முன்பு அடுத்து Page:

மாணவர்கள், ஆசிரியர்கள் கல்வி நிறுவனத்திடம் சான்றிதழ் அளிக்க வேண்டியதில்லை: ஏஅய்சிடிஇ தலைவர் பேட்டி

சென்னை, மார்ச் 26- பொறியியல் மாணவர்கள், ஆசிரியர்கள் தனியார் கல்வி நிறுவனங்களி டம் சான்றிதழ்களை ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை ஏஅய்சிடிஇ தலைவர் அனில் டி. சகஸ்கரபுதே கூறினார். ஓய்வு பெற்ற பொறியியல் பேராசிரியர் பி.சி.சந்திரசேக ரனின் மாடர்ன் சயின்டிபிக் தாட் என்னும் நூல் வெளி யீட்டு விழா கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. இந்த....... மேலும்

26 மார்ச் 2019 16:43:04

ராமேஸ்வரம் மீனவர்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

ராமேஸ்வரம் மீனவர்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

இரா.முத்தரசன் வலியுறுத்தல் சென்னை, மார்ச் 26- இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களை உடனே விடு தலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்திலிருந்து சனிக் கிழமை....... மேலும்

26 மார்ச் 2019 16:43:04

மக்களவைத் தேர்தலில் மாற்று அரசு அமையாவிட்டால் அரசியலமைப்பு வழங்கிய உரிமைகள் பறிக்கப்படும்: டி.கே.ரங்…

மக்களவைத் தேர்தலில் மாற்று அரசு அமையாவிட்டால் அரசியலமைப்பு வழங்கிய உரிமைகள் பறிக்கப்படும்: டி.கே.ரங்கராஜன் சாடல்

சென்னை, மார்ச் 26- மக்களவைத் தேர்தலில் மாற்று அரசு அமையாவிட்டால் அரசியலமைப்பு சட்ட அடிப்படைகள் தகர்க்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப் பினர் டி.கே.ரங்கராஜன் கூறினார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென்சென்னை மக்களவைத் தொகுதி ஊழியர் கூட்டம் கந்தன்சாவடியில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் வேட்பாளர் முனைவர் த.சுமதி (எ)தமிழச்சி தங்க பாண்டியனை அறிமுகப்படுத்தி டி.கே.ரங்கராஜன் பேசியதாவது: இந்த மக்களவைத் தேர்தலில்....... மேலும்

26 மார்ச் 2019 16:43:04

பெரியார் அய்.ஏ.எஸ். பயிற்சி மய்யத்தின் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி

பெரியார் அய்.ஏ.எஸ். பயிற்சி மய்யத்தின் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி

மார்ச் 31-இல் தொடக்கம் சென்னை, மார்ச் 26 டிஎன்பிஎஸ்சி, இந்திய குடிமைப் பணி ஆகிய போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்கம், வருகிற 31-ஆம் தேதி முதல் நடைபெற வுள்ளது என பெரியார் அய்.ஏ.எஸ் அகாதமி அறிவித்துள்ளது. இது குறித்து  அந்த அகாதெமி வெளியிட்ட செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:  டிஎன்பிஎஸ்சி,  இந்திய குடிமைப் பணி ஆகியவை நடத்தும் அரசுப் பணித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப் புகள் மற்றும்....... மேலும்

26 மார்ச் 2019 15:08:03

ஜனநாயகப் படுகொலையை நடத்தும் தேர்தல் ஆணையம்

ஜனநாயகப் படுகொலையை நடத்தும் தேர்தல் ஆணையம்

தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் கண்டனம் சென்னை, மார்ச் 26- சின்னம் ஒதுக்குவதில் இருந்து வேட்புமனு பெறுவது வரை இந்திய தேர்தல் ஆணையமும், தமிழக தேர்தல் ஆணையரும், மத்திய பா.ஜ.க. அரசின் கட்டளைக்குப் பணிந்து அ.தி. மு.க. அரசின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பாரபட்சமாக செயல்பட்டு வருகிறது. இது மன்னிக்க முடியாத மாபெரும் ஜனநாயக படுகொலை என்று தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று (25.3.2019)....... மேலும்

26 மார்ச் 2019 15:08:03

தமிழ்நாட்டில் நடப்பது பிஜேபி ஆட்சியா?

