எழுத்துரு அளவு Larger Font Smaller Font

13.03.1932- குடிஅரசிலிருந்து

சென்ற 01.03.1932ல் ராஜாங்க சட்ட சபைக் கூட்டத்தில், கனம் ராஜ ரகுநாத தாஸ் பிரசாத் என்பவர் சாரதா அவர்களால் நிறைவேற்றப்பட்ட பாலிய விவாகத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென ஒருத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்பொழுது கனம் ஜி. ஏ.  நடேசனும், கனம் திவான்பகதூர் ஜி. நாரா யணசாமி செட்டியாரும் அச்சட்டத்தை ரத்து செய்வதற்கு வேண்டிய காரியம் ஒன்றுமே நடைபெற வில்லை யென்று கூறி எதிர்த்தனர். பிறகு உள்நாட்டு இலாகா காரியதரிசியாகிய கனம் எமர்சன் அவர்களும் ரத்து செய்ய வேண்டும் என்னும் தீர்மானத்தை எதிர்த்தார். இறுதியில் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. கனம் எமர்சன் அவர்கள் தீர்மானத்தை எதிர்த்தபோது கூறிய வார்த்தைகள் கவனிக்கத் தக்கன. அவர் வார்த்தையிலிருந்தே சாரதா சட்டம் ஒன்றுக்கும் பயனில்லாமல் செத்த பாம்பாக இருக்கிறது என்று உணரலாம் கனம் எமர்சன் பேசியதாவது:-

பெரும்பான்மையோர் சமுதாய சீர்திருத்தத்திற்கு மிகவும் அவசியமானதென்று கருதும் ஒரு சட்டத்தை இந்திய அரசாங்கம் எப்பொழுதாவது ரத்து செய்தது உண்டா? சாரதா சட்டம் இந்திய சட்டசபையிலும் இந்தச் சட்டசபையிலும் நிறைவேற்றப்பட்டதாகும். நான் சொல்லுவதென்னவென்றால் இந்தியா எவ்வளவு ரூபாய்க்கு அடமானம் வைத்திருந்தாலும், பணக் காரனுக்கும் பூமி சொந்தக்காரனுக்குந்தான் கவலை யேயொழிய பணமும் பூமியுமில்லாத ஏழைக்கென்ன வென்பதே.

உண்மை இவ்விதமிருக்க ஏழைகளுக்காகவே சுயராஜ்யம் என்று காங்கிரஸ்தலைவர்கள் வாய்ப் பந்தல் போடுகிறார்கள். ஏழைப் பணக்காரன் என்று இரு பிரிவு இருக்கும் வரை ஏழைகளுக்குக் கஷ்டம் ஒழியாதென்பது உலகமறிந்த உண்மை ,ஏழைகளுக் காகவே சுயராஜ்ஜியம் என்னும் காங்கிரஸ் சுயராஜி யத்தில் ஏழை பணக்காரன் இல்லாதொழிய வேண்டும். அப்படியல்லாமல் ஏழை பணக்காரன் என்ற பிரிவுகள் காங்கிரஸ் சுயராஜியத்திலிருந்தால் ஏழைகளுக்காகவே சுயராஜியம் என்று சொல்லுவது அர்த்தமில்லாதது மட்டுமின்றி ஏமாற்றுவித்தை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

நண்பர்களே! இவ்வியாசத்தை நீங்கள் படித்தபின் காங்கிரஸ் அபிமானிகளுக்கு இதைப் படித்துப்பார்க்கும் படி அவர்களிடம் கொடுக்க வேண்டுமாய்க் கோரு கிறேன்.


மலேயா தமிழர்கள்

07.02.1932 - குடிஅரசிலிருந்து...

மலேயாவில் உள்ள பினாங்கு நகரில் சென்ற 16, 17-01-1932இல் அகில மலேயாத் தமிழர்களின் இரண்டாவது மகாநாடு மிகவும் விமரிசையாக நடைபெற்றதை அறிந்து நாம் மிகவும் மகிழ்ச்சி யடைகிறோம்.

மலேயாவில் நமது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய தலைவர்களாக இருந்து தொண்டாற்றிவரும் திருவாளர்களான வி. கே. முருகேசம் பிள்ளை, ஆர். ஆர். அய்யாறு, தாமோ தரம், ஜி. சாரங்கபாணி, சுவாமி அற்புதானந்தா, எச். எச். அப்துல்காதர் முதலானவர்கள் அம்மகாநாட்டில் அதிகமானப் பங்கு எடுத்துக் கொண்டு வேலை செய்திருக் கின்றார்கள்.

அந்த மகாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் எல்லாம் நமது இயக்கக் கொள்கையை அநுசரித்தனவாகவே இருக்கின்றன.

அத்தீர்மானங்களில் முக்கியமானவை பொருத்த மற்ற விவாகங்களைக் கண்டிப்பதும், விதவா விவாகத்தை ஆதரிப்பதும், விவாகரத்தை ஆதரிப் பதும், இறந்து போனவர்களுக்காகச் செய்யப்படும் அர்த்தமற்ற சடங்குகளைக் கண்டிப்பதும் அகில மலேயா தமிழர் மகாநாடு என்பதை அகில மலேயா தமிழர் சீர்திருத்த மகாநாடு என்று மாற்ற வேண்டும் என்பதும் முக்கியமான தீர்மானங்களாகும் இது போலவே வாலிபர் மகாநாட்டிலும், பிறப்பினால் ஏற்றத்தாழ்வு இருப்பதைக் கண்டிப்பதாகவும், விவாகங்களைச் சடங்குகள் இல்லாமல் குறைந்த செலவில் பதிவு செய்து கொள்ளும் முறையில் செய்ய வேண்டுமென்றும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டிருக்கின்றன.

இத்தீர்மானங்களையெல்லாம் நாம் மனப்பூர் வமாகப் பாராட்டுகிறோம்.

தீர்மானங்களோடு நில்லாமல், வாலிபர்களும் சீர்திருத்த ஆர்வமுடைய தோழர்களும் இவை களை அநுஷ்டானத்தில் கொண்டு வர வேலை செய்வார்களென்று நம்புகின்றோம்.