Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நெல்லை, பிப்.22- சங் கரன்கோவில் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து திமுக தலை வர் கலைஞர் மார்ச் 15இல் பிரச்சாரம் செய் கிறார். திமுக பொருளா ளர் மு.க.ஸ்டாலின் மார்ச் 12, 13, 14 ஆகிய தேதிகளில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

இதுகுறித்து மாவட்ட திமுக செய லாளர் கருப்பசாமி பாண்டியன், நெல்லை யில் செய்தியாளர்களி டம் கூறியதாவது:
சங்கரன்கோவில் தேர்தலில் திமுக வேட் பாளராக ஜவகர் சூரிய குமார் போட்டியிடு கிறார். இவரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற் காக திமுக தலைவர் கலைஞர் மார்ச் 15ஆம் தேதி சங்கரன்கோவில் வருகிறார். சங்கரன் கோவில் வடக்கு ரதவீதி யில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் திமுக வேட் பாளருக்கு கலைஞர் ஆதரவு திரட்டுகிறார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மார்ச் 12, 13, 14 ஆகிய தேதிகளில் திறந்த வேனில் தொகுதி முழுவதும் சென்று வாக்கு சேகரிக்கிறார்.

மார்ச் 5, 6 தேதிகளில் திமுக பொதுச்செயலா ளர் அன்பழகன், சங் கரன்கோவில் தொகுதி திமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார். 5ஆம் தேதி இரவு ஏழு மணிக்கு திருவேங்கடத் திலும், 6ஆம் தேதி இரவு சங்கரன்கோவில் நகரத் திலும் நடக்கும் பொதுக் கூட்டத்தில் அன்பழகன் பேசுகிறார்.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மார்ச் ஒன்றாம் தேதி முதல் 16ஆம் தேதி வரை சங் கரன்கோவில் தொகுதி யில் தங்கியிருந்து தேர் தல் பணிகளை பார்வை யிட்டு ஆலோசனைகள் வழங்குகிறார்.  திமுக மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், அனைத்து மாவட்ட செயலாளர்களும் சங் கரன்கோவில் தொகுதி யில் தேர்தல் பணியாற்ற உள்ளனர். - இவ்வாறு கருப்பசாமி பாண்டியன் தெரிவித்தார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்