எழுத்துரு அளவு Larger Font Smaller Font

1. சமதர்மம் என்று வந்துவிட்டால் மனிதச் சமுதாயத் துக்குக்  கவலை, குறைபாடு, தொல்லை எல்லாம் அடியோடு போய்விடும். கவலை, குறைபாடுகள் நீக்கப்பட வேண்டுமானால் சமதர்மம் தான் மருந்து.

2. அரசியல் வாழ்வு என்பது அயோக்கியர்களின் வயிற்றுப் பிழைப்பு.

3. அரசியல் சீர்திருத்தம் என்பது அயோக்கியர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை. சமதர்மக் கொள்கை யைப் பரப்ப வேண்டுமானால் நாத்திகத்தினால்தான் முடியும். நாத்திகம் என்பதே சமதர்மம் தான்.

4.இவ்வுலகில் பல மதக் கொடுமைகளுக்கும் ஜாதி வித்தியாச இழிவுக்கும் உட்பட்டுக் கேவலமான மிருகத்திலும் இழிவாகக் கருதப்பட்டுப் பின்னால் மோட்சம் அடைவதைவிடச் சமத்துவம் பெறுவதுதான் பிரதானம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner