எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இப்போது கோர்ட்டும், பள்ளிக்கூடமும் மூடப்படும் லீவு நாளாயிருப்பதால் அந்த நாளை காங்கிரஸ் பிரச்சாரம் என்னும் பார்ப்பன பிரச்சாரத்திற்காக ஊர் ஊராய்ச் சென்று வெகு கவலையாய் பிரச்சாரம் செய்யப் பார்ப்பன வக்கீல்களும் மாணவர்களும் உபயோகிக் கின்றார்கள்.  இதுபோன்ற கவலை பார்ப்பனரல்லாத வக்கீல்களுக் குள்ளும், மாணவர் களுக்குள்ளும் சிறிதும் யாருக்கும் கிடையாது.  பார்ப்பனரல்லாத வக்கீல்களையும், மாணவர்களையும் காங்கிரஸ் பிரச்சாரம் செய்யும்படி நாம் விரும்பவில்லை.  ஆனால் பார்ப்பனப் புரட்டை எடுத்து வெளியிடும் பிரச்சாரம் ஏன்  செய்யக் கூடாது, என்றுதான் கேட்கின்றோம்.

பார்ப்பனரல்லாத சமுகம் ஒரு மனிதன் தன்னை  ஏதோ தூக்கி விடுவதன் மூலமே மேலேறலாம் என்று நினைத்தால் எவ்வளவு தான் தூக்கிவிட முடியும்? கைக்கு எட்டும் அளவிற்கு மேல் எப்படித்தான் தூக்கிவிட முடியும்? நமது நாட்டில் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றம் என்பது வெறும் உத்தியோக ஆத்திரமே அல்லாமல் அதுவும் தனிப்பட்டவர்கள்  தனது சொந்த உத்தியோக நலத்திற்கு ஆத்திரப் படுவது அல்லாமல் அந்தச் சமுக நலத்திற்குப் பாடுபடுவது என்பது யாரிடத்திலுமே அரிதாய் இருக்கின்றது.

படித்த மகம்மதியர் சகோதரர்களிடமும் அதுபோலவேதான் சமுக உணர்ச்சி என்பது மிக அரிதாகவே இருக்கின்றது.  இந்தச் சமயத்தில் ஒரு மகம்மதிய வக்கீலாவது, மாணவராவது வெளிக்கிளம்பி தங்களது உரிமைக்கு விரோதமாய் செய்யப்படும் பிரச்சாரத்தை ஒழிக்க இதுவரை யாரும் புறப்படவில்லை.   யாரோ வேலை செய்து உத்தியோகங்களைக் கற்பனை செய்து ஏதாவது சீர்திருத்தம் என்பதாகக் ஒன்றைக் கொண்டு வந்து விட்டால் அவ்வுத்தியோகங்களில் எனக்குப் பங்கு கொடு என்று கேட்க மாத்திரம் அந்த சமயத்தில் எல்லோருமே தயாராக இருக்கின் றார்களே ஒழிய, பாமர மக்களுக்காக பாடுபட்டு அறிவூட்டி, அவர்களை ஏமாற்றத்திலிருந்து தப்புவித்து சமத்துவத்துடன் வாழவும், உண்மையை உணரவும் செய்வதில் யாரும் கவலை எடுத்துக் கொள்வதே கிடையாது.

ஆகையால், பார்ப்பனரல்லாத வக்கீல்கள், மாணவர்கள், முஸ்லீம் வக்கீல்கள், மாணவர்கள் தைரியமாய் வெளிச்சென்று பார்ப்பனப் புரட்டை வெளியாக்க வேண்டுமென்று வற்புறுத்துகின்றோம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner