எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்த நாள் (2009) - மிகப் பெரிய கறுப்பு நாள், கொடிய நாள்! ஆம், இந்நாளில்தான் ஆயிரம் இட்லருக்குச் சமமான இனவெறியன் ராஜபக்சேயால் ஒன்றரை லட்சம் தமிழின மக்களை, குழந்தைகள், தாய்மார்கள் உட்பட கொத்துக் கொத் தாகக் கொத்துக் குண்டுகளைப் போட்டு கொன்றொழித்தக் குரூரமான நாள்.

கொடியவன் ராஜபக்சே பதவியிலி ருந்து கேவலமாகத் தூக்கி எறியப்பட் டாலும், அதனைத் தொடர்ந்து வந்துள்ள ஆட்சி மட்டும் என்ன வாழ்கிறது?

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தது முதல்   நீதிக்காக மீண்டும் போராட்டம் நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப் படவில்லை.

அரசிடம் சரணடைந்தும்- அரசால் கைது செய்யப்பட்டும் இருந்தோரில் காணாமல்போகச் செய்யப்பட்ட 17400 பேரில் எவரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தைப்பொங்கல் தினத்தன்று அறிவித்துவிட்டார்.

போர்க்குற்றம் பற்றிய சர்வதேச விசாரணை என்பது இராஜதந்திர சூழ்ச்சி வலைகளினால் மூடிக் கட்டப்பட்டு விட்டது. அரசியல் தீர்வு பற்றிய விடயம் இலவு காத்த கிளியின் கதையாக காட்சியளிக்கிறது.

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என்பதற்குப் பதிலாக ஏற்கெனவே விடுதலையாகியிருந்த முன்னாள் போராளிகள் மீண்டும் கைது செய்யப்படும் நிலையே இன்றும் காணப்படுகிறது.

புதிய அரசாங்கம் வந்த பிறகு மக் களிடம் இராணுவத்தால் 20 ஆண்டு களுக்கு முன் பறிக்கப்பட்டிருந்த குடி யிருப்பு மற்றும் தோட்டக் காணிகள் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் வெறும் காணித்துண்டுகள் மட்டும் திருப்பி கையளிக்கப்பட்டதைத் தவிர புதிய அரசால் தமிழருக்கு வேறெதுவும் நிகழவில்லை.

இந்நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் இயல்பாகவே அரசாங்கத்தின் மீது கோபம் எழுந்துள்ள சூழலில் தன்னெழுச் சியான மக்கள் போராட்டங்கள் நிகழ் வதற்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கின.

ஒரு குறைந்தபட்ச ஜனநாயக சூழலில் அத்தகைய எழுச்சிகள் ஏற்பட முடியும் என்று அரசு கணக்குப் போட் டுள்ளதால் அதைத் தடுப்பதற்கான   தந்திரமாக பயங்கரவாத 'பூதத்தை'க் காட்டி விடுதலை செய்யப்பட்ட முன் னாள் போராளிகளை கைதுசெய்யும் படலம் ஆரம்பமாகியுள்ளது.

அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய நிலையில் அதற்கு எதிராக எழக்கூடிய மக்கள் எழுச்சிகளை தடுப்ப தற்கான பலிகடாக்களாக விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளை கைது செய்கிறது சிங்கள அரசு. இது காவல்துறை, புலனாய்வு அரசை பலப்படுத்தி மக்கள் போராட்டத்தை தடுப்பதற்கான ஒரு தந்திரமாகும்.

முள்ளிவாய்க்காலில் படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்கள் பற்றி அரசுக்கு எந்த கவலையும் கிடையாது. எந்தவித அனுதாபச் செய்தியையும் வெளியிடக் கூடிய அளவிற்கு சிங்கள மக்களின் மத்தியில் இருந்து நீதிமான்கள் யாரையும் காணமுடியவில்லை.
90,000 இளம் விதவைகள், அங்க வீனம் உற்றோர், பிள்ளைகளை இழந்த பெற்றோர், பெற்றோரை இழந்த பிள்ளைகள், வாழ்வின் அனைத்துக் கட்டமைப்புக்களும் அழிக்கப்பட்ட நிலை, சமூக கட்டமைப்பு குலைந்து போயுள்ள நிலை, குடும்பத்திற்கு சோறு போடும் குடும்ப உழைப்பாளி கொல்லப்பட்ட நிலையென பேரழிவுக்கு உள்ளான தமிழ்ச் சமூகத்தில் பெரும் வெற்றிடங்கள் நிலவும் போது அரசாங் கத்தின் நடப்பாண்டு வரவு-செலவு திட்டத்தில் இதற்காக நிதிகள் ஒதுக்கப் படவில்லை.

முள்ளிவாய்க்கால் 2009, மே-18 அவலத்தை விடவும் அதன் விளைவாக பின்பு அதிகரித்துச் செல்லும் தொடர் துயரத்தின் அளவு மிகப் பெரியது. அதே போல்  இனப்படு கொலையில் பாதிக் கப்பட்ட மக்களுக்கு நீதி கேட்டு பன் னாட்டளவில்  பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடத்தி வந்தாலும் அந்த போராட்டங்களுக்கு இலங்கை அரசு எவ்வித அசைவும் காட்டவில்லை.  அய்நாவின் நட வடிக்கையில் இருந்து இலங்கையைப் பாதுகாக்க இந்தியாவை ஆண்டுவரும் மோடி தலைமையினா லான அரசு முழு மூச்சுடன் இறங்கி செயல்பட்டு வருகிறது.

இரண்டுமுறை அய்க்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிரான கண் டனத்தீர்மானம்  கொண்டுவந்த போதும் இந்திய அரசு இலங்கைக்குஆதரவாக இருந்து  தீர்மானத்தை தோற்கடித்து  தமிழர்களுக்குநீதிகிடைப்பதற்கு பெரும் தடையாக இருந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner