மருத்துவம்

கொழுப்பைக் குறைக்கும் திறன் கொய்யாவுக்கு உண்டு. தினமும் 2 கொய்யாப்பழங் கள்சாப்பிட்டு வந்தால் தேவை யில்லாத உடல் எடையைக் குறைக்க முடியும்.
சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க கொய்யா உதவும். அதேபோல், தைராய்டு பிரச்னையைத் தடுக்கவும் கொய்யா மாமருந்து. வைட்டமின் சி அதிகம் கொண்ட கனி இது.

சளித்தொல்லையிலிருந்தும், குடல் தொடர்புடைய குறைகளை நிவர்த்தி செய்யவும் கொய்யா சரியான தேர்வு. பார்வைத் திறனை மேம்படுத்த உதவும் வைட்டமின் ஏ-வும் கொய்யாப்பழத்தில் அதிகம்.

ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறவர் களும், பாக்டீரியா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள விரும்புகிற வர்களும் கொய்யாவோடு நட்புறவு வைத்து கொள்வது நல்லது.

உடலின் திசுக்களைத் தாக்கும் புற்றுநோய்க்கு எதிராக சண்டை யிடும் குணம் கொண்டது கொய்யா. கொய்யாப்பழத்தை வெட்டிச் சாப்பிடுவதைவிட  கடித்துச் சாப்பிடுவதே முழுமையான பலனைத் தரும்.

 

காமாலையைத் தடுக்க வழிகளும், தடுப்பூசிகளும்

மது அருந்தக் கூடாது.

சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான உணவைச் சாப்பிடவும்.

கை, கால்களை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள் ளவும்.

மலம் கழித்த பிறகு கிருமிநாசினி பயன்படுத்தி கை கழுவுங்கள்.

ஹெபடைடிஸ் வைரஸ் கிருமிகளுக்கான தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளவும்.

ஆரோக்கிய உணவுப் பழக்கம் அவசியம்.

வயதுக்கு ஏற்ப உடல் எடையைப் பராமரிக்கவும்.

டாக்டர் சொல்லாமல் எந்த மருந்தையும் சாப்பிடாதீர்கள்.

காமாலைக்கான தடுப்பூசிகள்

ஹெபடைடிஸ் - ஏ தடுப்பூசியை குழந்தைக்கு ஒரு வயது முடிந்ததும் முதல் தவணை, ஒன்றரை வயது முடிந்ததும் இரண்டாம் தவணை போட வேண்டும். குழந்தைப் பருவத்தில் இதைப் போட்டுக்கொள்ளத் தவறியவர்கள், இப்போது ஒரு தவணையும் ஆறு மாதங்கள் கழித்து ஒரு தவணையும் போட்டுக்கொள்ள வேண்டும்.

ஹெபடைடிஸ்- பி தடுப்பூசியை குழந்தை பிறந்தவுடன் முதல் தவணை, 1 மாதத்திலிருந்து 1 மாதத்துக்குள் இரண்டாம் தவணை, 6 மாதம் முடிந்ததும் மூன்றாம் தவணை இந்தத் தடுப்பூசியைப் போட வேண்டும்.

குழந்தைப் பருவத்தில் இதைப் போடாதவர்கள், முதல் ஊசியை இப்போது போட்டுக்கொண்டு, ஒரு மாதம் கழித்து ஒருமுறையும், ஆறு மாதங்கள் கழித்து மறு தவணையும் போட்டுக்கொள்ள வேண்டும்.

இந்திய வெண்புள்ளி விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் திருச்சி தொண்டைமான் காலனியில் 04.02.2017 அன்று வெண்புள்ளி குறைபாடுள்ளவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் மருத்துவர் சி. நித்திய பிரபா தலைமையில் நடைபெற்றது. இதில் பெரியார் மருத்துவக் குழுமத்தின் சார்பில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருத்துவ ஆய்வுக்கூட பட்டயப்படிப்பு மாணவர்கள் கலந்து கொண்டு வெண்புள்ளி குறித்த விழிப்புணர்வை  பொதுமக்களிடத்தில் ஏற்படுத்தியதுடன் அவர்களுக்கான ஆரம்ப நிலை பரிசோதனைகளையும் மேற்கொண்டனர். இம்மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெற்றது. இதில் வெண்புள்ளியால் பாதிக்கப்பட்ட திருச்சி பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.   

குறட்டையைத் தடுக்கும் நவீன கருவி ஒன்று, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வாங்கப் பட்டுள்ளது. ரூபாய் 12 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டிருக்கும் இந்த கருவி, டென்மார்க்கில் இருந்து வரவழைக்கப்பட்டிருக்கிறது.  சிஷீறீபீ ணீதீறீணீtவீஷீஸீ என்ற பெயர் கொண்ட இந்த கருவி செயல்படும் விதம் பற்றி மருத்துவர்கள் விளக்கம் அளித்திருக் கிறார்கள். ஒருவருக்கு மூச்சுக் குழாயில் அடைப்பு ஏற்படுவதால் மூளைக்குத் தேவை யான ஆக்சிஜன் செல்வதில் தடை ஏற்படுகிறது. இத னால்தான் மூச்சுக் காற்று அடைப்பு ஏற்பட்டு அவர்களது வாய் வழியாக சத்தம் வெளியேறுகிறது. இதையே குறட்டை என்கிறோம். இதுபோன்ற குறட்டையில் வெளியேறும் சத்தத் தின் டெசிபல் அளவு 5 புள்ளி முதல் 10 புள்ளிகள் வரை இருக்கலாம்.

இந்த அளவுக்கு மேல் சென்றால், அது சிக்கலானது. இதுபோல் அளவு கடந்த குறட்டையினால் தூக்கம் மட்டும் கெடுவதில்லை. ரத்த அழுத் தம் அதிகமாவது, சர்க்கரை நோய் ஏற்படுவது, மாரடைப்பு தாக்கும் அபாயம் போன்றவையும் ஏற்படு கின்றன. அதனால் குறட்டையை சாதா ரண பிரச்சினையாக நினைக்காமல் உடனே சரிசெய்ய முயற்சிக்க வேண்டும் என்று விளக்கமளித்த மருத்துவர்கள், இந்த கருவியின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வரு வதாகவும் அதன்மூலம் குறட்டை விடுவது சில நோயாளிகளுக்கு நின்று போனதாகவும் தெரிவித்திருக் கிறார்கள்.

அரிதாக வரும் நோயாக... ஆனால் ஆபத்து நிறைந்ததாக வரும் நோய் வலிப்பு  Epilepsy என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த நோய், உலக அளவில் 150 பேரில் ஒருவரை பாதிக்கிறது. இந்த வலிப்பு நோய் ஏன் வருகிறது, வந்தால் என்ன செய்ய வேண்டும், வராமல் தடுக்க என்ன வழி என்ற நம் சந்தேகங்களுக்கு முழுமையான விளக்கம் அளிக்கிறார் நரம்பியல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் ப்ரித்திகா சாரி.

வலிப்பு நோய் யாருக்கு வருகிறது?

உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று மூளை. மூளையில் ஏற்படக்கூடிய தொந்தரவுகளால் கைகள், கால்களில் அடுத்தடுத்து காரணமில்லாமல் உதறல் ஏற்படுவதை வலிப்பு நோய் (Epilepsy)  என்கிறோம். நமது உடலில் உள்ள நரம்பு செல்களே உடலின் மொத்த இயக்கத்தையும் கட்டுப்படுத்துகின்றன. மூளை மற்றும் நரம்பு செல்களுக்கு இடையே செல்லும் மின் அதிர்வுகளில் தடை ஏற்படும் போதுதான் இதுபோல் வலிப்பு உண்டாகிறது. பெரும்பாலும் வலிப்பு நோய் 10 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது. அதாவது, மூளை வளரும் பருவத்தில் உள்ளவர்கள் மற்றும் முதுமை அடைந்த மூளை உடையவர்களுக்கு இந்த நோய் அதிக அளவு ஏற்படுகிறது.

வலிப்பு வருவதற்கான காரணங்கள் என்ன?

10 பேரில் ஒருவருக்கு தூக்கமின்மை, கடுமையான வெயிலில் அதிக நேரம் இருப்பது, அதிக நாள்கள் பட்டினியோடு இருப்பது மற்றும் அதிர்ச்சி தரக்கூடிய செய்திகளைக் கேட்கும்போது என சில தூண்டுதல்களால் வலிப்பு வருகிறது. சிலருக்கு என்ன காரணத் தால் வலிப்பு வந்ததென்று கண்டுபிடிக்க முடியாமலும் போகும்.ஆனால், பொதுவாக வலிப்பு வருவதற்கு என்று சில காரணங்கள் உள்ளன. இந்த காரணங்கள் ஒவ்வொருவரின் வயதுக்கேற்ப மாறுபடும். குழந்தை பிறக்கும்போது தலையில் அடிபடுவதால் வலிப்பு வரலாம். வைட்டமின்  B6, கால்சியம், குளுக்கோஸ் போன்ற சத்துக்கள் குறைவதாலும் வரலாம். மூளைக்காய்ச்சல் காரணமாகவும் குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படுகிறது. இதில் 5 முதல் 7 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வரும் அதிக காய்ச்சலால் ஏற்படும் வலிப்பினை   Febrile Seizure என்கிறோம்.இந்த காரணங்கள் தவிர நரம்பு மண்ட லத்தில் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்கள் மற்றும் நச்சுத்தன்மை (காரீயம், பூச்சிமருந்துகள், சாராயம்) உடலுக்குள் செல்லும்போதும் வலிப்பு ஏற்படுகிறது. தலையில் அடிபடுவது, மூளையில் கட்டி ஏற்படுவது, ரத்த ஓட்ட பாதிப்பு, மூளை வளர்ச்சியில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் மரபணு தன்மை போன்ற காரணங்களாலும் வலிப்பு ஏற்படுகிறது.

இதில் வகைகள் ஏதேனும் உண்டா?

மூளையில் ஏற்படும் பாதிப்பின் அளவுகள் மற்றும் அறிகுறி களின் அடிப்படையில் வலிப்பு நோய் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப் படுகிறது. மூளையின் மொத்தப்பகுதியும் பாதிக்கப்படும்போது, உடல் முழுவதும் அந்த வலிப்பு எதிரொலிக்கும். இதற்கு   Generalized Seizure என்று பெயர். இதற்குள் உட்பிரிவாக 5 வகைகள் உள்ளன.நினைவாற்றல் தவறுதல், கை, கால்களில் விறைப்புத்தன்மை மற்றும் உடல் உதறுதல், வாயில் நுரைதள்ளுதல், சில சமயம் தன்னை அறியாமல் சிறுநீர், மலம் கழிப்பது போன்ற அறிகுறிகளோடு வருவதை   Tonic clonic generalized seizure  என்கிறோம். இந்த அறிகுறிகளோடு கை, கால் வெட்டுதல் இல்லாமல் இருப்பதற்கு   Tonic Seizure என்று பெயர். உடல் திடீரென நிலைகுலைந்து போதல், தற்காலிக மறதி மற்றும் ஞாபகமின்மை போன்ற அறி குறிகளோடு  இருப்பதை A Tonic Seizure என்கிறோம். தலை மற்றும் உடலின் மேல்பாகத்தில் திடீரென தொய்வு ஏற்பட்டு கீழே கவிழ்ந்து விடுவதை   Myoclonic Seizure  என்கிறோம். சில நொடிகள் உணர் வில்லாமல் போவது மற்றும் கண்சிமிட்டுவது போன்ற அறிகுறி களோடு இருப்பதை   Absence seizure என்கிறோம். இதேபோல் மூளையில் குறிப்பிட்ட பாகத்தில் ஏற்படும் பாதிப்பினால் வரக்கூடிய வலிப்பிற்கு  Partial Seizure   என்று பெயர். இந்த பிரிவில் 2 வகைகள் உள்ளன. இந்த இரண்டு வகைகளிலும் உடலிலுள்ள முகம், கை, கால் போன்ற ஏதாவது ஒன்றில் ஒரே பக்கத்தில் வெட்டுதல் Simple partial Seizure  ஏற்படுகிறது. நினைவாற்றல் மாறாமல், உடலின் ஒரு பாகத்தில் கை, கால்களில் வெட்டுதல் ஏற்படுவதை    என்கிறோம். நினைவாற்றலில் மாற்றம் ஏற்பட்டு, நினைவு தவறுதல், மனக்குழப்பம் மற்றும் பிதற்றுதல் போன்ற அறிகுறிகளோடு இருப்பதை  Complex partial Seizure என்கிறோம். இந்த வகையினர் சில சமயம் சுயநினைவில்லாமல் அங்கும் இங்குமாக நடப்பது, ஆடைகளைக் கழற்ற முயற்சிப்பது, வாய், முகபாவனைகளில் மாற்றம் ஏற்படுவது, இதைத் தொடர்ந்து குழப்பமான முகத்தோற்றத்தோடும் இருப்பார்கள்.  இதனால் அவர்களுக்கு ஆபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

வலிப்புக்கான சிகிச்சைகள் என்ன?

வலிப்பு நோயாளியிடம் தோன்றும் அறிகுறிகளை வைத்து, எந்த வகை வலிப்பு என்பதை மருத்துவர் முதலில் கண்டறிய வேண் டும். ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே,  ECG பரிசோதனைகள், எம்.ஆர்.அய். ஸ்கேன் மற்றும் வீடியோ டெலிமெட்ரி பரிசோதனைகள் மூலமாக வலிப்பு நோயின் தன்மைகளை கண்டறியலாம்.வலிப்பு நோயின் வகை மற்றும் அறிகுறிகளுக்கு ஏற்றாற்போல சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவர் சரியான மருந்தை சரியான அளவில் கொடுக்கும்போது பலருக்கு வலிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது.

அப்படி வலிப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாதபோது மூளை அறுவைச் சிகிச்சை மற்றும் கீட்டோஜெனிக் டயட் (அதிக கொழுப்பு சத்துள்ள உணவு) மருத்துவ முறை அவர்களுக்கு பரிசீலிக்கப்படு கிறது. 70 சதவிகிதம் வலிப்பு உள்ளவர்களுக்கு 3 முதல் 5 வருடங்கள் வரை மருந்துகள் சாப்பிட்ட பின்பு வலிப்பு வராமல் இருந்தால் மருந்துகளை நிறுத்திவிட வாய்ப்பு உள்ளது.பெரும்பாலும் வலிப்பு நோயின் பாதிப்புகளை மருத்துவர்களால் நேரில் பார்க்க முடிவ தில்லை. அப்படி பாதிப்பின் அறிகுறிகளை நேரில் பார்த்தவர்கள் சொல்லும் தகவலானது, நோய் பாதிப்பின் தன்மைகளை அறிந்து, மருத்துவர் சரியான சிகிச்சையளிக்க உதவியாக இருக்கும். அதற்கு வலிப்பின் அறிகுறிகள் பற்றிய சரியான தகவல்களை ஒவ்வொரு வரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மேலும் வலிப்பு வருகிறபோது செய்ய வேண்டிய முதலுதவிகளை தெரிந்து கொள் வதும் அவசியம். வலிப்பு வந்தவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி என்ன?   வலிப்பு நோயின் அறிகுறிகள் ஒருவரிடம் தென்பட்டால் பயம் கொள்ளவோ, பதற்றப்படவோ கூடாது. அவரை சுற்றியுள்ள சூழ்நிலையை அமைதியாக்க வேண்டும். வலிப்பு வந்தவர்களை கீழே விழாதவாறு பிடித்து தரையில் அமர்த்த வேண்டும். வலிப்பு வந்தவரின் தலையின் கீழ் மென்மை யான துணி அல்லது தலையணையை தலையில் அடிபடாமல் இருக்குமாறு வைக்க வேண்டும். உடலில் அடிபடாமல் இருக்க அருகிலுள்ள பொருட்கள் மற்றும் அவரது கையில் உள்ள கூர்மையான பொருட்களை அகற்றிவிடுவது நல்லது. உடல் மற்றும் கழுத்தைச் சுற்றியுள்ள ஆடைகள் இருக்கமாக இருந்தால், தளர்வு படுத்த வேண்டும். சுவாசம் சீராக இருக்க ஒரு பக்கமாக உடலும், தலையும் இருக்கும்படி திருப்பி வைக்க வேண்டும். இதனால் வாயிலிருந்து வரும் உமிழ்நீர் மூச்சுக்குழலுக்குள் செல்வது தவிர்க்கப்படுகிறது. வலிப்பிலிருந்து முழுவதும் மீண்டு வரும்வரை, அருகிலிருந்து கவனித்து அவர்களை சமாதானப்படுத்த வேண்டும். முக்கால்வாசி வலிப்புகள் ஒன்றரை அல்லது இரண்டு நிமிடங்களில் அதுவாகவே அடங்கிவிடும். அடுத்தடுத்து வலிப்பு வந்தாலோ, தொடர்ந்து 10 முதல் 15 நிமிடங்களுக்கு மேல் வலிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்

வலிப்பு வந்தால் செய்யக் கூடாதவை என்ன?

வலிப்பின் போது ஏற்படும் கை, கால் வெட்டுதலை அடக்கிப் பிடிக்கக் கூடாது. கையில் சாவி கொடுப்பது, மூக்கில் செருப்பைக் காட்டுவது போன்ற செயல்களை செய்யக் கூடாது. வாயிலிருந்து வெளிவரும் நுரை மூச்சுக்குழலுக்குள் சென்றால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.வலிப்பிலிருந்து முழுவதும் மீண்டு வரும் வரை எந்த விதமான ஆகாரமோ, தண்ணீரோ கொடுக்கக் கூடாது. வலிப்பின்போது மருந்து, மாத்திரை மற்றும் தண்ணீர் கொடுக்கக் கூடாது. வாயில் எந்த பொருளையும் திணிக்கக் கூடாது. ஆபத்தான சூழ்நிலை தவிர மற்ற சூழ்நிலைகளில் வலிப்பு முழுவதும் நிற்கும் வரை வலிப்பு வந்தவர்களை அந்த இடத்தைவிட்டு மாற்ற முயற்சிக்கக் கூடாது.

வலிப்பு நோயைத் தடுக்க செய்ய வேண்டியது என்னென்ன?

வலிப்பு ஏற்படும் சூழ்நிலைகளை அறிந்து, அதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவர் பரிந்துரை செய்யும் மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். வலிப்புக்கு கொடுக்கப்படும் மருந்து களால் சிலருக்கு தலைசுற்றல், மயக்கம், குமட்டல், தூங்கிக்கொண்டே இருத்தல், நிலையாக நிற்க இயலாமை, கை, கால் நடுக்கம், மாறுபட்ட செயல்பாடுகள், வயிற்று எரிச்சல், தோல் தடிப்புகள், எடை கூடுதல், வாய் உலர்ந்துபோதல், கண்பார்வை கோளாறுகள் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்படி அந்த மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளை உடனடியாக மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.வலிப்பு சிலருக்கு தூங்கும் போதும், விழித் திருக்கும் போதும் ஏற்படுகிறது. தூக்கமின்மையும் சிலருக்கு வலிப்பு ஏற்பட காரணமாகிறது. இதனால் சரியான நேரத்துக்கு தூங்கி எழுவது அவசியம். பகல் தூக்கத்தைத் தவிர்க்க வேண்டும். தூங்கும் இடம் காற்றோட்டமாக, வெளிச்சமின்றி, மிதமான தட்ப வெப்ப நிலையில் இருப்பது அவசியம். பாட்டில் குளிர்பானங்கள், துரித உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. இயற்கையான உணவு வகைகளை சாப்பிடுவதோடு, சமச்சீரான உணவு முறையை பின்பற்ற வேண்டும்.உணவில் காய்கறிகள், பழங்களை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். வலிப்பு நோய் உள்ளவர்கள் திருமணம் செய்வது, குழந்தைகள் பெற்றுக் கொள்வது, படிப்பது மற்றும் பிறரைப் போன்று வேலைகள் செய்வதை மருத்துவரின் ஆலோசனையுடன், சில கட்டுப்பாடுகளோடு செய்யலாம். வலிப்பு நேய் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து கொண்டால் மற்றவர்களைப் போன்று, எல்லோருடனும் இணைந்து முழுமையான வாழ்க்கையை வாழ முடியும்!

ஆஸ்துமாவுக்கு இன்ஹேலரைத் தொடரலாமா?

பனிக்காலம் தொடங்கிவிட்டால் ஆஸ் துமா உள்ளவர்களுக்குச் சோதனைக் காலம் தான். அதீதக் குளிர்ச்சி நம் நுரையீரலில் உள்ள மூச்சுக்குழல் தசைகளின் நரம்பு முனைகளைத் தூண்டுகிறது. இதன் விளை வால் மூச்சுக்குழல் தசைகள் சுருங்கி விடு கின்றன. அப்போது மூச்சு சிறுகுழல்கள்  மிக அதிகமாகச் சுருங்கிவிடுகின்றன. அதே வேளையில் மூச்சுக்குழலின் உள்சவ்வு வீங்கி விடுகிறது. இந்தக் காரணங்களால் மூச்சு செல்லும் பாதை சுருங்கி விடுகிறது.

இந்த நேரத்தில் மூச்சுக்குழல்களில் வீங்கிய சவ்விலிருந்து நீர் சுரக்கிறது. இது ஏற் கெனவே சுருங்கிப்போன மூச்சுப் பாதையை இன்னும் அதிகமாக அடைத்துவிடுகிறது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் உண்டா கிறது. முக்கியமாக, மூச்சை வெளிவிடுவதில் தான் மிகவும் சிரமமாக இருக்கும். ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இளைப்பு, இருமல், மூச்சுத் திணறல் போன்ற தொல்லைகள் ஏற் படுவது இதனால்தான். அடுத்து, மிகக் குறுகிய மூச்சுக் குழல்கள் வழியாக மூச்சை வெளிவிடும்போது விசில் (வீசிங்) போன்ற சத்தம் கேட்கிறது.

சிகிச்சை?

இன்றைய மருத்துவ முன்னேற் றத்தில் ஆஸ்துமாவுக்கு நிறைய மருந்துகள் உள்ளன. மூச்சுக்குழாயை விரிவுபடுத்துவது, அதன் வீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, ஒவ்வா மையைத் தடுப்பது, ஆஸ்துமா பாதிப்பு களைக் கட்டுப்படுத்துவது என்று பலதரப் பட்ட மருந்துகள் கிடைக்கின்றன. மருத்து வரின் ஆலோசனைப்படி அவற்றைப் பின் பற்றினால் ஆஸ்துமா அவதி குறையும். இவற் றில் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இன் ஹேலர் ஒரு வரப்பிரசாதம்.

இவர்களுக்கு மூச்சுக்குழல்களை விரிவு படுத்த மாத்திரை, மருந்து, ஊசிகளைப் பயன் படுத்தும்போது, அவை ரத்தத்தில் கலந்து நுரையீரலை அடைந்து பலன் கிடைப்பதற்கு நேரம் ஆகும். இந்த மருந்தின் அளவுகளும் அதிகம். சில பக்கவிளைவுகளும் இவற்றுக்கு உண்டு. குறிப்பாகச் சொல்வ தென்றால் சால்பூட்டமால் எனும் ஆஸ்துமா மருந்தின் அளவு அதிகமாகிவிட்டால், கை விரல்கள் நடுங்குவதை உதாரணமாகச் சொல்லலாம்.

ஆஸ்துமா நோயாளிகள் இன்ஹேலரைப் பயன்படுத்தும் போது அதிலிருக்கும் மருந்து நேரடியாக நுரையீரலுக்குச் சென்று மூச்சுக் குழல் தசைகளை உடனடியாகத் தளர்த்தி விடும். இதனால் மூச்சுத்திணறல் உடனடி யாகக் கட்டுப்படும். இதில் பயன்படுத்தப்படும் மருந்தின் அளவு மிகவும் குறைவு. மைக்ரோ கிராம்களில்தான் இந்த மருந்து செலுத்தப் படுகிறது.

உடலின் வேறு உறுப்புகளுக்கு இந்த மருந்து செல்வதில்லை. எனவே, இதற்கு அதிகப் பக்கவிளைவுகள் இல்லை. இதை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தி னால்கூட ஆபத்து இல்லை. இன்ஹேல ருக்குப் பதிலாக மாத்திரை, மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்தும்போதுதான் பல பக்கவிளைவுகள் ஏற்படும் சாத்தியம் அதிகம் இருக்கிறது.

இன்ஹேலரைப் பயன்படுத்துவது எப்படி?

· இன்ஹேலரைப் பயன்படுத்துவதற்கு முன்பு நன்றாகக் குலுக்க வேண்டும். அப் போதுதான் மருந்து சரியான விகிதத்தில் கலந்து நுரையீரலுக்குச் சென்றடையும்.

· இன்ஹேலரை இழுக்கும் முன்பு, மூச்சை நன்றாக வெளியே விட்டுவிட வேண் டும். பிறகு மருந்தை உள்ளிழுத்து, பத்து விநாடிகள் அப்படியே வைத்திருக்கவும். பிறகு மெதுவாக மூச்சை வெளிவிடவும். இப்படிச் செய்தால், நுரையீரலில் மருந்து அதிக நேரம் தங்கி முழுவதுமாகப் பலன் கொடுக்கும்.

· மூச்சை உள்ளிழுப்பதும் இன்ஹேலர் மருந்தை உள்ளிழுப்பதும் ஒரே சமயத்தில் நடக்க வேண்டும். இல்லையென்றால் மருந்து வாய்க்குள்ளேயே தங்கிவிடும்.

· இன்ஹேலரைப் பயன்படுத்திய பிறகு வாயைக் கொப்பளிக்க வேண்டியது முக்கியம்.

· குழந்தைகளுக்கு இன்ஹேலரைப் பயன்படுத்தத் தெரியாது. ஆகையால், இன் ஹேலருடன் ஸ்பேசர் கருவியை இணைத்துப் பயன்படுத்தலாம்.

· உட்கார்ந்தபடி இன்ஹேலரைப் பயன் படுத்துவதுதான் சரியான முறை. படுத்தபடி, சாய்ந்தபடி பயன்படுத்தினால் மருந்தின் அளவு சரியான அளவில் சென்றடையாது.

· இன்ஹேலரைப் பயன்படுத்திய பிறகு அதை மூடிவைக்க மறந்துவிடக் கூடாது.

· இன்ஹேலரைப்  பயன்படுத்தும்போது வாய்ப்புண் வரலாம். 'ரோட்டா கேப்பில் இருக்கும் மருந்து வாயில் தங்கிவிடுவதுதான் இதற்குக் காரணம். மருந்தை உறிஞ்சியதும், வாயை நன்றாகக் கொப்பளித்த பிறகு, தண்ணீர் குடிக்க வேண்டும். பின்னர் சாப்பிட வேண்டும். இப்படிச் செய்தால் வாய்ப்புண் வராது. அப்படியும் வருகிறது என்றால், மீட்டர் டோஸ் இன்ஹேலரை அதற்கென உள்ள கண்ணாடிக் குடுவைக்குள் வைத்துப் பயன்படுத்த வேண்டும். இதனால், மருந்து வாயில் தங்குவது குறையும். வாய்ப்புண் ஆபத்து தவிர்க்கப்படும்.

·  மருத்துவரின் யோசனை இல்லாமல் சுயமாக இன்ஹேலரை மாற்றக் கூடாது.

· இன்ஹேலர்களில் ஒரு மருந்து உள் ளவை, பல மருந்துகள் கலந்தவை எனப் பல விதம் உண்டு. இவற்றை மருத்துவரின் ஆலோ சனைப்படிதான் பயன்படுத்த வேண்டும்.


முந்திரி, ஆரோக்கிய மந்திரி

முந்திரிப் பருப்பு சுவையாக இருந்தாலும், அதன் விலை சற்றே மிரட்டும். அளவாகச் சாப்பிட்டால் முந்திரி உள்ளிட்ட பருப்புகள் உடலுக்குப் பல ஆக்கபூர்வமான பலன்களை நம் உடலுக்குத் தரக்கூடியவை. அந்தப் பலன்களில் சில:
தினசரி சிறிதளவு முந்திரிப் பருப்பைச் சாப்பிட்டுவந்தால், ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.

முந்திரிப் பருப்பில் தாமிர சத்து இருப்பதால், இதன் மூலம் அடர்த்தியான, கறுப்புக் கூந்தல் வளரும். முந்திரிப் பருப்பில் மக்னீசியமும் இருக்கிறது. இது எலும்பு ஆரோக்கியத்துக்கு நல்லது.

ரிபோஃபிளேவின் (வைட்டமின் பி), பான்டோதெனிக் அமிலம் (வைட்டமின் பி5) உள்ளிட்ட வைட்டமின்களை முந்திரிப் பருப்பு கொண்டுள்ளது.

தினசரி முந்திரிப் பருப்பை உட்கொண்டால், சிறுநீரகக் கற்களில் 25 சதவீதம் மட்டுப்படும்.

Banner
Banner