
சுப. வீரபாண்டியன் எழுதிய திராவிடத்தால் எழுந்தோம், குறள் வானம், கவிதா, வந்ததும் வாழ்வதும், பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம் ஆகிய அய்ந்து நூல்களை தமிழர் தலைவர் கி. வீரமணி முன்னிலையில், தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட, மத்திய இணை அமைச்சர் சா. ஜெகத்ரட்சகன் பெற்றுக்கொண்டார். (சென்னை, 15.5.2012).
சென்னை, மே 16- பேராசிரியர் சுப. வீர பாண்டியன் எழுதிய அய்ந்து நூல்களை, தமி ழர் தலைவர் முன்னிலை யில் நடைபெற்ற விழா வில் தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டார்.
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் எழுதி யுள்ள திராவிடத்தால் எழுந்தோம், குறள் வானம், கவிதா, வந்ததும் வாழ்வதும், பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம் ஆகிய அய்ந்து நூல்களின் வெளியீட்டு விழா நேற்று (15.5.2012) மாலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராசர் அரங் கில் சிறப்பாக நடை பெற்றது.
கலைஞருக்கு நினைவுப் பரிசு
இந்நூல்கள் வெளி யீட்டு விழாவிற்கு வந் திருந்தவர்களை வான வில் புத்தகாலயத்தின் உரிமையாளர் சுப. புக ழேந்தி வரவேற்றுப் பேசி னார். விழாவிற்கு தலைமையேற்று நூல் வெளியிட வந்திருந்த கலைஞருக்கு திருமதி. வசந்தா சுப. வீரபாண் டியன் நினைவுப் பரிசு வழங்கினார்.
சிறப்பு விருந்தினர்கள்
விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் திராவிடர் கழகத் தலை வர் கி. வீரமணி, மத்திய இணை அமைச்சர் சா. ஜெகத்ரட்சகன், முன் னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன், பேராசிரியர் அப்துல் காதர், கவிப்பேரரசு வைர முத்து ஆகியோருக்கு பேராசிரியர் சுப. வீர பாண்டியன் சால்வை அணிவித்து புத்தகங் களை வழங்கி சிறப்பித் தார்.
நூல்கள் வெளியீடு
இதையடுத்து திராவி டர் கழகத் தலைவரும், தமிழர் தலைவருமான மானமிகு கி. வீரமணி அவர்களின் முன்னிலை யில், பேராசிரியர் சுப. வீரபாண்டியன் எழுதிய அய்ந்து நூல்களை, விழாவிற்குத் தலைமை வகித்த திராவிட முன் னேற்ற கழகத் தலை வரும், முன்னாள் முத லமைச்சருமான கலை ஞர் அவர்கள் நூல்களை வெளியிட்டார்.
கலைஞர் வெளி யிட்ட நூல்களை மத்திய செய்தி மற்றும் ஒலி- ஒளிபரப்புத் துறை இணையமைச்சர் சா. ஜெகத்ரட்சகன் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
பேராசிரியர் அப்துல் காதர், முன்னாள் துணை வேந்தர் அவ்வை நட ராசன், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
தமிழர் தலைவர் கி. வீரமணி
இந்நூல்கள் வெளி யீட்டு விழாவின் முன் னிலை உரையை தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் நிகழ்த்தினார். பேராசிரியர் சுப. வீர பாண்டியன் ஏற்புரை யும், நன்றியுரையும் ஆற்றினார்.

தி.மு.க. தலைவர் கலைஞர் சிறப்புரை
நிறைவாக, விழா விற்குத் தலைமையேற்று, நூல்களை வெளியிட்ட தி.மு.க. தலைவர் கலை ஞர் அவர்கள் சிறப்புரை யாற்றினார்.