லாவிட்டால் அது சர்வாதிகாரம். ஆக, இந்த மன்றத்தை சர்வாதிகார பாணியில் நடத்த வேண்டும் என்று பேரவைத் தலைவர் அவர்கள் விரும்புகிறார். இது மன்றத்தினுடைய பெருமை அல்ல. அவருக்கும் பெருமை அல்ல. ஆனால் இந்த பூச்சாண்டிகளுக்கு எல்லாம் தி.மு.கழக உறுப்பினர்கள் பயப்பட மாட்டார்கள். மீண்டும் மீண்டும் குரலை திருப் பித் திருப்பி ஓங்கி ஒலிப் போம் என்று தெரிவித் துக் கொள்கிறோம் என்று சட்டமன்ற வளாகத் திற்கு வெளியே துரை முருகன் தெரிவித்தார்.