முன்பு அடுத்து Page:

பெரியார் கல்வி நிறுவனங்களின் மாணவர்களின் அரிய முயற்சி: புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் தவணைய…

பெரியார்  கல்வி நிறுவனங்களின் மாணவர்களின் அரிய முயற்சி: புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் தவணையாக ஒரே நாளில் நிவாரணப் பொருள்கள் திரட்டி வழங்கப்பட்டன

திருச்சி, நவ. 21  தஞ்சாவூர், திருச்சி, ஜெயங்கொண்டம் பெரியார்  கல்வி நிறுவனங்களின் மாணவர்களின் முயற் சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள் கள் வழங்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு: ‘கஜா ’ புயலால் நாகப்பட்டினம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி மற்றும் திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டப்பகுதிகளில்   வாழ்வாதாரங்களை இழந்து வாடும் மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் வகையில்  தஞ்சாவூர் மற்றும் திருச்சியில் உள்ள....... மேலும்

21 நவம்பர் 2018 16:17:04

கஜா புயல் உருவாகியது முதல் கரையைக் கடந்தது வரை...

நவம்பர் 8: தாய்லாந்தின் வளைகுடா மற்றும் அதையொட்டிய மலேசிய தீபகற்பப் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. நவம்பர் 9: மலேசிய தீபகற்பப் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. நவம்பர் 10: காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது. நவம்பர் 11: கஜா புயலாகி சென்னைக்கு கிழக்கு மற்றும் வடகிழக்கே 930 கி.மீ. தொலைவிலும் ஆந்திர மாநிலம் சிறீஅரிகோட்....... மேலும்

21 நவம்பர் 2018 16:17:04

அரசு ஊழியர் விடுப்பு : புதிய சலுகைகள் அறிவிப்பு

சென்னை, நவ.21  அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்க, சில சலுகைகள் வழங்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விபரம்: சின்னம்மை, தட்டம்மை, பன்றிக்காய்ச்சல், பிளேக், ரேபிஸ் போன்றவை, தொற்று நோய்களாக கருதப்படுவதால், அவற்றால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்கள், கூடுதல் நாட்கள், தற்செயல் விடுப்பு எடுக்க, அரசு அனுமதி அளித்துள்ளது. சின்னம்மை மற்றும் தட்டம்மை பாதிப்புக்கு, ஏழு நாட்கள்; பன்றிக்காய்ச்சலுக்கு, ஏழு முதல், 10 நாட்கள்; பிளேக், ரேபிஸ் போன்றவற்றுக்கு, 10 நாட்கள் வரை,....... மேலும்

21 நவம்பர் 2018 16:17:04

சென்னையில் பெருந்தமனி மருத்துவ சம்மேளனத்தின் சர்வதேச மாநாடு

சென்னை, நவ. 21- 8ஆவது சர்வதேச அயோர்டிக் (பெருந்தமனி) சம்மேளனத்தின் சார்பில் சர்வதேச மாநாடு சென்னையில் நவ. 22 முதல் 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையின் இதயவியல் மற்றும் மேம்பட்ட பெருந்தமனி நோய்களுக்கான சிகிச்சை மய்ய ஆதரவுடன் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 200 க்கும் மேற்பட்ட, பிரபலமான இதயவியல் மற்றும் இதயமார்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், இந்தியா முழுவதிலுமிருந்தும் பங்கேற்கவுள்ளனர். இத்தாலி, ஜெர்மனி,....... மேலும்

21 நவம்பர் 2018 15:13:03

வங்கி, சிறப்பு அதிகாரிகள் பதவி தேர்வுக்கு பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டோருக்கு இலவச பயிற்சி

வங்கி, சிறப்பு அதிகாரிகள் பதவி தேர்வுக்கு பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டோருக்கு இலவச பயிற்சி

சென்னை, நவ.20 அரசு வங்கிகளில் சிறப்பு அதிகாரிகள் பதவிக்கு தேர்வு எழுதும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு பத்து நாட்கள் இலவச பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படும் என யூனியன் வங்கி ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச் சங்கத்தின் தலைவர் கோ.கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று (19.11.2018) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு வங்கிகளில், சிறப்பு அதிகாரிகள் (தகவல்....... மேலும்

20 நவம்பர் 2018 15:39:03

கஜா புயல் மீட்பு பணிகளுக்கு அரசு அலுவலர்கள் ஒருநாள் ஊதியம்

கஜா புயல் மீட்பு பணிகளுக்கு  அரசு அலுவலர்கள் ஒருநாள் ஊதியம்

சென்னை, நவ. 20- கஜா புயல் மீட்பு பணிகளுக்கு தமிழகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ‘கஜா’ புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துரித மீட்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் இதுபோன்று ஏற்பட்ட பல்வேறு இயற்கை....... மேலும்

20 நவம்பர் 2018 14:52:02

கஜா புயல் பாதிப்பு: நிவாரணத்துக்கு ரூ.1000 கோடி முதல்வர் அறிவிப்பு

சென்னை, நவ. 20- கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை செய்ய ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். விவசாயிகள், மீனவர்கள் மற் றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளையும் அவர் அறிவித்துள்ளார். கஜா புயல் பாதிப்பு குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிகா ரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலை மைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர்....... மேலும்

20 நவம்பர் 2018 14:52:02

கஜா புயல் பாதிப்பு: நிவாரண பணிகள் நடக்காததால் மக்கள் சாலை மறியல் பால், குடிநீர், காய்கறிகள் கிடைக்கா…

கஜா புயல் பாதிப்பு: நிவாரண பணிகள் நடக்காததால் மக்கள் சாலை மறியல் பால், குடிநீர், காய்கறிகள் கிடைக்காமல் தவிப்பு

திருச்சி, நவ. 20- கஜா புயல் தாக்கி 4 நாட்களாகியும் டெல்டாவில் நிவாரணப் பணிகள் நடக்காததால் தீராத துயரத்தில் மக்கள் கதறுகின்றனர். அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கிப்போயுள்ளது. பால், குடிநீர், காய்கறிகள், மண்ணெண் ணெய் கிடைக்காமல் மக்கள் அவதிப் படுகின்றனர். இதனால் அவ்வழியாக வரும் வாகனங்களை பொதுமக்கள் மறித்து உணவு கேட்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கஜா புயல் 15ஆம் தேதி  நள்ளிரவு நாகைக்கும் வேதாரண் யத்திற்கும் இடையே கரையை கடந்....... மேலும்

20 நவம்பர் 2018 14:52:02

புயல் நிவாரண நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

புயல் நிவாரண நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

மதுரை, நவ. 20- மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது சுனாமிக்கு அடுத்து அதிர்ச்சி தரத்தக்க சேதத்தை கஜா புயல் 8 மாவட்டங்களில் தந்துள்ளது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் திருமறைக்காடு பகுதியில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. ஏராள மான கால்நடைகள் இறந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு தொற்று நோய் வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள்....... மேலும்

20 நவம்பர் 2018 14:47:02

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அஞ்செட்டி புதிய வட்டம் உதயம்

கிருஷ்ணகிரி, நவ. 20- -கிருஷ்ண கிரி மாவட்டம் தேன் கனிக் கோட்டை வட்டத்தில் சுமார் 20 கிலோ மீ ட்டர் தொலைவில் மலை, காடு சார்ந்த பகுதி அஞ் செட்டி. தேன்கனிக்கோட்டை வட்டத்தில் ஒன்றாக இருந்தது. இதை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று அந்த மாவட்ட மக்களும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதனையேற்ற மாநில அரசும் முதலமைச்சரும் அஞ்செட்டி பகுதியை பிரித்து தனி வட்டமாக உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார்........ மேலும்

20 நவம்பர் 2018 14:33:02

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப். 12 தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட் டால் மக்கள் அவதிக்குள்ளாவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள் ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று (11.9.2018) வெளியிட்ட அறிக்கை: சென்னை, மதுரை மட்டுமல்லாமல் கிராமப்புறங் களிலும் கூட மின்வெட்டு செய்யப்படுவதுடன், விவசாயிகள் தங்களுக்கு தேவையான மின்சாரம் கிடைக்காமல் தவிக் கும் நிலை உள்ளது.

தமிழகத்துக்குத் தேவைப் படும் 13,260 மெகாவாட் மின் சாரத்தில் இப்போது 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம்தான் கிடைக்கிறது. சுமார் 3,260 மெகாவாட் மின்சாரம் பற்றாக் குறையினால் மின் பகிர்மானக் கழகம் முச்சந்தியில் வந்து நிற் கிறது. இந்த பற்றாக்குறையைப் போக்க 1,600 மெகாவாட் மின் சாரம் கொள்முதல் செய்யப்படு கிறது என்றாலும், இன்னும் 1500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையில் மின் பகிர்மா னக்கழகம் தத்தளித்துக் கொண் டிருக்கிறது.

மின் பகிர்மானக் கழகத்தில் அதிமுக ஆட்சியில் உருவாக் கப்பட்டுள்ள வரலாறு காணாத நிதி நெருக்கடியால், பராமரிப்பு செலவுகளுக்குப் பணமில்லா மல் தடுமாற்றம் ஏற்பட்டுள் ளது. மின் பகிர்மான கழகத்துக் குத் தேவையான கேபிள்கள்கூட வாங்க இயலாமல் தவிக்கும் நிலை உள்ளது.

இந்த நிலையில் மின் உற் பத்தி குறித்து மின்துறை அமைச் சர் ஆய்வு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்தாலும், உண்மை என்னவென்றால் ஒரு அறிவிக்கப்படாத மின் வெட்டு தமிழகத்தில் அமல்படுத்தப்படு கிறது என்றும், அதற்கு முன் னோட்டமாகத்தான் இந்த அதிகாரிகள் கூட்டத்தை மின் துறை அமைச்சர் தங்கமணி கூட்டியிருக்கிறார் என்பதும், வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

பராமரிப்புப் பணி என்ற போர்வையிலும் மக்களையும், விவசாயிகளையும், சிறு மற் றும் குறு தொழில் நிறுவனங்க ளையும் கடும் பாதிப்புக்குள் ளாக்கும் அறிவிக்கப்படாத மின் வெட்டுகளை உடனடியா கக் கைவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner