மருத்துவம்

மலையேற்றத்தால் ரத்த ஓட்டம் விரைவு பெற்று உடல் வெப்பமடையும். ரத்த நாளங்களில் உள்ள தடைகள் அகற்றப்படும். மலையேற்றத்தின்போது உடல் மேல்நோக்கி ஏற்றப்படும். இதனால், ரத்தம் தலையை நோக்கி உந்தப்படும்.

சூடான ரத்தம் தலைக்குள் மூளையின் நுண் நரம்புகளுக்குள் செலுத்தப்படும்போது எந்த நவீன கருவிக்கும் புலப்படாத நுண்ணடைப்புகள் நீக்கப்படும். தலையை நோக்கி உயிர் வளி எனும் ஆக்சிஜன் அதிக அளவுக்குச் சென்று தூய்மைப்படுத்தப்படுவதால் மூளைப் பாகத்தின் ஆக்சிஜன் ஏற்புத் திறன் அதிகரிக்கும். மூளைப் பாகத்தின் உயிர்வளி ஈர்ப்பு அதிகரிக்கும்போது சிந்தனை ஆற்றல் இயல்பாகவே கூடும். நமக்கு அடிக்கடி தலை வலிக்கிறது என்றாலோ கொஞ்சம் யோசித்தாலும் தலை சூடாகிவிடுகிறது என்றாலோ மலை ஏற்றப் பயிற்சி தேவை என்று பொருள்.

உலக வரலாற்றில் இன்றளவும் போர்த்திறம் மிக்கவன் என்று கருதப்படும் செங்கிஸ்கான், போருக்கு முன்பாக, ஏதாவது மலைமீது ஏறித் தளர்வாக அமர்ந்து கொள்வானாம். மூன்று நாட்களுக்கு உணவு, தண்ணீர் இல்லாமல் உடலின் அழுத்தங்கள் அத்தனையும் நீக்கி காற்றை ஆழமாக இழுத்துத் தலைக்கு ஏற்றி இருத்துவானாம்.

உடற்பயிற்சி: ஓர் அதிர்ச்சி ஆய்வு

ந்தியாவில்  பெரும்பாலான ஆண்களும் பெண்களும் உடற்பயிற்சி செய்வதில்லை. சமீபத்தில்,  ஹெல்திஃபைமீ  என்ற செயலி, இந்தியர்களின் உடல்  செயல்பாட்டின் அளவுகள் என்ற தலைப் பில், 5  35 வயது வரையுள்ள  சுமார் 10 லட்சம் பேரிடம் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின்படி,   இந்தியாவில் 30 சதவீத ஆண்களும் 24 சதவீதப் பெண்களுமே போதுமான உடல்  செயல்பாடுகளுடன் இருக்கின்றனர்.

53 சதவீத இந்தியப் பெண்களிடம் உடல்  செயல்பாடுகள் போதுமான அளவுக்கு இல்லை. சராசரியாக இந்திய ஆண்கள் ஒரு நாளில்  476 கலோரிகளையும் பெண்கள் 374 கலோரிகளையும் செலவிட வேண்டும்.

ஆனால், இந்திய ஆண்கள் 262 கலோரிகளையும் பெண்கள் 165 கலோரிகளை மட்டுமே  செலவிடுகின்றனர். உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருப்பது, ஆரோக்கியமற்ற  உணவுப் பழக்கங்கள் ஆகியவை உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு,  ரத்தக் கொழுப்பு போன்ற தீவிரமான வாழ்க்கை முறை நோய்களுக்குக்  காரணமாக அமைகின்றன.

உலக அளவில் இந்தியாவில்தான் நீரிழிவுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர். நமது கலாச்சாரம், உணவுப் பழக்கம், சமூகப் பொருளாதாரக் காரணிகள், வாழ்க்கை முறை போன்ற கார ணங்களால் டைப் 2 நீரிழிவுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதையும்விடத் தற்போது அதிகமாக உள்ளது.

குளுக்கோஸை நமது உடலின் அனைத்து செல்களுக்கும் இன்சுலின் எடுத்துச் செல்கிறது. இந்த இன்சுலினை வயிற்றின் பின்பகுதியில் உள்ள கணையம் சுரக்கிறது. இந்தக் கணை யத்தின் செயல்பாடே நம் உடல் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கிறது. இந்த இன்சுலின் சுரப்பில் உள்ள குறைபாடுகளே நீரிழிவு வருவதற்கான அடிப்படைக் காரணம்.

உடல் பருமனாலும் அதிக ரத்தக் கொழுப்பாலும் நீரிழிவுக் குறைபாடு ஏற்படு வதற்கு அதிக சாத்தியம் உண்டு. உடலின் எடை அதிகரிக்க அதிகரிக்க இன்சுலின் தேவையும் அதிகரிக்கும்.

இதனால் கணையம் அடிக்கடி இன்சுலின் சுரந்துக் களைத்துப் போய்விடும். இதன் காரணமாக உடல்பருமன் அதிகமுள்ள வர்களுக்கு நீரிழிவுக் குறைபாடு ஏற்படுகிறது.

உடல் திசுக்களில் தேவைக்கு அதிகமாகக் கொழுப்பு சேரும்போது இன்சுலினால் செல்களுக்குள் நுழைய முடியாது. அப்படியே சிரமப்பட்டு திசுக்களுக்குள் இன்சுலின் போனாலும் கொழுப்பு அடைத்துக்கொள் வதால் இன்சுலின் தனக்கான பணியைச் செய்ய முடியாது. இதனாலும் நீரிழிவு ஏற்படுகிறது. இவை தவிர, நீரிழிவுக் குறைபாடு பரம்பரையாகத் தொடர்வதற்கும் சாத்தியம் உண்டு.

நீரிழிவின் வகைகள்

நீரிழிவுக் குறைபாடு டைப் 1, டைப் 2 என இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. கணையத்திலிருந்து முற்றிலும் இன்சுலின் சுரக்காமல் இருப்பதால் ஏற்படும் குறைபாடு டைப் 1 நீரிழிவு. பொதுவாக, டைப் 1 நீரிழிவுக் குறைபாடு குழந்தைப் பிறப்பின்போது ஏற்படும்.

கணையத்திலிருந்து போதுமான அளவு இன்சுலின் சுரக்காமல் இருப்பதால் டைப் 2 நீரிழிவு  ஏற்படுகிறது. மகப்பேறு காலத்தில் பெண்களுக்குக் கர்ப்பகால நீரிழிவுக் குறைபாடு ஏற்படும். இந்தக் குறை பாடு பெரும்பாலும் குழந்தைப் பிறப்புக்குப் பின் சரியாகிவிடும். இவை தவிர, அரிதான நீரிழி வுக் குறைபாடுகளும் உள்ளன.

நீரிழிவால் ஏற்படும் பாதிப்புகள்

முறையான சிகிச்சை பெறாவிட்டால், நீரிழிவால் கண்கள், இதயம், சிறுநீரகம், பாதம் ஆகியவை விரைவில் பாதிப்படையும். நீரிழிவால், கண்களில் புரையும் கண் நீர் அழுத்தநோயும் (கிளாகோமா) ஏற்படுகின்றன.

சிறுநீரகத்தில் உள்ள நெஃப்ரான் செல்கள் பாதிக்கப்பட்டு சிறுநீரகம் வழியாக புரதம் வெளியேறி சிறுநீரகப் பாதிப்பும் ஏற்படும். உலக அளவில் சிறுநீரகப் பாதிப்புக்கு நீரிழிவுக் குறைபாடு முக்கியக் காரணியாக உள்ளது.

பிரச்சினைகளை எப்படித் தடுக்கலாம்?

பாதங்களின் உணர்வுத் தன்மையை அவ்வப்போது சோதிக்க வேண்டும், பாதத்தில் உணர்வுக் குறைபாட்டை உணர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். நீரிழிவுக் குறைபாடு உள்ளவர்கள் கண் பரிசோதனையையும் கண் ரெட்டினா பரிசோதனையையும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கட்டாயம் செய்துகொள்ள வேண்டும்.

ஏ.சி.ஆர் எனப்படும் சிறுநீரகப் பரிசோதனையில் கிரியாட்டின் அளவைத் தெரிந்துகொள்வது அவசியம். நீரிழிவுக் குறைபாடு உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், உடலில் அதிக அளவு கொழுப்பு, புகைபிடிக்கும் பழக்கம் ஆகியவை இருந்தால் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட சாத்தியம் உண்டு.

எனவே, அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் கொழுப்பின் அளவைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

துன்பம் களைவோம்

உடலை முறையாகப் பராமரிப்பதே நீரிழிவால் பாதிக்கப் பட்டவர்களின் முதல் கடமை.

முறையான பரிசோதனைகளும் தொடர் சிகிச்சைகளும் நீரிழிவால் ஏற்படும் பாதிப்புகளை வெகுவாகக் குறைக்கும், நீரிழிவு என்றவுடனே வாழ்வில் இன்பம் எல்லாம் தொலைந்துவிட்டது எனக் கருத வேண்டாம். அதை நோய் என்று கருதாமல், ஒரு குறைபாடாகக் கருதி அதற்கு முறையான சிகிச்சைகள் மேற்கொண்டால் நீரிழிவின் அவதி விலகும்.

குளிர் காலத்தில் அடிக்கடி கைகளைக் கழுவுவது நோய்த் தொற்று ஏற்படுவதைத் தடுக்க உதவும். குளிர் காலத்தில், அதிகமான நேரத்தை அறை களுக்குள்ளே செலவழிப்பதால், நோய்க் கிருமிகளின் தாக்கத்தால் நீங்கள் பாதிக்கப்படலாம். வெளியே சென்று வந்துவுடன், கைகளை சோப்பால் சுத்தம் செய்வது நோய்க் கிருமித் தொற்றிலிருந்து பாதுகாக்க உதவும்.

பழங்கள், காய்கறிகள்

குளிர் காலத்தில் நாம் எந்த உணவை உட் கொள்கிறோம் என்பதுதான் உடல் ஆரோக் கியத்தைப் பெரும்பாலும் தீர்மானிக்கிறது. இந்தக் காலத்தில், கூடுதல் நேரத்தை நாம் வீட்டில் கழிப்போம் என்பதால், உடலில் அதிகமான கலோரிகள் சேர்வதற்கு வாய்ப்பு அதிகம்.

அதனால், அதிகக் கொழுப்புச் சத்து, மாவுச் சத்து (கார்போஹைட்ரேட்) நிறைந்த உணவுப் பொருட்களைத் தவிர்த்துக் கூடுதலாகப் பழங் களையும் காய்களையும் எடுத்துக்கொள்ளலாம். ஊட்டச்சத்து நிறைந்த உணவைத் தேர்ந்தெடுத்து உண்பது உடலில் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கும். இது குளிர் காலத்தை ஆரோக்கியமாக எதிர் கொள்வதற்கு உதவும்.

போதுமான தூக்கம்

குளிர் காலத்தை ஆரோக்கியமாகக் கடப்பதற்குப் போதுமான தூக்கம் அவசியம். சரியான தூக்கம் என்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் சீராக வைக்கும்.

எப்போதும் சோர்வாக உணர் கிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் கூடுதலாகத் தூங்க வேண்டுமென்று பொருள்.

இந்த எளிமையான நடைமுறைகளைப் பின் பற்றுவதன் மூலம் நம்மால் குளிர் காலத்தை ஆரோக்கியமாகக் கடந்துவிட முடியும்.

சளிப் பிடித்தல் என்பது நேரடியாக நுரையீர லிலோ தலையிலோ நீர் கோத்துக் கொள்வதல்ல; நமது உடலில் தேங்கியிருக்கும் கழிவின் வெளி யேற்றமே அது. நமது உடலின் ஒவ்வொரு செல் லுக்கும் இடையில் சளி எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. சளி செல்லுக்குப் பாதுகாப்புக் கவசமாகவும் ஷாக் அப்சர்வராகவும் ஒரு செல்லில் இருந்து இன்னொரு செல்லுக்கு எதையும் எடுத்துச் செல்லும் கடத்தியாகவும் ஊடகமாகவும் இருக்கிறது.

உடலின் கழிவு மிகும்பொழுது முதலில் அது செல்லுக்கு வெளியில்தான் தங்கும். செல்லுக்கு வெளியே உள்ள சளிப்படலத்தில் கழிவுக்கு இடம் இல்லாமல் ஆகி, செல்லுக்குள் நுழைந்தாக வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகும் சூழலில், அது சுவாச வெளிக் காற்றின்   வழியாக நீராக (சளியாக) வெளியேறுகிறது.

இதற்கு தைலம் நல்லதா?

இருமல், தும்மல், மூக்கில் நீர்வடிதல் போன்றவை வெறும் கழிவு நீக்கம் என்பதால் அவை வெளியேற அனுமதிப்பதே நல்லது. ஆனால், உடல் தானாகவே மூக்கடைப்பை உருவாக்கி உள்ளிழுத்தலை மறுக்கும்போது அது பெரும் தொந்தரவாக மாறும். அது போன்ற நேரத்தில் தைலம் தடவுவதும் மருத்துவ உதவியை நாடுவதும் இயல்பு. ஆனால், அவை மூக்கடைப்பைத் தற்காலிகமாகத் தளர்த்துமே தவிர, நிரந்தரத் தீர்வளிக்காது.

சொல்லப்போனால் முன்னிலும் அதிகமான தொந்தர வையே அது அளிக்கும். ஏனென்றால், மூக்கில் ஏற்பட்ட தடையை மருந்து உள்நோக்கி நுரையீரலுக்குள்தான் தள்ளும். நீர் வடிவத்தில் இருந்த தடை, தூசி வடிவத்துக்கு மாறி நுரையீர லுக்குள் செல்வதால், சளித் தொல்லைக்கு உட்பட் டோர் கூடுதலாக அவதியுற நேர்கிறது.

வைரஸ் கிருமிகள், ஒட்டுண்ணிகள், பாக்டீ ரியா கிருமிகள், பூஞ்சைக் கிருமிகள் ஆகியன ரத்தம் மூலம் பரவுவதற்குச் சாத்தியம் உண்டு.

வைரஸ் கிருமிகள் என்று எடுத்துக் கொண்டால். எய்ட்ஸ் நோய்க் கிருமிகள் (-1  -2), மஞ்சள் காமாலை ஏ வைரஸ், மஞ்சள் காமாலை பி வைரஸ், மஞ்சள் காமாலை சி வைரஸ், மஞ்சள் காமாலை ஈ வைரஸ், டெங்கு வைரஸ், வெஸ்ட் நைல் வைரஸ், சைட்டோ மெகல்லோ வைரஸ், மனித லிம்ஃபோட்ரோபிக் வைரஸ், பார்வோ வைரஸ்  19, எப்ஸ்டீன்-பார் வைரஸ் ஆகியவை முக்கியமானவை.

ஒட்டுண்ணிகள் என்று எடுத்துக் கொண்டால், மலேரியா ஒட்டுண்ணி-பிளாஸ் மோடியம் ஒட்டுண்ணி, லேயிஷ்மேனியா சிஸ்-லேயிஷ்மேனியா ஒட்டுண்ணி, சாகஸ் நோய்-டிரிபனோசோமா குரோசி ஒட்டுண்ணி, உண்ணிக் காய்ச்சல்-பாப்சியா ஒட்டுண்ணி, டாக்ஸோபிளாஸ்மோசிஸ்-டாக்ஸோ பிளாஸ்மா கோன்டி ஒட்டுண்ணி, யானைக் கால் நோய்-வூரியா ப்ராங்க்ரோஃப்டி ஒட் டுண்ணி ஆகியவை முக்கியமானவை.

பாக்டீரியா கிருமிகள் என்று எடுத்துக் கொண்டால், சால்மோ னெல்லா டைஃபி, டிரிஃப்போனிமா- சுருள் பாக்டீரியா, எர்சினியா, புரோடீஸ், சூடோமோனாஸ், எஷ் சரிச்சியா, கிளப்சையிலா ஆகியவை முக்கிய மானவை. பூஞ்சைக் கிருமிகள் என்று எடுத்துக்கொண்டால், மியூகார்மைகோசிஸ், சைகோமை கோசிஸ், பைத்தியோசிஸ் ஆகியவை முக்கியமானவை.

உலக சுகாதார அமைப்பு

என்ன சொல்கிறது?

எய்ட்ஸ் கிருமிகள், மஞ்சள் காமாலை பி வைரஸ், மஞ்சள் காமாலை சி வைரஸ், சிஃபிலிஸ் ஆகிய நோய்களைக் கண்டறியும் பரிசோதனைகளை உலக சுகாதார அமைப்பு செய்யச் சொல்கிறது. நமது நாட்டில் மலேரியா பாதிப்பு தொடர்ந்து இருப்பதால், அதற்கான பரிசோதனையையும் சேர்த்து 5 பரிசோதனை களைச் செய்கிறோம்.

ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில், மேற் கூறிய பரிசோதனைகளுடன் டிரிபனோசோமா குரோசி ஒட்டுண்ணி, லேயிஷ்மேனியா ஒட்டுண்ணி ஆகிய பரிசோதனை களையும் செய்கிறார்கள். ஏனென்றால், அங்கு இவ் வகைப் பாதிப்புகள் உள்ளன. மனித லிம்ஃபோட்ரோபிக் வைரஸ் பரிசோதனையை, சில மேலை நாடுகளில் பிற முக்கியப் பரிசோ தனைகளுடன் செய்கிறார்கள்.

பரிசோதனைக்கான

காரணங்கள்

மேலே குறிப்பிடப்பட்ட பரிசோதனைகள் மிகவும் முக்கிய மானவை, ஏனென்றால் இந்தத் தொற்று நோய்கள் உடலைப் பெரிதும் பாதித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை. பிற கிருமிகளின் பாதிப்பு அபூர்வ மாகவே ஏற்படும். அத்துடன் அவற்றைக் குணப்படுத்தி, காப்பாற்றவும் முடியும். ஒருவேளை பரிசோதனையில் தவறு இருந்து தானம் பெற்ற ரத்தத்தில் கிருமிகள் பரவிவிட்டால், அதைச் சரிசெய்வதற்குக் கூடப் பல உயரிய தொழில்நுட்பங்களும் வேதிப்பொருட் களும் வளர்ந்த நாடுகளில் பயன்படுத்தப் படுகின்றன.

ஆகவே, தொற்றுள்ள தானம் பெற்ற ரத்தத்தை வேறு நோயாளிக்குச் செலுத்து வதற்கு முன்பாகப் பரிசோதனை செய்தால்கூட அந்த ரத்தத்தைக் கிருமி நீக்கம் செய்ய முடியும் அல்லது அந்த ரத்தத்தைச் செலுத் தாமல் தவிர்க்க முடியும். அந்த ரத்தத்தை அழித்துவிட முடியும்.

முகாம் நடத்தும்போது கவனம்

பொதுவாக, மிகப் பெரிய குருதிக் கொடை வழங்கும் நிகழ்ச்சி களை நடத்தும்போது, ஒரே நேரத்தில் ஏராளமானோர் குருதிக் கொடைசெய்யும் நிலையில், அனைவருக்கும் பரிசோதனைகளை வேகமாகக் குறிப்பிட்ட நேரத்தில் செய்ய வேண்டியிருப்பதால் சில நேரம் தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. (தொற்று உள்ள ரத்தத்தைப் பெறுவது நிகழலாம்).

இத்தனை பேரிடமிருந்து ரத்த தானம் பெறப்பட்டது என்று கின்னஸ் சாதனைகள் கூட நடந்தேறியிருக்கும். ஆனால், அவசர கதியில் செயல்படுவதால் சாதனைகளைத் தாண்டி, இது போன்ற சோதனைகளையும் குடும்பங்களின் வேதனைகளையும் ஏற்க வேண்டியிருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ரத்ததான முகாம் நடத்துபவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கை யுடனும் கவனமாகவும் இருக்க வேண்டும்.

சாத்தூர் சம்பவத்தைப் பொறுத்தவரை தானம் செய்ய வந்தவர் ரத்தத்தை முறையாகப் பரிசோதித்து நிராகரிக்காமல் போனதுதான் மாபெரும் தவறு. இனியும் இது போன்ற சம்ப வங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும். அரசாங்க மருத்துவமனைகளும் தனியார் மருத்துவமனைகளும் கவனத்துடன் இருந்தி ருந்தால், இது போன்ற சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம்.

குருதியை

தரமாக்குவோம்

குருதிக் கொடை வழங்க வரும்போது கொடையாளி தன்னைக் குறித்த அனைத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக, காய்ச்சல் ஏற்பட்டது, அது எப் போது ஏற்பட்டது, எந்தத் தொற்றால் ஏற்பட்டது, அதற்காக வழங்கப்பட்ட சிகிச்சைகள், உடலில் உள்ள பிற நோய்கள் அதற்காகச் செய்யப்பட்டுவரும் சிகிச்சைகள் என அனைத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.

Banner
Banner