முன்பு அடுத்து Page:

அதிமுகவினர் கோடி கோடியாக எவ்வளவுதான் பணத்தைக் கொட்டிக் கொடுத்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்ற உறுதி …

அதிமுகவினர் கோடி கோடியாக எவ்வளவுதான் பணத்தைக் கொட்டிக் கொடுத்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்ற உறுதி எடுத்து விட்டார்கள்!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்  பேட்டி சென்னை, ஏப்.18 அதிமுகவினர் கோடி கோடியாக எவ்வளவுதான் கொட்டிக் கொடுத்தாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள்; இந்த ஆட்சியை அகற்ற உறுதி எடுத்து விட்டார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் சென்னை கோபாலபுரத்தில் நேற்று அளித்த பேட்டி:  மோடி பிரதமராக இருக்கின்ற வரைக்கும் எது வேண்டுமானாலும் நடக்கும். ஏற்கனவே, அமலாக்கத் துறையை, சிபிஅய்யை, வருமான வரித்துறையை வைத்து எப்படி....... மேலும்

18 ஏப்ரல் 2019 16:01:04

ஆண்டிபட்டி துப்பாக்கிச்சூடு - அரசியல் கட்சிகளுக்கான அச்சுறுத்தல்

இரா. முத்தரசன் பேட்டி திருவாரூர், ஏப்.18  ஆண்டிபட்டி துப்பாக்கிச்சூடு சம்பவம் அரசியல் கட்சிகளுக்கான அச்சுறுத்தும் நடவடிக் கையாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன் குற்றம்சாட்டினார். திருவாரூரில் செவ்வாய்க்கிழமை இரவு செய்தியாளர் களுக்கு அவர் அளித்த பேட்டி: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்ட காரணத்தால், தேர்தலை சீர்குலைக்க எங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு பல்வேறு இடையூறுகளை....... மேலும்

18 ஏப்ரல் 2019 16:01:04

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிந்த 73 லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பு

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிந்த 73 லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பு

மத்திய அரசு பணிகளில் தமிழர்கள் புறக்கணிப்பு சென்னை, ஏப்.18  மாநிலம் முழுவதும் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 73 லட்சத்து 12 ஆயிரத்து 390 பேர் பதிவு செய்து  வேலைக்காக காத்திருக்கின்றனர். தமிழகத் தில் ஒவ்வொரு மாவட்டத் திலும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் செயல் பட்டு வருகிறது. சென்னை, மதுரையில் மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு....... மேலும்

18 ஏப்ரல் 2019 16:01:04

இலவச விளையாட்டுப் பயிற்சி

வேலூர், ஏப்.18  வேலூர் விஅய்டியின் உடற்கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச கோடைக்கால விளையாட்டுப் பயிற்சி முகாம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 16-ஆம் ஆண்டு விளையாட்டுப் பயிற்சி முகாம் வரும் 22-ஆம் தேதி தொடங்கி மே 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  இந்தப் பயிற்சி முகாமில் கூடைப்பந்து, கைப்பந்து, தடகளம், கராத்தே, கால்பந்து, வளை கோல்பந்து, எறிபந்து, ....... மேலும்

18 ஏப்ரல் 2019 15:15:03

வன்கொடுமை வழக்குகள்: சிறப்பு நீதிமன்றங்களை உடனடியாக அமைக்கக்கோரி வழக்கு

சென்னை, ஏப்.18 எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு , தமிழக அரசு, உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஆகியோர் வரும் 26-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநர் பாடம் ஏ.நாராயணன் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு....... மேலும்

18 ஏப்ரல் 2019 15:15:03

தமிழகம், புதுவையில் 39 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தல்: காலை 7 மணிமுதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

சென்னை, ஏப். 18 தமிழ்நாடு, புதுச்சேரி உள் ளிட்ட 39 நாடாளுமன்ற தொகுதிகளில் இன்று (18.4.2019) காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்துக்கு 2 ஆவது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு இன்று (18.4.2019) தேர்தல் நடைபெறுகிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு சட்டசபை....... மேலும்

18 ஏப்ரல் 2019 14:42:02

10 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய கல்வி நிறுவனங்களில் கூடுதலாக 2 லட்சம் இடங்கள்; அமைச்சரவை…

சென்னை, ஏப்.17 பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில், நாடு முழுவதுமுள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் கூடுதலாக 2 லட்சம் இடங்களை உருவாக்க மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கியது. இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: மத்திய கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையின் போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்து வதற்கு, பிரதமர் மோடி தலை....... மேலும்

17 ஏப்ரல் 2019 17:08:05

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சொத்துகள் விவரங்கள் கல்வித்துறை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும் உயர்நீதி…

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சொத்துகள் விவரங்கள்  கல்வித்துறை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும்  உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஏப்.17  அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பணி பதிவேட்டில் உள்ள சொத்துகளின் விவரங்களுக் கும், அவர்களது பெயர்களில் உள்ள சொத்துகளின் விவரங்களுக்கும் வித்தியாசம் காணப்பட்டால் ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியா ளர்களின் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு முறை கட்டாயமாக்கப்படும் என தமிழக அரசு....... மேலும்

17 ஏப்ரல் 2019 17:03:05

கடன்கார ஆட்சி கம்பியை நீட்டட்டும்!

தமிழ்நாடு அரசின் இன்றைய கடன் நிலை என்ன தெரியுமா? கொஞ்சம்(?)தான், வெறும் 4 லட்சம் கோடி ரூபாய்தான். இதில் எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைந்த காலகட்டத்தில் மட்டும் 1.45 லட்சம் கோடி 20.11.2017 இல் வணிகவரி, வாகன வரி, பத்திரப் பதிவு வரியை ஒழுங்காக வசூல் செய்யாததால் ஏற்பட்ட இழப்பு ரூ.6471 கோடி. பெட்ரோலிய பொருள்களில் முறையான வசூல் இல்லாமையால் இழப்பு ரூ.1893 கோடி. வரி விதிக்கப்பட வேண்டிய பொருள்கள்மீது....... மேலும்

17 ஏப்ரல் 2019 17:03:05

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை, பிப்.11 தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் 10.2.2019 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

"அ.தி.மு.க வுடன் கூட்டணி வைப்பதற்காக தமிழகத் தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்த விடாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்று, எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற தவியாய்த் தவித்து அங்குமிங்கும் அலையும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க அரசு வாக்குறுதி அளித்து இருப்பதாக வரும் பத்திரிகைச் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

தேர்தல் ஆணையத்தை கேவலப்படுத்தி

இது அரசியல் சட்டத்தின்படி அமைந்துள்ள தேர்தல் ஆணையத்தை கேவலப்படுத்தி மிகவும்  கொச்சைப் படுத்துவதாக அமைந்துள்ளது.  அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு விசாரணையை மத்திய அரசு முடக்கி வைத்தது. ஊழல் காவல்துறைத் தலைவர் ஒருவர் பதவியில் நீடிக்க மத்திய அரசு நேரடியாக உதவிசெய்து ஒத்துழைக்கிறது. ஆர்.கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் என்ற வகையில், 84 கோடி ரூபாய் பணம் கொடுத்த வழக் கினை, யாருக்குமே தெரியாமல் ரகசியமாக “க்ளோஸ்” பண்ண வைத்து, அதைக் கண்டும் காணாமல் தேர்தல் ஆணையமும் கைகட்டி நின்று வேடிக்கை பார்த்தது.  ஊழலை ஒழித்துக் கட்டுவோம் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் வீராவேசமாகப் பேசிக்கொண்டே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரை டஜன் அமைச்சர்களை, ஊழல் விசார ணையிலிருந்து பா.ஜ.க அரசு தப்பிக்க வைத்தது. அர சுக்கு எதிராகவே வாக்களித்த  ஓ.பன்னீர்செல்வம் உள் ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களை, தகுதி நீக்கம் செய்யாத அ.தி.மு.க அரசை இருகரமும் இணைத்து வாரியணைத்து பாசத்தைப் பொழிந்து, ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமாகக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு.

உச்சநீதிமன்ற தீர்ப்பையே உதாசீனப்படுத்துவது

சிறப்பு நீதிமன்றத்தால் மூன்று வருடம் சிறைத் தண்டனை பெற்ற பிறகும்' முன்னாள் அமைச்சர் பால கிருஷ்ண ரெட்டி வெற்றி பெற்ற ஓசூர் தொகுதி தானா கவே காலியான நிலையிலும், அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்காமல் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே உதாசீனப்படுத்துவதற்கு, தேர்தல் கமிஷனுக்கு மத்திய பா.ஜ.க அரசு இன்னமும் கடுமையான நிர்ப்பந்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

மக்கள் பிரதிநிதிகளே இல்லாமல்....

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசில் தேர்தல் ஆணையமும், அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அத்தனை அமைப்புகளும் பா.ஜ.கவின் “ப்ரைவேட் லிமிடெட்” கம்பெனி போல் செயல்பட வேண்டும் என்று மத்திய அரசு நினைப்பது மிகவும் ஆபத்தான அரசமைப்புச் சட்ட பச்சைப் படுகொலை. வருமான வரித்துறையும் சி.பி.அய்யும் இதுவரை அ.தி.மு.க அமைச்சர்கள் மீதும், முதலமைச்சருக்கு வேண்டிய நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் மீதும் நடத்திய ரெய்டுகள் அத்தனையும் 'தேர்தல் ஆதாயம்' என்ற ஒரே காரணத்திற்காக, முற்றிலும் மூட்டை கட்டி மூலையிலே கிடத்தப்பட்டுள்ளது. அந்த ஊழல் வழக்கு களையும் வருமானவரித்துறை விசாரணைகளையும் காட்டி முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமியை ஒவ் வொரு நாளும் மிரட்டி, பொருந்தாத் தேர்தல் கூட்டணிக் காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டிருக்கிற பா.ஜ.க அரசு, 60 முதல் 70 லட்சம் வாக்காளர்களுக்கு மேல் மக்கள் பிரதிநிதிகளே இல்லா மல் தவிப்பதைக் கண்டுகொள்ளத் தயாராகவே இல்லை.

ஜனநாயகத்திற்கே வேட்டு

இருபத்தோரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் மக்கள வைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தினால், தன் ஆட்சி நிச்சயமாகப் பறிபோய்விடும் என்ற பயத்திலும் மேலும் மேலும் கொள்ளை அடிக்கும் வாய்ப்பு பறிபோய்விடும் என்ற மன இறுக்கத்திலும் உழன்று கொண்டு இருக்கும் எடப்பாடி  பழனிசாமி வைத்த "இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்" என்ற மக்கள் விரோதக் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்று மத்திய பா.ஜ.க அரசு நிர்ப்பந்தம் செய்வதாக வரும் செய்திகள், நாடாளுமன்ற ஜனநாயகத் திற்கே வேட்டு வைக்கும் பயங்கரமாகும்.

ஆபத்தான அலங்கோலம், கண் கூசும் காட்சி!

மக்களவைத் தேர்தலில் ஏதாவது ஒரு "கொடியை"ப் பிடித்துக்கொண்டு, மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் இருந்து மூச்சு முட்டவாவது கரையேறிக் காப்பாற்றிக் கொண்டுவிட வேண்டும் என்று தடுமாற்றத்தில் இருக்கும் மத்திய பா.ஜ.க அரசு, ஊழல் மயமாகிவிட்ட அ.தி.மு.க அரசை  தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே அற்ப காரணத்திற்காக செயல்படு கிறது. தேர்தல் ஆணையத்தை கிள்ளுக் கீரையாகவும், அரசியல் சட்ட மாண்புகளை தன்னுடைய கால் தூசு களாகவும், ஆணவத்திலும் அகங்காரத்திலும் பிரதமர்  நரேந்திர மோடி நினைப்பது, சுதந்திர இந்தியாவில் இது வரை கண்டிராத ஒரு ஆபத்தான அலங்கோலம்; கண்கூசும் காட்சி.

கஜா புயல் போன்றது

அரசியல் சட்டத்தின்படி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ஒரு பிரதமர் அந்தச் சட்டத்தையும், அது அமைத்துக் கொடுத்த தன்னாட்சி அமைப்புகளையும் ஒரு கட்சியின் பயன்பாட்டிற்காக - ஒரு கட்சியின் தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்தியது திரு நரேந்திர மோடிதான்! அவர் தலைமை யிலான பா.ஜ.க அரசு இந்திய அரசியல் சட்டத்திற்கும், இந்திய ஜனநாயகத்திற் கும் பேரிடர் போல் ஏற்பட்டுவிட்ட ஒரு கஜா புயல் போன்றது என்றே கருதுகிறேன். இந்த அரசியல் விபத்து, 130 கோடி இந்திய மக்களால் வெற்றிகரமாகக் கடந்து மேலேறிச் செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.

மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும்

ஆகவே, மத்திய பா.ஜ.க அரசின் நிர்ப்பந்தத்திற்கு ஆட்பட்டு விடாமல், தேர்தல் ஆணையம் தனக்கு இருக்கும் அரசியல் சட்ட சுதந்திரத்தைப் பயன்படுத்தி தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதி களுக்கும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இடைத் தேர்தலை நடத்தி, ஜனநாயக மானை சர்வாதிகார வேங்கையிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கேட் டுக் கொள்கிறேன். பா.ஜ.க அரசின் வற்புறுத்தலுக்குப் பணிந்தால் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய தேர்தல் ஆணையம், ஒரு மிக மோசமான "வரலாற்றுப் பிழையை" செய்துவிட்ட  ஒரு கருப்பு அத்தியாயம் இந் தியத் தேர்தல் வரலாற்றில் எழுதப்பட்டு விடும் என்றும்; அது மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்றும்; எச்சரிக்க  விரும்புகிறேன்!

இவ்வாறு தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின்  அவர்கள் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner