
நீடாமங்கலம், பிப்.4-மின் வாரியம் அறிவித்த மும்முனை மின்சாரத்தை முறையாக விநியோகம் செய்யாததால் திருவாரூர் மாவட்டத்தில் 25,000 ஏக்கர் கோடை நெல் சாகுபடியை விவசாயிகள் புறக்கணித்துள்ளனர். மேலும் நீடாமங் கலத்தில் வயல்களில் கறுப்பு கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, நீடாமங்கலம், நன்னிலம், குடவாசல் தாலுகா பகுதிகளில் பம்ப் செட்டுகளை பயன்படுத்தி கோடை நெல் சாகுபடி 25,000 ஏக்கர் பரபரப்பளவில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
காணும் பொங்கல் முதல் அதற்கான விதை தெளிப்பு உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் ஈடுபடுவர். இந்தாண்டு மின் பற்றாக்குறையால் மோட்டாரை இயக்க முடியாத காரணத்தால் கோடை நெல் சாகுபடியை விவசாயிகள் புறக்கணித்தனர்.
மின் பற்றாக்குறை காரணமாக மின் வாரியம் நாளொன்றுக்கு பகலில் 3 மணி நேரமும், இரவில் 3 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால், அறிவித்தபடி 6 மணி நேரம் மின் விநியோகம் செய்யப்படுவது இல்லை.
நாளொன்றுக்கு 3 மணி நேரத்துக்கும் குறைவாக வே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் பம்ப் செட்டு கள் பழுதாகி தண்ணீர் இறைக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கோடை சாகுபடியை இந்த ஆண்டு நீடாமங்கலம் பகுதி விவசாயிகள் புறக்கணிப்பதாக தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித் துள்ளது.
முதல் கட்டமாக செட்டிசத்திரம் கிராமத்தில் கோடை நெல் சாகு படி செய்வ தில்லை என அறிவித்து, வயல்களில் கறுப்புக் கொடி யேற்றி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தை துவக்கி யுள்ளனர்.
தொடர்ந்து நீடாமங்கலம் தாலுகா முழுவதும் உள்ள பம்ப்செட்டு வயல்களில் கறுப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தப்படும் எனவும், மாவட்டம் முழுவதும் இந்த போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.