மருத்துவம்

தோல். தோல்தான் நம் உடலின் மிகப் பெரிய உறுப்பு! பலரும் தோலை ஒரு உறுப்பு என்றே கருதுவதில்லை. நாம் இங்கே தோலை முதன்மைப் படுத்திச் சிறப்பு தகுதி அளித்துப் பெருமைப்படுத்தக் காரணம் இருக்கிறது. தோல் நம் உடலின் சதையை மூடிக்கொண்டிருக்கும் வெறும் போர்வை மட்டு மல்ல; பல்வேறு விதமான தனித்த இயக்கம் கொண்ட உறுப்பு.

சராசரி அளவுள்ள மனிதனுக்கு ஒன்றரை முதல் இரண்டு சதுர மீட்டர்வரை விரிந்து பரந்துள்ள தோல்தான் புறச் சூழலுக்கும் நமது உடலுக்குமான எல்லைக் காப்பு அரண்.  புறச் சூழலில் நிலவும் கெட்ட காற்று, மாசு, நீர் அனைத்தும் உடலினுள் புகுந்துவிடாமல் தடுத்து நிறுத்திவைப்பது தோல் தான். வெளியில் வெப்பம், உடலின் அளவைக் காட்டிலும் கூடுதலாக நிலவும்போது, உள்ளிருக்கும் நீரை, மேல் தோலுக்கு அனுப்பிக் குளிர்வூட்டி உடல் தன்னைத் தற்காத்துக் கொள்கிறது. புறச் சூழலில் குளிரும் மிகையான ஈரப்பதமும் நிலவுமானால் உள் ளிருந்து வெப்பம் மேல் தோலுக்கு வந்து புறக் குளிர் உள்ளே புகுந்துவிடாமல் பாதுகாக்கிறது தோல்.

வெப்பமோ குளிரோ புறச் சூழலுக்கு ஏற்ற எதிர் சீதோஷ்ணத்தைத் தோலின் மேற்பரப்பு உருவாக்கிக் கொள்கிறது. அடித் தோலில் படர்ந்திருக்கும் கொழுப்பு, மேல் தோலில் உருவாக்கப்பட்ட வெப்பம் அல்லது குளிரைப் புறச் சூழலுக்கு ஏற்ற வகையில் நிலைநிறுத்த உதவுகிறது.

இது தோலின் முதன்மைப் பணி. அது நமது உடலியக்கத்தில் ஆற்றும் பல்வேறு பணிகள் குறித்து அடுத்தடுத்துப் பார்க்கலாம். தோலைப் பராமரிக்க நாம் செய்வது என்ன?

அன்றாடம் குளிக்கிறோம். குளித்தல் என்பது புறத்தில் நம் தோலில் படியும் அழுக்கை நீக்கும் நட வடிக்கை என்றே நம்மில் பலரும் கருதிக்கொண்டி ருக்கிறோம். ஏதோ பாத்திரத்தின் பற்றைத் துலக்குவது போல, உடல் நுரைக்க சோப்பு போட்டுத் தேய்க்கிறோம். மேலும் மேலும் நுரைப்பதற்கென்று நைலான் நாறு போட்டும், வெட்டிவேர் நாறு போட்டும் தேய்க்கிறவர்கள் உண்டு. இன்னும் சிலரோ போனமா, குளிச்சோமா, வந்தோமான்னு இருக்கணும் என்று சோப்பு வாசனை காட்டுவதற் காகவே குளிப்பதும் உண்டு.

உண்மையில் நமது உடலில் புறத்தில் இருந்து தோல் மீது படியும் அழுக்கைவிட, உள்ளிருந்து வியர்வை வடிவத்திலும் இறந்த செல்கள் வடிவத்திலும் படியும் அழுக்குதான் அதிகம்.

அழுக்கை நீக்குவதற்காகத்தான் குளிப்பது என்றால், புறத் தூசி படியாத வண்ணம் ஏ.சி. காரில் பயணித்து, ஏ.சி. அறையில் அமர்ந்து, உடல் அழுக்காகாத, வியர்வை வடியாத வேலையைச் செய்துவிட்டு, வீட்டுக்கு வந்து உண்டு களைத்து, உறங்கி எழுபவருக்கு குளியல் தேவையில்லை. கறுத்த எண்ணெய்யும், கெட்டியான மசகு கிரீசும் படிய வேலை செய்பவர்களும், வியர்வைச் சொட்டச் சொட்ட ஓடியாடி வேலை செய்பவர்களும் மட்டும் குளித்தால் போதுமானது.

நமது தோலைப் பராமரிப்பது ஒரு பெரிய உறுப்பைப் பராமரிப்பது மட்டுமே அல்ல. தோலின் வாயிலாக நமது உடலின் வெப்பச் சமநிலையைப் பராமரிக்கவும், தோலின் மூல உறுப்புகளைப் பாதுகாக்கவும் செய்கிறோம். தோலைப் பாதுகாப்பது குளியலில் இருந்தே தொடங்குகிறது.

ரசாயனக் கலப்பில்லாத கைக்கு எட்டும் தொலைவில் கிடைக்கிற இயற்கைப் பராமரிப்பு முறைகள் நிறைய உண்டு. முதலில் குளியல் என்பது அழுக்கு நீக்குதல் மட்டுமே அல்ல. அது குளிர் வித்தலின் மூலமாக உடலுக்குப் புத்துணர்வு தருவது என்ற அடிப்படை உண்மையையும், நிதானமான குளியலே அந்த நாளை நமக்குப் புதிதாக்கித் தரும் என்பதையும் புரிந்துகொண்டால் நம்முடைய அடுத்த குளியலிலேயே கண்கள் கூடுதல் ஒளி பெறும்.

உலகெங்கும் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால், வயதானவர்களுக்கு வரக்கூடிய நோயும் அதிகரிக்கிறது. வயதானவர்களுக்கு வரக்கூடிய நோய்களில் மூளைத் தேய்மான நோய் அல்லது ஞாபக மறதி நோய் எனப்படும் அல்சைமரும் ஒன்று.

கொஞ்சம் கொஞ்சமாக மூளையின் செல்களைச் சிதைக்கும் நோய் இது. இதனால், வயதானவர்கள் ஞாபக சக்தியை இழந்து, ஒரு கட்டத்தில் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் மறந்துவிடும் அளவுக்கு விபரீதமான நோய்தான் அல்சைமர். 65 வயது தாண்டிய வர்களையே இந்த நோய் அதிகம் பாதிக்கிறது.இந்த நோயைப் பற்றி 1906இல் ஜெர்மனியைச் சார்ந்த மருத்துவர் அலோசியஸ் அலாய்ஸ் அல்சைமர்தான் முதன்முதலில் உலகுக்கு எடுத்துரைத்தார். அதனால் அவரது பெயராலேயே இந்த நோய் அழைக்கப்படுகிறது.

இரண்டு வகை அல்சைமர்

உலக அல்சைமர் நோய் விழிப்புணர்வு சங்கத்தின் கணிப்புப்படி உலகில் 65 வயதுக்கு மேற்பட்டோரில் 4 கோடிப் பேர் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் 41 லட்சம் பேர் இந்த நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் 12 ஆண்டுகளில் இந்த நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, 65 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் அல்சைமர் நோயின் தாக்கம் தெரிந்தாலும், அதைவிடக் குறைவான வயதுள்ள வர்களிடமும் இந்த நோயைக் காண முடியும்.  30 வயதுகளில் உள்ளவர் களுக்குக்கூட அல்சைமர் நோய் வரும் அபாயமும் உள்ளது.அல்சைமரில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, பரம்பரையாக வரக்கூடியது. இரண்டு, குடும்பம் சாராமல் வருவது. முன்னது பெரும்பாலும் மரபணுக் கோளாறுகளால் வரக்கூடியது.

பெண்களுக்கே அதிகம் பாதிப்பு

பரம்பரையாக வரக்கூடிய அல்சைமர் நோய் என்பது குறைவுதான். இந்த வகையில் 5 சதவீதம் பேர்தான் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள்.

எஞ்சிய 95 சதவீத அல்சைமர் நோயாளிகள், பிற காரணங்களால் அந்தப் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.அல்சைமர் நோய் எப்படி ஏற்படுகிறது என்பதைப் பற்றி மருத்துவ உலகம் இன்னும் முழுமையாகக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால்,  மூளைக்குள் ஏற்படும் சிக்கலான மாற்றங்கள் குறித்தும், அது உருவாக்கும் அறிகுறிகளை வைத்தும் நாம் கண்டுகொள்ள முடியும். வயதுதான் இந்த நோய்க்கான முக்கியமான காரணியாக உள்ளது. பொதுவாக இரு பாலருக்குமே அல்சைமர் நோய் வரும். குறிப்பாக, பெண்களைத்தான் இது அதிகம் பாதிக்கிறது. ஆண்களைவிடப் பெண்கள் அதிக ஆண்டுகள் வாழ்ந்தாலும், இந்த நோயால் ஆண்களைவிடப் பெண்களே அதிகம் இறக்கிறார்கள்.

அறிகுறிகள் என்ன?

அல்சைமர் என்பது ஒரு மோசமான நோய். அல்சைமர் நோயாளிகளால் எதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாது. தாங்கள் பழகிய முகங்களையே மறந்துவிடுவார்கள். அவர்களால் எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்க முடியாது. முடிவுகள் எடுக்கத் தடுமாறுவார்கள். தங்களைத் தாங்களே மறக்கத் தொடங்குவார்கள். மற்றவர்களுடைய உதவியில்லாமல் அவர்களால் செயல்பட முடியாது. நாளாக நாளாக இதன் அறிகுறிகள் மோசமாக மாறும்.  எல்லா அல்சைமர் நோயாளிகளுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருக்காது. அறிகுறிகளைப் பொறுத்து பிரச்சினைகளின் தீவிரம் இருக்கும். ஆரம்ப கால அல்சைமர் நோய்க்கான அறிகுறி என்பது குறுகிய கால நினைவாற்றல் இழப்புதான்.

இது தவிர, குழப்பம், தினசரி வாழ்வின் செயல்களைச் செய்யக் கஷ்டப்படுவது, குடும்பம் மற்றும் நண்பர்களை அடையாளம் காணச் சிரமப்படுவது, பொருட்களை அடையாளம் காண முடியாமல் தவிப்பது, எடை இழப்பு, சிறுநீர்ப்பை கட்டுப்பாடு இழப்பு, திரும்பத் திரும்ப பேசிய விசயத்தையே பேசிக்கொண்டிருப்பது, பேசச் சிரமப்படுவது, தூக்கமின்மை அல்லது அதீத தூக்கம் என அறிகுறிகள் மாறுபடும்.மூளையில் பிரத்யேகமான செல்மாற்றம், புரத படிமானங்கள் தாம் இந்நோய் ஏற்பட முக்கியக் காரணம். அடிக்கடி தலையில் ஏற்படும் காயங்கள், மன அழுத்தம், அதீதக் கோபம், போதை மருந்துப் பழக்கம், மூளையில் ரத்தக்கசிவு ஏற்படுதல் போன்றவற்றால் அல்சைமர் நோய் ஏற்படக்கூடும்.இந்த நோயைக் குணப்படுத்த இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

நோயின் தீவிரத்தைக் குறைக்க மட்டுமே மருந்துகள் உள்ளன.

எப்படித் தவிர்ப்பது?

வயதான காலத்தில் கொழுப்பைத் தவிர்க்க வேண்டும். உடல் பருமன் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம், நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது, மதுப் பழக்கத்தைக் கைவிடுவது, தலையில் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது போன்றவற்றின் மூலம் இந்த நோய் வராமல் தடுக்கலாம். உணவுப் பழக்கத்தில் மாற்றம், வாழ்க்கை முறையில் மாற்றம், மூளையின் அறிவைத் தூண்டக்கூடிய புதிய விளையாட்டுகளில் ஈடுபடுவது ஆகியவற்றின் மூலமும் இந்த நோய் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

இந்த நோயால் பாதிக்கப்படும் முதியவர்களைப் பராமரிப்பது மிகப் பெரிய சவால். இதன் காரணமாக இந்நோய் பாதித்த முதியவர்களைப் பிள்ளைகள் கைவிட்டுவிடுகிறார்கள் அல்லது பராமரிப்பதில் அலட்சி யத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். அல் சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களை அரவணைத்து அவர்களைப் பராமரித்துப் பாதுகாக்க வேண்டும்.

 

 

வெண்டைக்காயில் உள்ள உயர்தரமான பாஸ் பரஸ் புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய் கிறது! உயர்தரமான பாஸ்பரசுடன் ஒட்டிக் கொள்ளக்கூடிய ஒருவித மான தாவர பசைப் பொருளும், நார்ப்பொருளும் வெண்டைக் காயில் உள்ளது; எளிதில் இரத்தத்தால் உட்கிரகிக்கப் பட்டு சக்தியாக மாறும் மாவுச்சத்தும் வெண்டைக் காயில் உள்ளன.

வெண்டைக்காயின் தாவரவிஞ்ஞானப்பெயர், ஹைபிஸ்கஸ் எஸ்குலேன்ட்டஸ்.  வெண்டைக்காய் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது.

வெண்டையின் சிறப்பான குணமே வழவழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் வழவழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும் போது இந்த அமிலங் கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங் கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி சுத்தமான பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.

வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பி யவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரால் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய் நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப் பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தி னால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும். சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச் சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந்தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.

நன்மை தரும் பாக்டீரியா

இதில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன. தயிரில் உள்ளதைப்போல இந்த பாக்டீரியாக்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன. இதில் வைட்டமின் பி காணப் படுகிறது. வெண்டைக்காயை குழந்தைகளுக்கு வதக்கி உணவில் சேர்த்து தரலாம்.

இது குழந்தைகளின் நினைவாற்றலை அதி கரிக்கும். மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. எனவே, புத்திக்கூர்மை அதிகரிக்க அனைத்து வயதினரும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


ஆரஞ்சுப் பழத்தின் மருத்துவக் குணங்கள்

பித்த நீர் அதிகம் சுரப்பதைத் தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக் களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று.

ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.

ஒரு சிலருக்கு திடீரென்று குடல் புண் தொண்டைப் புண் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் பிராய்லர் கோழி வறுவல், அய்ஸ்கிரீம் மற்றும் கேக் வகைகளை அதிக மாக சாப்பிடுவதே. இதனால் உடல் சூடாகி வாயுக்கள் சீற்றமாகி புண்களை ஏற்படுத்து கிறது. சில சமயங்களில் இது புற்றுநோயாகக் கூட மாறலாம். இருதய நோய்களுக்கும் இந்த உணவு வகைகளே காரணமாகின்றன. இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடபட இந்த உணவுகளை தவிர்த்து தினமும் 150 மி.லி ஆரஞ்சு சாறை அருந்தி வரவேண்டும். இரு முறை கூட அருந்தலாம். ஆரஞ்சு பழத்தை தினமும் உண-வில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சி யும் உடல் திசுக்களை புதுப் பிக்கின்றன.

ஆரஞ்சு பழச்சாறு நன்கு பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானமாகாத உணவுகளை ஜீரணமாக்கும். கழிவுகள் உடனே வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். ஆரஞ்சுப் பழச்சாறை இரத்தம் உறிஞ்சிக் கொள்வதால் உடனடியாக உட லுக்கு வெப்பமும் சக்தியும் கிடைத்துவிடுகிறது.

நோயாளிகளுக்கும், தாய்ப்பால் கிடைக் காத குழந்தைகளுக்கும் ஆரஞ்சுப் பழச்சாறை கொடுக்கலாம்.

கைக்குழந்தைகளுக்கு 50 முதல் 125 மிலி வரை கொடுக்கலாம்.

ஆரஞ்சு பழம் பல்சொத்தையை தடுக்கும். பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்துபோல் ஆரஞ்சிலும் கிடைக்கும்.

ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. சளி உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் சளி பிடிப்பது குணமாகும்.

மேலும் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண் முதலியவை குணமாக 125 மிலி ஆரஞ்சு சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தி வந்தால் நுரையீரலில் உள்ள கோளாறுகள் நீங்கும்

நெஞ்சுவலி, இருதய நோய்கள், எலும்பு மெலிவு நோய்களையும் இதிலுள்ள சுண் ணாம்புச் சத்து குணப்படுத்தும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரஞ்சுப்பழம் கொடுத்து வந்தால் வாந்தி குணமாகும்.

ஆரஞ்சு பழச்சாறை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

ஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக் களும் உள்ளடங்கியுள்ளது.என்றும் இளமை யுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு மிகவும் அவசியம்.


புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் திராட்சை

திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்புத் திராட்சை, பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு.  நோயாளிகளுக்கு ஆரஞ்சுக்கு அடுத்தபடியாக திராட்சை அருமையான உணவு.

திராட்சைச்சாறு தினமும் சாப்பிட மலச்சிக்கல் விலகும். முகம் அழகு பெறும். மூலவியாதி, மூலச்சூடு குறையும். கண் பார்வைத் தெளி வடையும். குடல் புண் விலகும். இரத்தம் சுத்தமடையும். வயிற்றுவலி, வயிற்று உளைச்சல் சரியாகும்.

உடல் பருமனாக உள்ளவர்கள் தினமும் திராட்சைச் சாறு சாப்பிடுவது நல்லது. திராட்சைச் சாறு மட்டும் சாப்பிட்டுவர பல வியாதிகளைக் குணப்படுத்தும்.

இயற்கைச் சாறுகளில் திராட்சைச்சாறு மிகவும் அவசிய மானது.

* இரண்டு கிளாஸ் திராட்சைப் பழரசம் குடிப்பது, அய்ந்து பிளேட் பச்சைக் காய்கறிகளை உண்பதற்குச் சமம்.

* ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்; ரத்தம் கிளாட் ஆவதை, அதாவது, ஆங்காங்கே உறைவதைத் தடுக்கும்.

* திராட்சைப் பழரசத்தை சோடா, கோலாக் களுக்கு பதிலாக அருந்துவது அத்தனை ஆரோக்கியம்! தினமும் மதிய உணவுக்குப் பின் 200 மில்லி திராட்சை சாறு குடிப்பது நல்லது!

* ஒரு கிளாஸ் திராட்சை சாறில் 80 சதவிகிதம் தண்ணீரும், 60 சதவிகிதம் கலோரிகளும் இருக்கும். நார்ச்சத்து அதிகமுள்ள இதனை “டயட்”டில் இருப்பவர்கள் தயங்காமல் குடிக் கலாம்.

* “ரெஸ்வெரட்ரால்” எனப்படும் ஒரு வகை இயற்கை அமிலம் திராட்சை சாறில் அபரிமிதமாக உள்ளது. இந்த அமிலம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை முடக்குவதுடன், தேவை இல்லாத கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்து

கிறது.

* பெண்களுக்குச் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை திராட்சை சாறு  கட்டுப்படுத்துவதால், மார்பகப் புற்று நோய்க் கான அபாயம் குறைக்கப்படுகிறது.

ஆகையால், எல்லோரும் திராட்சைப் பழரசம் அருந்தி, முக்கியமாக சுத்தமான திராட்சைப் பழங்களின் மூலம் தயாரிக்கப்படும் பழரசத்தை அருந்தி, ஆரோக்கியமாக இருக்கலாம்.

ஆதம்பாக்கம் பொறியாளர் வாசுதேவன் தனது துணைவியார் புற்றுநோயால் இறந்ததையொட்டி அவரது நினைவாக பத்மினி வாசுதேவன் புற்றுநோய் விழிப்புணர்வு மய்யம் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு நன்கொடை வழங்கினார். அதன்படி சென்னை பெரியார் மணியம்மை மருத்துவமனையில் அமைக்கப்பட்டது (17.9.2018)

உலகெங்கும் பல்வகையான நாடு களில் உண வியல் அடிப்படையிலும், மருத்துவ அடிப்படையிலும் நடத்தப் பட்ட விரிவான ஆய்வுகள் யாவும், இந்தக் கனியை சிறந்த மருத்துவப் பெட்டகம் என போற்று கின்றன. கிவி கனியில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவான அளவில் உள்ளது. இதன் காரணமாக, தங்கள் உடலின் எடை யைக் குறைக்க விரும்புபவர்கள் இந்தக் கனியை அச்சமில்லாமல் உண்ணலாம்.பொது வாக விட்டமின் சி அதிக அளவில் உள்ளது.நோயைத் தடுக்கும் ஆற்றல் அதிகம் பெற்றுள்ளது!

நமது உடலில் கட்டுப்பாடு இல்லாமல் திரியும் ரேடிக்கிள்கள்தான் பல்வகையான சிதைவு நோய் களுக்கும், செல்களின் சிதைவிற்கும் அடிப்படைக் காரணங்களாக அமைந்துள்ளன. இத்தகைய ரேடிக் கிள்களின் வன்தன்மையை அழித்து நோயின்றி நம்மை காக்கும் ஆற்றல் இத்தகைய கனிக்கு இயற் கையாக உள்ளது. முதுமைக் கால கண் நோய்களைத் தடுக் ,விட்டமின் சி என்ற சத்துடன் இணைந்து, மேற்கூறிய முதுமையின் காரணமாக ஏற்படும் சிதைவு நோய்களான, கண் புரை, விழித்திரை சிதைவு நோயைத் தடுக்கின்றது.

இதயத்துடிப்பின் சீரற்ற நிலையைத் தடுக்க துணைபுரிகின்றது! இதயத்தின் துடிப்பை சீராக கட்டுப்படுத்துகின்றது. உடலில் பொட்டாசியத்தின் அளவானது குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி கனியில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இந்த சத்தானது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

மாரடைப்பைத் தடுக்கின்றது: மாரடைப்பிற்கு முன்னர் பல்வகையான நோயியல் நிகழ்வுகள் இதய தமணி களில் நிகழ்கின்றன. இவற்றில் மிகவும் முக்கியமானது இரத்தக் குழாய்களிலுள்ள இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள், தட்டகங்கள் இவை யாவும் ஒன்றாகக் குழுமி, கட்டி யாக அடைப்பாக மாறி, இதய தமணிகளில் இரத்தம் செல்ல இயலாமல் முழுமை யாக அடைத்து மாரடைப் பிற்கு வழி வகுக்கின்றது. இவ்வாறு இதய தமணி களில் இரத்தக் கட்டி உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் கிவி கனிக்கு இயற்கையாக உள்ளது.வளரும் குழந்தை களின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற கனியாகும்: கிவி பழத்தில் ஃபோலேவி என்ற சத்தும், ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் மற்ற கனிகளை விட மிகவும் அதிகமான அளவில் உள்ளது.

இத்தகைய சத்துக்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள சத்துக்களில் சிறந்ததாக உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.எனவே, வளரும் குழந்தைகளுக்கு இக்கனியை அளிப்பது மூளையின் வளர்ச்சிக்கு உதவும்.

நீரிழிவு நோயாளி உண்பதற்கு சிறந்த கனி:

கிவி கனியின் சர்க்கரை குறியீடின் அளவானது மிகவும் குறைவான அளவாக இருப்பதால், இரத்தத் திலுள்ள சர்க்கரையின் அளவை மற்ற கனிகளைப் போல் விரைவாக அதிகமாக்காமல், கொஞ்சமாகவும் நிலையாகவும் நிலை நிறுத்துவதால், நீரிழிவு நோயாளி கள் உண்பதற்கு சிறந்த கனியாகக் கருதப்படுகிறது.

உடலின் எடையைக் குறைப்பவர்களுக்கு சிறந்த மருந்து! உடலின் எடையைக் குறைப்பவர்களுக்கு கிவி கனியானது மிகவும் சிறந்த கனியாக கருதப் படுகின்றது.

ஏனென்றால், மற்ற கனிகளுடன் ஒப்பிடும் பொழுது கிவியில் மிகவும் குறைவான அளவில் கலோரிகள் உள்ளன.

 

மருத்துவ குணம் மிகுந்த நாவல் பழம்

நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப் படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளி யேற்றும்.

சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச் சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ள வர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.

நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும்.  தூக்க மின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.

Banner
Banner