திராவிடர் கழக நெல்லை மண்டலத் தலைவர் மா.பால்ராசேந்திரம் மீது காவல்துறையினர் வழக்கு! திராவிடர் கழக திருநெல் வேலி மண்டலத் தலைவரும் சொற்பொழிவாளருமாகிய மா.பால்ராசேந்திரம் அவர்கள் நாகர்கோவிலில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்ட அறிவியல் பரப்புரைப் பிரச் சாரக் கூட்டத்தில் பேசிக் கொண் டிருந்தபோது இந்து முன்னணிக் காவிகள் கலாட்டா செய்ய முயன் றனர். அதனையும் மீறி கூட்டம் நடந்தது. இந்நிலையில் இந்து மதக் கடவுளை விமர்சனம் செய்து பேசியதாக....... மேலும்

25 மார்ச் 2019 16:17:04

அரசுப் பள்ளிக்கு ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கல்

செங்கல்பட்டு, மார்ச் 25- அரசுப் பள்ளிகளை பாதுகாத்திட கிராம மக்கள் தம் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளுக்குத் தேவையான பொருட்களை கல்விச் சீராக வழங்கி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டம் முகையூர் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்குத் தேவையான உபகரணங்களைக் கல்விச் சீராக வழங்கும் விழா பள்ளி தலைமை ஆசிரியர் லதா தலைமையில் நடைபெற்றது. முகையூர் பேருந்து நிலையம் அருகிலிருந்து கல்விச்சீர் ஊர்வலத்தை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாபு....... மேலும்

25 மார்ச் 2019 15:55:03

சிலைக்கு மாலை அணிவித்தால் வழக்கா? சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

சிலைக்கு மாலை அணிவித்தால் வழக்கா?  சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

சென்னை, மார்ச் 25- தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்த மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்சு.வெங்கடேசன் மீது தேர்தல் ஆணை யம் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதற்கு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.விடுதலைப் போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகி யோரது நினைவு தினத்தையொட்டி 23.3.2019 அன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பகத்சிங் சிலைக்கு கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வுக்கு அகில....... மேலும்

25 மார்ச் 2019 15:48:03

மக்களவைத் தேர்தல் 2019: தி.மு.க. தேர்தல் அறிக்கை (5)

மக்களவைத் தேர்தல் 2019: தி.மு.க. தேர்தல் அறிக்கை (5)

சென்னை, மார்ச் 24 - கல்வி வளர்ச்சி, வேலை வாய்ப்பு, மக்கள் வளர்ச்சித் திட்டம், தமிழ்நாடு உரிமைப் பாதுகாப்பு முதலிய செறிவான மக்கள் நலம் பேணும் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்   19.3.2019 அன்று முற்பகல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு: நேற்றைய தொடர்ச்சி *           எனவே, நிலுவைப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி மத்திய அரசுப் பணிகளில் குறைந்த பட்சம் 27....... மேலும்

24 மார்ச் 2019 17:37:05

அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்னரே பிளஸ் 2 பாடத்திட்டம் இ-புக்ஸாக வெளியானது

சென்னை, மார்ச் 24- பிளஸ் 2 வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், புதிய பாட நூல்களை அதிகாரப்பூர்வமாக அரசு வெளியிடும் முன்னரே அவை இ-புக்ஸாக வெளியாகி உள்ளது. இது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிகளுக்கான புதிய பாடத்திட் டமானது, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் அந்தந்த பாடங்கள் சார்ந்த நிபுணர்களைக் கொண்டு....... மேலும்

24 மார்ச் 2019 17:21:05

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, ஜன. 11- அதிமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இல்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்’ என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

`மக்களிடம் செல்வோம்... மக்களி டம் சொல்வோம்... மக்களின் மனங் களை வெல்வோம்...’ என்ற முழக் கத்தை முன்வைத்து தி.மு.க. சார்பில் 12,671 ஊராட்சிகளிலும் ஊராட்சி சபை கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கி யது. திருவாரூர் மாவட்டம் புலிவலம் ஊராட்சி வில்வனம்படுகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அதைத்தொடரந்து, தஞ்சாவூர் மாவட் டம் நாஞ்சிக்கோட்டை, மாதாக்கோட்டை உள்ளிட்ட ஊராட்சி சபை கூட்டங்கில் கலந்து கொண்டார். இதையடுத்து, 2ஆம் நாளான நேற்று (10.1.2019), திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியம் சீகம்பட்டியில் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது.

கூட்டத்தை தொடங்கிவைத்து மு.க. ஸ்டாலின் பேசியதாவது: ஆரவாரத் தோடு, எழுச்சியோடு பெண்கள் அதி களவில் வந்திருப்பது எங்கள் மீதுள்ள நம்பிக்கையை காட்டுகிறது. தமிழகத் தில் நடக்கும் அடிமை, அக்கிரம, அரா ஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதன் தொடக்கப்புள்ளியாக தி.மு.க. ஆட்சி அமையும் வகையில் இந்த நிகழ்ச்சி இருக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்து 7 வருடங்கள் ஆகிறது. உள்ளாட்சி தேர்தல் நடத்தப் பட்டிருக்க வேண்டும்.

ஆனால் திட்டமிட்டு தேர்தலை நடத்தவில்லை. ஊராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் இருந்திருந்தால், உங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கும். உள்ளாட்சி தேர்தலை நடத்தினால், தி.மு.க. வெற்றி பெற்று விடும் என நினைத்து தேர்தலை நடத்தாமல் உள்ள னர். நீதிமன்றம் உத்தரவிட்டும் பெண் களுக்கான இடஒதுக்கீட்டை காரணம் காட்டி, குளறுபடி ஏற்படுத்தி தேர்தலை நடத்தாமல் உள்ளனர். தமிழகம் முழு வதும் பல்வேறு பிரச்சினைகள் உள் ளது. ஆனால், ஜெயலலிதாவால் உரு வாக்கப்பட்ட ஆட்சியை நடத்துபவர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார் கள். இனி ஆட்சிக்கு வர முடியாது என நினைத்து இருக்கும் வரை சுருட்டிக் கொள்ள திட்டமிட்டு கொள்ளையடித்து வருகின்றனர். இந்த ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தால்தான் உள்ளாட்சி தேர்தல் நடத் தப்படும். தமிழகத்தில் தாமரை மலரும் என்று கூறுகிறார்கள். சுட்டுப்போட் டாலும் தாமரை மலர வாய்ப்பில்லை. இவ் வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

பெண்கள் சொந்தக்காலில் நிற்க நடவடிக்கை எடுப்பேன்..

சீகம்பட்டி ஊராட்சி சபை கூட் டத்தை முடித்துக்கொண்டு பகல் 12 மணிக்கு மணிகண்டம் ஒன்றியம் நவ லூர்குட்டப்பட்டு ஊராட்சி சபை கூட் டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண் டார். கூட்டத்தில் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:தமிழகத்தில் மாற்றம் வரும் என்ற நம்பிக்கையுடன் வந்துள்ளீர்கள். பெண்கள் சலசலப்பின்றி அமர்ந்திருப்பதுதான் நமக்கு வெற்றி. 5 மாதத்தில் எம்.பி. தேர்தல் வருகிறது. அதனுடன் சட்டமன்ற தேர்தலும் வந்தால் நாடு உருப்படும். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மேம்படுத்தப் படும்.

அந்த பொறுப்பை நானே வைத்துக் கொண்டு பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner